பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, February 18, 2010

நீதித்துறையில் ஊழல் இல்லை! - பகுதி 2

கீழுள்ள செய்திகளுக்கு விளக்கம் தேவையில்லை. நீதித்துறையின் தூண்கள் எப்படி ஊழல் என்னும் கரையான்களால் அரிக்கப்பட்டு சீர்குலைந்திருக்கிறது என்று உங்களால் உறுதிபடுத்திக்கொள்ள முடியும். இந்தக்கூட்டமைப்பு தான் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறது. பாவம் நீதிதேவதை!

அமைச்சர் சொல்கிறார் நீங்கள் நம்பினால் நம்புங்கள்


புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.



புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பு (பார் அசோசியேஷன்), அதன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடுகள் நடத்திருப்பதாக கூறி, இரண்டாயிரம் வக்கீல்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்வதற்காக, வக்கீல்கள் ஒவ்வொருவரும், விண்ணப்பம் வாங்கியது, கட்டணம் செலுத்தியது மற்றும் நேர்காணல்களில் பங்கேற்றது ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பு, புதிதாக சேர்ந்த 2,000 வக்கீல்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் கூட்டமைப்பில் நடந்துள்ள கடும் நிதி மற்றும் பிற முறைகேடுகளால், அதன் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் பிற உறுப்பினர்கள், நிர்வாக குழுவை கலைத்து, இடைக்கால நிர்வாக குழு ஒன்றை அமைத்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த இடைக்கால நிர்வாக குழுவில், முன்னாள் தலைவர்களான, கே.கே.வேணுகோபால், பி.பி.ராவ் மற்றும் பி.எச்.பரேக் ஆகியோர் உள்ளனர். இந்த இடைக்கால குழு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து, இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் கூறியதாவது: விண்ணப்பங்களுடன் வழங்கப்படும் பே ஆர்டர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும், முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி மட்டும் 562 பேர் இன்டர்வியூ செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று டிசம்பர் மாதம் 19ம் தேதி, 270 நிமிடங்கள் அதாவது, நான்கரை மணி நேரத்தில், 1,485 உறுப்பினர்கள் இன்டர்வியூ செய்யப்பட்டு, அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி கணக்கிட்டால், ஒரு நிமிடத்தில் நான்கிற்கும் மேற்பட்டோர் இன்டர்வியூ செய்யப்பட்டுள்ளனர். எனவே, செப்டம்பர் மாதம் இன்டர்வியூ செய்யப்பட்ட 562 பேர் மற்றும் டிசம்பர் மாதம் இன்டர்வியூ செய்யப்பட்ட 1,485 பேர் ஆகியோரின் உறுப்பினர்கள் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: