பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================
Showing posts with label Legal Terrorism. Show all posts
Showing posts with label Legal Terrorism. Show all posts

Friday, September 24, 2010

பெண்ணின் விளையாட்டிற்கு இந்திய இளைஞர்கள் தேவை

ஆண்களை வைத்துப் பொழுபோக்காக விளையாடுவதற்காக உருவாக்கப்பட்டவைதான் இந்திய பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். இந்த விளையாட்டுக்களை தொடங்குவதற்கான ஆரம்பவிழாதான் இந்தியத் திருமணங்கள்.

இந்த உண்மையை சினிமா நடிகை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார். நன்றாகப் பாருங்கள்.

இளைஞர்களே, இதுபோன்ற இந்தியத் திருமணத் தகனமேடையில் வீழ்ந்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்.

Swastika Mukherjee admits her dowry harassment allegations were false
www.forestlaneshul.com September 23, 2010

Kolkata, Sept 23 (IBNS): Tollywood actress Swastika Mukherjee has confessed in a media conference that the dowry harassment allegations she made against her estranged husband were false, apparently bringing a closure to an episode that has been playing out amidst full media glare for ten years.

"I was young, I did not have enough sense back then and I did what my family, friends and peers advised me to do," is how Swastika on Wednesday chose to explain why she falsely accused her husband singer Promit Sen of "subjecting her to cruelty" and "criminal breach of trust".


Swastika's shocking but predictable confession comes a day after she apparently submitted an affidavit at a city court admitting that the charges she made against her husband and her in-laws under Indian Penal Code 498A and 406 were "unfounded, false, baseless and speculative".


Swastika and Promit, the youngest son of renowned Rabindrasangeet exponent Sagar Sen, were married in June 1998, when the actress was just 18.


"Things started to go wrong around two years later when like a bolt from the blue my brother, our family and even me, who all lived in different places, were charged by her for dowry related crimes," said Pritam Sen, Promit's elder brother, who also attended the press conference.


"We went through hell for the past ten years. So many arrest warrants, all the expenses and the defamation aside, my brother is never going to get back the last ten years. He's totally mentally devastated," he added.
Though divorce was reportedly filed by Swastika in 2001, the cases are still under legal red tape.

Pritam said recently Swastika had issued a press release which after being published in the media made it seem as if the two parties had reached a compromise and were heading for divorce which was definitely not the case.


Hence Wednesday's press conference was called by the actress "to come clean".


"I am deeply sorry for all that Promit and his family has had to go through. I hope he can move on," said Swastika.


"As far as the custody of our daughter Anwesha is concerned, lets see what plays out. She's a ten-year-old girl and she too has a say in this," she said.


When asked what drove her to suddenly make such an effort, she replied that it was not out of any pressure but just a "realisation".


Sources, however, say this might be just a coup to get the divorce the 30-year-old actress, who is known for her `who cares' attitude and has not exactly had the smoothest relationships over past few years, has been after for quite some time.


Pritam, however, said he and his family were pleased at Swastika's confession.

He said, "I think we should give her the benefit of the doubt. Let's see what this leads to. But we'll not accept anything but a genuine apology."

The Sen family is apparently not mulling pressing charges on the actress since they are "not vindictive people", said Pritam.


The confession, apart from sending gossip mills in overdrive, also sheds light on the Indian Penal Code which leaves the door for such a heavy-handed charge wide open for misuse.

இதுபோலவே மற்றொரு நடிகைக்கும் வரதட்சணைக் கொடுமை நடந்திருக்கிறது! அந்த செய்தியை இங்கே காணுங்கள்.

(Clikch and Read) இளம் நடிகைக்கு அமெரிக்காவில் நேர்ந்த வரதட்சணைக்கொடுமை!

இந்திய ஆண்களுக்கு மானமே கிடையாது என்று காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் என அனைவரும் முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் பெண்கள் எத்தனை பொய் வரதட்சணை வழக்குகள் வேண்டுமானாலும் அப்பாவிகள் மீது சுமத்தி சிறைக்கு அனுப்பலாம்.



பொய் வழக்குப்போட்டு அப்பாவி இளைஞர்களை சிறைக்கு அனுப்புவது பெண்களுக்கும், காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் பொழுபோக்கு விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அப்பாவி இளைஞர்களின் வாழ்வில் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.






Monday, August 16, 2010

ஆண்களை சிறைக்கு அனுப்பும் இந்தியத் திருமணங்கள்

இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குச் சென்ற காரணத்தால் இந்திய சட்ட தீவிரவாதத்தால் பாதிக்கப்டும் அப்பாவிகளைக் காப்பாற்றவேண்டும் என்று அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து ஏற்காட்டில் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.

குடும்ப பிரச்னையில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவதா?
ஆகஸ்ட் 15,2010 தினமலர்

சேலம் : "குடும்ப பிரச்னையில் பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதைத் தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்,'' என ஏற்காட்டில் நடந்த ஆண்கள் நல உரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க சார்பு அமைப்புகள் சார்பில், ஏற்காட்டில் மூன்றாவது ஆண்கள் நல உரிமை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண்/பெண் என்று வருகிறதோ அவற்றை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன்/மனைவி என வருகிறதோ அவற்றை துணை என்றும் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது மாநகர மற்றும் நகர அளவில் 60 இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளை கிராம அளவிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால், அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க வேண்டும். குடும்ப பிரச்னையில் பெண்களுக்கு வேண்டிய ஒரு தீர்வுக்கு, பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதை தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்.தற்போது ஐந்து ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்படும் குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றம் அமைத்து இரண்டு ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் ஆண்கள் நலம், பிரச்னைகள் மற்றும் உரிமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 15 (3) பாதுகாப்பில் பெண்களை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் வகையில் சட்டங்கள் இயற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் பஞ்சாப், அரியானா, அசாம், சத்திஸ்கர், மேற்கு வங்கம், புதுடில்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 ஆண்கள் நல தன்னார்வ அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் ஆதரவு சட்டத்தில் ஏழு லட்சம் பேர் கைது : "குடும்ப வன்முறை சட்டம், பெண்கள் ஆதரவு சட்டத்தின் கீழ், நான்கு ஆண்டில் 500 குழந்தைகள் உட்பட ஏழு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என, அகில இந்திய ஆண்கள் நலச் சங்க தேசிய உறுப்பினர் சுரேஷ் தெரிவித்தார்.இது குறித்து அவர் நேற்று சேலத்தில் கூறியதாவது:மனைவியை தற்கொலைக்கு தூண்டும் வகையிலும், மனரீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் செயல்படும் கணவன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இந்திய தண்டனை சட்டம் 498(ஏ) படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டங்கள் போலீசாரும், வக்கீல்களும் பணம் பறிக்கும் சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கணவனுக்கு மனைவியால் இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து ஆண்களை காப்பாற்றிக் கொள்ள எந்த வகையிலும் சட்டங்கள் இல்லை. பெண்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தாமலே ஆண்களும், அவர்களின் குடும்பத்தாரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தால் அதிக அளவில் கவுரவமான பொறுப்பில் இருக்கும் டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாப்ட்வேர் துறையில் பணி செய்யக்கூடியவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். விவாகரத்து சட்டங்கள், குடும்ப வன்முறை சட்டங்கள் இந்திய குடும்ப அமைப்பை தகர்க்கும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களின் மூலம் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 7 லட்சம் ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 500 குழந்தைகளும், 5,000 முதியவர்களும் அடங்குவர். பெண்கள் 1.6 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று நேர்மையாக அகிம்சை வழியில் அநீதியிலிருந்து காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தால் அப்பாவிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்ப்பதில்லை. ஆனால் நக்சல்களும் , மாவோக்களும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களிடம் எல்லாத் தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இப்போது வன்முறைக்குத்தான் மரியாதை தருவார்களோ?

தினமலர் ஆகஸ்ட் 16, 2010
புதுடில்லி : "நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். மன்மோகன் கோரிக்கை.

இளைஞர்களே,

அரசாங்கம் எப்போது விழித்துக்கொண்டு உங்களைக் காப்பாற்றும் என்று தெரியவில்லை. அதனால் நீங்கள் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.



