பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, December 23, 2010

நீதிபதிகள் செய்த தில்லுமுல்லு?



6 முன்னாள் நீதிபதிகளுக்கு சி.பி.ஐ. கோர்ட் சம்மன்
தினகரன் 23/12/2010

காசியாபாத் : பிராவிடன்ட் பண்ட்(பி.எப்.) நிதிமோசடி வழக்கில் 6 முன்னாள் நீதிபதிகளுக்குசிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

உ.பி.மாநிலம், காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிராவிடன்ட் பண்ட் நிதியில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ராம ஜெயின் என்பவர் இதை கண்டுபிடித்து, கவிநகர் போலீசில் புகார் செய்தார்.


மொத்தம் ரூ. 7 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊழலுக்கு முக்கிய காரணமாக இருந்த அசுதோஷ் அஸ்தானா என்பவர் சிறையில் உள்ள போது இறந்தார். இவர் கொடுத்த வாக்குமூலத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,

முன்னாள் நீதிபதிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்பின், சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு காசியபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஏ.கே.சிங் விசாரித்தார். முன்னாள் நீதிபதிகள் ஆர்.பி.யாதவ், ஆர்.பி.மிஸ்ரா, ஆர்.என்.மிஸ்ரா, ஆர்.எஸ்.சவுபே, அருண்குமார், சிங் ஆகியோர் உள்பட மொத்தம் 70 பேருக்கு சம்மன் அனுப்பி, ஜனவரி 30ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

அப்படியென்றால் இவர்களின் பதவிக்காலத்தில் கொடுத்த தீர்ப்புகளின் நிலை என்ன? எத்தனை அப்பாவிகள் தண்டிக்கப்பட்டார்களோ?

நாட்டில் நடக்கும் அநீதியையும், லஞ்ச ஊழல்களையும் தக்கமுறையில் தடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றுபவர்களை தண்டிக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உள்ளது. இவர்களே இப்படியிருந்தால் அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை யார் தட்டிக்கேட்கமுடியும்? இந்த வெளிப்பாடுதான் இப்போது செய்தித்தாள்களில் தினம்தினம் வரும் கோடிக்கணக்கான ஊழல் செய்திகள். அப்பாவி மக்களை யார் காப்பாற்றப்போகிறார்களோ?

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் அப்பாவிகள் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து நீதியைப் பெறலாம் என்று நினைத்தால் அங்கே அவர்களுக்கு நீதி கிடைக்குமா?



Sunday, December 19, 2010

பிள்ளையப் பெத்தவர்களுக்கு கண்ணீரு!

பின்வரும் இரண்டு செய்திகளையும் மனதை திடப்படுத்திக்கொண்டு படியுங்கள்.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:

இந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் பின்வரும் செய்தியில் ஒழுங்காக பின்பற்றப்பட்டிருக்கிறதா?


வடமதுரை : நத்தம் முல்லைநகரைச் சேர்ந்த ஜெய்லானிக்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி நஸ்ரீன்பானுவிற்கும் 99ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் வரதட்சணை தரப்பட்டது. தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் மேலும் 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு நஸ்ரீன்பானுவை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட் உத்தரவின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து நஸ்ரீன்பானுவின் கணவர் ஜெய்லானி(38), மாமனார் அப்துல்ரகுமான்(55), மாமியார் அபீதாபீவி(50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

1999ல் நடந்த திருமணத்தில் பெண் தரப்பிலிருந்து கொஞ்சமும் கூசாமல் வரதட்சணை கொடுத்து குற்றம் இழைத்திருக்கிறார்கள். ஆனால் 2010ல்தான் வரதட்சணை என்பது குற்றம் என்று தெரிந்ததா? அதிலும் கணவன் மற்றும் அவனது பெற்றோர் மட்டுமே குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்களே அது ஏன்?

உண்மையாகவே வரதட்சணையை ஒழிக்கவேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பவர், வாங்குபவர் இரண்டு பேரையுமே தண்டிக்கவேண்டுமல்லவா? அப்படியில்லாமல் சட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தாமல் ஐயோ வரதட்சணை கொடுமை இருக்கிறது என்று கூப்பாடு போடுவது எந்தவகையில் நியாயம்? இப்படி சட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தாமல் ஒருதலைபட்சமாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுதான் இந்திய சட்டங்களின் சிறப்பம்சம். இந்தியத் திருமண தகனமேடைகளில் இருக்கும் ஆபத்தும் இதுதான்.

===========

அடுத்த செய்தியைப் படிப்பதற்கு முன் இந்த நீதிமன்ற உத்தரவையும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நடைமுறையில் இருக்கும் அவலங்களும் ஆபத்துக்களும் உங்களுக்குப் புரியும்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 04.08.2008

CORAM
THE HON'BLE MR. JUSTICE R.REGUPATHI


iii) Arrest in matrimonial disputes, in particular arrest of aged, infirm, sick persons and minors, shall not be made by the Station House Officers of the All Women Police Stations.

As could be
seen, though suitable directions have been given to the police, in particular to the Station House Officers, still there may be scope for misuse of power. The directions/instructions are only illustrative and not exhaustive. When the investigating officers seek for remand of the accused, the Magistrates must examine the necessity for the same and only where there are valid grounds for believing that the accusation or information is well- founded and it appears that the investigation cannot be completed within a period of 24 hours, remand may be ordered.

Violation of human rights and infringement of personal liberties must be viewed

seriously. remand should not be ordered mechanically, for, remand of an accused by a Magistrate is not automatic one on the mere request of the investigating officer and sufficient grounds must exist for the Magistrate to exercise the power of remand.

Though the law is
manifestly clear, plain and patent, in many cases, it is witnessed that, on the mere request of the investigating officers, remand is ordered mechanically without application of mind and such illegal practice must be avoided. Our experience shows that, apart from the husband, all family members are implicated and dragged to the police stations. Though arrest of those persons is not at all necessary, in a number of cases, such harassment is made simply to satisfy the ego and anger of the
complainant.


7. Registry is directed to immediately circulate copy of this order as well as the earlier
order dated 07.07.2008 to the Director General of Police, Tamil Nadu, and all the Judicial
Magistrates for compliance.

இந்த சென்னை உயர்நீதிமன்ற 2008ம் ஆண்டு உத்தரவு இன்றுவரை 2010ல் கூட எப்படி மதிக்கப்பட்டிருக்கிறது என்று பின்வரும் செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Incarcerated prisoner dies in prison

New Kerala.com

Tirunelveli, Tamil Nadu, Dec 17 : A old prisoner, who was arrested on the charges of dowry harassment, died at Palayamkottai Central Prison, here today.

Police said Ravindran Barnard (64), hailing from Madurai, was arrested by Tuticorin Police on December 5 last on a dowry harassment complaint from his daughter-in-law Dr Agnus Latha (34), a medical practitioner.

He was lodged in Central Prison at Palayamkottai here. Since then the health condition of Barnard had been deteriorating. He was admitted to the hospital inside the prison complex. He suffered a cardiac arrest and died this morning.

An investigation was underway, police added.

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்து திருமண தகனமேடையில் உங்களது பெற்றோரை பலியாக்கிவிடாதீர்கள்! இந்தியாவில் பொய் சொல்பவர்களை தண்டிக்க எந்தவித சட்டங்களும் கிடையாது. கடைமையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை தண்டிக்கவும் எந்த சட்டங்களும் கிடையாது. அதனால் நீங்கள்தான் உங்களையும் உங்களது பெற்றோரையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.




Monday, December 13, 2010

மனைவி இறந்தால் கணவனுக்கு சங்கு!

