பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, September 1, 2014

திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?

இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி குடும்பங்கள் சிதைக்கப்படுகின்றன.  பல அப்பாவி இளைஞர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

இதனை சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் சுட்டிக் காட்டியிருக்கிறது.  இந்த ஆபத்தான் சூழலில் தமிழக இளைஞர்  ஒருவர் சரியான முடிவெடுத்து வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்து தனது வாழ்க்கையை செம்மையாக்கிக் கொண்டு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தையும் பொய் வழக்குகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.  அவரை பாராட்டி வாழ்த்துவோம். 

செப்டம்பர் 01,2014
திருக்கோவிலுார்:அர்மேனிய பெண்ணை, தமிழக வாலிபர், இந்துமத சடங்குபடி, திருமணம் செய்தார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணிவண்ணன்; பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். ரஷ்யாவில் இருந்து பிரிந்த அர்மேனியாவைச் சேர்ந்தவர் மேனி. இவர் அமெரிக்காவில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி வல்லுனராக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், இந்து முறைப்படி தாலி கட்டி, திருமணம் நடந்தது. விழாவில், மணப்பெண்ணின் பெற்றோரும் பங்கேற்றனர்.


Saturday, August 30, 2014

திருமணம் செய்ய இந்திய ஆண்கள் தகுதியானவர்களா?

தினமலர்  28.8.2014

மதுரை: ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தால்வியடைகின்றன. இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா? இல்லையா? இக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன? என கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட் கிளை, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

போடியைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், திருச்சியைச் சேர்ந்த எம்.எஸ்.சி., படித்த பெண்ணிற்கும் 2013 ஜூன் 19 ல் திருமணம் நடந்தது. கணவருக்கு ஆண்மைக் குறைபாடு இருந்ததால், அவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதனால், விவாகரத்துக் கோரி திருச்சி கோர்ட்டில், மனைவி மனு தாக்கல் செய்தார்; வழக்கு நிலுவையில் உள்ளது.  குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், அப்பெண் மாவட்ட சமூகநலத்துறை அலுவலரிடம் புகார் செய்தார். அந்த விசாரணை நடைமுறைகளுக்கு தடைகோரி, கணவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு

இன்றும் கூட பெண் குழந்தைகளை சுமையாக, சமுதாயம் கருதுகிறது. இதனால்தான் மணமகன் பற்றி சரியாக விசாரிக்காமல், பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். இது தீவிரத் தன்மை கொண்ட வழக்கு. இவ்வழக்கில் உள்ள விஷயம், சமுதாயப் பிரச்னை சார்ந்தது.
தற்போது, பல்வேறு விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை முக்கிய பிரச்னையாக உள்ளது. இதைக் கருதியே, கோர்ட் தீவிர கவனம் செலுத்துகிறது.

சமுதாயத்தில் குடும்ப அமைப்பு மிக முக்கியம். அது சரியாக இல்லையெனில், சமுதாயத்திற்கே ஆபத்து. குடும்ப அமைப்பிற்கு ஆபத்தாக அமைவது ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை. பெற்றோர் உண்மைகளை மறைத்து, திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்த பின் சம்பந்தப்பட் ஆணும், பெண்ணும் சமுதாயத்திற்குப் பயந்து வெளியில் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முறையாமல் தவிக்கின்றனர்.

இவ்வழக்கில், பிரச்னையே ஆண்மைக் குறைபாடுதான். அது மறைக்கப்பட்டுள்ளது. சென்னை குடும்பநல கோர்ட் புள்ளிவிபரப்படி 2009 ல் 88, 2010 ல் 272, 2011 ல் 388, 2012 ல் 557, 2013 ல் 715 என ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை காரணமாக விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருமணம் ஆனபின் ஒருவரின் இயலாமையால், மற்றொருவர் பாதிக்கப்படுகிறார். அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இதுபோன்ற துன்பங்களை தவிர்க்கலாம். ஆண்மைக் குறைபாடு உள்ளதை யாரும் வெளிப்படுத்துவதில்லை. இப்பிரச்னையை மேலும் வளரவிடாமல் தடுப்பது அவசியம். இல்லையெனில், பெண்களின் வாழ்க்கை பாழாகும். பலர் மனமுடைந்து தற்கொலை செய்கின்றனர். இதை அவசர கதியில் தடுக்க சிறந்த வழியாக, திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யலாம். ஆண்மைக் குறைபாடு, எய்ட்ஸ், எச்.ஐ.வி., உள்ளதை கண்டறிந்து, திருமணத்தை தடுக்கலாம். இப்பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தோல்வியடைகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையில், பிரச்னையின் தன்மையை மத்திய, மாநில அரசுகள் அறிந்துள்ளனவா? இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா? இல்லையா?

ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை சம்பந்தமான வழக்குகளுக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டிற்குள் தீர்வுகாணும் வகையில், திருமண சட்டங்களில் மத்திய அரசு ஏன் திருத்தம் செய்யக்கூடாது? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, உண்மையை மறைப்பவர்
களுக்கு தண்டனை ஏன் வழங்கக் கூடாது?

இக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன? மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், மத்திய சட்டக் கமிஷன் செயலாளர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள, ஐகோர்ட் தானாக முன்வந்துஉத்தரவிடுகிறது. அவர்கள் செப்.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

சன் டிவியின் விவாத மேடை


Tuesday, June 24, 2014

கேட்க ஆளில்லாமல் கேவலப்படும் இந்திய ஆண்கள்

இந்தியாவில் பெண்களின் நலனை பாதுகாக்க தேசிய மகளிர் வாரியம், மத்திய பெண்கள் நல அமைச்சகம், மாநில பெண்கள் நல வாரியம், மற்றும் பல NGO அமைப்புகள் இருக்கின்றன.  ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் பெண்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் செய்து தருகின்றன அரசாங்கங்கள்.  ஆண்களைப் பற்றி கவலைப்பட யாருமே இல்லை.  அதனால் இந்தியாவில் ஆண்களுக்க எதிராக சட்ட துஷ்பிரயோகம் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கின்றன.  இன்று நான், நாளை நீ.......இது ஒவ்வொரு இந்திய ஆணுக்குமான எச்சரிக்கை.