Sunday, August 8, 2010

வெளிநாட்டுவாழ் இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

சர்வ வல்லமை பொருந்திய நாடாக முன்னேற்றும் பணியில் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கும் அரசு ஊழியர்கள் பற்றிய செய்திதான் கீழே தரப்பட்டிருக்கிறது. இவர்கள் இப்படி இருக்க வெளிநாடுகளில் தங்களது திறமை மூலம் வேலை தேடிச்சென்று நாட்டிற்கு பெருமையையும், அன்னியச் செலாவணி நிதியையும் தந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அவர்கள் இந்தியாவில் திருமணம் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு “சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி” என்று விருது வழங்கும் விழா ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

பின்வரும் செய்திகளை படித்து ஒப்பு நோக்கிப் பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள் 500 பேர்
ஆகஸ்ட் 07,2010 தினமலர்

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டையில், 500க்கும் மேற்பட்ட லஞ்ச அதிகாரிகள் கையும், களவுமாக பிடிபட்டுள்ளனர். லஞ்ச அதிகாரிகளை பொறி வைத்து பிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்சம் வாங்கி சிக்குபவர்களின் தகவல்களை, புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்' என, அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வேலையை முடிக்க இவ்வளவு பணம் என்று அறிவிப்பு பட்டியல் வைக்காத குறையாக லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் சாதாரண உதவியாளர் முதல் தலைமையிட உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், அரசு அலுவலகங்களில் தலை தூக்கியுள்ள லஞ்ச, லாவண்யங்களை ஒடுக்க தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. இது தொடர்பான அரசின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக களமிறங்கினர்.


இதன் பயனாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இதுவரை லஞ்சத்தில் புரண்டு வந்த சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 500க்கும் மேற்பட்டோர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.கடந்த 2007-08ம் ஆண்டில் 127 பேர், 2006-07ம் ஆண்டில் 131 பேர், 2005-06ம் ஆண்டில் 136 பேர் என சராசரியாக 100 முதல் 150 பேர் வரை போலீஸ் பிடியில் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இந்த வகையில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு புகார்களின் அடிப்படையில், 312 வழக்குகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது, போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிகம். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகளின் தகவல்களை புகைப்படத்துடன், இணையதளத்தில் வெளியிட தற்போது அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 5,186 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,527 வழக்குகளில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறும் போது, கையும், களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தவிர 1,028 வழக்குகள் ஆரம்ப நிலையிலும், 1,739 வழக்குகள் விரிவான விசாரணையிலும், 892 வழக்குகள் ரெகுலராகவும் நடந்து வருகின்றன.
கடந்த 2008ம் ஆண்டு மார்ச் வரை எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கோர்ட் நிலுவையில் இருந்த 877 லஞ்ச வழக்குகளில், 1,866 அரசு அலுவலர்களிடமும், தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த 385 வழக்குகளில், 1,182 பேரிடமும், துறை ரீதியாக நிலுவையில் உள்ள 4,662 வழக்குகளில், 3,546 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதும் விசாரணை அளவிலேயே உள்ளன.

தண்டனை நிச்சயம் :லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சிக்குவார்களே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், லஞ்ச அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தமிழகம் முழுவதும், 2008-09 ஆண்டில், பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வரும் பல்வேறு லஞ்ச வழக்குகளில் 40 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 62 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவில் திருமணம் செய்யும் வெளிநாட்டுவாழ் இந்திய இளைஞர்களுக்கு எதிராக "ரெட் கார்னர் நோட்டீஸ்'’

தினமலர் 19 ஜூலை 2010

புதுடில்லி : திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, மனைவியை அனாதையாக விட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.

போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து விட்டு, மனைவியை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கி விடும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது
: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திருமணம் செய்வதற்காக இந்தியா வருகின்றனர். இவர்களில் சிலர், திருமணம் முடிந்தவுடன், மனைவியை ஏமாற்றி இங்கேயே விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். சரியாக விசாரிக்காமல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் முடித்தவர்கள், இதுபோல் அதிகமாக ஏமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர், எந்த நாட்டில், என்ன வேலையில் இருக்கிறார் என்பது கூட இவர்களுக்கு தெரிவது இல்லை. ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

====================

பல இளைஞர்கள் கடின உழைப்பின் மூலம் வாழ்வில் முன்னேறி தங்களின் திறமையால் வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்று வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் திருமணம் செய்வதால் அவர்களின் வாழ்க்கை இந்திய சட்டத்தின்மூலம் எப்படித் தலைகீழாக கவிழ்க்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

வெளிநாட்டு ஆடம்பர வாழ்க்கை முறை, தட்டிக்கேட்க ஆளில்லாமல் தன்னிஷ்டப்படி வாழும் முறை, விஸா, வெளிநாட்டுக் குடியுரிமை, செல்வச் செழிப்பு என்ற மோகத்தில் பல மேல்தட்டுவர்க்கப் பெண்கள் வெளிநாட்டில் வாழும் இளைஞர்களைக் குறிவைத்து திருமண இணைப்புத் தளங்கள் மூலம் தூண்டில் போட்டு பிடிக்கிறார்கள். சில பெண்ணின் பெற்றோர்களும் இதுபோன்ற செயல்களில் கூட்டணி அமைத்து செயல்படுகிறார்கள். பிறகு தங்களது கணக்கு சரியாக வேலை செய்யாதபோது இந்தியாவிற்கு ஓடிவந்து கணவன் மீது வரதட்சணை வழக்குப் போட்டு சர்வதேச குற்றவாளியாக அறிவித்து விடுகிறார்கள்.

மேலே செய்தியில் வந்துள்ளது போல ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த நிர்வாகத்தில் அப்பாவி கணவனை “சர்வதேச குற்றவாளி” என்று பிரகடனம் செய்வது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமாகவா இருக்கும்?

இளைஞர்களே, சிந்தியுங்கள். உங்கள் திருமணம் எங்கு நடக்கவேண்டும் என்று தெளிவாக முடிவெடுங்கள்.

வெளிநாட்டு அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன. இளைஞர்களே நீங்கள் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறீர்கள்?


Foreign Affairs and International Trade Canada

Travel Report
India

8. LAWS AND CUSTOMS

Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. Individuals facing charges may be forced to remain in India until their cases have been settled or pay off their spouses in exchange for the dismissal of charges. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.





Saturday, August 7, 2010

போலிஸ் ஐ.ஜி. நேற்று சொன்னார் அது இன்று நடக்கிறது

நேற்றுதான் ஐ.ஜி. சிவனாண்டி போலிஸைப்பற்றி சினிமாவில் தவறாகக் காட்டுகிறார்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டார். ஆனால் உண்மை என்ன என்பதை இன்றைய செய்தித்தாளில் வந்துள்ள செய்தி சொல்லிவிட்டது. என்ன செய்வது? செய்தித்தாள்களும் போலிஸைப் பற்றி தவறாக செய்தி எழுதுகிறார்களோ?


சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம்

தினமலர் ஆகஸ்ட் 06,2010
பொள்ளாச்சி : ""சினிமாக்காரர்களால் மக்களிடையே போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' ஏற்பட்டுள்ளது'' என, கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.




லஞ்சம், மது, கள்ளக்காதல் விவகாரம் எஸ்.ஐ., ஏட்டு மூவர் "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 07,2010 தினமலர்

எழுமலை: மதுரையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கள்ளக்காதலியை தாக்கிய ஏட்டு, மது போதையில் சாலையில் உருண்டு கிடந்த ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

1. மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசன். வழக்கு ஒன்றில் சிலரை கைது செய்யாமல் இருக்க, லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். கோர்ட் உத்தரவுப்படி, எஸ்.ஐ., ரிமாண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பக்கபலமாக இருந்து லஞ்சம் வசூலித்து கொடுத்த ஏட்டு சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

2. மேலூர் ஏட்டு பாலசுப்பிரமணியன். இவர் நேற்று முன்தினம் பணியின் போது, பட்டப்பகலில் மது போதையில் சாலையில் உருண்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுத்தனர். அவரை அப்புறப்படுத்திய போலீசார், ஏட்டு போதையில் இருந்தது குறித்து எஸ்.பி., மனோகருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

3. சாப்டூர் ஏட்டு ரவி. இவர், கள்ளக்காதலியை அடித்து, உதைத்தாக வரப்பட்ட புகார் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

எஸ்.ஐ., சீனிவாசன், ஏட்டுகள் பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோர் மீதான புகார்கள் தொடர்பாக எஸ்.பி., மனோகர் விசாரணை நடத்தினார். அவரது பரிந்துரைப்படி, சீனிவாசன், பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், பணிக்கு சரியாக வராத ஒத்தக்கடை சிறப்பு எஸ்.ஐ., சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும், டி.ஐ.ஜி., சந்தீப்மித்தல் உத்தரவிட்டார்.


