குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:
"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
ஆனால் மனைவியின் வன்முறைக்கு பலியாகும் கணவன்களுக்கு பாதுகாப்பு அளிக்க எந்தவித சட்டங்களும் இல்லை. மனைவியின் வன்முறையை தாளமுடியாத கணவன்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தால் ஏளனப் பேச்சுக்களும், அலைக்கழிப்புகளும் மட்டுமே மிஞ்சும். இதுதான் பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நடைமுறை. இதனை “உன்னைப் போல் ஒருவன்” திரைப்படத்தில் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த அவலமான சூழ்நிலை பற்றி எந்த ஒரு இந்திய ஆணும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
அதனால் இந்தியாவில் கணவனை பழிவாங்கவும், பணம் பறிக்கவும் நினைக்கும் மனைவியர் குடும்பவன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்றவற்றை பக்குவமாகப் பயன்படுத்தி காவல் மற்றும் நீதித்துறைகளின் உதவியோடு தன் இஷ்டம்போல பொய்யான புகார்களை பதிவு செய்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே சீரழித்து வருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
இதுபோன்று மனைவியின் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட கணவர் காவல்துறையின் உதவியை நாடி அவமானப்பட்டு மனம் நொந்து வேறு வழியை நாடியிருக்கிறார். அந்த செய்தியை பின்வரும் இணைப்பில் காணலாம்.
மேலுள்ள வீடியோவை பார்த்துவிட்டு, இந்திய குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை ஒரு முறை படித்துவிட்டு பிறகு பின்வரும் செய்தியையும் படித்துப் பாருங்கள். யார் குற்றவாளி என்று புரியும்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு குண்டு மிரட்டல்: கண் பார்வையற்றவர் சென்னையில் "கைது'’
டிசம்பர் 29,2011 தினமலர்
தஞ்சாவூர்: தன்னை அலையவிட்ட போலீசாரை அலைக்கழிக்க, தஞ்சை பெரிய கோவிலுக்கு, நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, சென்னையைச் சேர்ந்த கண் பார்வையற்ற சங்கர் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, 11.30 மணிக்கு பேசிய மர்ம நபர், "தஞ்சாவூர் பெரிய கோவிலில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் குண்டு வெடிக்கும். முடிந்தால் வெடிகுண்டை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று கூறி, இணைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி., ஜோஸ் தங்கையா தலைமையில் போலீசார், பெரிய கோவிலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார், அங்குலம் அங்குலமாக, கோவிலில் சோதனை செய்தனர். திருவாரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சென்னை போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் மொபைல் எண்ணை வைத்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னை, வியாசர்பாடியில் அவர் இருக்கிறார் என்றும், அவர் பெயர் சங்கர் என்பதையும் அறிந்த போலீசார், நள்ளிரவு, 2.30 மணிக்கு, அவரை கண்டறிந்து, கைது செய்தனர்.
சங்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த பாபு மகன், சங்கர், 36; கண் பார்வையற்றவர். இவருக்கும், இவர் மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். சில நாட்களுக்கு முன், மனைவி தன்னை தாக்கியதாக, வியாசர்பாடி போலீசாரிடம் சங்கர் புகார் கொடுத்ததாகவும், அதை ஏற்க மறுத்த போலீசார், அவரை அடிக்கடி அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சங்கர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, போலீசாரை அலைக்கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்தச் செயலில் ஈடுபட்டார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நடவடிக்கை என்ன? சங்கர் பார்வையற்றவர்; கைது செய்யும் பணியை மேற்கொள்ள முடியாது என்பதால், கொடுங்கையூர் காவல் நிலையத்தில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.