பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, February 28, 2010

பிணமாலையாகும் மணமாலைகள்

இளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அதனால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு நீங்கள் எத்தனை கூப்பாடு போட்டாலும் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் தற்கொலை செய்துகொண்ட பிறகு என்னிடம் சொல்லியிருந்தால் நான் பிரச்சனையை தீர்க்க உதவியிருப்பேனே என்று பலரும் பெருமைபேசித் திரிவார்கள். அதுபோலத்தான் அரசாங்கமும் பொய்வரதட்சணை வழக்குகளால் இன்னலடையும் அப்பாவிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவி செய்யாமல் அவர்கள் கடைசியில் தற்கொலை செய்துகொண்ட பிறகு புள்ளிவிபரம் கொடுத்து மகிழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது.



அப்பாவிகள் பொய் வழக்குகளில் பலியாவது அரசாங்கத்திற்கு தெரிந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவிடாமல் பெண்கள் சங்கங்கள் தங்களை தடுப்பதாக பாசாங்கு காட்டி கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள இந்த சுற்றறிக்கையைப் பாருங்கள்.

(கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்)
நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் அரசாங்கத்தின் உதவியுடன் நடக்கும் சட்டதீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி உதவி கிடைக்காமல் சீரழிந்து போவீர்கள். உங்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இது உறுதியான உண்மை. அதனால் வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களின் உயிருக்கும் நல்லது. உங்களின் குடும்ப மானத்திற்கும் நல்லது.


தினமலர் பிப்ரவரி 28, 2010

புதுடில்லி;ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் ஒரு மணமான ஆண் தற்கொலை செய்கிறார். விவசாயிகள் தற்கொலை, மகாராஷ்டிராவில் குறைந்தாலும் இதர மாநிலங்களில் அதிகரித்துள்ளது.இதெல்லாம் என்ன தெரியுமா...? இந்தியாவில் தற்கொலை குறித்துமேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள்.தேசிய குற்றச்செயல்கள் ஆவண மையம் (என்.சி.ஆர்.பி.,) 2008ம் ஆண்டுக்கான தற்கொலை ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது:கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 17 பேர். இது 2007ஐ விட 1.9 சதவீதம் குறைவு.இவர்களில் மணமான ஆண்கள் மட்டும் 57 ஆயிரத்து 639 பேர். அதாவது, ஒவ்வொரு ஒன்பது நிமிடத்துக்கும் ஒருவர் வீதம் தற்கொலை செய்கிறார்.பெண்கள் 30 ஆயிரத்து 224 பேர் 2008ல் மட்டும் தற்கொலை செய்துள்ளனர்.விவசாயிகளின் தற்கொலை, மொத்தம் 16 ஆயிரத்து 196 பேர்.விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கும் மகாராஷ்டிராவில் மட்டும் 3,802 பேர். இது 2007ஐ விட குறைவு.ஆந்திரா, சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் இவற்றில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.ஏழை மாநிலங்களான பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் இவற்றை விட, பணக்கார மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகாவில் தற்கொலை அதிகரித்துள்ளது.தற்கொலையில் ஆண்: பெண் விகிதாசாரம் 64:36 என்ற வீதத்தில் இருந்தாலும், சிறுவர்: சிறுமியர் (14 வயது வரை) விகிதம் 49:51 என்ற வீதத்தில் இருக்கிறது.

இந்தியாவில் மேற்கு வங்கம் - 11.9 சதவீதம், மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா - 11.5 சதவீதம், கர்நாடகா - 9.8 சதவீதம், கேரளா - 6.9 சதவீதம், ம.பி -6.1 சதவீதம், குஜராத் -4.9 சதவீதம், ராஜஸ்தான் - 4.1 சதவீதம் என்ற விகிதத்தில் தற்கொலைகள் நடந்துள்ளன.கடந்த 1998லிருந்து பார்க்கும் போது 2008ல் 19.4 சதவீதம் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. தற்கொலைக்கான காரணங்களில் குடும்பப் பிரச்னையே முதலிடத்தில் (23.8 சதவீதம்) உள்ளது. உடல்நலப் பிரச்னையால் 21.9 சதவீதம் பேரும் தற்கொலை செய் கின்றனர். இவர்களுக்கு அடுத்துதான் காதல், கடன், பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம், வரதட்சணைப் பிரச்னை, வறுமை இவற்றால் தற்கொலை செய்பவர்கள் இடம் பெறுகின்றனர்.இந்தியாவின் 35 பெருநகரங்களில் 2004லிருந்து 2007 வரை தற்கொலைகள் அதிகரித்துள்ளன. 2008ல் சற்று குறைந்துள்ளது. குறிப் பாக பெங்களூரு, சென் னை, மும்பை மற்றும் டில்லி ஆகிய நான்கு நகரங்களில்தான் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.இவ்வாறு அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
====================================

Married men more prone to suicide: Study
Feb 27 2010

It’s not just women who go through trauma as a result of bad marriages. Men suffer just as much, but silently. Recent data made public by the National Crime Record Bureau (NCRB) points out that one married man in India is committing suicide every nine minutes. According to the survey, the cause may vary from personal problems and marital issues to economic pressures. It’s clear that many men are agonising internally over failed marriages.


Psychologist Sridevi S says it’s because men are not as expressive as women and bottle their feelings. “Women have been nurtured from the time they are young into believing that they can surmount problems. But on the other hand men are told not to cry and express emotions in public, so they suppress all their troubles until it overwhelms them and they feel they can’t take it any more.” She continues, “The sudden increase in suicidal tendencies among men is also because earlier women took care of all the family issues, but today, both husband and wife are working, they deal with it together. So men find it difficult to balance home as well as work.” The survey points out that compared to women, men are a greater suicide risk, with a male-female ratio of 64:36.


Suresh Ram, Convener, Save Indian Family movement, TN, says that this could be the result of pro-women Indian laws. “There are several laws in our country which protect women, while men have no such protection. Often women take advantage of it. There is this stereotype attached to men, that they should not cry or express their depression. Why is it,” he questions, “that when a man commits suicide he is called coward, while when a woman does so, they say she is driven to it-” he asks. Actor Srikanth says,“Being a married man could be a little stressful today, but you must understand that there is a woman in your life who is also going through the same.”


Source URL:
http://www.deccanchronicle.com/tabloids/married-men-more-prone-suicide-study-634



இந்த செய்தியோடு சேர்த்து பின்வரும் செய்தியையும் சேர்த்துப் படியுங்கள் சாதாரண மனிதன் முதல் பெருந்தலைவர் வரை அனைவருக்கும் இந்த நிலைதான் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களுக்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் சுற்றியிருக்கும் கூட்டம் எப்படி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கொல்கிறார்கள் என்று தெரியும்.

தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..!

நன்றி: உண்மைத்தமிழன் வலைத்தளம்

ராயப்பேட்டை மார்ச்சுவரியில் தோழரின் உடலைப் பார்த்தவுடன் தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று தோழரின் உடன் பிறந்த சகோதரிகளும், மனைவியும் ஆளுக்கொரு பக்கமாகப் போர்க்கொடி தூக்கியதில் இருந்தே அத்தோழரின் குடும்பத்துப் பிரச்சினை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பது புரிகிறது.

கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது இந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த அளவுக்கு வேலைவெட்டியில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது நிச்சயம் குடும்பத் தகராறுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது பொதுவில் வந்திருக்க வேண்டியதில்லை. புகார் கொடுத்தவர் கட்சியைச் சேர்ந்த அவருடைய மனைவியாகவே இருந்தாலும் அதனை குடும்பப் பிரச்சினையாகக் கருதி நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்திருந்தால் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் எழவுக்கான செலவு ஏற்பட்டுத் தொலைந்திருக்காது. அவர்களுக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் நிற்க ஒரு மக்கள் தொண்டரும் கிடைத்திருப்பார்.

கட்சியில் பல மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்புதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பல பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துக் கொண்டிருந்த கட்சியின் பெண்ணியவாதிகள், தோழரின் உடல் மீட்கப்பட்டவுடன் அப்படியே அமைதியானார்கள். கட்சித் தலைவர்கள் கட்சியின் நியாயத்தை சொல்வதை நிறுத்திவிட்டு தோழரின் அருமை, பெருமைகளை பறை சாற்றத் துவங்கிவிட்டார்கள். தனது கணவரான தோழர் வரதராசன் மீது கட்சியில் புகார் மனு அளித்திருந்த அவரின் துணைவியாரே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்தான் தோழர் வரதராசன் இந்த முடிவுக்குச் சென்றதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.





Friday, February 26, 2010

ஐயோ பாவம் நீதி தேவதை



ஆந்திராவில், நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். கர்னூலை சேர்ந்தவர் ராதாராணி. இவர், நான்காவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்தக் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் சண்முகம்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கோர்ட்டுக்கு ராதாராணி வந்தார். அப்போது, தனது செருப்பை கழற்றாமல் கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார். இதை கவனித்த நீதிபதி சண்முகம், செருப்புக் காலுடன் கோர்ட்டுக்கு வருவதற்கு பதிலாக, செருப்பை தலையில் சுமந்தபடியே வரலாமே என, கமென்ட் அடித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராதாராணி, தனது செருப்பைக் கழற்றி நீதிபதி சண்முகத்தை நோக்கி வீசினார். அதிஷ்டவசமாக, செருப்பு அவர் மீது படாமல் சென்றது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நீதிபதி சண்முகம், விசாரணையை ஒத்திவைத்தார். அத்துடன், ராதாராணியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில், ராதாராணியை போலீசார் கைது செய்தனர். ராதா ராணியை கடந்த ஏழு மாதங்களாக நீதிபதி சண்முகம் பல்வேறு வகைகளிலும் அவமானப்படுத்தி வந்ததுடன், மன அளவிலும் தனக்கு தொந்தரவுகளை செய்து வந்ததாக நிருபர்களிடம் பேசிய ராதாராணி கூறினார்.

===================================================
இளைஞர்களே ஜாக்கிரதை! இதுபோன்ற நீதிமன்றங்கள் தான் உங்கள் மீது போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பதிலாக பொய் வழக்குகளில் சிக்காமல் இருப்பது தானே நல்லது. அதனால் அப்படி பொய்வழக்குகளில் சிக்காமல் இருக்க வேண்டுமானால் உங்களின் திருமண விஷயத்தில் நீங்கள் ஜாக்கிரதையாக ஒரு முடிவெடுக்கவேண்டும். தகனமேடையா அல்லது நல்வாழ்க்கையா என்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.




Thursday, February 25, 2010

மகளிர் சங்கங்களைப் போற்றுவோம்!





மகளிர் சங்கங்களைப் போற்றுவோம்!

கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். சங்கத்தலைவிகளின் சேவையைப் போற்றி மகிழுங்கள்.




Tuesday, February 23, 2010

இந்திய ஆணின் உயிரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?



இந்திய ஆணின் உயிரின் மதிப்பு எவ்வளவு என்று தெரிந்துகொள்ள கீழுள்ள செய்தியைப்படித்த பிறகு அதனைத் தொடர்ந்து வரும் வீடியோவையும் செய்தியையும் பாருங்கள். விடை தெரியும்.


காதலனை கண்டுபிடிக்கக் கோரி உண்ணாவிரத முயற்சி- அதிகாரிகள் சமரசம்
தினமலர் பிப்ரவரி 23,2010

பொள்ளாச்சி : காதலித்து ஏமாற்றிய காதலனை, தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன் இளம்பெண் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பொன்மலையூரை சேர்ந்தவர் அனிதா (22); அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதும், சசிகுமார் தலைமறைவாகியதாக தெரிகிறது. காதலனை கண்டுபிடித்து, திருமணம் செய்து வைக்கும்படி, அனிதா, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார், காதலனை கண்டுபிடிக்காததால், பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களுடன் சப்-கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி அமர்ந்தார். டி.எஸ்.பி., ராஜன், அனிதாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: தலைமறைவாகவுள்ள சசிகுமாரை தேடும் முயற்சி நடந்து வருகிறது. அதற்குள், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, கண்மூடித்தனமாக கூறக்கூடாது. இந்த பிரச்னையால் சசிகுமாரின் தந்தை, பூச்சி மருந்து குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் சீரானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். சசிகுமாரை கண்டுபிடித்ததும், சேர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜன் கூறினார். போராட்டத்தை கைவிட்ட அனிதா, ஆர்.டி.ஓ., அன்பழகனை சந்தித்தார்.

அவரிடம் அனிதா கூறியதாவது: சசிகுமாரும், நானும் நான்காண்டுகளாக காதலித்து வந்தோம். என்னிடம், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினார். திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதும், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அடையாளம் தெரியாத நபர்கள் வீடு தேடி வந்து, "புகாரை வாபஸ் பெற வேண்டும்; இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டுகின்றனர். போலீசார் இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காதலனை மீட்டு, எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனிதா கூறினார். ஆர்.டி.ஓ., உடனடியாக, அனிதாவுடன் இரண்டு போலீசாரை பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தார்.

மேலுள்ள செய்தியைப் படித்தவுடன் இந்த வீடியோவையும் பார்த்து விடுங்கள். ஒரு ஆணை ஒரு பெண் காதலித்து ஏமாற்றினால் நாட்டில் என்ன நடக்கிறது என்று காட்டியிருக்கிறார்கள்.




படம் : தேவதையைக் கண்டேன்
.


இதுபோன்று நீதிகிடைக்காத பல ஆண்கள் இப்போது அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று புள்ளி விபரம் சொல்கிறது. காதல் தோல்வியால் அல்ல, மனைவியர் செய்யும் கொடுமை, மனைவியர் போடும் பொய் வரதட்சணை வழக்குகள் போன்றவைதான் காரணம்.

சட்டத்தால் புறக்கணிக்கப்பட்டு நீதி கிடைக்காமல் உயிரைவிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேலுள்ள வீடியோவில் சொல்லப்பட்டதுபோல் இந்த சமுதாயத்திற்கு ஆணின் உயிர் என்பது ஒரு அற்பத்தனமான பொருளாகத்தான் மாறிவிட்டது. அதனால் திருமணத்தின் மூலம் ஏற்படும் இன்னல்களுக்கு யாரும் உங்களுக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்கள். குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கினால் கடவுளால் கூட உங்களைக் காப்பாற்ற முடியாது.


(படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் பாருங்கள்)
dnaindia.com 2/22/2010



இது நம்ம பூமி!