காரில் கஞ்சா கடத்தியதாக பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது
ஆகஸ்ட் 07,2010 தினமலர்
(இதுபோன்ற கதையைத்தான் கற்றது தமிழ், எம்.ஏ. என்ற திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள்)

தூத்துக்குடி: காரில் கஞ்சா கடத்தியதாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்ட தூத்துக்குடி இன்ஸ்பெக்டர், ஏட்டுவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடியில், நெல்லை பை-பாஸ் ரோட்டில், 2006 பிப்ரவரி 10ம் தேதியன்று, எஸ்.ஐ., ராஜமாணிக்கம் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக காரில் வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அனு மோகன், அஜய்குமார், அருண் ஆகியோரை விசாரித்தனர். அப்போது, காரில் 24 கிலோ கஞ்சா கடத்தியதாக அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அனுமோகன், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி, இவ்வழக்கு, தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு ஆக., 24, 2006 அன்று மாற்றப்பட்டது. மேல்விசாரணையில், அனுமோகன் உள்ளிட்ட மூவர் மீது போடப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கு, பொய் வழக்கு என உறுதியானது.

இதையடுத்து, பொய் வழக்கு போட்டதாக வழக்கு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் எஸ்.ஐ., ராஜமாணிக்கம், ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் உள்ளிட்ட போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவைச் சேர்ந்த நால்வர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக, அந்த நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது: இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.,(திருச்சி) பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார், பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் காந்தி(48), ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ்(49) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர், கோவில்பட்டி கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் தலைமறைவாகவுள்ள எஸ்.ஐ., உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

=================

இளைஞர்களே,

மேலுள்ள செய்திகள் உங்களுக்கு ஒரு பாடம். பொய் வரதட்சணைப் புகார் கிடைத்தால் உங்கள் நண்பர்களுக்கு சுடச்சுட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவதுபோல. அப்படியே கவ்விப்பிடித்து பொய்யான கதைக்கு ஒரு FIR எழுதிவிடுவார்கள். ஏனென்றால் திருடர்களையும், ரௌடிகளையும், கொலைகாரர்களையும் தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதைவிட உங்களைப்போன்ற அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டு “கடமையாற்றுவது” மிகவும் எளிது.



Monday, June 28, 2010

மக்கள் மன்றத்தில் சிரிப்பாய் சிரிக்கும் மகளிர் சட்டங்கள்

பெண்கள் எப்படி சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதன் மூலம் காவல்துறை எப்படி பணம் சம்பாதிக்கிறது என்றும் திரு. விசு அவர்களின் மக்கள் மன்றத்தில் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு முத்தாய்ப்பாக திரு. விசு அவர்களும் நச்சென்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். வீடியோவைப் பாருங்கள்.





வீடியோவில் வந்த காட்சிகளும் நடைமுறையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களும் எவ்வளவு உண்மை என்று செய்தித்தாளில் வந்துள்ள செய்திகளையும் பாருங்கள்.


சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.

மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார்.

எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பணம் வசூலித்த டி.எஸ்.பி.,உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட்
தினமலர்: ஜனவரி 16,2010

நகரி:வரதட்சணை வழக்கில் இருவீட்டாரையும் சமரசம் செய்து வைப்பதாக கூறி, பணம் வசூலித்த டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்.ஐ., இரு போலீசார் உட்பட, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சென்னையைச் சேர்ந்த பத்ரிநாத்துக்கும், சித்தூர் மாவட்டம் புங்கனூர் மசூதித் தெருவைச் சேர்ந்த குருவப்பாவின் மகள் அருணாவிற்கும், 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத் தம்பதிக்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கணவனும் அவரது பெற்றோரும் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், மேலும் பணம் கொண்டு வரும்படி தொந்தரவு செய்வதாகவும், 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, அருணா புங்கனூர் போலீசில் புகார் செய்தார்.இதன் மீது வழக்கு பதிவு செய்த அப்போதைய புங்கனூர் எஸ்.ஐ., ராமகிருஷ்ணா, பத்ரிநாத் குடும்பத்தினரிடம் ஒரு தொகையை வசூல் செய்து தருவதாகவும், சமாதானம் செய்வதாகவும், அருணாவிடம் கூறி பணம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. பத்ரிநாத்திடம் இருந்து வாங்கிய பணத்தில், அதிக தொகையை போலீசாரே எடுத்துக் கொண்டனர்.

இந்த வழக்கில், பத்ரிநாத்திடம் இருந்து போலீசார் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள, அருணா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வழக்கு விசாரணையையும் புங்கனூர் போலீசார் துரிதப்படுத்தவில்லை. பத்ரிநாத்திடம் வாங்கிய பணத்தை, போலீசார் அருணாவிடமும் கொடுக்கவில்லை. பத்ரிநாத்திடமும் திருப்பி தரவில்லை.இந்நிலையில், அருணா, பத்ரிநாத் ஆகிய இரு குடும்பத்தினரும், சித்தூர் மாவட்ட எஸ்.பி., லட்சுமிரெட்டியை நேரில் சந்தித்து, நடந்த விவரங்களை கூறினர்.அதன் பேரில், பலமநேர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள், பத்மாகரரெட்டி,சீனிவாசுலு, எஸ்.ஐ., ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் நாராயணமூர்த்தி, நாகராஜ் ஆகிய ஆறு பேர் மீது விசாரணை நடந்தது. விசாரணையின் அறிக்கைப்படி, மாநில டி.ஜி.பி., கிரிஸ்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும், சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
===================

வீடியோவைப் பார்த்துவிட்டு பலர் சிரித்திருப்பார்கள். இதுதான் பொதுவாக மக்களின் மனநிலை. ஆனால் எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்? அதனால் இளைஞர்களே, நீங்கள் பொய் வழக்கில் சிக்கினால் உங்களது அவல நிலையைப் பார்த்து பலர் சிரிப்பார்கள். ஆனால் உங்களுக்கு உதவவேண்டும் என்று அரசாங்கம் உட்பட யாரும் இதுவரை நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் இந்தியப் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கினால் உங்களைக் கடவுள் கூட காப்பாற்ற முடியாது.

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விஷயம் இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு காமெடியான விஷயம். அவ்வளவுதான். அதன் பின்னால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையை உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் சொல்லியிருக்கிறது. அதனைக் கண்டுகொள்வார் யாரும் இல்லை.

கீழுள்ள தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பாருங்கள். 2003ம் ஆண்டில் இந்த அவலநிலையைப் பற்றி சொல்லியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த பொய் வழக்கு அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இளைஞர்களே, நீங்களாவது தப்பித்துக்கொள்ளுங்கள். அதற்கான ஒரே வழி வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான். சிந்தியுங்கள்.


IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI, CRL. R 462/2002 DATE OF DECISION: May 19, 2003, Savitri Devi ………….Petitioner. Through Mr. H C Mittal,Adv.
Versus Ramesh Chand and Ors. …………Respondents Through Mr. R P Bhardwaj, Adv.
HON’BLE MR. JUSTICE J.D. KAPOOR

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sistes, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.




Monday, June 21, 2010

அப்பா ஒரு இத்துப்போன “டப்பா” !

தந்தையர் தினத்தில் இந்திய சட்டங்கள் மூலம் குழந்தைகள் தெரிந்துகொள்ளும் பாடம் என்னவென்றால் “அப்பா” என்ற சொல்லிற்கு அர்த்தம் மாதந்தோறும் பராமரிப்புத்தொகை கொடுக்கும் ATM Machine, நீதிமன்ற உத்தரவு பெற்று அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் ஒரு விருந்தாளி, தனது தாய்க்கு ஒரு "Sperm Donor".

இன்றைய நடைமுறையில் இருக்கும் தவறான பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் (IPC498A) மற்றும் விவாகரத்துச் சட்டங்களின் மூலம் எதிர்காலக் குழந்தைகளின் வாழ்க்கையில்தந்தையின் பங்கு மேலே சொல்லப்பட்டுள்ளது போலத்தான் இருக்கும்.

இதுபோன்ற அவலநிலை வருங்காலக் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என்று All India Men’s Welfare Association (AIMWA) சென்னையில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள்.