மனைவி தீக்குளிப்பு கணவன் கைது
தினகரன் 13/12/10

தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி தீக்குளித்து இறந்தார். வரதட்சணை கொடுமையால் மகள் இறந்துள்ளதாக பெற்றோர் புகார் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஆர்.டி.ஓ.வும் விசாரித்தார். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

=============


இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் மற்றொரு துன்பமும் உங்களுக்குக் காத்திருக்கிறது. அதுதான் IPC 304B என்று சொல்லப்படும் வரதட்சணைக் கொலை.


IPC Section 304-B "dowry death"

  1. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;
  2. Such death must have occurred within seven years of her marriage;
  3. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;
  4. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;
  5. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.

இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்திருந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். தங்களது பெண்ணின் காதல் விஷயத்தை மறைத்து திருமணம் செய்ததை மறைப்பதற்காக அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்படும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கெதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இயற்கையாக இறந்துவிட்டால்கூட அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும். உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். அதுவே திருமணமாகி அடுத்த நாளே கணவன் கொலை செய்யப்பட்டால்கூட அது இயற்கையான மரணமாகக் கருதப்படும். யாரும் கேட்கக்கூட மாட்டார்கள். இதுதான் கணவனுக்கு இந்த சமுதாயத்தில் உள்ள மரியாதை.

இப்படித்தான் நடைமுறையில் சட்டங்கள் கையாளப்படுகிறது. மனைவி இறந்தவுடன் அவரது பெற்றோர்கள் உடனடியாக கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் வரதட்சணைக் கேட்டு தங்களது மகளை கொலை செய்துவிட்டதாகப் புகார் கொடுத்துவிடுவார்கள். காவல்துறையும் உடனடியாக உங்கள் மீது IPC- 498A, 304B போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். 304Bயில் சிக்கினால் ஜாமின் கிடைப்பது மிகவும் கடினம். காவல்துறை புலன் விசாரணை செய்யமாட்டார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படி ஒன்று நடக்கிறதா?


==========

மனைவி தீக்குளிப்பு கணவன் கைது
தினகரன் 13/12/10

தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி தீக்குளித்து இறந்தார். வரதட்சணை கொடுமையால் மகள் இறந்துள்ளதாக பெற்றோர் புகார் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஆர்.டி.ஓ.வும் விசாரித்தார். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

=============

பெண் இறந்துவிட்டால் அதற்குக் கணவன்தான் காரணம் என்று இந்தியாவில் ஒரு மனப்பான்மை இருக்கிறது. இதற்கு தூபம் போடுவதுதான் ஒழுங்குமுறையற்ற சட்டங்களும் நேர்மையற்ற விசாரணைகளும். இதை டில்லி உயர்தீநிமன்றம் படம் பிடித்துக்காட்டியுள்ளது. நீதிமன்றங்கள் உங்களுக்கு இந்த உண்மையை சொல்லமுடியுமே தவிர நீங்கள் இதில் சிக்குவதிலிருந்து உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Crl. Rev. P. No.555/2003 Narender Singh Arora v State (Govt. of NCT of Delhi) & Ors.
Date of Order: September 01 , 2010
Crl. Revision Petition No.555/2003 01.09.2010
Narender Singh Arora ...Petitioner
Versus

State (Govt. of NCT Delhi) & Ors. ...Respondents

JUSTICE SHIV NARAYAN DHINGRA


5. This case is a reflection of mentality which is now taking grip of parents of a deceased wife in the criminal cases. Whenever a woman dies an unnatural death within seven years of her marriage at in-laws’ house, whatever be the cause of death, the in-laws must be hanged. This case also shows how truth is losing significance because of the ego of the litigants to see that in-laws should be hanged.

