பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, November 5, 2013

தூக்கில் தொங்கும் இந்தியர்களை (இந்தியாவை) காப்பாற்றுங்கள்




Tuesday, October 15, 2013

நீங்கள் திருமணத்திற்கு பெண் தேடுபவரா?




Saturday, July 6, 2013

ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது!


 இந்தியாவில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.  குறிப்பாக இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்கள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் கொடுக்கும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

தற்போது திருமணம் செய்யும் இளம் பெண்கள் கணவன் அவனது பெற்றோரை தவிக்க விட்டு தனிக் குடித்தனம் வரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.   அப்படி தனிக் குடித்தனத்திற்கு வர மறுத்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்கும் பெண்களின் எண்ணிக்கையும்  அதிகரித்துள்ளது. 

எல்லாவற்றையும் விட இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இளம் மனைவியரின் கள்ளக் காதல். இந்திய கள்ளக் காதல் சட்டப்படி (IPC497) கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குற்றவாளி கிடையாது.  அதனால்  பல ஆண்கள் தங்கள் மனைவியரின் கள்ளக்காதலைக்  வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

அப்படியே தைரியமாக கள்ளக் காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது பெண்ணுரிமை என்ற பெயரில் வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதுபோன்ற சூழலில் தங்களின் மனக்குறைகளை யாரிடமும் சொல்ல முடியாமலும், பொய் வழக்குகளில் மனைவியால் சிக்க வைக்கப்பட்டு அரசாங்கத்தால் துன்புறுத்தப்படும் அப்பாவி ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வழி தெரியாமல் தற்கொலை செய்து வருகிறார்கள். 


பெண்களை பாதுகாக்க இந்தியாவில் தேசிய மகளிர் வாரியம், மாநில மகளிர் வாரியம், மத்திய பெண்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம், பெண்கள் அமைப்புகள் என பல அமைப்புகள் இருக்கின்றன.  இதற்காக ஆண்டுதோறும் பலகோடிகளை அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.  ஆனால் ஆண்கள் தங்கள் நலனுக்காக ஒரு அமைச்சகம் அல்லது வாரியம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையீடு செய்தும் யாரும் இது பற்றி கவலைப்படவே  இல்லை.  ஒருவேளை ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால்தான் நாட்டிற்கு நன்மை என்று நினைக்கிறார்களோ?

கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி முதல் மே வரை, ஐந்து மாதங்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என, 294 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதில், 80 சதவீதம் பேர் ஆண்கள்.

தமிழகத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அடுத்தபடியாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை உள்ளது. காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். நடப்பாண்டு ஐனவரி முதல் மே வரை, 294 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 233 ஆண்கள், 61 பெண்கள் அடங்குவர். தூக்குப்போட்டு தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை 74; பெண்களின் எண்ணிக்கை 17. சாணிபவுடர், விஷம் உள்ளிட்டவற்றால் உயிரை மாய்த்த ஆண்கள் 37, பெண்கள் 16 பேர். உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10; இதில், மூன்று ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள்.

இவை தவிர, பிற வழிகளின் மூலம் 140 பேர் அவர்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 119 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 21. தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் 80 சதவீதம். கடந்தாண்டு தற்கொலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 658. கடந்தாண்டை ஒப்பிட்டுபார்க்கும் போது, இந்தாண்டு ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகள் குறித்து, மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:மனச்சோர்வு, பொருளாதார நெருக்கடி, தாழ்வு மனப்பான்மை, வேலையின்மை, முடிவெடுக்க முடியாத நிலை போன்றவற்றால், "கிரியோடின்' மற்றும் "நார்அட்ரினின்' குறைபாட்டால் அதிகமானோர், தற்கொலை முடிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றத்தால், இளம் தலைமுறையினர் பெற்றோர்களிடம் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. பெற்றோர்களின் வழிகாட்டுதல், அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், பிரச்னைகளை எதிர்கொள்ள இளம் தலைமுறையினர் திணறுகின்றனர்."வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, தற்கொலை ஒரு தீர்வல்ல' என்பதை உணர்த்தும் வகையில், டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். மேலும், 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனைகளில், "ஹாட்லைன் சென்டர்' அமைத்து, கவுன்சிலிங் தரலாம். தற்கொலை செய்பவர்களுக்கு, உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் மோனி கூறினார்.