இந்த செய்தியைப் பற்றி என்ன சொல்வது? மனைவி ஒரு பொய் வரதட்சணைப் புகார் கொடுத்தால் கணவன் கைது செய்யப்படுவான். மனைவி முறையற்ற கள்ளக்காதல் கொண்டு அதில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதிலும் கள்ளக்காதலன் கைதுசெய்யப்படுவான். அடிப்படைக்காரணம் “ஆண்” என்றால் எப்போதும் குற்றவாளி!

திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலன் கைது

தினமலர் பிப்ரவரி 23,2010

நாகப்பட்டினம் : நாகை அருகே திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். நாகை அடுத்த வங்காரமாவடியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி ராணி(20). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரும், பழையனூர் எலக்ட்ரீஷியன் பாலு(25) என்பவரும் நெருங்கி பழகினர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராணி வற்புறுத்தியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னை பாலு மானபங்கப்படுத்தியதாக, போலீசில் ராணி புகார் அளித்தார். கீவளூர் போலீசார் பாலுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Sunday, February 21, 2010

இளைஞர்களுக்கு "சாந்தி" கிடைக்குமா?

படித்த மேல்தட்டு வர்க்கப் பெண்கள் அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு உதாரணம்.

மேலும் பெரியார் வழியில் புரட்சித் திருமணம் செய்ய விரும்பும் ஆண்களின் கதை என்னவாகும் என்பதற்கும் இது ஒரு உதாரணமாக இருக்கும். பெரியார் சொன்னதெல்லாம் நல்ல விஷயங்கள். ஆனால் அவற்றை செயல்படுத்தும் அளவிற்கு போதிய புத்திசாலித்தனமும், திறமையும் இந்தக்காலத்து இளைஞர்களுக்குக் கிடையாது. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற ஆண்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் மிகவும் புத்திசாலிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதனால் கலப்புத்திருமணம் செய்கிறேன், வரதட்சணை வாங்காமல் தான் திருமணம் செய்வேன், கணவனைப் பிரிந்த பெண்ணிற்கு மறுவாழ்க்கை தருகிறேன் என்பது போன்ற விஷப் புரட்சிகளில் இறங்கி வாழ்க்கையை தொலைத்துவிடாமல் புத்திசாலித்தனமாக உங்களது திருமண முடிவுகளை எடுங்கள்!

இனி ஜுனியர் விகடனில் வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்து புரட்சித்திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற தெளிவினைப் பெறுங்கள்.

(கட்டுரையின் சில முக்கிய பகுதிகள் மட்டும் தரப்பட்டிருக்கிறது)


காக்கிவாடன் பட்டி ஜெய லட்சுமி கலக்கியதெல்லாம் போலீஸ் துறைக்குள் என்றால்... அதே ரூட்டில் தமிழகத்தையே அதிர வைத்திருக்கும் சாந்தியின் விளையாட்டெல் லாம் டாக்டர்களிடம்! தீராத விளையாட்டுப் பெண்ணான இவரே ஒரு டாக்டர் என்பது கூடுதல் 'சிறப்பு'!

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த பிரபல டாக்டரின் மகள்தான் இந்த சாந்தி. சுண்டி இழுக்கும் அழகும், பிரமிக்க வைக்கும் அறிவும் சிறு வயதிலே அவரிடம் கொட்டிக் கிடந்தது. மகளை ரொம்ப செல்லமாக வளர்த்த அந்த தந்தை, சாந்தியை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தார். அங்கே மருத்துவ மாணவர்களின் கனவுக்கன்னியாக மாறி தூக்கத்தைக் கெடுத்தார் சாந்தி. நவீன கலாசார பழக்கவழக்கங்களும் அவரைப் பிடித்து அலைக்கழித்தது. படிப்பு முடித்து 21 வருடங்கள் ஆனபிறகும் தன்னை மாற்றிக் கொள்ளாமல், தற்போது 44 வயதானபோதும் சாந்தியின் தீராத தேடல், அடுத்தடுத்து ஐந்து பேரை மணந்து குப்புறக் கவிழ்த்த 'சாதனை'யாளராக இப்போது அவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது!

டாக்டர் சாந்தி மீது கும்பகோணம் போலீஸாரிடம் புகார் அளித்த பெங்களூரு வின்சென்ட் குளோரிதாஸ் என்பவரை சந்தித் தோம். ''என் சொந்த ஊர் பெங்களூரு. என் பெற்றோர் அங்கேதான் இருக்கிறார்கள். 12 வருஷம் மலேசியாவில் வேலை பார்த்தபோது அங்கே என்னுடன் வேலைபார்த்த ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணின் சொந்த ஊர் கும்பகோணம். அவளது பெற்றோர் சம்மதத்துடன் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டேன். இருவரும் பெங்களூருவில் வசித்தோம். மனைவி கர்ப்பமானதால், அவளை கும்பகோணத்தில் விட்டுவிட்டு, நானும் அங்கேயே ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கேதான் கண் டாக்டர் சாந்தியைப் பார்த்தேன். முதல் சந்திப்பிலேயே என்னை அளவெடுத்தது போல பார்த்து, என் முழு விவரத்தையும் கேட்டாள். பிறகு 'நீங்கள் ரொம்ப அழகா, கம்பீரமா இருக்கீங்க' என்றவள், என் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டாள்.

திடீரென்று ஒருநாள் இரவு 11 மணிக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு வரச்சொன்னாள். 'என் மனைவியுடன் இருக்கிறேன்' என எவ்வளவோ மறுத்தும், 'நீ வராட்டி, தற்கொலை செய்துப்பேன்' என்று மிரட்டினாள். அவசரமாகச் சென்றேன். போகும் வழியிலேயே அடுத்த போன். ஒரு தனியார் ஹோட்டல் பெயர் சொல்லி, 'வோட்கா பாட்டில் ஒன்று வாங்கிக்கொண்டு அங்கே வா' என்றாள். நான் பாட்டிலுடன் சென்றதும், ஏதேதோ சொல்லி செக்ஸ§க்கு உடன்பட வைத்தாள். வோட்காவை குடிக்கக்குடிக்க அவளுக்கு வெறியேறியது. அவளுக்கு சமமாக என்னையும் குடிக்க வைத்தாள். இப்படி ஆரம்பித்த எங்கள் உறவு, ஒருகட்டத்தில் இன்னும் நெருக்கமானது. அவளது காரில் வேளாங்கண்ணிக்கு கூட்டிச் சென்றவள், அங்கே வைத்து எனக்கு மோதிரம் மாட்டினாள்.

'வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டுட்டேன்! இனி ஆதரவு நீதான்...' என உருக்கமாகப் பேசினாள். ஒருகட்டத்தில் 'இருவரும் வெளியூர் போயிடலாம்' என்று சொல்லி, என் மனைவியின் நகைகள், வீட்டிலிருந்த பணம் எல்லாவற்றையும் எடுத்து வரச்சொல்ல... இருவரும் வேலூருக்குப் போய்விட்டோம். நான் வீட்டில் டெல்லிக்கு வேலைக்கு போவதாகச் சொல்லிவிட்டேன்.

சாந்தி, வேலூரில் கண் மருத்துவமனையில் டாக்டராக சேர்ந்தாள். அங்கேயே தனி வீடு எடுத்து தங்கினோம். அங்கே தங்கியபிறகுதான் அவளது உண்மை சொரூபமே தெரிந்தது. என்னிடமிருந்த நகை, பணத்தை வாங்கிக் கொண்டவள்... 'பெங்களூரு சொத்தில் உன் பங்கை வாங்கி வா. உன் வெளிநாட்டு உறவினர்கள் மூலமாக அந்த நகை வாங்கி வரச் சொல், இந்தப் பொருளை வாங்கி வரச்சொல்' என்றெல்லாம் டிமாண்ட்களை வைத்தாள். ஓரளவு செய்தும் கொடுத்தேன். ஆனாலும் அவள் ஓயவில்லை.