6. Suicide is a known phenomenon of human nature. Suicides are committed by living human beings for various reasons, some are not able to bear the normal stresses which are common in life. Some are not able to cope up with the circumstances in which they are placed. Some commit suicide because of frustration of not achieving the desired goals. There are many cases where students commit suicide because they failed to achieve certain percentage of marks. Some commit suicide because they are not able to retain top position, some commit suicide because they are not able to cope with the demands of life. Some commit suicide because they suffer sudden loss, some commit suicide out of fear of being caught. There are various reasons for which suicides are committed by men and women. All suicides are unnatural deaths. Suicide is a complex phenomenon. One, who commits suicide, is not alive to disclose as to what was going on in his or her mind when he or she committed suicide. There is no presumption that every suicide committed by a married woman in her in-laws’ house or at her parents’ house has to be because she was suffering harassment at the hands of her husband or her in-laws.

7. Normally in-laws are convicted on the testimonies of parents of the girl who, in a fit of anger or because they had lost their daughter, are not prepared to believe that their daughter could commit suicide for any other reason.

இளைஞர்களே,

இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கண்மூடித்தனமான சட்ட நடைமுறைகள் கிடையாது. அதனால் இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் நுழைந்து பொய் வரதட்சணை வழக்குகள் என்ற தீயில் உங்கள் குடும்பத்தாரை உயிரோடு பொசுக்கிவிடாதீர்கள்.





Saturday, December 11, 2010

உங்கள் பிள்ளைகளுக்காக ஒரு அருமையான காதல் கடிதம்

ஆண் பிள்ளைகளை பெற்றிருக்கும் பெற்றோர்களே, எதிர்காலத்தில் ஆண் பிள்ளைக்கு பெற்றோர் ஆகப்போகும் குடிமக்களே உங்களது பிள்ளையின் திருமணம் இந்தியாவில் நடக்கவேண்டுமென்றால் நீங்கள் இப்போது டிசம்பர் 31ற்குள் ஒரு காதல் கடிதம் எழுதவேண்டும். இது மிகவும் அவசியமானது. நீங்கள் எழுதும் இந்தக் காதல் கடிதத்தை இந்திய ராஜ்ய சபா விசாரணைக் குழுவிற்கு அனுப்பவேண்டும். நீங்கள் இப்போது இதைச் செய்தால்தான் உங்கள் மகன் எதிர்காலத்தில் இந்தியாவில் காதல், திருமணம் என்பது போன்ற வாழ்க்கையின் ஒரு பகுதியை அனுபவிக்கமுடியும்.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தவறான வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பல கொடிய பெண்கள் தவறாகப் பயன்படுத்தி பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சிதைப்பதோடு மட்டுமல்லாமல் பல அப்பாவி குழந்தைகள் மற்றும் வயதானவர்களையும் துன்புறுத்திவருகிறார்கள். இந்த உண்மை இப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது. அதனால் இந்த தவறான சட்டங்களை திருத்துவதற்காக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளுக்குப்பிறகு முன்வந்திருக்கிறது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்க ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது.

இந்த விசாரணைக் குழுவிற்கு நீங்கள் உங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினால்தான் இந்த சட்டத்தில் தக்க திருத்தங்கள் கொண்டுவருவார்கள். இந்த திருத்தங்கள் ஏற்படவில்லையென்றால் எதிர்காலத்தில் உங்களது மகன், மகள் ஆகியோரின் திருமண வாழ்க்கை தவறான இந்திய சட்டங்கள் மூலம் சிதைக்கப்பட்டுவிடும். இந்த தவறான சட்டங்களால் தற்போது பல குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றது. இந்த உண்மையை தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் www.498a.org. இதுபோன்ற இழிநிலை உங்களது பிள்ளைகளுக்கு ஏற்படாமல் இருக்கவேண்டுமென்றால் நீங்கள் கீழ்கண்ட கோரிக்கை மனுவை இரண்டு நகல்கள் எடுத்து மனுவின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இன்றே அனுப்பிவையுங்கள். உங்களது பிள்ளைகள் தங்களது இளைமைப் பருவத்தில் சுகமான காதலை அனுபவிக்க வேண்டுமென்றால் இன்று நீங்கள் இந்தக் கடிதத்தை காதல் கடிதமாக நினைத்து இந்திய ராஜ்ய சபா குழுவிற்கு அனுப்பவேண்டும்!


