பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, October 29, 2012

தமிழ் நாட்டிற்குத் தேவைப்படாத இந்து திருமணச் சட்டம்

சமீப காலமாக செய்தித்தாள்களில் வரும் திருமணச் செய்திகளை பார்க்கும்போது தமிழ் நாட்டில் நடக்கும் இந்துத் திருமணங்களை நெறிப்படுத்த இந்து திருமணச் சட்டம் தேவையா? என்று எண்ணத் தோன்றுகிறது.

திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் ஓட்டம்,  திருமணம் முடிந்து முதலிரவில் மணமகள் ஓட்டம் என்ற செய்திகள்தான் இதுவரை வந்துகொண்டிருந்தன.  இப்போது சற்று முன்னேற்றம் அடைந்து மணமேடையில் தாலி கட்டியவுடனே தாலியை கழற்றி வீசி எறிந்துவிட்டு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகும் மணமகள்கள் பற்றிய செய்திகள் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறது.

அதுபோல வந்துள்ள இன்றைய செய்தி.
செய்தி - 1

பெரம்பலூர்:சினிமாவை மிஞ்சும் வகையில், தாலிக்கட்டிய அடுத்த சில விநாடிகளில், தாலியை கழற்றி விட்டு, காதலுடன் செல்வதாக, மணப்பெண் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப், 24. இவர், பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டு ஆண்டாக படித்து வந்தார். இவரும், இதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகள் சகுந்தா, 19, என்பவரும் காதலித்துள்ளனர்.

இந்நிலையில், சகுந்தலாவுக்கும், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் செல்லதுரை, 25, என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, பெரம்பலூர் பெருமாள் கோவிலில், செல்லதுரைக்கும், சகுந்தலாவுக்கும் திருமணம் நடந்தது.செல்லதுரை, சகுந்தலா கழுத்தில் தாலிக்கட்டிய உடன், மணவறையிலிருந்து எழுந்த சகுந்தலா, செல்லதுரை கட்டிய தாலியை கழற்றிவிட்டு, திருமணத்துக்கு வந்திருந்த காதலன் பிரதீப் கையை பிடித்து கொண்டு, பிரதீபுடன்தான் செல்வேன் என, தெரிவித்தார்.

இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள், சகுந்தலாவின் காதலனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், அங்கு சென்று சமாதானம் செய்தனர். தொடர்ந்து, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இச்சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 செய்தி - 2

கணவனை உதறிவிட்டு காதலனுடன் நடையைக் கட்டிய புதுப்பெண் ..சென்னையில் பரபரப்பு! 

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012 One India

சென்னை: சென்னையில் திருமணமான ஒரு மாதத்தில் கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் புதுப்பெண் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ் (25). இவருக்கும், உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் சங்கீதா புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. இது குறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சங்கீதா தேடிவந்தனர். அப்போது சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் மதுரையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

காதலர்கள் போலீசில் சரண்

இதனிடையே சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று சரண் அடைந்தார். அப்போது சங்கீதா, நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று போலீசில் தெரிவித்தார்.

மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் கூறினார். இதனையடுத்து சதீஸ் கட்டிய தாலியையும் கழற்றிக் கொடுத்துவிட்டார்.

எங்கிருந்தாலும் வாழ்க

சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார். மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

=======
இதுபோன்ற தாலியை வீசிவிட்டு ஓட்டம் பிடிக்கும் மணமகள்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தவுடன் அங்கு பரந்த மனப்பான்மையுடன் கட்டப் பஞ்சாயத்து செய்து காலையில் தாலி கட்டிய கணவனிடம் எழுதி வாங்கிகொண்டு மணமகளை வேறு ஒரு ஆணுடன் அனுப்பி வைக்கும் சட்ட விரோத செயல்கள் தாராளமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்து திருமண சட்டப்படி இந்து மத முறைப்படி திருமணம் நடந்தால்தான் அதனை திருமணமாக சட்டம் அங்கீகரிக்கிறது.  அதுபோலவே இந்து மத முறைப்படி நடக்கும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தில் கூறியுள்ள வழிமுறைப்படிதான் ரத்து செய்ய முடியும்.  ஆனால் காவல் நிலையங்களில் இந்த சட்டங்களை கண்டுகொள்ளாமால் தாங்களே நீதிபதிகளாக இருந்து இதுபோன்ற திருமணங்களை ரத்து செய்து வருகிறார்கள்.  இப்படி காவல்நிலையத்திலேயே விவாகரத்து கிடைக்கும் என்றால் இந்து திருமண சட்டம் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு?

