பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, June 10, 2013

மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருப்பது குற்றச் செயலாகும் - கேரள உயர்நீதிமன்றம்

திருமணம்  என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களில் இதுவும் ஒரு வகை! 

மனைவி உறவு கொள்ள விரும்பினால் கணவன் கண்டிப்பாக உறவு கொள்ள வேண்டும்.  இதற்கு கணவன் மறுத்தால் அது  சட்டப்படி குற்றமாகும்.  ஆனால் மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் உறவு கொள்ள விரும்பினால் அது  மனைவியை கணவன் பாலியல் பலாத்காரம் செய்த குற்றமாக கருதப்படுகிறது!
பின்வரும் செய்தியில் மனைவி உறவு கொள்ள விரும்பி கணவன் மறுத்துவிட்டது குற்றமாகும் என்று கூறி இதனால் மனைவிக்கு மனம், உடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி உறவுக்கு உதவாத கணவன் தேவையில்லை என்று விவாகரத்து வழங்கியிருக்கிறார்கள்.

தற்போது இந்தியாவில் பரவலாக பரவியிருக்கும்  இளம் மனைவியரின் பொய் வரதட்சணை வழக்குகளால் பல திருமணங்கள் சிதைந்து கணவனும் மனைவியும் விவாகரத்து இல்லாமல் தனியே பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரிந்து வாழும் ஜோடிகளில் கணவன் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வேண்டும் நான் வேறு திருமணம் செய்து கொண்டு முறையாக உறவினை அனுபவிக்கவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தால் விவாகரத்து வழங்கப்படுவதில்லை.  அதே சமயம் தனியே வாழும் மனைவிக்கு  பராமரிப்பு என்ற பெயரில் கணவன் மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 

ஆனால் வாங்கும் பணத்திற்கு கணவன் விரும்பும் உறவு மனைவியிடமிருந்து கிடைப்பதில்லை.  அதாவது மனைவியாக நடந்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு மனைவி என்ற பெயரில் கணவன் பணம் கொடுக்க வேண்டும், தனது சொத்துக்களில் பங்கு கொடுக்க வேண்டும்.  ஆனால் கணவன் விரும்பும் இல்லற சுகம் மட்டும் கிடைக்காது!!!

சட்டப்படி குற்றம் என்பதால் விலைமாதர்களை நாடமுடியாமலும், விவாகரத்து கிடைக்காததால் வேறு திருமணம் செய்ய முடியாமல் நேர் வழியிலும் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியாமலும் இருக்கும் கணவர்கள்  இல்லற சுகத்தை கொடுக்காத மனைவிக்கு நீதிமன்ற உத்தரவினால் மாதந்தோறும் பணம்  கொடுக்கவேண்டியிருக்கிறது.  இப்படி பணம் கொடுத்துக் கொண்டிருக்கிற கணவர்களுக்கு தங்கள் மனைவியிடமிருந்து தங்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய உறவு கிடைக்காதபோது மனநல மற்றும் உடல் நல  பாதிப்புகள் ஏற்படாதா??? 

மனைவியுடன் உறவு கொள்ளாத கணவன் விவாகரத்தை உறுதி செய்தது ஐகோர்ட்
                                                             ஜூன் 10,2013 தினமலர்

கொச்சி:திருமணம் முடிந்து, மூன்றாண்டுகளாக, "செக்ஸ்' உறவு வைத்துக் கொள்ளாத கணவரிடம் இருந்து மனைவி பெற்ற விவாகரத்தை, கேரள ஐகோர்ட் உறுதி செய்தது.

கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்தவர், சஞ்ஜன். நான்கு ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். சஞ்ஜனின் மனைவி, கணவர் தன்னுடன், செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை எனக் கூறி, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி, வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கினார். இதை எதிர்த்து, அந்த நபர், கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

முஸ்லிம் திருமண சட்டப்படி, கோர்ட்டில் விவாகரத்து பெற்றது செல்லாது எனக் கூறி, மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, பி.டி.ராஜன் தலைமையிலான பெஞ்ச், சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, குடும்ப நல கோர்ட்டின் தீர்ப்பையும் உறுதி செய்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:  திருமணத்திற்குப் பின், மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், குடும்ப பொறுப்புகளை ஏற்காமல் இருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யலாம் என, முஸ்லிம் திருமணச் சட்டம் தெரிவிக்கிறது. மனைவியின் விருப்பத்திற்குப் பிறகும், செக்ஸ் வைத்துக் கொள்ளாதது, குற்றச்செயலாகும். இதனால், அந்த பெண்ணுக்கு, உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, குடும்ப நல கோர்ட் கொடுத்த தீர்ப்பை, உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Sunday, June 9, 2013

தனிக் குடித்தனம் வர மறுக்கும் கணவனுக்கு குடும்பத்தோடு ஓராண்டு சிறை! சம்மதமா?