Monday, June 24, 2013

உளுந்தூர்பேட்டை வெங்கடேசனின் வழியை பின்பற்றினால் இந்திய இளைஞர்கள் மானத்தோடு வாழலாம்

இளைஞர்களே,
 உங்களது வாழ்க்கை நல்ல முறையில் அமைந்து உங்களது பெற்றோர் மகிழ்ச்சியுடன் இருக்க உளுந்தூர்பேட்டை வெங்கடேசன் வழியை பின்பற்றி வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள்.   இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி உங்களை பெற்றவர்கள் சிறைக்குத்தான் செல்வார்கள்.  ஏன் என்று தெரிந்துகொள்ள இந்த குமுதம் ஸ்பெஷல் ரிப்போர்ட்டை  படியுங்கள்.  உங்களது வாழ்க்கை காவல், நீதித்துறையின் கைகளில் சிக்கி சிதைந்துவிடும் (எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள்:  இந்தியத் திருமணத்தால் சிதைந்துபோன இளைஞர்கள்.   புத்தியுள்ள இளைஞர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

உளுந்தூர்பேட்டை:சீன பெண்ணை, இந்து முறைப்படி, தமிழக வாலிபர், தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தொப்பையன்குளத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன்; விவசாயி. இவரது மகன் வெங்கடேசன், 29; கேட்டரிங் படித்தவர். 6 ஆண்டுகளுக்கு முன், சீன நாட்டில், குவைஹவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மின்ஹால்-குவாயின் மகள் ஷியாகுவ்வா, 28, என்பவரை காதலித்தார். கடந்த ஆண்டு ஏப்., 6ம் தேதி, பதிவுத் திருமணம் செய்து கொண்டு, இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, வெங்கடேசனின் பெற்றோர், இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என, வேண்டுகோள் வைத்தனர். அதையேற்ற வெங்கடேசன், ஷியாகுவ்வாவுடன், தொப்பையான்குளம் வந்தார்.
நேற்று காலை, 7:15 மணிக்கு, ஷியாகுவ்வா கழுத்தில், வெங்கடேசன் தாலி கட்டினார். மணப்பெண், கீழே உட்கார்ந்து பழக்கமில்லாத மணமகள், மண நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.

வெங்கடேசன் கூறுகையில், "சைனீஸ் மொழி சரளமாகவும், ஆங்கிலம், ஹிந்தி கொஞ்சமாகவும் பேச தெரியும். சீன பெண்ணை மணந்ததால், என் பெற்றோர் வருத்தப்பட்டனர். இருப்பினும், பெருமை தெரிவித்தனர்.
பெண்ணுக்கு, சீன மொழி மட்டுமே தெரியும். அதனால், உறவினர்களுடன் பேச முடியவில்லை. அது தான் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.


Tuesday, June 18, 2013

உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் வேறு நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகும் இந்திய இளைஞர்கள்

இந்திய இளைஞர்கள் தற்போதைய தொழில் நுட்பம் முதல் டாஸ்மாக் சரக்கு ரகசியம் வரை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  ஆனால் இந்தியாவில் திருமணம் செய்தால் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் வேறு நாட்டில் அகதியாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

கலப்புத்திருமணம் செய்ததால் தாங்கள் இந்தியாவிற்கு சென்றால் தங்களை அரசியல் செல்வாக்கு மிக்க பெற்றோர்கள் போலிஸ் துணையோடு இந்தியாவில் கொன்றுவிடுவார்கள் என்று ஒரு  இளைஞர் ஆஸ்திரேலிய நாட்டில் முறையீடு செய்து இந்தியாவில் குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆஸ்திரேலிய நாட்டில் அகதியாக மாறிவிட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.