இவையெல்லாம் எதற்கு என்றால் சட்டப்படி நடக்கவேண்டும் என்று நினைக்கும் அப்பாவிக் கணவன்கள் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை அணுகினால் சட்ட நடைமுறை என்ற பெயரில் அந்தக் கணவர்களை பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைய வைத்து நடைபிணமாக மாற்றுவதற்கு  மட்டுமே என்று ஒரு முறை குடும்ப நீதிமன்றம் பக்கம் சென்று பார்த்தால் புரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சட்டங்களை மிதிப்பவர்களை சட்டமும், சமுதாயம் மதிக்கும்.  சட்டங்களை மதித்து நடப்பவர்களை  சட்ட நடைமுறை என்ற பெயரில் நடை பிணமாக்கி விடுவார்கள்.


Friday, October 26, 2012

பொய் வரதட்சணை வழக்குப் போடும் போலிஸை மிரட்டமுடியுமா?

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்டம்படித்தவர்கள் சிலர் ஒன்று கூடி சட்டமேதையான அம்பேத்கரின் சிலைக்கருகில் குடித்து கூத்தடித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.  அந்தக் கூத்தின்போது அவ்வழியே சென்ற ஒரு மூத்த வழக்கறிஞரை கேலி செய்து, மிரட்டி, அவரது காரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இரு நபர்களை கைது செய்திருக்கிறார்கள்.

அப்படியென்றால்
நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில்பல கோடி செலவு செய்திருக்கிறார்களே!  அந்தப் பணம் என்னவானது?

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்துள்ள ஒரு காவல் அதிகாரி இதுபோல  வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் குடித்து கும்மாளம் அடிப்பது ஒன்றும் புதிதல்ல.  பல முறை இதுபோல நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது.  ஆனால் அதை தட்டிக்கேட்டால் எங்கள் மீது வீண் பழியும், தாக்குதலும் நடத்தப்படும்.  அதனால் அஞ்சி ஒதுங்கி நிற்கிறோம் என்று கூறியுள்ளார்.  அந்த பேட்டியை பின்வரும் செய்தியில் பாருங்கள்.

இந்த செய்தியின் மூலம் என்ன தெரிகிறதென்றால் காவல்துறையே அஞ்சி நடுங்கும் அளவிற்கு சட்டம் படித்தவர்கள் அவ்வளவு மோசமானவர்களா?  சற்று யோசித்து பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ( “வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார்.” )
. அல்லது வழக்கு பதிவு செய்யும் காவல்துறையை சற்று மிரட்டினால் வழக்குப் போட வரும் காவலர்கள்அஞ்சி ஓடிவிடுவார்களா?  அல்லது கையில் சிக்கும் அப்பாவிகள் மீது மட்டும்தான் பொய் (வரதட்சணை) வழக்கு பதிவு செய்ய தைரியம் இருக்கிறதா? (பொய்  வரதட்சணை வழக்குகள் மூலம் அப்பாவிக் குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை)

அப்படியென்றால் பொய் வரதட்சணை வழக்குப் போடும் காவலருக்கு பாடம் கற்பிக்க அந்த காவலரை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் அப்பாவிகள் சற்று மிரட்டினால் போதும்போலிருக்கிறதே!  இப்படி சில  சம்பவங்கள் நடந்தால் பொய் வழக்குப்போடும் காவலர்கள் அப்பாவிக் கணவர்களைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவார்கள்.  இதுதான் பொய் வரதட்சணை வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி.  ஏனென்றால் நீதிமன்றங்களே குடிகார விடுதிகளாக மாறிவரும்போது அங்கே அப்பாவிகளுக்கு நீதி எப்படி கிடைக்கும்?