“The Family Court system blatantly discriminates against fathers, heartlessly separates them from and prevents their access to their own biological children”, said the newly formed All India Men’s Welfare Association (AIMWA).

As a sign of protest against the Family Court system, AIMWA organised a protest before the Family Courts on Friday at Chennai. Around fifty of its members were distributing pamphlets and campaigning against the system.

AIMWA is an organization formed to protect the constitutional and human rights of men. It fight against gender discrimination, ‘legal terrorism’ and every other form of abuse suffered by men.

M Antony Francis, coordinator, AIMWA told Law et al. News “Indian Family Courts have declared a war against fathers and are adopting every possible means to create a “Fatherless Society”. We concur with the recent observation of the Supreme Court of India that “the Hindu Marriage Act is breaking more families than uniting”. We would like to add that the worst sufferers of the Indian Family Court system are fathers and children”

He further added “Section 498A, framed to protect women from dowry harassment, has become a hot topic of discussion these days due to misuse. As per National Crime Bureau (NCRB), in the year 2007, 187540 people were arrested under Section 498A, of which, the offense could be proven only for 13247 people. 94% of those arrested were found innocent. As per NCRB, in the last ten years there has been a spurt in the incidence of suicide by married men. A law that was supposed to act instrumental in women empowerment and to enable them to speak against their abuse, looks like has today, become a curse for many a families”

“The modus operandi of the Family Courts includes depriving fathers of the right to love and care for their biological children and forcing fathers to pay huge sums of money to support children they are not allowed to see. The Family court system encouraging false allegations of abuse to paint fathers as unfit parents” S Hariharan, General Manager of a Telecom Company, a divorcee himself in Chennai told Law et al. News.

Multiple legal battles by mothers eliminate biological fathers from their children’s lives, lamented another divorcee MP Kalaichelvan, a Civil Engineer. He said that the present system passes ex-parte orders based solely on the allegations made by a child’s mother..It also allow mothers to brazenly disobey visitation orders without legal repercussions to her. Sometimes biological fathers are labelled “kidnappers” for trying to make contact with their own children. Prolonging custody and visitation matters for years, thereby driving fathers into financial and emotional bankruptcy and forcing them to give up the desire to see their children, are the issues of concern to us,” he said.

In its memorandum to the Principal Sessions Judge VRamalingam, AIMWA has prayed “Special fast-track courts should be set up at the earliest to deal with custody issues. Exclusive, fully functioning Divisional Bench should be set up in all High Courts and Supreme Court to hear appeals in matters of child custody’’.

They also said when a person or couple approaches court for divorce, counseling of the parents by professional counselors should be given first priority and except in extreme cases of violence or unhealthy behavior by either partner, children should be given equal and meaningful access to both parents and grandparents on both sides.

The Memorandum further suggested that both parents should made financially responsible for the upbringing of child in proportion to their earnings and not based on demands made by either partner. If a partner prevents a child from having equal and meaningful contact with the other partner, they should be counseled first to understand the importance of equal parenting and the best interest of a child.

“If either partner repeatedly disobeys orders of equal access and meaningful contact with children, then the children should be placed in the full custody of the partner who will allow equal access to the other parent”, the participants demanded in their memorandum.

அதனால் இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளாதீர்கள். அப்படியே தவறுதலாக திருமணம் செய்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள்.

திருமணம் செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி உங்களது பெற்றோரை இழந்துவிடுவீர்கள். நீங்கள் ஒரு குழந்தைக்குத் தந்தையானால் ஒருதலை பட்சமான திருமண சட்டங்கள் மூலம் உங்களது குழந்தையையும் இழந்துவிடுவீர்கள்.

கடைசியில் உங்களைப் பெற்ற தாய் தந்தையையும் காப்பாற்ற இயலாமல், நீங்கள் பெற்ற குழந்தையையும் காப்பாற்ற முடியாமல் பெற்றோரைக் காக்க இயலாத பிள்ளையாகவும், பெற்ற பிள்ளையைக் காப்பாற்ற இயலாத தந்தையாகவும் ஒரு நடமாடும் பிணமாகத்தான் வாழ்வீர்கள். இதுதான் இந்தியப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் திருமண சட்டங்கள் உங்களின் வாழ்க்கைக்குச் செய்யும் உதவி.

இந்தியத் திருமணத்தின் மூலம் அப்பா என்ற பெயரில் ஒரு நடமாடும் “காலி டப்பாவாகி” விடாதீர்கள்.




தன்வினை தன்னைச் சுடும்!

அப்பாவிகளுக்கு வரதட்சணை வழக்கு எழுதுபவர்களுக்கு ஒரு வழக்கு வந்திருக்கிறது. ரொம்ப காமெடியான புகார்! காவல்துறையில் பணிபுரியும் கணவன் வேலையிலிருந்து தாமதமாக வருவதால் வரதட்சணைக் கொடுமை வழக்குப் போட்டிருக்கும் புரட்சிப்பெண்.

Cop father-son duo booked in dowry case
The Times of India, 17 June 2010

MUMBAI: A father-son duo, employed with the Mumbai police, has been booked in a dowry case along with four other family members. The complaint was filed by Shreya aka Ratnaprabha (26), who is married to Sachin Jadhav (29), a constable.

Sachin’s father Chandrakant (54) is an assistant sub-inspector at the JJ Marg police station. Shreya, in her complaint, has stated that her in-laws were demanding a dowry of Rs 5 lakh. One of her main grouse is that her husband didn’t return home early from work. A sessions court has granted anticipatory bail to all the six accused.

Sachin and Shreya tied the knot in February 2009. They lived with Sachin’s parents, Chandrakant and Sangeeta, at Byculla. Shreya used to work in the IT sector.

In her statement to the Agripada police, Shreya stated that her husband used to return home late from work. She has claimed that Sachin gave her evasive replies every time she asked him about his late arrival. This, Shreya has alleged, forced her to stay up late. She has also said that staying up late upset her routine and made it difficult for her to juggle her job with household chores.

“Shreya has told us that the Jadhavs were putting pressure on her to get her to get money from her parents so that they could buy a new house,’’ a police officer said. “She claims she was taunted and abused verbally. Sachin’s sister Jyoti and cousins—Neelam Vidhate and Anita Bankar— have also been accused of harassment,’’ said the officer. While Vidhate lives in Junnar, Bankar resides in Lonavla.

Sachin’s counsel, MA Khan, said the constable had to rush for emergency as well as bandobast duties at odd hours. “As a result, he had to spend a lot of time away from his family,” said Khan.

The court granted anticipatory bail to all the accused on the grounds that their custody wasn’t required. “The Jadhavs are willing to return all the valuables that Shreya had brought at the time of the marriage,’’ Khan said.

Meanwhile, Shreya has filed for maintenance in a court at Sangamner in Ahmednagar, her hometown. She is currently living with her parents in Vashi.




Sunday, May 2, 2010

வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்


இந்தியாவில் அகிம்சை வழியில் செல்ல நினைக்கும் அப்பாவிகள் கொலையும் செய்யும் அளவிற்கு கொடிய கோழைகளாக எப்படி சுயநலஅரசியல் கோமாளிகளால் மாற்றப்படுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கீழுள்ள செய்திகளை கவனமாகப் படியுங்கள்.

சில காலமாக நக்ஸல் தாக்குதல் பற்றி செய்திகள் வந்தவாறு இருக்கின்றன. அதன் பின்னனியிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நக்ஸல் பிரச்சனையின் காரணம் என்ன என்பதல்ல இந்தப்பதிவின் நோக்கம். அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் தினமணி வெளியிட்டிருக்கும் தலையங்கச் செய்தியைப் படியுங்கள். அந்தச் செய்தியை இந்தப் பதிவின் கடைசி பாகத்தில் பார்க்கலாம்.

இனி சுயநல அரசியல் கோமாளிகள் எப்படி தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் என்று செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் ஆராய்ந்துபார்ப்போம்.

* * * * * * * * * * * * * * * * * *

  • நக்ஸல்களின் வன்முறையின் மூலம் முதல் பேரழிவு தாக்குதல் ஏற்பட்டபோது அரசாங்கம் அமைதிப்பேச்சிற்கு அழைத்திருக்கிறது. மாநில அரசுகள் முதல் மத்திய அரசாங்கம் வரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சியிருக்கின்றன. அதைப்பற்றிய செய்தியை கீழே பாருங்கள்.