ஒருகட்டத்தில் என்னை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். இரவிலும்கூட என்னை பூட்டி வைத்துவிட்டு, தன்னை அலங்கரித்துக்கொண்டு மோகினிப் பிசாசு மாதிரி வெளியே போவாள். என் மொபைல் போனில், ஒரு வெளி மாநில சிம் போட்டு வாரா வாரம் என் மனைவிடம் 'நன்றாக இருக்கிறேன்' என்று பேசச் சொல்வாள். வீட்டில் எல்லா வேலைகளையும் நான்தான் செய்யவேண்டும்.

அப்படியும் காலப்போக்கில் என்னை அவளுக்குப் பிடிக்காமல் போக... என்னை ஆள் வைத்து அடித்து, காரில் தூக்கிவந்து கும்பகோணத்தில் வீசிவிட்டுப் போய்விட்டாள். இங்கே வந்து, அவளது பழைய தொடர்புகளை விசாரித்தபோதுதான், அவளின் முன்னாள் கணவர்களின் பரிதாபக் கதையெல்லாம் தெரிந்து அதிர்ந்தேன்! எங்களைப்போல அவளிடம் இன்னொரு ஆள் ஏமாந்து அடிபடக்கூடாது என்று முடிவெடுத்துதான் போலீஸில் புகார் கொடுத்தேன்...'' என்று வின்சென்ட் சொல்லி முடித்தபோது, ஏதோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஏடாகூட ஃபாரின் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது நமக்கு.

சாந்தி பற்றி விஷயம் அறிந்தவர்கள், ''சாந்தியின் இல்லற வாழ்க்கை வரலாற்றில் முதன் முறையாக இடம் பிடித்தவர் மலேசியாவைச் சேர்ந்த குணசேகரன். 1984 முதல் 1989-ம் ஆண்டு வரை தமிழகம் வந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். அவரது வகுப்புத் தோழியாக சாந்தி! படிக்கிறோம் என்ற போர்வையில், கட்டில் போர்வைக்குள் வாழ்க்கைப் பாடம் படித்தார்கள். படிப்பு முடிந்து பிரிந்தாலும், காதல் தணியாமல், 1992-ல் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இரண்டு வருடத்தில் இல்லற பந்தம் முடிந்து, 1994-ல் கோர்ட் வம்புவழக்கென்று அலைந்த குணசேகரன், ஊரைவிட்டு மலேசியாவுக்கே போய்விட்டார். அவரின் அடையாளமாக மகன் மனோஜ்சரண் பிறந்தான். அவன் தற்போது திருச்சியில் ஒரு பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கிற அளவு வளர்ந்துவிட்டான்!

குணசேகரனை பிரிந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு டாக்டர் சுபாஷ் சந்திரபோஸை வளைத்தார் சாந்தி. இவரும்கூட சாந்தியோடு கல்லூரியில் படித்தவர்தான். மனைவி இல்லாமல் இருந்த அவர், சாந்தியுடன் முறைப்படி திருச்சி திருமண பதிவாளர் முன்பு 2001-ல் திருமணம் செய்துகொண்டார். 5 வருடம் வரை இந்த உறவை நீடித்த சாந்தி, அதன்பிறகு அவரையும் விரட்டினார்!'' என்றவர்கள், சுபாஷ் சந்திரபோஸை அறிமுகப்படுத்தினார்கள். அவர் நம்மிடம் சோகமாகத் தொடர்ந்தார்...

''பெண் சிலந்தி போலத்தான் சாந்தி! சிலந்தியாவது தனது தேவை முடிந்ததும் ஆண் சிலந்தியைக் கொன்றுவிடும். ஆனால், இவள் சிலந்தி தன் இரையை அலைக்கழிப்பதுபோல் ஓடவிட்டு, துடிக்கவிட்டு ரசித்து நடைபிணமாக்கி விடுவாள். நான் பெரியாரின் தொண்டனாக இருந்ததால் 'கணவனைப் பிரிந்தவளாக இருந்தாலும் பரவாயில்லை' என்று புரட்சிகர சிந்தனையோடு அவளை திருமணம் செய்தேன். அதற்கு நான் கொடுத்த விலை கொஞ்சமில்லை. 'வரதட்சணைக் கொடுமை வழக்கில் உள்ளே தள்ளிடுவேன்...' என்று மிரட்டினாள். அவள் எனக்கு தந்த மற்ற பல கொடுமைகளை அப்பட்டமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவற்றை இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது!'' என்றார் சுபாஷ் சந்திரபோஸ்.

சுபாஷ் சந்திரபோஸின் துணையை 2005-ல் கைவிட்ட சாந்தி, அவரிடமிருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் தனக்கு துணையாக நின்ற, (இம்முறையும்!) தன்னுடன் கூடப் படித்த கும்பகோணம் டாக்டர் பாலமுருகனை வளைத்தாராம். தன் மனைவியைப் பிரிந்து தனித்து வாழ்ந்த பாலமுருகனோடு ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்தார். 2006 முதல் 2008 வரை தொடர்ந்தது இந்த பந்தம்! ஒருகட்டத்தில் இருவருமே ஒருவர்மேல் ஒருவர் மாறி மாறி போலீஸில் புகார் கொடுத்து, பிரிந்தார்கள்.

பாலமுருகனையும் நாம் சந்தித்தோம். ''நிராதரவா இருக்காளேன்னு ஆதரவு கொடுக்கப் போன என்னை, கால ஓட்டத்தில் எவ்வளவோ கேவலப்படுத்தினாள். நான் கஞ்சா அடிப்பதாகவும், செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதகாவும் போலீஸில் புகார் கொடுத்து, என் தொழிலையே நாசமாக்கி, நடுத்தெருவில் நிறுத்தி விட்டாள். இப்போதாவது என்மீது எந்தத் தவறுமில்லை என்று ஊர் புரிந்துகொள்ளட்டும்!'' என்று மூச்சுவிட்டார் பாலமுருகன்.

பாலமுருகன் மேல் சாந்தி புகார் கொடுப்பதற்கு, உள்ளூர் பிரமுகர்கள் சிலர் உதவினார்களாம். அதற்கு கைம்மாறாக, தான் இருந்த மருத்துவமனையிலிருந்து விலகி, அப்படி உதவிய ஒருவரின் மருத்துவமனையில் கண் மருத்துவராக வேலைக்கு சேர்ந்தாராம் சாந்தி. அங்குதான், கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் பார்த்த வின்சென்ட் குளோரிதாஸ் பழக்கம். இந்த பழக்கம் தொடங்கிய அதேசமயம் சாந்தியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார், பெங்களூருவை சேர்ந்த ஆனி என்பவர். அவர் கும்பகோணத்துக்குக்கு வந்தும், சாந்தி பெங்களூரு சென்றும் அடிக்கடி 'பழகி' இருக்கிறார்கள். குறுகிய காலத்திலேயே ஆனி, சாந்தியை முழுதாக அறிந்துகொண்டு, உறவைத் துண்டித்துத் தப்பிவிட்டாராம்.