Drunk lawyer assaults senior on HC campus, held

25th October 2012 The Indian Express

The Esplanade police have arrested a lawyer and a former law student for assaulting a senior advocate on the Madras High Court campus after they were caught drinking on Tuesday.

According to police officials, the court was  closed on Tuesday owing to Ayudha Pooja. Sundararajan, an advocate, had visited his chamber for a religious ceremony in connection with the festival. When he was returning to his car around 4.30 pm after the ceremony, four men who were drinking behind the Ambedkar Statue, stopped him and questioned his identity. When the gang started using abusive words, Sundarrajan warned them that he would approach the police and told the four that he was a lawyer practising in the Madras High Court for decades.

He had also questioned the four for consuming alcohol on the court campus. Irked by this, the gang allegedly assaulted Sundararajan and broke the windshield of his car. Police said following a complaint from the advocate, two persons identified as Devendran (36), a lawyer, and Sivaji Rao (32), a former law student yet to complete his studies, were arrested. The police are on the lookout for the other two who are reportedly absconding.

A police official, on condition of anonymity, said that this was not the first time a lawyer had been caught drinking on the high court campus. “Our men have warned several such persons in the past. But we did not want to escalate the situation as we didn’t want to turn it into a confrontation between the police and lawyers,” the official said.

The incident of persons caught drinking in broad daylight on the campus of the Madras High Court on a holiday has raised questions several questions about surveillance on the premises.
Monday, October 22, 2012

ஏமாந்தவர்களை மட்டும் தண்டிக்கும் இந்திய சட்டம்!

தமிழ் நாட்டில் அரசு ஊழியர்கள் (காவல்துறை உட்பட) முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்தால் அது தமிழ்நாடு அரசு நடத்தை விதிமுறைப்படி குற்றமாகும்.  அதனால் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.  சட்ட மன்றத்தில் அமர்ந்துகொண்டு இந்த நடத்தை விதிமுறைகளை வகுக்கும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை  இந்த சட்டங்கள் அனைத்தும் அவர்களது காலடியில்தான் கிடக்கும்.

வெள்ளையன் தனக்கு அடிமையாக இருந்த இந்தியர்களை தண்டிக்க பல சட்டங்களை இயற்றி அந்த சட்டங்கள் தங்களை கட்டுப்படுத்தாது என்ற முறையில் சட்டங்களை செயல்படுத்திவந்தான்.  சுதந்திரம் அடைந்த பிறகு வெள்ளையன் செய்ததை இப்போது அரசியல்வாதிகள் நமக்கு செய்துகொண்டிருக்கிறார்கள்.  ஏமாந்தவர்களை சிறையிலடைத்தல், பொய் வழக்குப்போடுதல் போன்றவை சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது.  குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகள் இப்படித்தான் போடப்படுகிறது.

பின்வரும் இரண்டு செய்திகளில் பாருங்கள் இரண்டாவது திருமணம் செய்த காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  ஆனால் பல திருமணம் செய்துகொண்டு பல அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதாக செய்தியும் வந்திருக்கிறது.  இந்தியாவில் உண்மையாகவே சட்டங்கள்தான் நாட்டை ஆள்கிறதா?  அல்லது சட்டத்திலுள்ள ஓட்டைகள் நாட்டை ஆள்கிறதா? என்ற சந்தேகம் வருகிறது.
அக்டோபர் 22,2012 தினமலர்

திருவண்ணாமலை: இரண்டாவது திருமணம் செய்த, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுரேஷ் சண்முகம். இவர், போளூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது, ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த பெண் போலீஸை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு பின், இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர், மீண்டும் சேத்தப்பட்டு இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், அவருடைய இரண்டாவது திருமணம் குறித்து விசாரணை முடிவு பெற்றதை தொடர்ந்து, அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து, வேலூர் டி.ஐ.ஜி., கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

In South India, more the merrier

May 2, 2006 Times of India

HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.

In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.

When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.

Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.

The DMK chief now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.

Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.

Actor-director K Bhagyaraj even made a Tamil movie called Chinna Veedu.