வன்முறையை கைவிட்டால் நக்ஸலைட்டுகளுடன் பேசத் தயார்: சிதம்பரம்
வெப்துனியா புதன், 21 அக்டோபர் 2009

ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக நக்ஸலைட்டுகள் அறிவித்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மக்களவை முன்னாள் அவைத் தலைவர் ரபி ரே உள்ளிட்ட பலர் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான துணை இராணுவப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று விடுத்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சர் சிதம்பரம், ரபி ரே தலைமை வகிக்கும் அமைதிக்கான குடிமக்கள் முன்முயற்சி (
Citizen’s Initiative for Peace) அமைப்பு மாவோயிஸ்ட்டுகளுடன் பேசி, அவர்கள் மேற்கொண்டு வரும் ஆயுதப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

“மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டமே அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தடையாக உள்ளது. அவர்களை ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துகின்றனர். வன்முறைப் பாதையை கைவிடுவதாக அவர்கள் அறி்க்கை வெளியிட்டால் அவர்களோடு மத்திய மாநில அரசுகள் அவர்கள் எழுப்பும் பிரச்சனைகள் எதுவாயினும் அது குறித்துப் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம
்” என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

* * * * * * * * * * * * * * * * * *

  • பேச்சுவார்த்தைக்கு வராமல் தொடர்ந்து நக்ஸல்கள் 76 வீரர்களை தாக்கிக்கொன்றபோது சமாதானத்திற்கு அழைத்த அரசாங்கம் அவர்களை காட்டில் ஒளிந்து தாக்கும் கோழைகள் என்று தனது இயலாமையை வெளிப்படுத்தி வெறுப்பைக் கொட்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலகில் எதைப்பற்றிவேண்டுமானாலும் பேசலாம் ஆனால் வன்முறையை மட்டும் விட்டுவிடுங்கள் என்று மன்றாடியிருக்கிறது. அதைப்பற்றிய செய்தியைக் கீழே பாருங்கள்.

வெப்துனியா ஞாயிறு, 4 ஏப்ரல் 2010
லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் ஒளிந்து கொள்ளவேண்டும். அவர்கள் உண்மையில் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் நம்பிக்கை வைத்திருந்தால் பேச்சு வார்த்தைகளுக்கு சம்மதிக்கவேண்டும்.
உலகில் எதை வேண்டுமானாலும் பேசலாம் வாருங்கள் ஆனால் வன்முறையைக் கைவிட்டு விடுங்கள். என்று அழைப்பு விடுத்துள்ளார் ப.சிதம்பரம்.

* * * * * * * * * * * * * * * * * *


  • கடைசியில் இப்போது நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை என்று என்ன செய்வதென்று வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்த அரசாங்கம். அதைப்பற்றிய செய்தியையும் கீழே படியுங்கள்.

நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை: ப.சிதம்பரம் கவலை
தினமணி 2 மே 2010

கோவை, மே 1: நக்ஸல்களின் சவாலால் இந்தியாவுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நடைபெற்ற 6 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கோவை போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு சான்றிதழை வழங்கி சிதம்பரம் பேசியது:

6 மாநிலங்களில் இருக்கும் நக்ஸல்களின் சவால்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது.

* * * * * * * * * * * * * * * * * *
* * * * * * * * * * * * * * * * * *

மேற்கண்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்போது தங்களது குறிக்கோளை (அது சரியானதா அல்லது தவறானதா என்பதைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு செய்யவேண்டாம்) அடைய வன்முறையில் ஈடுபட்டவர்களை பலமுறை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சி அழைத்திருக்கிறது இந்த அரசாங்கம். அவர்கள் அதற்கு ஒத்துவராதபோது அவர்களை கோழைகள் என்று நிந்தனையும் செய்திருக்கிறது. கடைசியில் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறது.

அதனால் அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் நேர்மையாக அகிம்சைவழியில் தங்களின் நியாயமான கோரிக்கைக்குப் போராடுபவர்கள் “வீரர்கள்”. வன்முறையில் இறங்கி மறைந்திருந்து தாக்கி தங்களது கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள நினைப்பவர்கள் “கோழைகள்”.

இந்தக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பல ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான அப்பாவிப் பெண்களும், ஆண்களும் பொய் வரதட்சணை வழக்குகளால் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டும்
பல இன்னல்களுக்கு ஆளாகியும், அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பொய் வழக்குகளால் பல இளைஞர்களும், இளம் சகோதரிகளும் தங்களது வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள், இன்னும் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவையனைத்தும் தவறாக இயற்றப்பட்டுள்ள இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்களால் (IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act) இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடுமை. நக்ஸல்கள் என்பவர்கள் ஏதோ சில மாநிலங்களில் மட்டும்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த பொய் வரதட்சணை வழக்குகளால் காவல் மற்றும் நீதித்துறைகளால் கொடுமைப்படுத்தப்படுபவர்கள் இமயம் முதல் குமரி வரை, இந்திய எல்லையைக் கடந்து அயல்நாடுகளிலும் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் எந்த ஒரு வன்முறையும் செய்யாமல் அகிம்சை வழியில் போராடி அரசாங்கத்திற்கு மனுக்களை எழுதி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து காப்பாற்றுமாறு முறையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


கீழே பாருங்கள் எத்தனை அமைப்புகள் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கெதிராக அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

-->
-->
இந்த உண்மை ஜனாதிபதி, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அரசாங்கம் என அனைவருக்கும் தெரியும். அகிம்சை வழியில் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கும் இந்த அப்பாவிகளை பாதுகாக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. ஆனால் இவர்களுக்குப்பெயர் அகிம்சை வழியில் போராடும் “வீரர்கள்”.

இவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சகம் என்ன செய்திருக்கிறதென்றால் ஒரே ஒரு சுற்றறிகையை மாநில அரசுகளுக்கு அனுப்பி தங்களால் ஏதும் செய்ய இயலாது அதனால் மாநில அரசுகள் விரும்பினால் ஏதாவது செய்து இந்த அப்பாவிகளை காப்பாற்றட்டும் என்று கையை விரித்துவிட்டது. ஏனென்றால் இந்த அப்பாவிகள் அனைவரும் வன்முறையில் ஈடுபடாமல், காடுகளில் மறைந்திருந்து “கோழைகள்” போல தாக்குதல் நடத்தாமல் அகிம்சை வழியில் போராடும் “வீரர்கள்”. அதனால் இவர்களின் கோரிக்கைகளை செவிகொடுத்துக்கேட்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ அரசாங்கத்திற்கு அவசியமில்லை. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து இவர்களின் குறைகளைக் கேட்க இவர்கள் என்ன காட்டில் மறைந்திருந்து தாக்கும் கோழைத்தனமான தீவிரவாதிகளா?

அந்த சுற்றறிக்கையைப் பாருங்கள்.






அரசாங்கத்தின் இந்தப்போக்கு தவறான வழிமுறையைத்தான் மக்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. வன்முறையில் இறங்கும் “கோழைகளாக” இருந்தால் அரசாங்கம் காலில் விழாத குறையாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். ஆனால் அப்பாவியாக அகிம்சை வழியில் நியாயமான கோரிக்கைக்குப் போராடினால் அவர்களை “வீரர்கள்” என்று சொல்லி வேடிக்கை மட்டும்தான் பார்க்கும் என்ற தவறான மனப்பான்மை அனைவருக்கும் ஏற்படுமல்லவா?

தீவிரவாதம் என்பது ஒரு இனமல்ல. தீவிரவாதிகள் என்று யாரும் பிறப்பதுமில்லை. அகிம்சை வழிசெல்லும் வீரர்கள் அரசியல் சுயநலக்கோமாளிகளால் தீவிராவாதி என்னும் கோழைகளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அரசாங்கம் இந்த அப்பாவிகளைக் காப்பாற்ற தவறான வரதட்சணை சட்டத்தில் தகுந்த திருத்தங்கள் கொண்டுவந்தாலே போதும். பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்து தலையை சொறிந்துகொண்டிருக்கும் குழப்பமான நிலையெல்லாம் அரசாங்கத்திற்கு இல்லையே.

இளைஞர்களே,

இதுபோன்றதொரு தவறான சூழ்நிலையில் சுயநக்கோமாளிகளால் கோழைகளாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள். இந்தியாவில் திருமணம் செய்து உங்களது வாழ்க்கையை சூன்யமாக்கிகொள்வதைவிட வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.