இப்படியாக சிக்கிப் பிரிந்த இந்த ஐவரைத் தவிர, கும்பகோணத்தில் சாந்தியோடு நெருக்கம் காட்டியதாக மற்றும் சிலரிடமும் (யப்பா!) போலீஸார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் ரூம் போட்டுத்தான் அந்த 'மற்றும் சிலரோடு' உற்சாகமாக இருப்பாராம் இந்தப் பெண் கண் டாக்டர்!

''வேலூரிலும்கூட இந்த லேடிக்கு நட்பு வட்டாரம் விரிவாக உண்டாம். அங்கு பிரபல வி.ஐ.பி. ஒருவரின் மகனிடம் நல்ல பழக்கமாம்!'' என்று போலீஸ்காரர் ஒருத்தர் சொல்ல... சரிந்துவிடாமலிருக்க சுவற்றைப் பிடித்துக் கொண்டோம். கும்பகோணம் டி.எஸ்.பி-யான இளங்கோவனிடம் பேசியபோது, ''வின்சென்ட் குளோரிதாஸ் தந்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில், உண்மை இருப்பது தெரிந்தே சாந்தியைக் கைது செய்திருக்கிறோம்! அவரால் பாதிக்கப்பட்டவர்கள்(?) யாராக இருந்தாலும், எங்களிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.

போகப் போகத் தெரியும்!

பையில காசு கையில தாலி

கீழுள்ள செய்திகளில்அப்பாவிக் கணவர்கள் பொய் வரதட்சணைக்கேசில் சிறையில் அடைக்கப்படாமல் தப்பித்திருப்பதே மிகப்பெரிய அதிசயம்!

தேவையான அளவு கையில் காசு இருந்தால் மட்டும் தாலியை கையில் தொடுங்கள். இல்லையென்றால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

கள்ளக்காதலனுடன் போனில் சல்லாப பேச்சு: பில் தொகையை மனைவியே கட்ட உத்தரவு

தினமலர் ஜனவரி 25,2010

திருவனந்தபுரம்:"வெளிநாட்டில் வசிக்கும் கள்ளக்காதலனுடன் போனில் மணிக்கணக்கில் பேசிய மனைவியே தொலைபேசி கட்டண நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்' என, குடும்ப நலக் கோர்ட் உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (36) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர், வெளிநாட்டில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீலேகா(30) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பினார்.வீட்டுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தொலைபேசி கட்டண நிலுவைத் தொகையாக நான்கு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கட்டவேண்டும் என, நிறுவன கடிதத்தை கண்டார். மேலும், அந்த நிறுவனம் நிலுவைத் தொ கையை உடனடியாக செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அவர் தொலைபேசி நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது தொலைபேசியில் இருந்து எந்தந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளப் பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து அறிந்தார்.அதில் தனது மனைவி வெளிநாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அடிக் கடி தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் யார் எங்கிருக்கிறார் போன்ற விவரங்களையும் அவர் சேகரித்தார்.அதில் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபருடன் தனது மனைவி பேசியதும், அந்த நபர் தனது மனைவியின் கள்ளக்காதலன் என்பதையும் கண்டறிந்து அதற்கான விவரங்களையும் சேகரித்தார். பின் இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள குடும்ப நலக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இ.எம்.முகமது இப்ராகிம், "கள்ளக் காதலனை போனில் அழைத்து சல்லாபத்தில் ஈடுபட்ட மனைவியே தொலைபேசி நிலுவைக் கட்டணத்தை பதினைந்து தினங்களுக்குள் செலுத்தவேண்டும்' என்று உத்தரவிட்டார்.மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த கணவன், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தீயவற்றை கேட்காதே, பார்க்காதே, பேசாதே என்ற போதனைக்கேற்ப பொதுவாக இதுபோன்ற தவறான விஷயங்களைக் காணும் கணவர்களுக்குத் தீய செயல்களைக் கண்டதற்காக (வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு) தண்டனை வழங்கப்படும். மனைவியின் உரிமையில் தலையிட்டு கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கணவரின் குடும்பத்தோடு அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் தீய செயல்களைக் காணாதீர்கள் (கள்ளக்காதல் விஷயங்களை கண்டுகொள்ளாதீர்கள்), தீயவிஷயங்களைச் செவிகொடுத்துக் கேட்காதீர்கள் (கள்ளக்காதல் விஷயங்களில் தலையிடாதீர்கள்), தீயவிஷயங்களைப் பற்றி பேசாதீர்கள் (கள்ளக்காதல் தவறு என்று அறிவுரை சொல்ல முயற்சிக்காதீர்கள்). இவற்றை செய்தால் IPC498A, DV, DP போன்ற பிரிவுகளில் தண்டனை நிச்சயம் கணவருக்குத் தான் கிடைக்கும்!

ஆனால் சிலசமயம் நீதிதேவதையின் கருணையால் சில எதிர்மறையான அதிசயங்களும் நடக்கலாம்! அது அவரவரின்அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

=======================

Married woman can live with her lover, says court


Can a married woman lawfully live with her lover against the will of her husband? The Rajasthan High Court says yes.

In a judgment on Wednesday, the court allowed a married woman, Manju, to live with her lover, Suresh. “It is improper to pass an order to hand over any unwilling married woman to her husband with whom she does not want to stay,” said justices GS Mishra and KC Sharma. The court also said that nobody should consider an adult woman as a consumer product.

=======================


Saturday, February 20, 2010

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!


நெய்வேலி:வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப் படுத்திய இன்ஸ்பெக்டர் மீது, மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரியலூர் மாவட்டம், செந்துறை உடையார்பாளையத்தை சேர்ந்த கோபால் மகன் சிவக்குமார்; தஞ்சை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-5ஐ சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சாந்திக்கும் (32) கடந்த எட்டு ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.இந்நிலையில், சிவக்குமார் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தி தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக, நெய்வேலி மகளிர் போலீசில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


TAMILNADU SUBORDINATE POLICE OFFICERS’ CONDUCT RULES 1964
(G.O.Ms.No. 3638, Home 24th November, 1964)

The amendment hereby made shall come into force with effect from 24th September 2009

DOWRY

No Police Officer shall

(5) (a) (i) give or take or abet the giving or taking of dowry

or


(ii) demand directly or indirectly, from the parents or guardian of a bride or bridegroom, as the case may be,any dowry.

Explanation.—For the purpose of this sub-rule, “dowry” has the same meaning as in the Dowry Prohibition Act, 1961(Central Act 28 of 1961).

(b) Every Police Officer shall, after his marriage or when he celebrates the marriage of his children furnish to the Director General of Police, a declaration that he has not taken any dowry. Where the Police Officer gets married, the declaration shall be signed by the Police Officer, the wife or husband, as the case may be, of the Police Officer and their parents or guardian. Where the son or daughter of the Police Officer gets married, the delcaration shall be signe
by the parties of the marriage and their parents or guardian which shall include the Police Officer also”.


‘Police Officer’ means any member of the Tamil Nadu Police Sub-Ordinate Service or Tamil Nadu Special Police Sub-Ordinate Service whether for the time being on Foreign Service or not (substituted by G.O.Ms.No. 1279, Home, 8th June, 1981).