ஜூன் 24,2014 தினமலர்
போபால்: மத்திய பிரதேசத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில், 'என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறாள்; என்னை காப்பாற்றுங்கள்' என, ஏராளமான ஆண்கள் புகார் அளிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக, மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், கடந்த வாரம் துவக்கி வைத்தார். பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதி, போலீஸ் உதவி, சட்ட உதவி ஆகிய அனைத்து வசதிகளும், இந்த மையத்தில் கிடைக்கும்.
பாதிக்கப்படும் பெண்கள், சிகிச்சை பெறுவதற்கும், புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி பெறுவதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதைத் தடுப்பதற்காக, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த மையத்தில் டாக்டர்கள், போலீசார், வழக்கறிஞர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். பல பெண்கள், இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஆண்களிடமிருந்தும், உதவி கோரி இந்த மையத்துக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் ஆண்கள், 'என் மனைவி கொடுமைப்படுத்துகிறாள்; அவளிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்; விவாகரத்து வாங்கித் தாருங்கள்' என்கின்றனர். இதனால், உதவி மையத்தில் உள்ளவர்கள், தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்.


Saturday, April 12, 2014

இந்திய ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி எண்


இந்தியாவில் அப்பாவி ஆண்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் “சட்ட தீவிரவாதம்” என்னும்  பொய் வரதட்சணை வழக்குகள், பொய் குடும்ப வன்முறை வழக்குகள், பொய் கற்பழிப்பு வழக்குகள் போன்றவற்றில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கும்போது பிணந்திண்ணும் கழுகு போல காவல் நண்பர்கள், சட்ட நண்பர்கள்  எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று பல ஆயிரங்கள், லட்சங்கள்  என பணம் பறிக்க முயற்சி செய்வார்கள்.

இது போன்று இந்திய சட்ட தீவிரவாதத்தால் திக்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்ய Save Indian Family Foundation – SIFF என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலவச உதவி தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது.  குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.  கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் தேவைப்படும்.  ஏனென்றால் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு ஆணின் தலைமேலும் பொய் வழக்கு என்ற கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.  இது என்று தலையில் விழும் என்று தெரியாது.  அதுவரை ஏதோ சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால் கண்டிப்பாக ஒருநாள் அந்த கத்தி உங்கள் தலையை பதம் பார்த்துவிடும் என்பது உறுதி.




Monday, March 3, 2014

ஆண்களை தற்கொலை செய்துகொள்ள கட்டாயப்படுத்தும் நாடு!

இளைஞர்களே,

இந்தியத் திருமணம் என்பது  ஊழல்மிக்க காவல்துறை, நீதித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படும் அரசாங்கம் என்ற கழுகுகளும், ஓநாய்களும், குள்ள நரிகளும் வட்டமிடும ஒரு பாழுங்கிணறு என்று உணர்ந்துகொள்ளுங்கள்.  நீங்கள் இந்தியத் திருமணம் என்ற விபத்தின் மூலம் அந்தக்கிணற்றுக்குள் விழும்போது பொய் வரதட்சணை வழக்கு என்ற ஆயுதங்கள் மூலம் உங்களை தாக்கி உங்களது ரத்தத்தை உறிஞ்சி நடைபிணமாக மாற்றிவிடுவார்கள்.





Tuesday, November 5, 2013

தூக்கில் தொங்கும் இந்தியர்களை (இந்தியாவை) காப்பாற்றுங்கள்




Tuesday, October 15, 2013

நீங்கள் திருமணத்திற்கு பெண் தேடுபவரா?




Saturday, July 6, 2013

ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது!


 இந்தியாவில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.  குறிப்பாக இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்கள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் கொடுக்கும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

தற்போது திருமணம் செய்யும் இளம் பெண்கள் கணவன் அவனது பெற்றோரை தவிக்க விட்டு தனிக் குடித்தனம் வரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.   அப்படி தனிக் குடித்தனத்திற்கு வர மறுத்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்கும் பெண்களின் எண்ணிக்கையும்  அதிகரித்துள்ளது. 

எல்லாவற்றையும் விட இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இளம் மனைவியரின் கள்ளக் காதல். இந்திய கள்ளக் காதல் சட்டப்படி (IPC497) கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குற்றவாளி கிடையாது.  அதனால்  பல ஆண்கள் தங்கள் மனைவியரின் கள்ளக்காதலைக்  வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

அப்படியே தைரியமாக கள்ளக் காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது பெண்ணுரிமை என்ற பெயரில் வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதுபோன்ற சூழலில் தங்களின் மனக்குறைகளை யாரிடமும் சொல்ல முடியாமலும், பொய் வழக்குகளில் மனைவியால் சிக்க வைக்கப்பட்டு அரசாங்கத்தால் துன்புறுத்தப்படும் அப்பாவி ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வழி தெரியாமல் தற்கொலை செய்து வருகிறார்கள். 


பெண்களை பாதுகாக்க இந்தியாவில் தேசிய மகளிர் வாரியம், மாநில மகளிர் வாரியம், மத்திய பெண்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம், பெண்கள் அமைப்புகள் என பல அமைப்புகள் இருக்கின்றன.  இதற்காக ஆண்டுதோறும் பலகோடிகளை அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.  ஆனால் ஆண்கள் தங்கள் நலனுக்காக ஒரு அமைச்சகம் அல்லது வாரியம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையீடு செய்தும் யாரும் இது பற்றி கவலைப்படவே  இல்லை.  ஒருவேளை ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால்தான் நாட்டிற்கு நன்மை என்று நினைக்கிறார்களோ?

கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி முதல் மே வரை, ஐந்து மாதங்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என, 294 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதில், 80 சதவீதம் பேர் ஆண்கள்.

தமிழகத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அடுத்தபடியாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை உள்ளது. காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். நடப்பாண்டு ஐனவரி முதல் மே வரை, 294 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 233 ஆண்கள், 61 பெண்கள் அடங்குவர். தூக்குப்போட்டு தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை 74; பெண்களின் எண்ணிக்கை 17. சாணிபவுடர், விஷம் உள்ளிட்டவற்றால் உயிரை மாய்த்த ஆண்கள் 37, பெண்கள் 16 பேர். உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10; இதில், மூன்று ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள்.

இவை தவிர, பிற வழிகளின் மூலம் 140 பேர் அவர்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 119 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 21. தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் 80 சதவீதம். கடந்தாண்டு தற்கொலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 658. கடந்தாண்டை ஒப்பிட்டுபார்க்கும் போது, இந்தாண்டு ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகள் குறித்து, மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:மனச்சோர்வு, பொருளாதார நெருக்கடி, தாழ்வு மனப்பான்மை, வேலையின்மை, முடிவெடுக்க முடியாத நிலை போன்றவற்றால், "கிரியோடின்' மற்றும் "நார்அட்ரினின்' குறைபாட்டால் அதிகமானோர், தற்கொலை முடிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றத்தால், இளம் தலைமுறையினர் பெற்றோர்களிடம் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. பெற்றோர்களின் வழிகாட்டுதல், அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், பிரச்னைகளை எதிர்கொள்ள இளம் தலைமுறையினர் திணறுகின்றனர்."வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, தற்கொலை ஒரு தீர்வல்ல' என்பதை உணர்த்தும் வகையில், டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். மேலும், 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனைகளில், "ஹாட்லைன் சென்டர்' அமைத்து, கவுன்சிலிங் தரலாம். தற்கொலை செய்பவர்களுக்கு, உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் மோனி கூறினார்.