==================================================================



தினமணி தலையங்கம்
தெரிந்தே செய்யும் தவறு
9 ஏப்ரல் 2010


மாநில போலீஸார் மற்றும் மத்திய சிறப்புக் காவல் படையினர் உள்ளிட்ட 76 பேர் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாடு தழுவிய அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது.​ தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருக்கும் காஷ்மீரில்கூட பாதுகாப்புப் படையினர் இந்த அளவுக்கு மோசமான தாக்குதலை எதிர்கொண்டதில்லை.

எந்த ஓர் அரசும் இதுபோன்ற வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.​ இதுபோன்ற தாக்குதல் இந்திய இறையாண்மைக்கும் மக்களாட்சித் தத்துவத்துக்கும் விடப்பட்ட சவால் என்று கருதுவதிலும் தவறில்லை.​ அரசின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத அரசின் ஆளுமைக்கு உள்படாத ஒரு பகுதி இருப்பதை எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாலும் ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ முடியாது.​ ​

தீவிரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்வதற்கு உதவும் காரணிகளையும் சூழலையும் களையாமல் துப்பாக்கியைத் துப்பாக்கியால் மட்டுமே எதிர்கொண்டு வெற்றியடைவது சாத்தியமா என்பது சந்தேகம்தான்.​ வீரவசனம் சினிமாவில் பேசிக் கைதட்டல் பெறுவதுபோல,​​ நிர்வாகத்தில் சாத்தியப்பட்டதாகச் சரித்திரம் உணர்த்தவில்லை.​ ​ மேற்கு வங்கம்,​​ ஒரிசா,​​ இப்போது சத்தீஸ்கர் என்று மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகள் பரந்து விரிந்துகொண்டே போவதை கடந்த மூன்று ஆண்டுகளாகவே நமது தலையங்கத்தில் எச்சரித்து வருகிறோம்.​ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருபது விழுக்காடாக இருந்து இப்போது ஏறத்தாழ இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி மாவோயிஸ்டுகளின் கையில் சிக்கியிருப்பதை வேதனையோடு குறிப்பிட்டே தீர வேண்டும். மாவோயிஸ்டுகள் இந்தியாவின் 16 மாநிலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள்.​

இந்தியாவில் உள்ள 460 மாவட்டங்களில் ஏறத்தாழ 175 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.​ காஷ்மீர்,​​ அசாம்,​​ வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் பிரிவினைவாதம் சார்ந்த தீவிரவாதம் இதில் சேராது. மாவோயிஸ்டுகளின் முழு ஆளுமையில் இருக்கும் மாவட்டங்கள் 58.​ மாவோயிஸ்டுகள் ஓரளவுக்குப் பலமாக இருக்கும்,​​ ஆனால்,​​ இந்திய அரசின் ஆளுமை தொடரும் மாவட்டங்கள் 54.​ ஏனைய 83 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் இருக்கிறது.​ கடந்த ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான காவல்துறையினர் ​(312 பேர்)​ பலியான மாவோயிஸ்டுகளைவிட ​(294 பேர்)​ அதிகம். இந்த அளவுக்கு மாவோயிஸ்டுகள் பலம் பெற்றதற்கு என்ன காரணம்?​ இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​

இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள். ​ 1995 வரை இவர்கள் நிம்மதியாகக் காட்டை நம்பி வாழ்ந்து வந்தனர்.​ நமது வனத்துறை அதிகாரிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தனர்.​ இந்த வனப்பகுதியில் இந்திய அரசின் அதிகாரமும் ஆளுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.​

உலகமயமாக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்த வனப்பகுதியில் குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தாதுப் பொருள்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கிடைக்கப் போகும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அந்த நிறுவனங்களை இங்கே காட்டை அழித்துச் சுரங்கங்களை நிறுவ ஊக்குவித்தது.​ ​ கட்சி வேறுபாடின்றி எல்லா அரசியல் கட்சிகளும் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்தபோது ஆதிவாசிகள் மிரண்டனர்.​

தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் அவர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியது.​ பட்டணத்துத் தெருக்களில் கூலிகளாகவும்,​​ ரிக்ஷாக்காரர்களாகவும் அல்லாட அவர்கள் தயாராக இல்லை.​ அவர்களை வெளியேற்றி இந்தியாவின் கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​ தங்களுக்காகக் குரல் கொடுக்கவும் ஆதரவுக்கரம் நீட்டவும் எந்த அரசியல் கட்சியும் சமூக அமைப்பும் இல்லாத நிலையில் பேய்க்குப் பயந்து பூதத்துக்கு வாழ்க்கைப்பட்ட கதையாக அவர்கள் மாவோயிஸ்டுகளைத் தஞ்சமடைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.​ இதுதான் மாவோயிஸ்டு அசுர வளர்ச்சியின் பின்னணி. தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து பன்னாட்டு கனிம நிறுவனங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை வெற்றி பெறும் என்பதுதான் உண்மைநிலை.​ ஆனால் அரசோ,​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும்சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறது.​ இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியோ என்றுகூட நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இந்தியாவின் மையப்பகுதியில் ஓர் எரிமலை கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.​ அது வெடிப்பதும் வெடிக்காமல் போவதும் அரசின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான் இருக்கிறது.​

நிதியமைச்சராக இருக்கும்போது ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நமது மத்திய உள்துறை அமைச்சர் தலையங்கத்துக்குக் கீழே தரப்பட்டிருக்கும் குறளைப் படித்து அதன்படிச் செயல்பட்டாலொழிய இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று நாம் நம்பவில்லை.​ ​

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து,​​ நோயின் காரணம் ஆராய்ந்து,​​ அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,​​ உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும். திருக்குறள் ​(எண்:​ 948) அதிகாரம்:​ மருந்து





Wednesday, April 28, 2010

மனைவியின் கொடுமையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்!

திருமணமான பல அப்பாவி இந்திய ஆண்கள் தங்களது மனைவியரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க வழிதெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த அப்பாவிக் கணவர்களை காப்பாற்ற எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் கிடையாது. அவர்களது துன்பங்களைக் கேட்பவர்கள் கூட எள்ளி நகையாடுவார்கள். இதுதான் இன்றைய இந்தியக் கணவர்களின் இழிநிலை.

அதே சமயம் மனைவிக்கு கண்ணில் தூசி விழுந்து கண்ணீர் வந்துவிட்டால் கூட பல ஜொல்லுக் கிழங்களும், பெண்பித்துப்பிடித்து கண்ணில் படுகின்ற கணவர்களெல்லாம் கொடுமைக்காரர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் கயவர்களும் அந்தப் பெண்ணின் கண்ணீருக்கு கணவனின் கொடுமைதான் காரணம் என்று கதைகட்டிவிடுவார்கள். இதுதான் இன்றைய பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் தவறாக உருவாக்கப்பட்ட விதம்.

கணவனின் கொடுமையிலிருந்து மனைவியைப் பாதுகாக்க பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மனைவியின் கொடுமையிலிருந்து கணவனை பாதுகாக்க எந்த ஒரு சட்டமும் கிடையாது. அதற்குப் பதிலாக ஏளனச்சிரிப்புக்கள்தான் ஏராளமாக இந்தியாவில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அப்படியே கணவர்கள் அந்தக்கொடுமைக்கெதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தால் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு கருணையோடு வரதட்சணை வழக்கு, பெண்கொடுமை வழக்கு (IPC498A), குடும்ப வன்முறை (Domestic Violence) போன்ற சட்டப்பிரிவுகளில் அன்புப்பரிசு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்த இந்தியக் குடும்ப வன்முறைச் சட்டப்பிரிவின் வரையறைப்படி “ஆண்” என்பவன் எப்போதும் வன்முறை செய்யும் குற்றவாளி என்ற நிலையில்தான் கருதப்படுவான். ஆனால் “பெண்” என்பவள் எப்போதும் ஆணின் கொடுமைக்குள்ளாகும் அப்பாவி என்ற நிலையில்தான் கருதப்படுவாள். இதுதான் இந்தியக் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் சிறப்பம்சம்.