Friday, February 19, 2010

தகனமேடையிலிருந்து தப்பிய புத்திசாலி இளைஞர்

பிப்ரவரி 19,2010


பொய்வழக்குப்போடும் சதிகாரக் கூட்டத்திலிருந்து தப்பிய இந்த மாவீரருக்கு வாழ்த்துக்கள்! இவரது வாழ்க்கையில் இனி IPC498A, 506, 406, 420, 34, Dowry Prohibition Act sections 3,4,5,6, Domestic Violence Act போன்ற பொய் வழக்குகள் மூலம் ஏற்படும் இன்னல்கள் குறுக்கிடாமல் அவரும் அவரது குடும்பத்தாரும் எந்தவித துன்பமும் இன்றி வளமாக வாழ்வார்கள். இந்த புத்திசாலியான இளைஞரின் வாழ்க்கை வளம்பெற வாழ்த்துக்கள்!!

இந்தியத் திருமணம் என்ற தகனமேடையிலிருந்து தப்பித்த இந்த இளைஞரைப்போல் பல இளைஞர்களும் நன்கு சிந்தித்து தங்களது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளவேண்டும்.

சென்னை : இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்களால் கவரப்பட்ட போலந்து நாட்டு இளம் பெண், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இந்து மத வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், போடியை அடுத்த தேவாரத்தைச் சேர்ந்தவர் மோகன் தாஸ்; ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள், ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் செந்தில் குமார்(30). இவர், இளங்கலை பொறியியல் படிப்பை இந்தியாவிலும், முதுகலை பொறியியல் படிப்பை ஜெர்மனியிலும் முடித்தவர். தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் மென்பொருள் மேம்பாட்டு இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் டாடூஸ் டோப்பியராலா. இவரது கணவர் இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன. டோப்பியராலாவுக்கு மூன்று மகள், ஒரு மகன். இவரது இரண்டாவது மகள் அலெக்சாண்ட்ரா(27). எம்.ஏ., பட்டதாரியான இவர், அந்நாட்டின் நிதித்துறையில், நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

பணியின் போது கிடைக்கும் இடைவெளியில், செந்தில், இன்டர்நெட்டில், சாட் செய்வது வழக்கம். அப்படி செய்யும் போது அலெக்சாண்ட்ராவுக்கும், செந்திலுக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக வளர்ந்தது. செந்திலுடன் பழகியதில், அலெக்சாண்ட்ராவுக்கு இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் தெரியவர அது அவருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. இதைத் தொடர்ந்து திருமணம் செய்தால், இந்து முறைப்படிதான் திருமணம் செய்வது என்று அலெக்சாண்ட்ரா பிடிவாதமாக இருந்துள்ளார். இதை செந்திலும் ஏற்றுக் கொண்டார். இவர்களது விருப்பம், இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. செந்திலின் பெற்றோர் போலந்து சென்று அலெக்சாண்ட்ராவின் வீடு, குடும்பம், சுற்றுப்புறச் சூழல்களை பார்த்துள்ளனர். அவர்களுக்கு பிடித்துப் போகவே, அலெக்சாண்ட்ரா குடும்பத்தினரை தமிழகத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்தனர். அலெக்சாண்ட்ரா குடும்பத்தினருக்கும், தமிழக சூழல் பிடித்து விட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் உறவினர்களுடன் பேசி சென்னையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

செந்திலின் தாய் ஜெகதாம்பாள், மாதா அமிர்தானந்தமயி தேவியின் பக்தையாக இருந்ததால், விருகம்பாக்கம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உள்ள திருமண மண்டபத்திலேயே திருமணம் வைத்துக் கொள்ள விரும்பினார். அதன்படி, நேற்று அந்த மண்டபத்தில், புரோகிதர் மந்திரம் ஓத, மங்கல வாத்தியம் இசைக்க, உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்திருக்க, அக்னி புகை எழும்ப, காலை 8.30 மணிக்கு தேவாங்க செட்டியார் முறைப்படி மணமகள் அலெக்சாண்ட்ரா கழுத்தில், மணமகன் செந்தில் தாலி கட்டினார். மணமக்களை அனைவரும் வாழ்த்தினர். போலந்து நாட்டில் இருந்து வந்திருந்த அலெக்சாண்ட்ராவின் உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டில் பிறந்த பெண், இந்திய கலாசாரத்தால், கவரப்பட்டு இந்திய மருமகளானதை அறிந்த விருகம்பாக்கம் பகுதி மக்கள் அங்கு கூடி ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்.





Thursday, February 18, 2010

நீதித்துறையில் ஊழல் இல்லை! - பகுதி 2

கீழுள்ள செய்திகளுக்கு விளக்கம் தேவையில்லை. நீதித்துறையின் தூண்கள் எப்படி ஊழல் என்னும் கரையான்களால் அரிக்கப்பட்டு சீர்குலைந்திருக்கிறது என்று உங்களால் உறுதிபடுத்திக்கொள்ள முடியும். இந்தக்கூட்டமைப்பு தான் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறது. பாவம் நீதிதேவதை!

அமைச்சர் சொல்கிறார் நீங்கள் நம்பினால் நம்புங்கள்


புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.



புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பு (பார் அசோசியேஷன்), அதன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடுகள் நடத்திருப்பதாக கூறி, இரண்டாயிரம் வக்கீல்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்வதற்காக, வக்கீல்கள் ஒவ்வொருவரும், விண்ணப்பம் வாங்கியது, கட்டணம் செலுத்தியது மற்றும் நேர்காணல்களில் பங்கேற்றது ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பு, புதிதாக சேர்ந்த 2,000 வக்கீல்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பில் நடந்துள்ள கடும் நிதி மற்றும் பிற முறைகேடுகளால், அதன் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் பிற உறுப்பினர்கள், நிர்வாக குழுவை கலைத்து, இடைக்கால நிர்வாக குழு ஒன்றை அமைத்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த இடைக்கால நிர்வாக குழுவில், முன்னாள் தலைவர்களான, கே.கே.வேணுகோபால், பி.பி.ராவ் மற்றும் பி.எச்.பரேக் ஆகியோர் உள்ளனர். இந்த இடைக்கால குழு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து, இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் கூறியதாவது: விண்ணப்பங்களுடன் வழங்கப்படும் பே ஆர்டர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும், முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி மட்டும் 562 பேர் இன்டர்வியூ செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று டிசம்பர் மாதம் 19ம் தேதி, 270 நிமிடங்கள் அதாவது, நான்கரை மணி நேரத்தில், 1,485 உறுப்பினர்கள் இன்டர்வியூ செய்யப்பட்டு, அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி கணக்கிட்டால், ஒரு நிமிடத்தில் நான்கிற்கும் மேற்பட்டோர் இன்டர்வியூ செய்யப்பட்டுள்ளனர். எனவே, செப்டம்பர் மாதம் இன்டர்வியூ செய்யப்பட்ட 562 பேர் மற்றும் டிசம்பர் மாதம் இன்டர்வியூ செய்யப்பட்ட 1,485 பேர் ஆகியோரின் உறுப்பினர்கள் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, February 14, 2010

திருமணம் செய்யாமல் "சந்தோஷத்தை" அனுபவிப்பது எப்படி?

திருமணம் செய்யாமலேயே திருமண வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் ஒரு புதுமுறை ராமரும், கண்ணகியும் வாழ்ந்த நாட்டில் தற்போதுஅறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது! வசதிபடைத்தப் பெண்களின் பேராதரவோடு இது நடப்பதாகத் தெரிகிறது. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள்: செக்(ஸ்)யூரிட்டி பிஸினஸ்! வசதிபடைத்த இளம் பெண்களின் ஆதரவு இருப்பதால் இதுவும் பெண்களின் உரிமைக்கு வழிகோலும் புதுக்கலாச்சாரமாக சட்டத்தால் அங்கீகரிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எதுவும் நடக்கலாம்.

