பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, December 30, 2009

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இணைய தளம்

திருமணம் என்னும் தகனமேடையில் எவ்வாறு கணவர்கள் எரிக்கப்படுகிறார்கள் என்று விவரிக்கும் இணைய தள முகவரியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரபலமான தமிழ்செய்தித்தாள் அதை ஒரு புதுமைத் தளமாக அறிவியல் ஆயிரம் என்ற பகுதியில் டாட் காம் என்ற பிரிவில் வெளியிட்டிருக்கிறது. இளைஞர்களே இதிலிருந்தாவது தகனமேடையின் கொடூரத் தன்மை புரிகிறதா?

சிறப்பு பகுதிகள் : அறிவியல் ஆயிரம்
தினமலர் டிசம்பர் 30,2009

டாட் காம்

இந்தியக் கணவர்கள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச்சட்டம் 498 ஏ, பல நேரங்களில் தவறாகக் கையாளப்படுகிறது. திருமண வழக்கு ஒன்று கோர்ட்டிற்கு வரும்போது அது பெண்ணுக்கு சாதகமாகவும், ஆணுக்கு பாதகமாகவும் தான் அணுகப்படுகிறது என பாதிக்கப்பட்ட ஆண்கள் குறை கூறுகின்றனர். இந்தியகணவர்களின் பிரச்னைகள், தீர்வுகள், உரிமைகள் குறித்து http://indianhusbands.blogspot.com என்ற வெப்சைட் உள்ளது.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

Sunday, December 27, 2009

வாலிபர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை!இந்தியாவில் திருமணம் செய்ய நினைத்தால் உங்கள் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு கண்டிப்பாக நரகத்தில் தான் போய்முடியும்.

HIV கிருமியிடமிருந்து எப்படி பாதுகாப்புத் தேவையோ அதுபோல "திருமண" உறவிலும் IPC498A என்ற கிருமியிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அதற்கு இந்திய உச்சநீதிமன்றத்தால் பாதுகாப்பானது என அங்கீகாரம் செய்யப்பட்ட திருமணம் செய்யாமல் கூடி வாழும் முறையை (Supreme Court gives legal tag to Live-in-relationship) தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலும் இந்த வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள்: திருமணம் தவிர்த்த “துணைவர்” கலாசாரம்!

HIV வைரஸால் ஏற்படும் வியாதிக்கும் மருந்தில்லை, அதுபோல தவறான திருமணத்தால் ஏற்படும் IPC498A என்ற கிருமியால் ஏற்படும் தொற்றுவியாதிக்கும் இதுவரை எந்த மருந்தும் இல்லை. இந்த தொற்றுக்கிருமிகளில் ஏதாவது ஒன்றால் பாதிப்பு ஏற்பட்டாலும் வாழ்க்கை முழுதும் துன்பப்படவேண்டியது தான்.

அதனால் உங்களின் இத்தனை ஆண்டுகால உழைப்பையும், வாழ்க்கையையும், இளமையையும், எதிர்காலக் கனவுகளையும், இலட்சியங்களையும் திருமணம் என்ற தகனமேடைக்குச் சென்று சிதை மூட்டி அழித்துக்கொள்ளாதீர்கள்! அந்த தகனமேடையில் எரியப்போவது நீங்கள் மட்டுமல்ல, உங்களின் பாசமிகு பெற்றோரும் மற்றும் உடன்பிறந்தோரும் ஒட்டுமொத்தமாக சேர்த்து எரிக்கப்படுவார்கள்.

இந்த தகனமேடைக்குச் சென்று பலர் தங்களின் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைய தளத்தைப் பாருங்கள்: www.498a.org. இந்த தகனமேடையில் வீழ்ந்து IPC498A என்னும் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்தக் கொடுமைகளைப் பற்றி ஒரு புத்தகமே எழுதிவிட்டார். அப்படியென்றால் இது எவ்வளவு கொடிய நச்சுக்கிருமியாக இருக்கும்! அந்தப் புத்தகத்தை இங்கே சென்று " ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி" டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உங்களுக்கும் தேவைப்படலாம்.

இந்தியாவில் திருமணம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களால் ஏற்படும் ஆபத்தைப் பல வல்லரசு நாடுகளே நன்குணர்ந்து தங்களின் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை செய்திருக்கிறது. அதைப் பற்றி இனிவரும் பதிவுகளில் காணலாம்.There was an error in this gadget