Monday, June 24, 2013

உளுந்தூர்பேட்டை வெங்கடேசனின் வழியை பின்பற்றினால் இந்திய இளைஞர்கள் மானத்தோடு வாழலாம்

இளைஞர்களே,
 உங்களது வாழ்க்கை நல்ல முறையில் அமைந்து உங்களது பெற்றோர் மகிழ்ச்சியுடன் இருக்க உளுந்தூர்பேட்டை வெங்கடேசன் வழியை பின்பற்றி வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள்.   இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி உங்களை பெற்றவர்கள் சிறைக்குத்தான் செல்வார்கள்.  ஏன் என்று தெரிந்துகொள்ள இந்த குமுதம் ஸ்பெஷல் ரிப்போர்ட்டை  படியுங்கள்.  உங்களது வாழ்க்கை காவல், நீதித்துறையின் கைகளில் சிக்கி சிதைந்துவிடும் (எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள்:  இந்தியத் திருமணத்தால் சிதைந்துபோன இளைஞர்கள்.   புத்தியுள்ள இளைஞர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

உளுந்தூர்பேட்டை:சீன பெண்ணை, இந்து முறைப்படி, தமிழக வாலிபர், தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தொப்பையன்குளத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன்; விவசாயி. இவரது மகன் வெங்கடேசன், 29; கேட்டரிங் படித்தவர். 6 ஆண்டுகளுக்கு முன், சீன நாட்டில், குவைஹவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மின்ஹால்-குவாயின் மகள் ஷியாகுவ்வா, 28, என்பவரை காதலித்தார். கடந்த ஆண்டு ஏப்., 6ம் தேதி, பதிவுத் திருமணம் செய்து கொண்டு, இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, வெங்கடேசனின் பெற்றோர், இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என, வேண்டுகோள் வைத்தனர். அதையேற்ற வெங்கடேசன், ஷியாகுவ்வாவுடன், தொப்பையான்குளம் வந்தார்.
நேற்று காலை, 7:15 மணிக்கு, ஷியாகுவ்வா கழுத்தில், வெங்கடேசன் தாலி கட்டினார். மணப்பெண், கீழே உட்கார்ந்து பழக்கமில்லாத மணமகள், மண நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.

வெங்கடேசன் கூறுகையில், "சைனீஸ் மொழி சரளமாகவும், ஆங்கிலம், ஹிந்தி கொஞ்சமாகவும் பேச தெரியும். சீன பெண்ணை மணந்ததால், என் பெற்றோர் வருத்தப்பட்டனர். இருப்பினும், பெருமை தெரிவித்தனர்.
பெண்ணுக்கு, சீன மொழி மட்டுமே தெரியும். அதனால், உறவினர்களுடன் பேச முடியவில்லை. அது தான் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.


Tuesday, June 18, 2013

உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் வேறு நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகும் இந்திய இளைஞர்கள்

இந்திய இளைஞர்கள் தற்போதைய தொழில் நுட்பம் முதல் டாஸ்மாக் சரக்கு ரகசியம் வரை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  ஆனால் இந்தியாவில் திருமணம் செய்தால் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் வேறு நாட்டில் அகதியாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

கலப்புத்திருமணம் செய்ததால் தாங்கள் இந்தியாவிற்கு சென்றால் தங்களை அரசியல் செல்வாக்கு மிக்க பெற்றோர்கள் போலிஸ் துணையோடு இந்தியாவில் கொன்றுவிடுவார்கள் என்று ஒரு  இளைஞர் ஆஸ்திரேலிய நாட்டில் முறையீடு செய்து இந்தியாவில் குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆஸ்திரேலிய நாட்டில் அகதியாக மாறிவிட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.

இந்த செய்தியை படித்ததும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.  ஆனால் அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது.  இது பலருக்கும் தெரியாது ஆனால் இந்திய அரசாங்கம் உட்பட எல்லா நாடுகளுக்கும் தெரியும்.  அது என்னவென்றால் இந்தியாவில் திருமணம் செய்து வெளிநாடுகளில் தங்கள் திறமை மூலம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் மீது இந்தியாவில் ஒரு மூலையில் காவல்நிலையத்தில் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞர்களையும், அவரது குடும்பத்தையும் மிரட்டி பணம் பறிக்கும் இழி செயல் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. 

இதுபோன்ற சிக்கலில் சிக்கும் பல இளைஞர்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் அவர்கள் இருக்கும் நாடுகளிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இவர்களால் தங்கள் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவிற்குள் வர முடியாது.  அப்படி இந்தியாவிற்குள் வந்தால் பொய் வரதட்சணை வழக்கை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கும் காவல்துறையும், நீதித்துறையும்  கைகோர்த்துக்கொண்டு இந்த இளைஞர்களின் வாழ்க்கையை சின்னாபின்னம் செய்துவிடுகிறார்கள்.  இவர்களின் எதிர்காலம்  பிறகு மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும். 

இந்த விஷயத்தை உங்களால் நம்ப முடியவில்லையென்றால் இந்தியாவில் திருமணம் செய்ததால் வெளிநாடுகளில்  அகதிகளாக வாழும் இளைஞர்களின் மரண ஓலத்தை இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்  Forums - 498a ORG



தினமலர் 17 ஜூன் 2013

மெல்போர்ன்:பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, கலப்புத் திருமணம் செய்த தம்பதி, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க, அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது.

கலப்பு திருமணம்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய வாலிபரும், இந்துப் பெண்ணும், 2007ல், காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.
தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் சொன்னால், பெற்றோர் தங்களை பிரித்து விடலாம் அல்லது கவுரவக் கொலை செய்துவிடலாம் எனக்கருதிய இருவரும், ரகசிய திருமணம் செய்து கொண்ட பின், 2008ல், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றனர்.

நீட்டிப்பு
இந்நிலையில், அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்த இருவரது விசா காலம் முடிந்த நிலையில், "இந்தியாவிற்குச் சென்றால், தங்களை கவுரவக் கொலை செய்துவிடுவார்கள் எனவே, விசா காலத்தை நீட்டிக்க வேண்டும்' என, குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் மனு செய்தனர்.இருப்பினும், அவர்களது மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

பின், "தங்களை அகதிகளாகக் கருதி, ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும்' என, அகதிகள் மறு ஆய்வு தீர்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், "இந்த தம்பதி, தங்கள் சொந்த மாநிலமான, பஞ்சாபைத் தவிர்த்து, மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் வசிக்க வாய்ப்புள்ளது' என, கூறி, மனுவை நிராகரித்தது. ஆனால், "என் தந்தைக்கு அரசியல் மற்றும் போலீசில் செல்வாக்கு உள்ளதால், அதனைப் பயன்படுத்தி, எங்களைப் பிரித்துவிடுவார் அல்லது கொலை கூட செய்துவிடுவார்' என, பஞ்சாப் வாலிபர் வாதாடினார்.