Definitions.-In this Act, unless the context otherwise requires,-

(a) "aggrieved person" means any woman (Note: Woman is always a victim and Male is Never considered as a victim of domestic violence) who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;

(e) "domestic incident report" means a report made in the prescribed form on receipt of a complaint of domestic violence from an aggrieved person;

(q) "respondent"
means any adult male person (Note: Male is always accused respondent) who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;


அதனால் இந்தியாவில் அப்பாவிக்கணவர்களுக்கு மனைவியின் கொடுமையிலிருந்து விடுதலைபெற இப்போதைக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று கீழுள்ள வீடியோவில் சொல்லப்பட்டது போல மனைவியை மாற்றிக்கொள்ளவேண்டும். அல்லது......




இரண்டாவது வழிமுறை - மனைவி உங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு உங்களை சிறைக்குத் தள்ளுவதற்கு முன்பு நீங்களாகவே சிறைக்கு சென்றுவிடுவது. இந்த வழிமுறையை ஒரு அப்பாவிக்கணவர் எப்படி செயல்படுத்தியிருக்கிறார் என்று கீழுள்ள செய்தியில் பாருங்கள்.

Harassed hubby opts for jail

Apr 27 2010

April 26: A 42-year-old man deliberately got himself arrested on Sunday to escape his wife’s torture. The man, Selvam, got drunk and threw stones at an MTC bus in Vyasarpadi and waited for the police to arrest him.

He told the police that he was unable to bear the torture of his wife and preferred jail to home. On Monday, he pleaded with the police not to send him back home and made sure that he was remanded for 15 days.

Selvam, a casual labourer of Kakkanji Nagar, in Vyasarpadi, and his wife Govindammal (39), who have two children, argued often. Though initially Govindammal used to go away to her maternal home after the quarrel, she then got into the habit of beating him up. Sometimes she bashed him up for no reason at all, explained the police.

After one such ‘bashing up’ early on Sunday morning, Selvam had a few rounds before going to the Sharma Nagar bus stop and threw two huge stones at an MTC bus going into the depot. The enraged driver drove to the local police station and lodged a complaint.

After he was arrested, Selvam broke into tears during questioning. He told the police about the harassment he was going through and at one point threatened to kill himself if he was not arrested. “So, we were left with no choice,” police said.


Source URL:
http://www.deccanchronicle.com/chennai/harassed-hubby-opts-jail-656


இளைஞர்களே,

இதுபோன்றதொரு இன்னல்மிக்க, சட்டப் பாதுகாப்பற்ற இந்தியத் திருமண வாழ்க்கை உங்களுக்குத் தேவையா?

இதற்கு ஒரே வழி வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களது வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டு உங்களது பெற்றோர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.






Tuesday, April 27, 2010

இளம் நடிகைக்கு அமெரிக்காவில் நேர்ந்த வரதட்சணைக்கொடுமை!



இளைஞர்களே,


தற்போது எல்லா இந்தியத்திருமண வாழ்க்கைப் பயணங்களும் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் IPC498A என்ற படகு மூலம் கடைசியில்சென்று சேரும் இடம் விவாகரத்து நீதிமன்றங்கள். அங்கே அவைகளுக்கு “விவாகரத்து” என்ற மோட்சம் கொடுக்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது கணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் காவல்துறையாலும், நீதித்துறையாலும் “சிறைவாசம்” என்ற விருந்து கொடுக்கப்படுகிறது. இந்த விருந்து ஏற்பாடுகளை அரசாங்க உதவியுடன் நன்கொடையாக இலவசமாக உங்களுக்குக் கொடுத்து மகிழ்பவர் உங்களது பாசமிகு மனைவி! இதுபோன்ற இந்தியத் திருமணம் உங்களுக்குத் தேவையா? சிந்தியுங்கள்.

=================================================================

குடிசையில் வாழும் “குப்பம்மாள்” முதல் கோடியில் புரளும் “கோகிலா” வரை யாரையும் இந்த இந்திய ஆண்கள் விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது! எல்லோருக்கும் வரதட்சணைக் கொடுமைதான்! இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு அந்த வரதட்சணை தெய்வம்தான் தூக்குதண்டனை தரவேண்டும்.

கீழுள்ள செய்தியில் பாருங்கள். இளம் நடிகையையும் இந்த இந்தியவரதட்சணைக் கொடுமை விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவில் சென்று அவர் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த அளவிற்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது!



அவர் பட்ட கஷ்டங்களை அவரது தந்தை புகாரில் எப்படி பட்டியலிட்டிருக்கிறார் என்று பாருங்கள்!


The marriage of the petitioner's son and one Gayatri, daughter of the de-facto complainant took place on 08.12.2006. The marriage was not a happy one and several differences arose between the married couple. The de-facto complainant has preferred the complaint against the petitioner herein, his wife and son, the son having married the complainant's daughter Gayatri. The complaint reads as follows :-

'I am S.Raghuram, residing at 79, 3rd Street, Kamdar Nagar, Nungambakkam, Chennai 34,

1. My second daughter R.Gayathri, aged 23 years had an arranged marriage with Mr. Deepak Chandra Sekar, Son of B.V.Chandra Sekar on the 8th of December 2006. The marriage was celebrated with great pomp at Mayor Ramanathan Chettiar Centre Valliammal Hall, MRC Nagar, Santhome High Road, Madras-28. The marriage was attended by a number of well-known film personalities, politicians etc., as I am a reputed dance director in the film field.

2. At the time of marriage, I gave my daughter about 600 gms of gold jewels, diamonds and silver worth Rs.3,50,000/-. I presented my daughter with very valuable silk saris. Cash was also given. I presented saris, dhotis and other articles to the bridegroom's parents and other relatives. The marriage was a glittering affair and I spent lavishly as I wanted my daughter to have a happy married life.


3. At the time of marriage, my son-in-law Deepak Chandrasekar was employed as Systems Analyst with SISCO systems in San Jose, California, U.S.A. My daughter was also studying in IOWA USA where my elder daughter was living immediately after marriage, my daughter was taken to her in-laws house at B9, Luz Apartments, Luz Church Road, Mylapore, Chennai- 600 004. She was staying with them till she was taken to the U.S by her husband a week after the marriage. All her jewels, silver, valuables, clothes etc. were also taken to her in-law's house, as it is customary in our families.


4. My daughter informed me over the phone that she was having a happy married life with her husband in the U.S. She continued her studies in California after her return. She still has three semesters to finish her course.


5. In May 2007 Mrs. Savithri Chandrasekar the mother of Deepak Chandrasekar went to USA to visit her son and stayed in his house. As she has got a taste of the wealth of our family. She wanted to extract a huge sum from us and started harassing and intimidating my daughter. She wanted to get Rs.1,50,00,000/- to cover the expenses of her daughter and son-in-law who are going to migrate to the U.S.A. She demanded the money from my daughter and asked her to get it from me immediately. She prevailed on my son-in-law also and he also started abusing harassing and ill-treating her. My daughter tells me that the situation became so bad that she was injured when her husband beat her up. She had to take medical treatment for the injury.


6. When I heard about this I was very shocked. Though I was worried about her safety, I thought that it was a one time incident and advised her to be patient. But the harassment and the demand for money continued and ultimately she was thrown out of her matrimonial home on 11.06.2007.


7. My daughter left all her belonging including her jewellery and personal effects in her matrimonial home had to go to my elder daughter's house in Cincinatti Ohio. When she tried to contact her husband over phone, he strictly instructed her to desist from either contacting him or from returning to his house. My daughter informed me over the phone that as she has categorically refused to ask me for huge dowry amounts, her mother-in-law and husband became very angry and that at the instigation of her mother in law, he started behaving like a psychopath. He turned very violent and tried chocking her with a pillow. He had also thrown her puppy violently, breaking its leg. My daughter had to give a police complaint against her husband.


8. When I found out these development, I immediately met his parents Mrs. Savithri & Mr.Chandrasekar on 17.06.2007 at their residence I realised that they were instrumental in causing this trouble. Both of them refused to advice or counsel their son., but on the contrary demanded Rs.1.5 crores to be paid to them immediately. They threatened me that only if I oblige them, they would instruct their son to take my daughter back. I tried to convince them that I have very valuable properties and that ultimately I will be giving these properties only to my two daughters and that they need not have any apprehension about this. I refused to concede to their demand and this infuriated them. They specifically informed me that their son would file for divorce and also see that my daughter would be intimidated by the police in U.S.A. My request to them to allow the young couple to have a peaceful married life was turned down. They informed me categorically that unless their demand for money was met, there is no chance for reconciliation. They abused me and throw me out of the house.