இந்தியத் திருமணத்தில் இருக்கும் பல ஆபத்துக்களில் இதுவும் ஒரு வகை!


இளம் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினருக்கு சிறை
 
ஜூன் 09,2013 தினமலர்

கோவை: இளம்பெண் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர், அவரது தம்பிகள் உள்ளிட்ட மூவருக்கு, தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், மாமியாருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி, கோவை மகளிர் கேர்ட் தீர்ப்பளித்தது.

சேலம், ஆத்தூரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 26. இவருக்கும், கோவை ரத்தினபுரியில் மளிகை கடை நடத்தும் செல்வகுமாருக்கும், கடந்த 2003ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. சில ஆண்டுகளில், தனி குடித்தனம் செல்ல வேண்டும் என, கணவரிடம் உமா கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் குடும்பத்தினர், "தனி குடித்தனம் செல்ல வேண்டுமென்றால், பெற்றோரிடம் நகை மற்றும் ரொக்கம் வாங்கி வர வேண்டும்' என்று வற்புறுத்தினர். மனமுடைந்த உமா மகேஸ்வரி, 2007, ஆக., 23ம் தேதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது சாவில் சந்தேகம் அடைந்த இவரது சகோதரர் வெள்ளை விநாயகம், கோவை போலீசில் புகார் செய்தார். ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இளம் பெண் சாவுக்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்ட கணவர் செல்வகுமார், மாமியார் பார்வதி, கணவரின் சகோதரர்கள் செல்வராஜ், ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சரோஜினி ஆஜரானார். 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மற்றும் அவரது தம்பிகள் இருவருக்கும், தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மாமியார் பார்வதிக்கு ஆறு மாதம் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு கூறினார்.

Thursday, April 11, 2013

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் முதல் கடிதம்

“திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” என்பது பழமொழி.  இப்போது திருமணம் என்பது தலையிலிருந்து மழித்துக்கொள்ளும் “மயிர்” என்பது பல இளம்பெண்களும், அவர்களது குடும்பத்தாரும் சொல்லும் புது மொழி. 

பல பெண்களும் அவர்தம் குடும்பத்தாரும் திருமணம் என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  குறிப்பாக திருமணம் என்ற பெயரில் தங்களது மகளை வைத்து அவளது கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்ய வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.  இந்த வியாபாரத்திற்கு உதவி செய்வதற்காக அவ்வப்போது அரசாங்கம் ஒருதலைபட்சமான  புதிய சட்டங்களை இயற்றி ஊக்கப்படுத்தி வருகிறது. 

திருமணம் என்ற பெயரில் பெண்வீட்டார் வியாபாரம் செய்ய அரசாங்கம் கொடுத்துள்ள  சட்டங்களில் சில: 
  • கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது (IP497)
  •  கணவன் மீது மனைவி பொய் வரதட்சணை வழக்குத் தொடர்ந்தால் எந்தவித ஆதாரமுமின்றி கணவனை கைது செய்யலாம் (IPC498A)
  • மனைவி பொய்யாக வரதட்சணை வழக்குத் தொடர்ந்தாலும் அவருக்கு எந்தவித தண்டனையும் கிடையாது, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்.  வழக்கு தொடுப்பவர் எந்தவித ஆதாரத்தையும் காட்ட வேண்டியதில்லை (Dowry Prohibition Act and IPC498A)
  • குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி  கணவன் மட்டுமே மனைவிக்கெதிராக வன்முறை செய்யும் குற்றவாளி.  மனைவி எப்போதும் அப்பாவி (Domestic Violence Act-2005)
  • திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும் (IPC304B).   ஆனால் திருமணம் நடந்து அடுத்த நாளே கணவன் தற்கொலை செய்துகொண்டால் அது இயற்கை மரணமாக கருதப்படும்.
இதுபோன்ற சூழலில் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் முதல் கடிதம் இந்த செய்தியில் இருப்பதுபோலத்தான் இருக்கும்.

பெங்களூரு:சாப்ட்வேர் இன்ஜினியர், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் என, அவர் குறிப்பு எழுதி  வைத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர், மனோஜ் குமார், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும், சாப்ட்வேர் இன்ஜினியரான, பிரமீளாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு வயதில் குழந்தை உள்ளது.கணவன், மனைவிக்கு இடையே, கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, வரதட்சணை கொடுமை புகார் செய்யப் போவதாக, அடிக்கடி மிரட்டி வந்தார்.இதனால் மனமுடைந்த மனோஜ், திருப்பதி சென்றார். அங்கு, அவர் தங்கியிருந்த அறையில், நேற்று முன்தினம், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதிய கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அதில், தன் மனைவி, அடிக்கடிமிரட்டியதால் தான், தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.

மேலும், தன் முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் எனவும் மனோஜ் எழுதியிருந்தார்.


Saturday, March 30, 2013

தப்பித்தார் விருதுநகர் ரமேஷ்! உங்களால் இதுபோல தப்பிக்க முடியுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரமேஷ்,பிரேசில் நாட்டை சேர்ந்த பாபியானா திருமணம், இந்து முறைப்படி நடந்தது. 
(தினமலர் 30 மார்ச் 2013)

இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி பல இளைஞர்கள் தினந்தோறும் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த சூழலில் விருதுநகர் ரமேஷ் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து பிரேஸில் நாட்டுப் பெண்ணை மணந்து தனது வாழ்வை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு வாழ்த்துக்கள். இந்திய இளைஞர்களின் அருமை வெளிநாட்டுப் பெண்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. 

 இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களை இந்திய சட்டங்களை காட்டி பணம் பறிக்க மருமகள்-காவல்-நீதி-அரசாங்கக் கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.  இந்தக் கூட்டணியின் பிடியில் சிக்கியவர்களின் மரண ஓலத்தை இங்கே சென்று பாருங்கள்.

 இந்த சூழலில் இந்தியாவில் யாராவது திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு பரிசாகக் கொடுப்பதற்காகவே ஒரு புதிய புத்தகம் வெளிவந்திருக்கிறது.  வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.  கண்டிப்பாக உங்கள் குடும்பத்தாருக்கும் தேவைப்படும்.

Just Married: Have You Applied for Bail


Author: Suresh P
Publisher: Frog Books  
Rs. 125
Inclusive of taxes
In Stock.
Delivered in 3-4 business days.


Sunday, February 3, 2013

மனைவியை பிரிந்த கணவன்களுக்கு நற்செய்தி!!

இந்தியாவில் திருமணம் செய்வதே மிகப் பெரிய குற்றம்.  இது தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்து “மருமகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற கூட்டு மோசடியில் சிக்கி  பொய் வரதட்சணை வழக்குகளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்.

இப்படி பொய் வழக்குகளில் சிக்கிய சிலர் பிறகு பஞ்சாயத்து மூலமாகவோ அல்லது காவல்துறையின் கட்டாயத்தாலோ மற்றொரு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்வார்கள்.  இதுபோன்ற “சப்பாணி” ஆண்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது!!!!

பொய் வழக்குப் போட்டு கணவனின் சொத்துக்களை அபகரிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க பல அமைப்புகள் அரசாங்க ஆதரவுடன் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  அப்படி ஒரு முறை பொய் வழக்குப் போட்டு சுகம் கண்ட மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்தால் அவள் எந்த நேரத்திலும் உங்கள் மீது “கற்பழிப்பு” வழக்குப் போட வாய்ப்பிருக்கிறது.  இப்போதைய சட்ட திருத்தத்தின் படி ஒரு பெண் யாரையாவது ஒருவரைக் காட்டி அவன் தன்னை கற்பழித்துவிட்டான் என்று கூறினால் போதும் உடனடியாக அந்த ஆணுக்கு தண்டனை வழங்க கூட்டம் கூட்டமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் பிரிந்த மனைவியுடன் சேர்ந்து வாழும்போது படுக்கையறையில் கணவன் தன் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டு தன்னை கற்பழித்துவிட்டான் என்று புகார் கூறினால் இதை நம்புவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு எந்தவித ஆதாரமும் தேவைப்படாது. ஏழு ஆண்டு சிறை உறுதி!!! 

சேர்ந்து வாழ நினைக்கும்போது மனைவி இப்படி பொய் கற்பழிப்பு வழக்குப் போடுவாளா? என்று எண்ணத்தோன்றும்.  சொறி பிடித்த கை சும்மா இருக்குமா? சொறிந்துகொண்டேதான் இருக்கும்.   அதுபோல ஒரு முறை பொய் வழக்குப் போட்டு குறுக்கு வழிகளை கற்ற மனைவி அடுத்த முறை பக்குவமாக திட்டமிட்டு வழக்கு போடமாட்டாளா?

பிரிந்து வாழும் மனைவியுடன் "செக்ஸ்' கணவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

பிப்ரவரி 02,2013 தினமலர்

புதுடில்லி: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டால், அதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்த, அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், கணவன் உடலுறவு கொண்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, தற்போது அமலில் உள்ள, இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376 ஏ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டப் பிரிவை நீக்கும்படி, நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

"மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், உடலுறவு கொண்டாலும், அதை பாலியல் பலாத்காரமாகவே கருதி, கூடுதல் தண்டனை வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது.


இருந்தாலும், தற்போதைய சட்டப் பிரிவு தொடர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தற்போதுள்ள, 2 ஆண்டு தண்டனை என்பதை, 7 ஆண்டாக உயர்த்த தீர்மானித்துள்ளது. பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், சட்டப் பிரிவு, 376ஏ - தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376ஏ-ன் கீழான குற்றம், இதுவரை, ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால், இனி அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.