At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate. An academic said, "The social sanction for two wives can be traced to religion and mythology. Lord Muruga, for instance, had two wives."

In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.Tuesday, September 4, 2012

இந்திய இளைஞர்களுக்கு காத்திருக்கும் இரு அதிர்ச்சியான திருமண பரிசுகள்!!

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு இரண்டு விதமான திருமண பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

1. நகர்ப்புறத்தில் திருமணம் செய்தால் மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறைக்குச் சென்று வாழ்க்கையை தொலைப்பது.

கணவன் மனைவிக்கிடையேயான கருத்து வேறுபாடு இந்தியாவில் கணவன் செய்த கொடிய குற்றமாக கருதப்பட்டு (Failed marriage is Crime in India) குற்றவழக்கில் சிக்கவைக்கப்படுவார்கள். இதுதான் காவல் மற்றும் நீதித்துறைகள் மூலம் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் குடும்ப அழிப்பு முறை. இதனை இந்திய உச்ச நீதிமன்றம் “இந்திய சட்ட தீவிரவாதம்” என்று கண்டித்திருக்கிறது.

Delhi High Court

Crl. Appeal No. 696/2004

Date: 01.11.2007

A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbors are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages”


காரைக்குடி: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது தந்தை, தாய், உறவினர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைக்குடி, திலகர் நகரைச் சேர்ந்த, துரைசாமி மகள், சுமி ப்ரியா,30. இவருக்கும், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த கோபிநாத்திற்கும், 2008ல் திருமணம் நடந்தது. சுமி ப்ரியாவுக்கு, 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 சவரன் நகை சீதனமாக கொடுத்தனர். திருமணத்துக்குப் பின், இருவரும், அமெரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கோபிநாத், தன் மனைவியிடம், "நீ அழகாக இல்லை; ஆங்கிலம் பேசத் தெரியவில்லை; பொருத்தம் சரியில்லை' எனக் கூறி, அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால், சுமி ப்ரியா, இந்தியா வந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார். தன் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனில், மேலும், 5.5 லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரன் நகைகளை, தன் மகனுக்கு கொடுக்க வேண்டும் என, கோபிநாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் வற்புறுத்தினர். இதுகுறித்து, சுமி ப்ரியா, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவுப்படி, காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், கோபிநாத் உட்பட, ஏழு பேர் மீது, வரதட்சணை, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
=====

2. கிராமப்புறங்களில் திருமணம் செய்தால் மனைவியின் கள்ளக்காதலின் விளைவாக கூலிப்படை மூலம் ஒரு நாள் கொல்லப்பட்டு உயிர் போய்விடும்.
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

இந்த இரண்டில் எது உங்களுக்கு வேண்டும் என்று முடிவு செய்து பிறகு இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். இந்தியாவில் திருமணம் செய்தால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக உங்களுக்கு பரிசாக கிடைக்கும் என்பது உறுதி.


மூணாறு: கணவனைக் கொலை செய்த பெண்ணையும், அவரின் கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்தனர். மூணாறு அருகே, கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான, லட்சுமி எஸ்டேட் சவுத் டிவிஷனை சேர்ந்த தோட்ட தொழிலாளி சுடலைமணி,38. இவரை ஆகஸ்ட், 28 ம் தேதி இரவு முதல் காணவில்லையென, அவரது மனைவி லதா,37, போலீசில் புகார் அளித்தார்.

புகார்: சுடலைமணி காணாமல் போனதில், லதா, அதே பகுதியைச் சேர்ந்த, ஜீப் டிரைவர் பால்துரைக்கும் தொடர்பு உள்ளதாக, சுடலைமணி சகோதரர் மகாராஜன் போலீசில் புகார் அளித்தார். பால்துரையிடம் போலீசார் விசாரித்ததில், சுடலைமணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கைது: அவர் அடையாளம் காட்டிய பகுதியில், ஆற்றில் கிடந்த சுடலைமணியின் உடலை, நேற்று காலை மீட்டனர். பால்துரை,46, சுடலைமணியின் மனைவி லதா,37, ஆகியோரை மூணாறு போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: பால்துரை - லதாவுக்கிடையே, 15 ஆண்டுகளாக, கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக சுடலைமணிக்கும், லதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், லதா கள்ளத் தொடர்பை துண்டிக்கவில்லை. கள்ளக் காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். கடந்த, 28ம் தேதி மாலை, சுடலைமணிக்கும், பால்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்ற சுடலைமணி, மனைவியை கண்டித்துள்ளார். இதை லதா, பால்துரையிடம் கூறியுள்ளார். இரவில், வீட்டருகே ரோட்டில் பதுங்கி இருந்தவர், அந்த வழியாக வந்த சுடலைமணியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

வழக்கு பதிவு: உடலை தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று ஆற்றில் வீசியுள்ளார். பால்துரை மீது கொலை வழக்கும், லதாக்கு எதிராக கூட்டு சதி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Thursday, August 30, 2012

ஈரோடு இளைஞரை காப்பாற்றிய ஜப்பானிய இளம்பெண்!

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வு பொய் வரதட்சணை வழக்குகளால் சீரழிந்துகொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் “IPC498A Misuse” என்று இணைய தளத்தில் டைப் செய்து தேடிப்பாருங்கள். இந்தியாவில் திருமணம் செய்ததால் சின்னாபின்னமாகிப்போன கோடிக்கணக்கான இளைஞர்களும், அவர்களது குடும்பமும் ஓலமிட்டிக்கொண்டிருக்கும் அவலத்தை காணலாம்.

இதுபோன்ற ஆபத்தான் சூழலில் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளும் விதமாக ஜப்பானிய மணமகளைத் தேர்ந்தெடுதுள்ள இந்த புத்திசாலி இளைஞருக்கு வாழ்த்துக்கள்.

ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்த இன்ஜினியருக்கும், ஜப்பான் நாட்டுப் பெண்ணுக்கும்இந்து முறைப்படி திருமணம் நடந்தது. (தினமலர் 30 ஆகஸ்ட் 2012)
========

எதிர்கால இந்திய மருமகள்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்று இந்த அவள் விகடன் கட்டுரையில் பாருங்கள். படித்தபிறகு புரியும் .

நான் புடிச்ச மாப்பிள்ளதான்..!

சீதையின் பார்வையில் தொடங்கி... இன்றைய செல்போன் யுக பெண்கள் வரை, 'நல்ல கணவன்’ எனும் எதிர்பார்ப்பு, சுவாரசியம்! ''கல்யாணம், மாப்பிள்ளை, புகுந்த வீடு... எப்படி இருக்கணும்..?''

- சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம்... மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ்!

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை.

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். துறுதுறுனு, எல்

லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. அப்புறம்... ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. பட், மிச்சம் ரெண்டு நாள் அவர் சமைக்கணும்.

இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும்.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். சமயத்துல 'வாடா போடா’வையும் ஜாலியா ரசிக்கணும். எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக் கொடுக்கணும். ஷாப்பிங் வர்றப்போ, அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். புதுசா என்ன டிரெஸ் போட்டாலும், 'உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும். எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப் போயிடணும். கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. முக்கியமான பாயின்ட்.... மாமியார் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும்!''

சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:

''மாப்பிள்ளை ஃபேர், மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. ஆனா, பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். அன்பு காட்டுறதுல பணக்காரங்களா இருந்தா போதும். அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. அவர் ஒரு 'யமஹா ஆர் 120’ வண்டி வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். இதுவரைக்கும் யார் கூடவும் நான் பைக்ல போனதில்ல. பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும்.

குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். குவார்டர்லி, ஹாஃப் இயர்லி, சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அதகளம் பண்ணணும். ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது, டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா இருக்கணும்.

அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். ஆனா, புடவை கட்டச் சொல்லி என்னை கம்பல் பண்ணக்கூடாது. அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம், ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல!''

லீலாவதி, எம்.காம், சென்னைப் பல்கலைக்கழகம்:

''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல... ஆனா, மொத்தமா பெரிய கூட்டுக் குடும்பம் வேண்டவே வேண்டாம். மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு சந்தோஷப்படுத்துவேன்.

கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும் பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு. அதை எல்லாம் ரசிக்கணும். வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். கொஞ்சம் அதிகமா பேசுவேன்... அதனால அவர் அமைதியானவரா இருக்கணும். சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி’ கேட்கணும்!''

ஆண்கள் அலர்ட்!

===Monday, August 6, 2012

இந்தியாவில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்குத் தேவையானது மனப் பொருத்தமல்ல மனநல மருத்துவம்

லாப நோக்கத்துடன் இயற்றப்பட்டுள்ள பல ஒருதலைபட்சமான இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் பெண்கள் தங்களது சுயமரியாதையை இழந்து இந்தியாவில் திருமணம் செய்யும் அப்பாவி இளைஞர்களின் வாழ்வை இந்திய சட்டங்களைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் மூலம் சிதைத்து வருகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.இதுபோன்ற ஆபத்தான சூழலில் இந்திய இளைஞர்கள் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கை முறையாகும். இருந்தாலும் சில இளைஞர்கள் தேசப்பற்று காரணமாக இந்தியாவில்தான் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை அழித்துக்கொள்வேன் என்று ஆபத்தை உணராமல் உணர்ச்சி வசப்பட்டு தவறான திசையில் சென்று கொண்டிருப்பார்கள்.

அதுபோன்ற இளைஞர்கள் இந்தியத் திருமணம் என்ற ஆபத்தான பாதையில் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்போது மேற்கொள்ளவேண்டிய சில தற்காலிகமான தற்காப்பு வழிமுறைதான் மனநல ஆலோசனை. அதனை இன்றைய செய்தித்தாளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். படித்து தற்காலிக முதலுதவி பெற முயற்சி செய்து பார்க்கலாம்.

ஆனால், ஒரு உண்மையை மறந்துவிடாதீர்கள்! இந்தியாவில் திருமணம் செய்தால் அரசாங்க ஆதரவுடன் கண்டிப்பாக ஒருநாள் பொய் வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இதனை தடுக்க எந்தவித நச்சு முறிவு மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது!!

தினமலர் முதல் பக்கம்
» சிறப்பு பகுதிகள் செய்தி »ஆகஸ்ட் 06,2012

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!
மன நல ஆலோசகர் லட்சுமணன்

பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போவதற்கு காரணம், பரஸ்பரம் புரிதல் இல்லாமை தான். அதனால் தான், காதல் திருமணமோ, பெரியோர் நிச்சயித்த திருமணமோ, எதுவானாலும், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத்திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம்.

நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்களையும், குறைகளையும் வெளிப்படையாக பேசுவதில்லை. தன்னை தியாகியாகவும், உதவும் குணமுடைய ஆளாகவும் காட்டிக் கொள்வர்.

திருமணத்திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத்தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலைகுலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதிகலங்க வைக்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திருமண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போது தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத்திற்கு முந்தைய, "கவுன்சிலிங்' அவசியம்.

திருமணத்திற்கு பிந்தைய, "கவுன்சிலிங்'கில், தாம்பத்தியம் பற்றிய அலசல் மிக மிக முக்கியமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்படும் தகராறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், "செக்ஸ்' பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை அலசுவோம். "செக்ஸ்' பற்றி புரிதலே இல்லாமல் இருப்பவர்களுக்கு, "கவுன்சிலிங்'கும், பிரச்னைகளைப் பொறுத்து, மருத்துவத் தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக்காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுக வேண்டும். இதனால், வாழ்க்கையை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.

Saturday, July 28, 2012

உங்களது பெற்றோருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா?

இளைஞர்களே,

உங்களது பெற்றோரோடு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? அல்லது பெற்றோரோடு சேர்ந்து சிறைக்குச் செல்லவேண்டுமா? இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வு பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த பொய் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநில உயர்நீதிமன்றங்களும், இந்திய உச்ச நீதிமன்றமும் பலமுறை இதனை சுட்டிக் காட்டியிருக்கின்றன. பொய் வழக்குகளை தவிர்க்க வரதட்சணை தடுப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திற்கு அறிக்கையும் அனுப்பிவிட்டது. ஆனால் இதுவரை எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

புகார் கொடுத்தவுடன் உடனடியாக கைது செய்யவேண்டிய அவசியமில்லை என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் மருமகள் புகார் கொடுத்தவுடன் அது பொய்யான புகார் என்று தெரிந்தாலும் காவல்துறை உடனடியாக கணவனையும், அவனது குடும்பத்தையும் கைது செய்ய ஓட ஓட விரட்டிப்பிடிப்பார்கள்.