அனுமதி
பின், கேன்பராவில் உள்ள, "பெடரல்' கோர்ட்டில், தீர்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து, இந்த தம்பதி அப்பீல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த பெடரல் கோர்ட், "இந்திய தம்பதி ஆஸ்திரேலியாவில் தாராளமாகத் தங்கலாம், தீர்ப்பாயம், தன் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. இருப்பினும், பெடரல் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள், அப்பீல் செய்ய உள்ளனர்.


Monday, June 10, 2013

மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருப்பது குற்றச் செயலாகும் - கேரள உயர்நீதிமன்றம்

திருமணம்  என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களில் இதுவும் ஒரு வகை! 

மனைவி உறவு கொள்ள விரும்பினால் கணவன் கண்டிப்பாக உறவு கொள்ள வேண்டும்.  இதற்கு கணவன் மறுத்தால் அது  சட்டப்படி குற்றமாகும்.  ஆனால் மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் உறவு கொள்ள விரும்பினால் அது  மனைவியை கணவன் பாலியல் பலாத்காரம் செய்த குற்றமாக கருதப்படுகிறது!
பின்வரும் செய்தியில் மனைவி உறவு கொள்ள விரும்பி கணவன் மறுத்துவிட்டது குற்றமாகும் என்று கூறி இதனால் மனைவிக்கு மனம், உடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி உறவுக்கு உதவாத கணவன் தேவையில்லை என்று விவாகரத்து வழங்கியிருக்கிறார்கள்.

தற்போது இந்தியாவில் பரவலாக பரவியிருக்கும்  இளம் மனைவியரின் பொய் வரதட்சணை வழக்குகளால் பல திருமணங்கள் சிதைந்து கணவனும் மனைவியும் விவாகரத்து இல்லாமல் தனியே பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரிந்து வாழும் ஜோடிகளில் கணவன் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வேண்டும் நான் வேறு திருமணம் செய்து கொண்டு முறையாக உறவினை அனுபவிக்கவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தால் விவாகரத்து வழங்கப்படுவதில்லை.  அதே சமயம் தனியே வாழும் மனைவிக்கு  பராமரிப்பு என்ற பெயரில் கணவன் மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 

ஆனால் வாங்கும் பணத்திற்கு கணவன் விரும்பும் உறவு மனைவியிடமிருந்து கிடைப்பதில்லை.  அதாவது மனைவியாக நடந்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு மனைவி என்ற பெயரில் கணவன் பணம் கொடுக்க வேண்டும், தனது சொத்துக்களில் பங்கு கொடுக்க வேண்டும்.  ஆனால் கணவன் விரும்பும் இல்லற சுகம் மட்டும் கிடைக்காது!!!

சட்டப்படி குற்றம் என்பதால் விலைமாதர்களை நாடமுடியாமலும், விவாகரத்து கிடைக்காததால் வேறு திருமணம் செய்ய முடியாமல் நேர் வழியிலும் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியாமலும் இருக்கும் கணவர்கள்  இல்லற சுகத்தை கொடுக்காத மனைவிக்கு நீதிமன்ற உத்தரவினால் மாதந்தோறும் பணம்  கொடுக்கவேண்டியிருக்கிறது.  இப்படி பணம் கொடுத்துக் கொண்டிருக்கிற கணவர்களுக்கு தங்கள் மனைவியிடமிருந்து தங்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய உறவு கிடைக்காதபோது மனநல மற்றும் உடல் நல  பாதிப்புகள் ஏற்படாதா??? 

மனைவியுடன் உறவு கொள்ளாத கணவன் விவாகரத்தை உறுதி செய்தது ஐகோர்ட்
                                                             ஜூன் 10,2013 தினமலர்

கொச்சி:திருமணம் முடிந்து, மூன்றாண்டுகளாக, "செக்ஸ்' உறவு வைத்துக் கொள்ளாத கணவரிடம் இருந்து மனைவி பெற்ற விவாகரத்தை, கேரள ஐகோர்ட் உறுதி செய்தது.

கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்தவர், சஞ்ஜன். நான்கு ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். சஞ்ஜனின் மனைவி, கணவர் தன்னுடன், செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை எனக் கூறி, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி, வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கினார். இதை எதிர்த்து, அந்த நபர், கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

முஸ்லிம் திருமண சட்டப்படி, கோர்ட்டில் விவாகரத்து பெற்றது செல்லாது எனக் கூறி, மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, பி.டி.ராஜன் தலைமையிலான பெஞ்ச், சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, குடும்ப நல கோர்ட்டின் தீர்ப்பையும் உறுதி செய்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:  திருமணத்திற்குப் பின், மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், குடும்ப பொறுப்புகளை ஏற்காமல் இருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யலாம் என, முஸ்லிம் திருமணச் சட்டம் தெரிவிக்கிறது. மனைவியின் விருப்பத்திற்குப் பிறகும், செக்ஸ் வைத்துக் கொள்ளாதது, குற்றச்செயலாகும். இதனால், அந்த பெண்ணுக்கு, உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, குடும்ப நல கோர்ட் கொடுத்த தீர்ப்பை, உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Sunday, June 9, 2013

தனிக் குடித்தனம் வர மறுக்கும் கணவனுக்கு குடும்பத்தோடு ஓராண்டு சிறை! சம்மதமா?

இந்தியத் திருமணத்தில் இருக்கும் பல ஆபத்துக்களில் இதுவும் ஒரு வகை!


இளம் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினருக்கு சிறை
 
ஜூன் 09,2013 தினமலர்

கோவை: இளம்பெண் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர், அவரது தம்பிகள் உள்ளிட்ட மூவருக்கு, தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், மாமியாருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி, கோவை மகளிர் கேர்ட் தீர்ப்பளித்தது.

சேலம், ஆத்தூரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 26. இவருக்கும், கோவை ரத்தினபுரியில் மளிகை கடை நடத்தும் செல்வகுமாருக்கும், கடந்த 2003ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. சில ஆண்டுகளில், தனி குடித்தனம் செல்ல வேண்டும் என, கணவரிடம் உமா கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் குடும்பத்தினர், "தனி குடித்தனம் செல்ல வேண்டுமென்றால், பெற்றோரிடம் நகை மற்றும் ரொக்கம் வாங்கி வர வேண்டும்' என்று வற்புறுத்தினர். மனமுடைந்த உமா மகேஸ்வரி, 2007, ஆக., 23ம் தேதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது சாவில் சந்தேகம் அடைந்த இவரது சகோதரர் வெள்ளை விநாயகம், கோவை போலீசில் புகார் செய்தார். ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இளம் பெண் சாவுக்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்ட கணவர் செல்வகுமார், மாமியார் பார்வதி, கணவரின் சகோதரர்கள் செல்வராஜ், ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சரோஜினி ஆஜரானார். 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மற்றும் அவரது தம்பிகள் இருவருக்கும், தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மாமியார் பார்வதிக்கு ஆறு மாதம் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு கூறினார்.