9. My daughter was to leave for San Jose on the 28.06.2007. She was shocked to receive a Lawyer notice issued on behalf of her husband advising her he had filed a petition for divorce at U.S.A He also instructed her to refrain from contacting her husband as otherwise he would get a court order to restrain her from doing so.


10. This clearly shows that the threats issued by Mr. & Mrs. Chandrasekar that my daughter's marriage would end if the dowry demand was not met has been implemented. It is pertinent to point out that Mrs.Chandrasekar has left to Oman after creating this trouble. Clearly Mrs. Savithri Chandrasekar and Chandrasekar are totally responsible for the physical and mental abuse suffered by my daughter for the break down of her marriage.


11. My daughter is on dependent visa and her husband is at present having only work permit (H1 Visa). My daughter has no money of her own and the intention of the Chandrasekar is to prevent her from seeking adequate legal aid to defend her self in the U.S.A court.


12. I therefore request you to register a complaint against Mrs.Savithri Chandrasekar and Mr.B.V.Chandrasekar under the relevant provision of Dowry Prohibition Act, Indian Penal Code & Domestic Violence Act and prosecute them under the Act."


13. The complaint dated 02.07.2007 which was forwarded to the Commissioner of police has been registered in Cr. No. 8/07 on the file of the first respondent police on 25.08.2007 and for offences under sections 498(A) and 506(i)IPC and 4 of Dowry Prohibition Act. On receipt of the complaint the respondent police had filed charge sheet against the three accused for offences u/s.406 and 498A IPC. The lower court has taken cognizance for offences u/s. 498A, 406 and 506(i) IPC and issued summons to the accused.


===========================================================
செவ்வாய், 10 நவம்பர் 2009 WebDunia.com

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் கொடுத்துவிட்ட விவாகரத்திற்கு மற்றொருமுறை விவாகரத்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறது இந்திய நீதிமன்றம்!!!!!!!

Marriage between the daughter of the de-facto complainant and the third accused has been dissolved on 22.01.2008 by The Superior Court of California, Country of Santa Clara, U.S.A. It is an admitted position that, at the time the Court in America was moved towards dissolution of the marriage, the third respondent/the de-facto complainant's daughter was in America

==========================================================

நீதிமன்றம் சொல்லியிருப்பது...............




PRAYER: This Petition is filed under Section 482 of the Code of Criminal Procedure, praying to call for the records in C.C. No. 251 of 2008 on the file of XVIII Metropolitan Magistrate, Saidapet, Chennai and quash the same.

O R D E R

The petitioner who is the first accused in C.C. No.251 of 2008 on the file of the XVIII Metropolitan Magistrate, Chennai seeks to quash the proceedings as against him.


14. Certain facts which require mention are as follows :-

Both, the daughter of the de-facto complainant viz. Gayatri and the third accused viz. Deepak Chandrasekar being in United States of America, had registered their marriage on 28.08.2006 before the Office of Recorder, Country of Alameda, Oakland, California as mentioned under the Licence of marriage issued by such office. The marriage subsequently was solemnised as per Hindu rites in India on 08.12.2006.


15. Marriage between the daughter of the de-facto complainant and the third accused has been dissolved on 22.01.2008 by The Superior Court of California, Country of Santa Clara, U.S.A. It is an admitted position that, at the time the Court in America was moved towards dissolution of the marriage, the third respondent/the de-facto complainant's daughter was in America but as on the order of dissolution she was not there. Though at the instance of this Court several submissions were made on the question of the validity of the marriage conducted in India and the registration thereof under the Hindu Marriage Act, in the face of an earlier registration of marriage on 28.08.2006 at America and this Court also heard both counsel in some detail on the binding nature or otherwise of the decree of dissolution passed by the Court in America, the same only were of academic interest and need not detain us in disposal of the petition before us.


16. Upon the complaint of the respondent and on completion of investigation, charge sheet had been filed for offences u/s. 406 and 498A IPC. The lower court has, on consideration of the complaint, charge sheet and statement of witnesses filed therewith, taken cognizance for offences u/s.498A, 406 and 506 (i)IPC. The copy of the complaint has been extracted herein above towards making ready reference thereto. It is seen that the couple had left for America within a week of their marriage. The complaint also speaks of the second accused having gone over to stay with the couple in May 2007, where after the entire sordid happenings transpired. It is not in dispute that the petitioner was never in America. The complaint itself informs at paragraph seven that, the third respondent/complainant's daughter left all her belongings, including her jewellery and personal effects in her matrimonial home and had to go to her sister's house in a different State owing to the ill-treatment suffered by her. Thus, it can be seen that there has been no entrustment of such articles in the hands of the petitioner, which would enable him to misappropriate the same. As such no offence of criminal breach of trust would stand made out against him.


17. As regards the offences u/s.498A IPC, it is seen that the entire allegations there regards are only that which took place in America, where, to repeat, this petitioner had not been. All the allegations which would attract section 498A IPC are alleged against the second and third accused in the case. The same would hold true also in respect of offences u/s. 506(i) IPC. In fact the only allegation we find in the complaint against the petitioner is that, mentioned in paragraph eight of the complaint, wherein it has been stated that "the petitioner and his wife on the contrary demanded Rs.1.5 crores to be paid to them immediately and on such payment they would advise his son to take his daughter back and that, when the complainant refused to concede to the demand they were infuriated and informed that their son would file for divorce and would see that his daughter would be intimidated by the police in U.S.A. and that unless their demand for money was met there was no chance for reconciliation and he was abused and thrown out of the house. As against this, the 161(3) Cr.P.C statement stops with saying that it was the petitioner's wife, the second accused, who made the demand. It is to be remembered that neither has charge sheet been filed nor cognizance taken for any offence of dowry demand.


18. In the facts and circumstances of the case, no commission of offence could be attributed to the petitioner. Ofcourse, it is submitted by the learned senior counsel appearing for the respondents that the petitioner was the only person appearing before the lower court, the second accused being away at Oman and the third accused in America and if the proceedings against this petitioner were to be quashed, the entire case would come to a stand still. That, by itself would not be reason for prolonging the agony of the petitioner.


19. In these circumstances, this court quashes the proceedings in C.C. No. 251 of 2008 on the file of XVIII Metropolitan Magistrate, Saidapet, Chennai as against the petitioner. This Criminal Original Petition is ordered accordingly.


வெள்ளிக்கிழமை, 12, மார்ச் 2010 Thenali.com

கணவர், மாமனார், மாமியார் மீது நடிகை கயாத்திரி ரகுராம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சார்லிசாப்ளின், விசில் படங்களி நடிதவர் காயத்திரி ரகுராம், இவர் பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகள், இருக்கும் சென்னை மயிலையைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து சென்னை வந்த அவர் சென்னை மயிலை போலீசில் கணவர் தீபக், மாமனார் சந்திரசேகர், மாமியார் சாவித்திரி ஆகியோர் மீது வரதட்சனை புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் சைதை நீதிமன்றத்தில் கணவர் தீபக் மற்றும் மாமியார், மாமனாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மாமனார் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில் எனது குடும்பத்துக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கு அடிப்படை ஆதாரம் இல்லை.

எனவே இந்த புகார் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய் வேண்டும். என்று கோரியிருந்தார் மனுவை ஏற்று விசாரணை செய்த நீதிபதி சி.டி.செல்வம் தனது தீர்ப்பில் ''அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாததால் காயத்திரி ரகுராம் தன் கணவர், மாமனார். மாமியார் ஆகியோர் மீது தொடர்ந்த புகார் மற்றும் வழக்கு, அதன் மீதான குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

==========================================================


இளைஞர்களே,

தற்சமயம் எல்லா இந்தியத்திருமணங்களும் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் IPC498A என்ற படகு மூலம் கடைசியில்சென்று சேரும் இடம் விவாகரத்து நீதிமன்றங்கள். அங்கே அவைகளுக்கு “விவாகரத்து” என்ற மோட்சம் கொடுக்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது கணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் காவல்துறையாலும், நீதித்துறையாலும் “சிறைவாசம்” என்ற விருந்து கொடுக்கப்படுகிறது. இந்த விருந்து ஏற்பாடுகளை அரசாங்க உதவியுடன் நன்கொடையாக இலவசமாக உங்களுக்குக் கொடுத்து மகிழ்பவர் உங்களது பாசமிகு மனைவி! இதுபோன்ற இந்தியத் திருமணம் உங்களுக்குத் தேவையா? சிந்தியுங்கள்.