அமைச்சர் சொல்கிறார் நீங்கள் நம்பினால் நம்புங்கள்


புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

=========================

நீதித்துறையில் லஞ்சம் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை என்று அமைச்சர் பெருமைப் படுகிறார். கொஞ்சம் தானே ஊழல் நடக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நீதித்துறை என்ன ரேஷன் கடையா?

அவர் பெருமைப்படும் அந்த கொஞ்சம் என்பதன் அளவு என்ன என்பதை கீழுள்ள இந்த அறிக்கையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த நீதிமன்றங்களில் தான் உங்கள் மீதுபோடப்படும் பொய் வரதட்சணை கேசுகள் கையாளப்படுக்கின்றன. பொய் கேசில் சிக்கினால் உங்களது வாழ்க்கை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க இந்தத் தகவல் உதவியாக இருக்கும்.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV) "

Report from 2005 Report from the Transparency International India

The former Chief Justice of Supreme Court Sam Piroj Bharucha had observed that “up to 20 per cent of judges in India were corrupt.”

Is Judiciary Corrupt?

More than three-fourths (79%) of the respondents, who had been interacting with the judiciary, admitted that corruption was prevalent in the Department. Surprisingly, only 8% of those respondents felt that there was ‘no corruption’ in Judiciary. However, not much difference is seen in perception of corruption in judiciary for states having different strength of judiciary.

Experience of Corruption in Judiciary

While 38% of the respondents had experienced corruption every time they had interacted with judiciary, 53% had experienced it some time or the other. On the other hand, only 5% never experienced corruption.

Modus operandi for Bribing

During the last one year, three-fifths (59%) of respondents had paid money to lawyer, whereas 30% had paid money to court officials, and 14% to middle men to get their work done. There were higher number of respondents claiming to have paid bribe to court officials in states having low judicial strength compared to respondents from states having high judicial strength.

Table 9.10: Money Paid

Judicial Strength Wise
(Figures in per cent)

Money Recipient

High

Medium

Low

Total

Judge

05

06

04

04

Lawyer

55

64

53

59

Court officials

17

26

44

30

Public Prosecutor

17

05

08

08

Middlemen

17

12

16

14


Lawyers, who are supposed to uphold law, have ended being conduit for corruption as if there is no monitoring or initiatives on the part of bodies like bar associations. They could put up notice boards to file complaints or give telephone number for passing on information against corrupt lawyers. There is not a single case of a lawyer being suspended for practice on account of such complaints or any effort made to get such corrupt practices enquired into independently. Although cases about delays and even prevalence of corruption in judiciary have been reported, media has never reported giving specific examples of corruption by lawyers.

இளைஞர்களே இனி கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்து ஒரு பொய் வரதட்சணை வழக்கில் உங்களின் வயதான பெற்றோருடன் சேர்ந்து சிக்கினால் இந்த நீதிமன்றங்களிலிருந்து நீதி பெற்று வருவதற்கு எத்தனை ஆண்டுகள் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? இவையெல்லாவற்றையும் வென்று வரும்போது உங்களுக்கு வாழ்வதற்கு என்ன மிஞ்சியிருக்கும் உங்கள் வாழ்க்கையில்? அதனால் இப்போதே புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பியுங்கள்.

Monday, February 8, 2010

ஆண்களுக்கான சுவையான தகவல்!

இந்தப் படத்திலிருந்து ஒரு சுவையான தகவலும் இருக்கிறது. எப்போதும் பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் ஆண்கள் என்ற ஒரு தவறான மனப்போக்கு இந்த சமுதாயத்தில் ஊறிப்போய் இருக்கிறது. அது போன்ற எண்ணமுயைவர்கள் மனதை தேற்றிக்கொண்டு படத்திற்கு கீழுள்ள தகவலையும் படிக்கவும்.

தினமணி செய்தித்தாளில் வந்துள்ள படமும் அதற்கேற்ப கொடுக்கப்பட்டுள்ள நையாண்டியான விளக்கமும்



இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரப்படி 2007-ம் ஆண்டு பெண்களுக்கெதிரான குற்றங்களில் பெண்களை தவறாக சித்தரித்து குற்றம் புரிந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான மொத்த 1,229 நபர்களில் 911 பேர் பெண்கள். அதாவது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆண்குற்றவாளிகளை விட அதிகமாக 74% பெண்கள் தங்கள் பங்களிப்பை தந்திருக்கிறார்கள். மேலும் இளம்பெண்களை கடத்தும் குற்றத்திலும் பெண்கள் 60.3% பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

The share of female arrestees was highest for cases under 'Indecent Representation
of Women (Prohibition) Act' (74.1%) (911 out of 1,229) followed by ‘Immoral Traffic
(Prevention) Act’ (60.3%) (5,951 out of 9,861) - NCRB Report

THE INDECENT REPRESENTATION OF WOMEN (PROHIBITION) ACT, 1986

(NO. 60 OF 1986)

An Act to prohibit indecent representation of women through advertisements or in publications, writings, paintings, figures or in any other manner and for matters connected therewith or incidental thereto.


அதனால் ஆண்கள் என்றால் எப்போதும் பெண்களை இழிவு செய்பவர்கள், வரதட்சணை கொடுமை செய்பவர்கள் என்ற இழிவான கண்ணோட்டமுடையவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டு பெண்களும் ஆண்களுக்கு இணையாகவோ அல்லது ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு கூட எல்லாவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடுவார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டு சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருப்பதுதான் சரி என்ற மனநிலைக்கு மாறுவதுதான் இந்த சமுதாயத்திற்கு நல்லது.

இந்த தெளிவான மனநிலை இல்லாமல் எப்போதும் பெண்களை அப்பாவிகள் போல சித்தரித்து தவறான சட்டங்களை இயற்றினால் மேலும் பல பெண்கள் குற்றவாளிகளாக மாறும் அபாயம் தான் ஏற்படும். ஏற்கனவே வரதட்சணை சட்டங்கள் பெண்களுக்கு மட்டும் குறிப்பாக மனைவியருக்கு மட்டும் சாதகமாக இயற்றப்பட்டிருப்பதால் பல மனைவியர் கிரிமினல் போலவே மாறி பொய் வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தின் இந்த தவறான அணுகுமுறையால் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்கள் தான். அதனால் இளைஞர்களே, இந்தியாவில் சட்டங்களை நடுநிலையாக மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதன் பின்னணியில் பலவித வியாபார நோக்கங்கள் இருக்கின்றன. ஆனால் உங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவது உங்களால் செய்யக்கூடிய எளிதான செயல். அதனால் யோசித்து முடிவு செய்யுங்கள்!

Thursday, February 4, 2010

ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை!

மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள்

இளைஞர்களே உங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் குழந்தைகள் போராடுகிறார்கள். இந்திய சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் இதுபோன்ற பல குழந்தைகளுக்கும் வயதான தாய் தந்தையருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?




Wednesday, February 3, 2010

இந்தியத் திருமணத்தில் உள்ள ஆபத்து ! - வீடியோ செய்தி

தமிழகத்தின் பிரபலமான செய்தித்தாளான தினமலர் சொல்லும் உண்மை!



இளைஞர்களே இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருப்பது ஒரு சிறு துளி (Tip of the Iceberg). சொல்லப்படாத பல கொடுமைகள் அப்பாவி ஆண்களுக்கெதிராகவும் அவர்களின் குடும்பத்திற்கெதிராகவும் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளை பல ஆண்டுகளாக அரசாங்கம் தான் தவறான சட்டங்கள் என்ற உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது. அதனால் இதுபோன்ற இழி செயல்கள் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று கனவிலும் நினைத்து ஏமாந்து விடாதீர்கள்! இதற்குப் பிறகும் உங்களால் இதை நம்பமுடியவில்லையென்றால் இந்த இணையதளத்திற்குச் சென்று பாருங்கள் ஒரு தனி நாட்டில் வாழ்வதுபோலவே பல அப்பாவிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் --> 498a.org

இதுபோன்ற கொடுமைகளில் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்து கொள்ளுங்கள். அது தான் இதற்கு சரியான தீர்வு. "கனியிருக்கக் காய்களைத் தேர்வுசெய்யாதீர்கள்" என்பது போல வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளும் இனிய வாய்ப்புகள் இருக்கும்போது எதற்குத் தெரிந்தே இந்தியத் திருமணம் என்ற தகனமேடைகளில் சிக்கி சீரழியவேண்டும்? சிந்தியுங்கள்.




இந்த முறை கணவனுக்கு மனைவிக்குப் பதிலாகப் பெண் போலிஸ் - கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும் !!!!!!!

எப்போதும் கணவர்களுக்கு அவர்களது மனைவியரால் மட்டுமே தரப்படும் ஒரு பரிசு இந்த முறை பெண் போலிஸ் தனது கணவரல்லாத வேறு ஒருவருக்கு கொடுக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார்.

என்னவோ ஏதோ என்று பதறிவிடாதீர்கள். பாரம்பரியமாக இந்தியாவில் மனைவியால் கணவரின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கெதிராக பதிவு செய்யப்படும் பொய் வரதட்சணை வழக்கை ஒரு மாறுதலுக்காக இந்த முறை ஒரு பெண் போலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் புகாரில் சொல்லப்படாத கணவரின் குடும்பத்தாரின் மீது பதிவுசெய்யப்போவதாகக் கூறி ஒரு அப்பாவிக் கணவரை மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.

இது தான் அந்த "இந்த முறை கணவனுக்கு மனைவிக்குப் பதிலாகப் பெண் போலிஸ்" கொடுக்க நினைத்த விஷயம். நீங்கள் நினைப்பதுபோல் வேறொன்றுமில்லை!


Pay up or face the dowry act
Mid-Day.com

Lady cop held while taking bribe from family; she had threatened to book them in a false dowry case if they did not meet her demands

There have been many examples of women filing false dowry cases to frame relatives, but this time, a cop threatened to do so. Her threat: pay up or face the act.

A lady police officer of the rank of an Assistant Sub Inspector from the Crime Against Woman Cell of Kamla Market had allegedly threatened a resident of Outer Delhi to book him and his family under Section 498A of the Indian Penal Code (dowry law) if he failed to pay her Rs 10,000.

On Monday, the lady official was caught red-handed in a sting operation conducted by the Anti-Corruption Branch (ACB) of the Delhi government.

According to sources in ACB, Ankur Chaurashia, a resident of Rohini, had visited the agency's office and informed the officials that a woman investigating official named Kaushal, who was looking into a complaint of dowry filed by his wife, had threatened to book his parents and other members of the family in a dowry case if Rs 10,000 was not paid to her.

Acting on the tip-off, on Monday evening, the sleuths of ACB laid a trap at the Kamla Market Crime Against Woman Cell and arrested Kaushal accepting the bribe's first installment of Rs 3,000 from Chaurashia.

"We have registered a case against her. She was misusing her position as an investigating official in the case.

She was produced in the court on Tuesday after which she has been sent to judicial custody for 14 days," said an ACB official, wishing anonymity.

Saving her

Section 498A was inserted into the Indian Penal Code in 1983. It reads:
'Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.' In practice, cruelty is taken to include the demanding of dowry. This section is non-bailable, non-compoundable (ie it cannot be privately resolved between the parties concerned) and cognizable (ie the police can arrest the accused without investigation or warrants) on a report from a woman or close relative.

ஆனால் பாவம் இந்த போலிஸுக்கு அதிர்ஷ்டம் இல்லை. கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.

இளைஞர்களே இதைப் படித்துவிட்டு உங்களுக்கு ஏதும் இதுபோல நடக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குச் சென்றுவிட்டால் எல்லா இந்திய ஆண்களுக்கும் ஒரு நாள் ஏதாவது ஒரு விதத்தில் இந்த IPC498A பரிசு கொடுக்கப்பட்டு விடும்.

அதனால் தான் இதை "Indian Penis Code" ((IPC) என்ற ஒரு சிறப்புப் பெயருடன் இந்தத் "தொழிலில்" இருப்பவர்கள் செல்லமாகவும் சந்தோஷமாகவும் அழைக்கிறார்கள். அதனால் கண்டிப்பாக இந்திய ஆண்களுக்கு இந்த 498A குறியீடு இயற்கையாகவே பிறவியிலேயே உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் திருமணம் செய்தால் இந்த விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.

அதனால் திருமணம் செய்யும்போது யோசித்து ஒரு நல்ல முடிவு செய்து இது போன்ற ஆபத்துகள் இல்லாத நாட்டில் திருமணம் செய்வது நல்லது. இல்லையென்றால் மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போல யார் வேண்டுமானாலும் உங்களின் திருமணத்திற்காக உங்களின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் "திருமணப்" பரிசு கொடுக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். ஜாக்கிரதை!!

Tuesday, February 2, 2010

தகனமேடையிலிருந்து மீண்டெழுந்த நால்வர்!

இந்தியத் திருமணம் என்ற தகமேடைக்குச் சென்ற ஒரு ஆணின் தவறால் அவரது குடும்பத்திலுள்ள மற்ற நபர்களும் பொய்வழக்கு என்னும் தீயில் அரசாங்கத்தால் தள்ளப்பட்டு அதிர்ஷ்டவசமாக இன்னும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கும் நீதிதேவதையின் அற்புத சக்தியால் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறார்கள். ஆம் நீதிதேவதையைக் கூட இன்னும் உயிரோடு விட்டுவைத்திருப்பதே அதிசயம் தான்!

இது போன்ற நற்செய்திகளை செய்தித்தாள்களில் எப்போதும் பெரிதாகப் போட மாட்டார்கள். ஆனால் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் போது மட்டும் கொட்டை எழுத்துக்களில் வரதட்சணைக் கொடுமை- இளம்பெண் பாதிப்பு என்று கொஞ்சமும் கூசாமல் செய்தி வெளியிடுவார்கள். இது அவர்களின் தவறு அல்ல. சமூகத்தின் தவறு.

செய்தியைப் படிக்க படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.


இந்த நால்வரும் தகனமேடையிலிருந்து மீண்டெழுவதற்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! இளைஞர்களே இந்த செய்தியிலிருந்தாவது உண்மையைப் புரிந்துகொண்டு உங்கள் திருமணத்தை எந்த நாட்டில் செய்துகொள்வது என்று ஒரு தெளிவான முடிவை எடுத்துக்கொள்ளுங்கள்.