இந்திய ராஜ்ய சபா சட்டதிருத்தம் கொண்டுவருவதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்டு வெளியிட்டுள்ள அறிக்கை.


The Committee on Petitions of the Rajya Sabha, under the Chairmanship of Shri Bhagat Singh Koshyari, Member, Rajya Sabha, is considering a petition praying for amendments in Section 498A of Indian Penal Code, 1860. The petitioner in his petition has pointed out the extensive abuse and misuse of this provision of the Penal Code. According to the petitioner, the abused population undergoes tremendous harassment and torture. As these provisions of the penal code presently go, a complaint without much authenticity or any weight of evidence is enough to arrest the husband or the in-laws or anyone else named in the complaint, irrespective of whether any crime has taken place or not. The petitioner, accordingly, has prayed for suitable modification in section 498A of Penal Code so as to check its abuse and protect the interest of innocent persons.

2. The petition is available on the Rajya Sabha's website (www.rajyasabha.nic.in) under the link: Committees → Standing Committees → Committee on Petitions → Petitions with the Committee.

3. The Committee has decided to undertake consultations with a wide cross-section of the society and invites written memoranda thereon. Those desirous of submitting memoranda to the Committee may send two copies (each in English and Hindi) thereof to Shri Rakesh Naithani, Joint Director, Rajya Sabha Secretariat, Parliament House Annexe, New Delhi – 110 001 (Tel: 011-23035433(O), 23794328 (Telefax) and E-mail: rsc2pet@sansad.nic.in) latest by 30th December, 2010.

4. Comments/suggestions, etc. submitted to the Committee would form part of its record and would be treated as confidential. Any violation in this regard may attract breach of privilege of the Committee.

5. Those who are willing to appear before the Committee besides submitting written comments/suggestions may indicate so. However, the Committee’s decision in this regard shall be final.


நீங்கள் அனுப்பவேண்டிய கோரிக்கை மனுவின் நகல் பின்வரும் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டு நகல்கள் எடுத்து பின்வரும் முகவரிக்கு இன்றே அனுப்பிவிடுங்கள்.

Shri Rakesh Naithani,
Joint Director
Rajya Sabha Secretariat, Parliament House Annexe
New Delhi – 110 001
E-mail: rsc2pet@sansad.nic.in


எதிர்கால இந்திய சமுதாயத்தின் நலன் கருதி உங்களது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இந்த கோரிக்கை மனுவை அனுப்பச் சொல்லுங்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த இணைப்பிலிருந்து NRI Template MS-Word வடிவத்தில் மனுவின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவில் வசிப்பவர்கள் இந்த இணைப்பிலிருந்து General Template MS-Word வடிவத்தில் மனுவின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வசதிக்கேற்ப இந்த மனுவை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் மனு மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று ராஜ்ய சபா குழு உறுதியளித்திருக்கிறது.

4. Comments/suggestions, etc. submitted to the Committee would form part of its record and would be treated as confidential. Any violation in this regard may attract breach of privilege of the Committee.




Thursday, December 2, 2010

அறியாத வயதில் ஆண்கள் செய்யும் தவறு



ஒரு இந்திய இளைஞனின் அனுபவப் பாடங்கள்

(தத்துவங்களை அனுப்பியவர் இந்திய இளைய மேதை ராசுக்குட்டி)


அறியாத வயதில் பாம்பைப் பிடித்தேன்.................

(தினமலர் படம்)



இளமைப் பருவத்தில் இந்தியத் திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் பிடித்தேன்.......................



இரண்டுமே நஞ்சு கொண்டவை என்று இப்போது உணர்ந்தேன்..........

அதனால் வருங்கால இந்தியத் திருமணங்கள் எப்படி இருக்கும் என்று இளைஞர்களுக்கு என் அனுபத்தைச் சொல்கிறேன்...............

இந்தியத் திருமணம் நேற்று, இன்று, நாளை...............