இந்த செய்தியை படித்ததும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.  ஆனால் அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது.  இது பலருக்கும் தெரியாது ஆனால் இந்திய அரசாங்கம் உட்பட எல்லா நாடுகளுக்கும் தெரியும்.  அது என்னவென்றால் இந்தியாவில் திருமணம் செய்து வெளிநாடுகளில் தங்கள் திறமை மூலம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் மீது இந்தியாவில் ஒரு மூலையில் காவல்நிலையத்தில் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞர்களையும், அவரது குடும்பத்தையும் மிரட்டி பணம் பறிக்கும் இழி செயல் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. 

இதுபோன்ற சிக்கலில் சிக்கும் பல இளைஞர்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் அவர்கள் இருக்கும் நாடுகளிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இவர்களால் தங்கள் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவிற்குள் வர முடியாது.  அப்படி இந்தியாவிற்குள் வந்தால் பொய் வரதட்சணை வழக்கை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கும் காவல்துறையும், நீதித்துறையும்  கைகோர்த்துக்கொண்டு இந்த இளைஞர்களின் வாழ்க்கையை சின்னாபின்னம் செய்துவிடுகிறார்கள்.  இவர்களின் எதிர்காலம்  பிறகு மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும். 

இந்த விஷயத்தை உங்களால் நம்ப முடியவில்லையென்றால் இந்தியாவில் திருமணம் செய்ததால் வெளிநாடுகளில்  அகதிகளாக வாழும் இளைஞர்களின் மரண ஓலத்தை இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்  Forums - 498a ORG



தினமலர் 17 ஜூன் 2013

மெல்போர்ன்:பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, கலப்புத் திருமணம் செய்த தம்பதி, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க, அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது.

கலப்பு திருமணம்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய வாலிபரும், இந்துப் பெண்ணும், 2007ல், காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.
தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் சொன்னால், பெற்றோர் தங்களை பிரித்து விடலாம் அல்லது கவுரவக் கொலை செய்துவிடலாம் எனக்கருதிய இருவரும், ரகசிய திருமணம் செய்து கொண்ட பின், 2008ல், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றனர்.

நீட்டிப்பு
இந்நிலையில், அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்த இருவரது விசா காலம் முடிந்த நிலையில், "இந்தியாவிற்குச் சென்றால், தங்களை கவுரவக் கொலை செய்துவிடுவார்கள் எனவே, விசா காலத்தை நீட்டிக்க வேண்டும்' என, குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் மனு செய்தனர்.இருப்பினும், அவர்களது மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

பின், "தங்களை அகதிகளாகக் கருதி, ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும்' என, அகதிகள் மறு ஆய்வு தீர்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், "இந்த தம்பதி, தங்கள் சொந்த மாநிலமான, பஞ்சாபைத் தவிர்த்து, மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் வசிக்க வாய்ப்புள்ளது' என, கூறி, மனுவை நிராகரித்தது. ஆனால், "என் தந்தைக்கு அரசியல் மற்றும் போலீசில் செல்வாக்கு உள்ளதால், அதனைப் பயன்படுத்தி, எங்களைப் பிரித்துவிடுவார் அல்லது கொலை கூட செய்துவிடுவார்' என, பஞ்சாப் வாலிபர் வாதாடினார்.

அனுமதி
பின், கேன்பராவில் உள்ள, "பெடரல்' கோர்ட்டில், தீர்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து, இந்த தம்பதி அப்பீல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த பெடரல் கோர்ட், "இந்திய தம்பதி ஆஸ்திரேலியாவில் தாராளமாகத் தங்கலாம், தீர்ப்பாயம், தன் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. இருப்பினும், பெடரல் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள், அப்பீல் செய்ய உள்ளனர்.