Thursday, April 11, 2013

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் முதல் கடிதம்

“திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” என்பது பழமொழி.  இப்போது திருமணம் என்பது தலையிலிருந்து மழித்துக்கொள்ளும் “மயிர்” என்பது பல இளம்பெண்களும், அவர்களது குடும்பத்தாரும் சொல்லும் புது மொழி. 

பல பெண்களும் அவர்தம் குடும்பத்தாரும் திருமணம் என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  குறிப்பாக திருமணம் என்ற பெயரில் தங்களது மகளை வைத்து அவளது கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்ய வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.  இந்த வியாபாரத்திற்கு உதவி செய்வதற்காக அவ்வப்போது அரசாங்கம் ஒருதலைபட்சமான  புதிய சட்டங்களை இயற்றி ஊக்கப்படுத்தி வருகிறது. 

திருமணம் என்ற பெயரில் பெண்வீட்டார் வியாபாரம் செய்ய அரசாங்கம் கொடுத்துள்ள  சட்டங்களில் சில: 
  • கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது (IP497)
  •  கணவன் மீது மனைவி பொய் வரதட்சணை வழக்குத் தொடர்ந்தால் எந்தவித ஆதாரமுமின்றி கணவனை கைது செய்யலாம் (IPC498A)
  • மனைவி பொய்யாக வரதட்சணை வழக்குத் தொடர்ந்தாலும் அவருக்கு எந்தவித தண்டனையும் கிடையாது, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்.  வழக்கு தொடுப்பவர் எந்தவித ஆதாரத்தையும் காட்ட வேண்டியதில்லை (Dowry Prohibition Act and IPC498A)
  • குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி  கணவன் மட்டுமே மனைவிக்கெதிராக வன்முறை செய்யும் குற்றவாளி.  மனைவி எப்போதும் அப்பாவி (Domestic Violence Act-2005)
  • திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும் (IPC304B).   ஆனால் திருமணம் நடந்து அடுத்த நாளே கணவன் தற்கொலை செய்துகொண்டால் அது இயற்கை மரணமாக கருதப்படும்.
இதுபோன்ற சூழலில் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் முதல் கடிதம் இந்த செய்தியில் இருப்பதுபோலத்தான் இருக்கும்.

பெங்களூரு:சாப்ட்வேர் இன்ஜினியர், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் என, அவர் குறிப்பு எழுதி  வைத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர், மனோஜ் குமார், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும், சாப்ட்வேர் இன்ஜினியரான, பிரமீளாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு வயதில் குழந்தை உள்ளது.கணவன், மனைவிக்கு இடையே, கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, வரதட்சணை கொடுமை புகார் செய்யப் போவதாக, அடிக்கடி மிரட்டி வந்தார்.இதனால் மனமுடைந்த மனோஜ், திருப்பதி சென்றார். அங்கு, அவர் தங்கியிருந்த அறையில், நேற்று முன்தினம், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதிய கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அதில், தன் மனைவி, அடிக்கடிமிரட்டியதால் தான், தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.

மேலும், தன் முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் எனவும் மனோஜ் எழுதியிருந்தார்.


Saturday, March 30, 2013

தப்பித்தார் விருதுநகர் ரமேஷ்! உங்களால் இதுபோல தப்பிக்க முடியுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரமேஷ்,பிரேசில் நாட்டை சேர்ந்த பாபியானா திருமணம், இந்து முறைப்படி நடந்தது. 
(தினமலர் 30 மார்ச் 2013)

இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி பல இளைஞர்கள் தினந்தோறும் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த சூழலில் விருதுநகர் ரமேஷ் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து பிரேஸில் நாட்டுப் பெண்ணை மணந்து தனது வாழ்வை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு வாழ்த்துக்கள். இந்திய இளைஞர்களின் அருமை வெளிநாட்டுப் பெண்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. 

 இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களை இந்திய சட்டங்களை காட்டி பணம் பறிக்க மருமகள்-காவல்-நீதி-அரசாங்கக் கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.  இந்தக் கூட்டணியின் பிடியில் சிக்கியவர்களின் மரண ஓலத்தை இங்கே சென்று பாருங்கள்.

 இந்த சூழலில் இந்தியாவில் யாராவது திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு பரிசாகக் கொடுப்பதற்காகவே ஒரு புதிய புத்தகம் வெளிவந்திருக்கிறது.  வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.  கண்டிப்பாக உங்கள் குடும்பத்தாருக்கும் தேவைப்படும்.

Just Married: Have You Applied for Bail


Author: Suresh P
Publisher: Frog Books  
Rs. 125
Inclusive of taxes
In Stock.
Delivered in 3-4 business days.


Sunday, February 3, 2013

மனைவியை பிரிந்த கணவன்களுக்கு நற்செய்தி!!

இந்தியாவில் திருமணம் செய்வதே மிகப் பெரிய குற்றம்.  இது தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்து “மருமகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற கூட்டு மோசடியில் சிக்கி  பொய் வரதட்சணை வழக்குகளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்.

இப்படி பொய் வழக்குகளில் சிக்கிய சிலர் பிறகு பஞ்சாயத்து மூலமாகவோ அல்லது காவல்துறையின் கட்டாயத்தாலோ மற்றொரு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்வார்கள்.  இதுபோன்ற “சப்பாணி” ஆண்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது!!!!

பொய் வழக்குப் போட்டு கணவனின் சொத்துக்களை அபகரிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க பல அமைப்புகள் அரசாங்க ஆதரவுடன் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  அப்படி ஒரு முறை பொய் வழக்குப் போட்டு சுகம் கண்ட மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்தால் அவள் எந்த நேரத்திலும் உங்கள் மீது “கற்பழிப்பு” வழக்குப் போட வாய்ப்பிருக்கிறது.  இப்போதைய சட்ட திருத்தத்தின் படி ஒரு பெண் யாரையாவது ஒருவரைக் காட்டி அவன் தன்னை கற்பழித்துவிட்டான் என்று கூறினால் போதும் உடனடியாக அந்த ஆணுக்கு தண்டனை வழங்க கூட்டம் கூட்டமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் பிரிந்த மனைவியுடன் சேர்ந்து வாழும்போது படுக்கையறையில் கணவன் தன் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டு தன்னை கற்பழித்துவிட்டான் என்று புகார் கூறினால் இதை நம்புவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு எந்தவித ஆதாரமும் தேவைப்படாது. ஏழு ஆண்டு சிறை உறுதி!!! 

சேர்ந்து வாழ நினைக்கும்போது மனைவி இப்படி பொய் கற்பழிப்பு வழக்குப் போடுவாளா? என்று எண்ணத்தோன்றும்.  சொறி பிடித்த கை சும்மா இருக்குமா? சொறிந்துகொண்டேதான் இருக்கும்.   அதுபோல ஒரு முறை பொய் வழக்குப் போட்டு குறுக்கு வழிகளை கற்ற மனைவி அடுத்த முறை பக்குவமாக திட்டமிட்டு வழக்கு போடமாட்டாளா?

பிரிந்து வாழும் மனைவியுடன் "செக்ஸ்' கணவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

பிப்ரவரி 02,2013 தினமலர்

புதுடில்லி: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டால், அதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்த, அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், கணவன் உடலுறவு கொண்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, தற்போது அமலில் உள்ள, இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376 ஏ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டப் பிரிவை நீக்கும்படி, நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

"மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், உடலுறவு கொண்டாலும், அதை பாலியல் பலாத்காரமாகவே கருதி, கூடுதல் தண்டனை வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது.


இருந்தாலும், தற்போதைய சட்டப் பிரிவு தொடர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தற்போதுள்ள, 2 ஆண்டு தண்டனை என்பதை, 7 ஆண்டாக உயர்த்த தீர்மானித்துள்ளது. பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், சட்டப் பிரிவு, 376ஏ - தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376ஏ-ன் கீழான குற்றம், இதுவரை, ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால், இனி அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.


Monday, January 21, 2013

இந்திய ஆண்களுக்கான கவர்ச்சியான திருமணப் பரிசுகள்

திருமணம் செய்யப் போகும் இளைஞர்களுக்கான பரிசு
இந்தியாவில் திருமணம் செய்யப் போகும் இளைஞர்களுக்கு நீங்கள் பரிசு கொடுக்க நினைத்தால் பின்வரும் எளிய புத்தகத்தை பரிசாகக் கொடுக்கலாம்இதைவிட சிறந்த பரிசு வேறெதுவும் இருக்க முடியாது.   

புத்தகம் கிடைக்கும் இடம்
 இந்தியாவில் திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நாள் கண்டிப்பாக பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.  அதிலும் குறிப்பாக தற்போதைய நாட்டு நிலவரப்படி இளம் பெண் சொல்வது மட்டும்தான் உண்மை என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. 

இதுபோன்ற சூழலில் ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்க எந்த ஒரு சட்டமும் இல்லை என்று காவல் நிலையத்திலேயே உங்களுக்கு அறிவுரை சொல்லி மனைவியின் விருப்பப்படி சிறைக்குள் சென்று ஒரு வாரம் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே சென்று பிறகு வழக்கை நடத்திக் கொள்ளுங்கள், வழக்கு பொய் என்று தெரிந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று காவல்துறை கண்ணியமாக உங்களுக்கு அறிவுரை சொல்லி சிறைக்கு அனுப்பி வைப்பார்கள்.  அப்போது ஜாமினில் வெளியே வருவது எப்படி என்று அலைந்து திரியாமல் முன்னேற்பாடாக இந்த புத்தகத்தை படித்துவைத்திருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.


திருமணம் ஆன ஆண்களுக்கான பரிசு

திருமணம் ஆன ஆண்களுக்கு பரிசு கொடுக்க  வேண்டுமென்றால் பின்வரும்  இரு புத்தகங்களையும் பரிசாகக் கொடுக்கலாம்.     
திருமணம் முடிந்து சில மாதங்களில் மருமகள் தனிக்குடித்தனம் போக வற்புறுத்தும்போதோ அல்லது புது மனைவியின் கள்ளக்காதல் கணவனின் குடும்பத்திற்கு தெரிய வரும்போதோ “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் உடனடியாக கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பொய் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் அரசாங்கத்தின் துணையோடு தொடுக்கப்படும்.  

 அதுபோன்ற சமயத்தில் “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பது போல குடும்பத்தில் பிரச்சனை என்றால் காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.  கைது, ஜாமின், வழக்கு என்று தினம் தினம் உங்கள் பணத்தில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று எல்லாவற்றையும் கொண்டாடிவிடுவார்கள்.  அப்போது பின்வரும் இரண்டு புத்தகங்களும் உங்களுக்கு புனித நூல் போல உதவி செய்யும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை என்பது இன்னும் சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

இந்த அனைத்து பரிசுப் புத்தகங்களும் கிடைக்கும் இடம் கற்பகம் புத்தகாலயம்.  இந்தத் தகவல் எந்தவித வியாபார உள்நோக்கமும் இன்றி உங்களுக்கு அளிக்கப்படுகிறது.  மேலே உள்ள தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று அறிந்துகொள்ள இந்திய நீதிமன்றங்கள் கூறியுள்ள தீர்ப்புகளிலிருந்து சிறு உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Delhi High Court
(Savitri Devi Vs. Ramesh Chand
CRL. R 462/2002, Dt:19 May 2003)

Once a complaint is lodged under Sections 498AIPC whether there are exaggerated allegations or there is no evidence, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there … … … …Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out”

IN THE COURT OF Dr. KAMINI LAU: ADDL. SESSIONS
JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI
Criminal Revision No. 377/2010
Man Mohan Sharma    Vs    State of NCT of Delhi
Dated: 25.2.2011

Lastly, I am compelled to observe that Section 498A IPC in the recent years has become

consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. The provisions of Section 498 A IPC are not a law to take revenge, seek recovery of dowry or to force a divorce but a penal provision to punish the wrong doers. The victims are often misguided into exaggerating the facts by adding those persons as accused who are un-connected with the harassment under a mistaken belief that by doing so they are making a strong case. Courts cannot be a party to any kind of exploitative situation and it is necessary for every complainant to remember that it is only an honest complaint which succeeds in law where contents are supported by facts on the ground and persons, who are not connected with the harassment, should never be arrayed as accused. The platform of the courts cannot be permitted to be used to wreck personal vendetta or unleash harassment and the tendency of the complainants to come out with inflated and exaggerated allegations by roping in each and every relation of the husband is required to be deprecated.








Saturday, January 19, 2013

தற்காப்பிற்காக கணவனை மனைவி கொலை செய்யலாமா?

திருமணம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்து அவரவர் வழியைப் பார்த்து செல்வதுதான் சரி.  ஆனால், இந்தியாவில் ஆண்களைப் பொறுத்தவரை இது போல செயல்பட முடியாது.  ஒத்துவராத மனைவியை விவாகரத்து செய்ய நினைத்தால் அந்தக் கணவன் மீது உடனடியாக வரதட்சணைக் கொடுமை வழக்கு, குடும் வன்முறை வழக்கு என பல குற்ற வழக்குகளை அரசாங்கம் சுமத்திவிடும்.  இப்போது ஒருபடி மேலே சென்று மனைவி கணவனுக்கு கொலை மிரட்டலே விடுத்துவிட்டார். 

இப்போதைய நாட்டு நிலவரப்படி கணவனை கொலை செய்துவிட்டு கற்பழிக்க முயற்சி செய்தான் தற்காப்பிற்காக கொலை செய்தேன் என்று மனைவி சொன்னால் கூட நாடு முழுதும் ஏகோபித்த ஆதரவு கிடைத்துவிடும்.





கோவை சிங்காநல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் சீனிவாசன். கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் பாலசுப்பிரமணி என்பவரது மகள் காஞ்சனாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு 2 பேரும் பெங்களூரில் குடியேறினர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காஞ்சனா கணவரிடம் கோபித்து கொண்டு ஊருக்கு வந்து விட்டார். இதற்கிடையே சீனிவாசன் காஞ்சனாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவேசம் அடைந்த காஞ்சனா மற்றும் தந்தை பாலசுப்பிரமணி, தாய் ராஜேஸ்வரி, தம்பி அருண் ஆகியோர் ரத்தினத்தின் வீட்டுக்கு சென்று விவாகரத்து வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இதுகுறித்து ரத்தினம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலசுப்பிரமணி, ராஜேஸ்வரி, காஞ்சனா, அருண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மனைவியை வைத்து வாழத் தெரியாதவன் போலிஸ் வேலை செய்ய முடியுமா?

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று பெண்களுக்காக இந்தியாவில் 2005ம் ஆண்டு இயற்றினார்கள். அதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்த செய்தியில் சொல்லியிருக்கிறார்கள்.  இளைஞர்கள் படித்து தெரிந்துகொண்டால் நல்லது.
 
சென்னை: குடும்ப வன்முறை குற்றம் சாட்டப்பட்டவரை, டி.எஸ்.பி.,யாக நியமிக்க, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஈரோடு, சம்பத்நகரைச் சேர்ந்த, லட்சுமிபிரியா என்பவர், தாக்கல் செய்த மனு: எனது கணவர், வினோத் சாந்தாராம். வங்கியில் பணியாற்றிய அவர், டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழக அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி.,யாக, போலீஸ் பயிற்சி கல்லூரியில், பயிற்சி எடுத்து வருகிறார். ஈரோட்டில், எங்களுக்கு, 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர், எனது நெருங்கிய உறவினர். இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக, ஒரு வயது குழந்தையுடன், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். விவாகரத்து கோரி, ஈரோடு கோர்ட்டில், எனது கணவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது. கணவருடன் சேர்த்து வைக்கக் கோரிய, எனது மனுவை, கோர்ட் ஏற்றுக் கொண்டது; ஆனால், கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தவும், எனக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்கவும் கோரி, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலிக்குமாறு, உத்தரவிட வேண்டும். தற்போது, பயிற்சி முடிக்க உள்ளதால், அவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க உள்ளனர். போலீஸ் பிரிவில், ஒழுங்கு முறையாக பணியாற்றுபவருக்கு தான் இடம் அளிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், குடும்பம் நடத்த அவரால் இயலவில்லை. பெண்ணை தொந்தரவு செய்தது, குடும்ப வன்முறை செய்தது, என, ஈடுபட்ட ஒருவரை, போலீஸ் பிரிவில் சேர்க்கக் கூடாது. எனவே, டி.எஸ்.பி.,யாக, வினோத் சந்தாராமை நியமிக்க, தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார், "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றச்சாட்டுக்கள் மீது, விசாரணை நிலுவையில் உள்ளது என, கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரியபடி, ஒரு வாரத்துக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.



Monday, October 29, 2012

தமிழ் நாட்டிற்குத் தேவைப்படாத இந்து திருமணச் சட்டம்

சமீப காலமாக செய்தித்தாள்களில் வரும் திருமணச் செய்திகளை பார்க்கும்போது தமிழ் நாட்டில் நடக்கும் இந்துத் திருமணங்களை நெறிப்படுத்த இந்து திருமணச் சட்டம் தேவையா? என்று எண்ணத் தோன்றுகிறது.

திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் ஓட்டம்,  திருமணம் முடிந்து முதலிரவில் மணமகள் ஓட்டம் என்ற செய்திகள்தான் இதுவரை வந்துகொண்டிருந்தன.  இப்போது சற்று முன்னேற்றம் அடைந்து மணமேடையில் தாலி கட்டியவுடனே தாலியை கழற்றி வீசி எறிந்துவிட்டு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகும் மணமகள்கள் பற்றிய செய்திகள் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறது.

அதுபோல வந்துள்ள இன்றைய செய்தி.
செய்தி - 1

பெரம்பலூர்:சினிமாவை மிஞ்சும் வகையில், தாலிக்கட்டிய அடுத்த சில விநாடிகளில், தாலியை கழற்றி விட்டு, காதலுடன் செல்வதாக, மணப்பெண் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப், 24. இவர், பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டு ஆண்டாக படித்து வந்தார். இவரும், இதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகள் சகுந்தா, 19, என்பவரும் காதலித்துள்ளனர்.

இந்நிலையில், சகுந்தலாவுக்கும், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் செல்லதுரை, 25, என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, பெரம்பலூர் பெருமாள் கோவிலில், செல்லதுரைக்கும், சகுந்தலாவுக்கும் திருமணம் நடந்தது.செல்லதுரை, சகுந்தலா கழுத்தில் தாலிக்கட்டிய உடன், மணவறையிலிருந்து எழுந்த சகுந்தலா, செல்லதுரை கட்டிய தாலியை கழற்றிவிட்டு, திருமணத்துக்கு வந்திருந்த காதலன் பிரதீப் கையை பிடித்து கொண்டு, பிரதீபுடன்தான் செல்வேன் என, தெரிவித்தார்.

இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள், சகுந்தலாவின் காதலனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், அங்கு சென்று சமாதானம் செய்தனர். தொடர்ந்து, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இச்சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 செய்தி - 2

கணவனை உதறிவிட்டு காதலனுடன் நடையைக் கட்டிய புதுப்பெண் ..சென்னையில் பரபரப்பு! 

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012 One India

சென்னை: சென்னையில் திருமணமான ஒரு மாதத்தில் கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் புதுப்பெண் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ் (25). இவருக்கும், உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் சங்கீதா புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. இது குறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சங்கீதா தேடிவந்தனர். அப்போது சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் மதுரையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

காதலர்கள் போலீசில் சரண்

இதனிடையே சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று சரண் அடைந்தார். அப்போது சங்கீதா, நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று போலீசில் தெரிவித்தார்.

மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் கூறினார். இதனையடுத்து சதீஸ் கட்டிய தாலியையும் கழற்றிக் கொடுத்துவிட்டார்.

எங்கிருந்தாலும் வாழ்க

சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார். மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

=======
இதுபோன்ற தாலியை வீசிவிட்டு ஓட்டம் பிடிக்கும் மணமகள்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தவுடன் அங்கு பரந்த மனப்பான்மையுடன் கட்டப் பஞ்சாயத்து செய்து காலையில் தாலி கட்டிய கணவனிடம் எழுதி வாங்கிகொண்டு மணமகளை வேறு ஒரு ஆணுடன் அனுப்பி வைக்கும் சட்ட விரோத செயல்கள் தாராளமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்து திருமண சட்டப்படி இந்து மத முறைப்படி திருமணம் நடந்தால்தான் அதனை திருமணமாக சட்டம் அங்கீகரிக்கிறது.  அதுபோலவே இந்து மத முறைப்படி நடக்கும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தில் கூறியுள்ள வழிமுறைப்படிதான் ரத்து செய்ய முடியும்.  ஆனால் காவல் நிலையங்களில் இந்த சட்டங்களை கண்டுகொள்ளாமால் தாங்களே நீதிபதிகளாக இருந்து இதுபோன்ற திருமணங்களை ரத்து செய்து வருகிறார்கள்.  இப்படி காவல்நிலையத்திலேயே விவாகரத்து கிடைக்கும் என்றால் இந்து திருமண சட்டம் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு?

இவையெல்லாம் எதற்கு என்றால் சட்டப்படி நடக்கவேண்டும் என்று நினைக்கும் அப்பாவிக் கணவன்கள் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை அணுகினால் சட்ட நடைமுறை என்ற பெயரில் அந்தக் கணவர்களை பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைய வைத்து நடைபிணமாக மாற்றுவதற்கு  மட்டுமே என்று ஒரு முறை குடும்ப நீதிமன்றம் பக்கம் சென்று பார்த்தால் புரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சட்டங்களை மிதிப்பவர்களை சட்டமும், சமுதாயம் மதிக்கும்.  சட்டங்களை மதித்து நடப்பவர்களை  சட்ட நடைமுறை என்ற பெயரில் நடை பிணமாக்கி விடுவார்கள்.


Friday, October 26, 2012

பொய் வரதட்சணை வழக்குப் போடும் போலிஸை மிரட்டமுடியுமா?

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்டம்படித்தவர்கள் சிலர் ஒன்று கூடி சட்டமேதையான அம்பேத்கரின் சிலைக்கருகில் குடித்து கூத்தடித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.  அந்தக் கூத்தின்போது அவ்வழியே சென்ற ஒரு மூத்த வழக்கறிஞரை கேலி செய்து, மிரட்டி, அவரது காரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இரு நபர்களை கைது செய்திருக்கிறார்கள்.

அப்படியென்றால்
நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில்பல கோடி செலவு செய்திருக்கிறார்களே!  அந்தப் பணம் என்னவானது?

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்துள்ள ஒரு காவல் அதிகாரி இதுபோல  வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் குடித்து கும்மாளம் அடிப்பது ஒன்றும் புதிதல்ல.  பல முறை இதுபோல நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது.  ஆனால் அதை தட்டிக்கேட்டால் எங்கள் மீது வீண் பழியும், தாக்குதலும் நடத்தப்படும்.  அதனால் அஞ்சி ஒதுங்கி நிற்கிறோம் என்று கூறியுள்ளார்.  அந்த பேட்டியை பின்வரும் செய்தியில் பாருங்கள்.

இந்த செய்தியின் மூலம் என்ன தெரிகிறதென்றால் காவல்துறையே அஞ்சி நடுங்கும் அளவிற்கு சட்டம் படித்தவர்கள் அவ்வளவு மோசமானவர்களா?  சற்று யோசித்து பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ( “வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார்.” )
. அல்லது வழக்கு பதிவு செய்யும் காவல்துறையை சற்று மிரட்டினால் வழக்குப் போட வரும் காவலர்கள்அஞ்சி ஓடிவிடுவார்களா?  அல்லது கையில் சிக்கும் அப்பாவிகள் மீது மட்டும்தான் பொய் (வரதட்சணை) வழக்கு பதிவு செய்ய தைரியம் இருக்கிறதா? (பொய்  வரதட்சணை வழக்குகள் மூலம் அப்பாவிக் குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை)

அப்படியென்றால் பொய் வரதட்சணை வழக்குப் போடும் காவலருக்கு பாடம் கற்பிக்க அந்த காவலரை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் அப்பாவிகள் சற்று மிரட்டினால் போதும்போலிருக்கிறதே!  இப்படி சில  சம்பவங்கள் நடந்தால் பொய் வழக்குப்போடும் காவலர்கள் அப்பாவிக் கணவர்களைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவார்கள்.  இதுதான் பொய் வரதட்சணை வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி.  ஏனென்றால் நீதிமன்றங்களே குடிகார விடுதிகளாக மாறிவரும்போது அங்கே அப்பாவிகளுக்கு நீதி எப்படி கிடைக்கும்?

Drunk lawyer assaults senior on HC campus, held

25th October 2012 The Indian Express

The Esplanade police have arrested a lawyer and a former law student for assaulting a senior advocate on the Madras High Court campus after they were caught drinking on Tuesday.

According to police officials, the court was  closed on Tuesday owing to Ayudha Pooja. Sundararajan, an advocate, had visited his chamber for a religious ceremony in connection with the festival. When he was returning to his car around 4.30 pm after the ceremony, four men who were drinking behind the Ambedkar Statue, stopped him and questioned his identity. When the gang started using abusive words, Sundarrajan warned them that he would approach the police and told the four that he was a lawyer practising in the Madras High Court for decades.

He had also questioned the four for consuming alcohol on the court campus. Irked by this, the gang allegedly assaulted Sundararajan and broke the windshield of his car. Police said following a complaint from the advocate, two persons identified as Devendran (36), a lawyer, and Sivaji Rao (32), a former law student yet to complete his studies, were arrested. The police are on the lookout for the other two who are reportedly absconding.

A police official, on condition of anonymity, said that this was not the first time a lawyer had been caught drinking on the high court campus. “Our men have warned several such persons in the past. But we did not want to escalate the situation as we didn’t want to turn it into a confrontation between the police and lawyers,” the official said.

The incident of persons caught drinking in broad daylight on the campus of the Madras High Court on a holiday has raised questions several questions about surveillance on the premises.