பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, February 27, 2012

இந்திய இளைஞர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி!

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் தலைக்கு மேல் “பொய் வரதட்சணை வழக்கு” என்ற கத்தி “அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை” என்ற நைந்துபோன கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. இந்த விஷயம் தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்து IPC498A என்ற பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி தங்களது மானத்தையும், வாழ்க்கையையும் இழந்தவர்கள் பல பேர். இந்த அபாயகரமான சூழலைப் பற்றி விளக்குவதற்கு ஒரு திரைப்படமே தயாராகிவிட்டது என்றால் இந்த பொய் வழக்கு அராஜகம் எந்த அளவிற்கு சமுதாயத்தை பாதித்திருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.இதுபோன்ற ஆபத்தான இந்திய திருமண சூழலில் சமீப காலமாக தமிழக இளைஞர்கள் புத்திசாலித்தனமாக வேறு நாடுகளில் திருமணம் செய்துகொண்டு தங்களது வாழ்வையும், மானத்தையும், தங்களது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று கடலூரைச் சேர்ந்த இளைஞர் தனது வாழ்க்கைத்துணையை பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!!

கடலூர் : கடலூரைச் சேர்ந்த வாலிபர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து, இந்து முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் - அஞ்சுகமணி தம்பதியின் இளைய மகன் அன்புச் செல்வன். கடந்த 8 ஆண்டுகளாக, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் தன் நண்பர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது, அங்குள்ள பிலிப்பைன்ஸ் நேஷனல் பாங்க்கில் கிளை மேலாளராக பணியாற்றிய எட்னா கிறிஷ்டோபலுடன் பழக்கம் ஏற்பட்டது. அது, நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து, இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு அன்புச்செல்வனின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்தனர்.

எட்னா கிறிஷ்டோபலின் பெற்றோர் இறந்து விட்டதால், அவரை வளர்த்த சித்தி பஷன்சியா கிறிஷ்டோபல் மறுத்து விட்டார். அதனால், அன்புச்செல்வன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்று எட்னா கிறிஷ்டோபலின் சித்தியிடம் சம்மதம் பெற்றார். அதைத் தொடர்ந்து, காதலி எட்னா கிறிஷ்டோபல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கடந்த வாரம், தன் சொந்த கிராமத்திற்கு வந்த அன்புச்செல்வன், தன் காதலியின் பெயரை அருள்செல்வி என பெயர் மாற்றம் செய்தார்.

இந்த காதல் ஜோடிக்கு நேற்று காலை கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. மணமகள் அருள்செல்வி என்ற எட்னா கிறிஷ்டோபல் இந்து மத முறைப்படி பட்டுப்புடவை உடுத்தி மண மேடைக்கு வந்தார். அவருக்கு அன்புச்செல்வன், மங்கள இசை முழங்க தாலி கட்டி, தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அருள்செல்வி நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டாக, உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். அன்புச்செல்வனை காதலிக்கத் துவங்கியதில் இருந்து, நான் இந்திய கலாசாரத்தை நேசிக்கத் துவங்கினேன். தமிழ் பேச கற்று வருகிறேன். என்னை வளர்த்த சித்தி மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருமணத்திற்காக என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். நாங்கள் இருவரும் சில ஆண்டுகள் சிங்கப்பூரில் வசிக்க உள்ளோம். அதன் பிறகு, அன்புச்செல்வனின் சொந்த கிராமமான மூலக்குப்பத்தில் நிரந்தரமாக தங்க உள்ளோம்' என்றார்.There was an error in this gadget