பயந்தவர்கள் காவல்துறையின் மிரட்டலுக்கு பயந்து காசுகொடுப்பார்கள். கணவன் தரப்பை மிரட்டி காசு வாங்கினாலும் மருமகளிடம் வாங்கிய காசிற்கு கணக்கு காட்டுவதற்காக சும்மா சில நாட்கள் கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையில் அடைத்து வைத்திருந்து பிறகு விட்டுவிடுவார்கள்.

காவல் நிலையம், கைது, சிறை என்று வாழ்க்கையில் பார்த்திராத புதிய விஷயங்களை சாதாரண நடுத்தரக்குடும்பம் மருமகளின் பொய் வரதட்சணை வழக்கில் சந்திக்கும்போது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது தினமும் இந்தியாவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சட்டங்கள் பொய் வழக்கு தொடுப்பவரை தண்டிக்க வழி வகை செய்திருந்தாலும் நீதிமன்றங்கள் பொய் வரதட்சணை வழக்கு தொடுக்கும் மருமகள்களை தண்டிப்பதில்லை. அதனால் காவல்துறையும், நீதித்துறையும் தங்களுக்கு சாதகமாக இருப்பதை பயன்படுத்தி பல மருமகள்கள் தங்களது தவறான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கணவனையும், அவனது குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்க தயங்குவதில்லை.

எந்தப் பெண்ணாவது இப்படி செய்வாளா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. நம்பமுடியவில்லையென்றால் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பிறகு அனுபவித்துப் பாருங்கள்.

ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்திய பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் ஆயுள் முழுதும் உங்களுக்கு நீதியே கிடைக்காது. நீதிமன்றங்கள் 20 - 25 ஆண்டுகள் வரை உங்கள் வழக்கை இழுத்தடித்து உங்களை கொல்லாமலே கொன்றுவிடும். இதற்கு நடுவே காவல்துறையின் மிரட்டல்கள், அவமானப் பேச்சுகள், உண்மையை மறைத்து செய்தித்தாளில் வெளியிடப்படும் அவதூறு செய்திகள் இவற்றிற்கெல்லாம் தாக்குப்பிடிக்க முடிந்தவர்கள் உயிரோடு நடைபிணமாக இருக்கலாம். இவற்றை தாங்க முடியாதவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை! ஆனால் பொய் வழக்கில் சிக்கிய உங்களுக்கு கடைசிவரை நீதியே கிடைக்காது என்பதுமட்டும் ஆணித்தரமான உண்மை.

அதனால் உங்கள் திருமணத்தை வேறு நாட்டில் செய்துகொள்வதுதான் உயிருடன் வாழ வழி!

பின்வரும் செய்தியையும், வீடியோவையும் பாருங்கள். மனம் தெளிவடையும்.

Three commit suicide as daughter-in-law files case
Kolkata, July 20, 2012 Deccan Herald

A couple and their 28-year-old son committed suicide by jumping before a train here after the latter's wife filed a case alleging cruelty by her in-laws, police said Friday.

Brajadulal Pal, 60, his wife Anita Pal, 48, and son Rajat Pal ended their lives Thursday at Bediapara between Dum Dum and Belgharia stations.

A suicide note recovered from Brajadulal's wallet referred to a case filed against the three by the family of Priyanka Pal, who was married to Rajat a year back.

"False cases have been filed against us. We can't bear the insult. We have been on the run to save ourselves from police harassment. To protect our honour, we have decided to end our lives," the note said.

A police officer said the arranged marriage was beset with problems from the start.

Priyanka returned to her parents' house after a few months, alleging that she was being tortured by her in-laws and husband.

The cases were filed against the three under 498A (cruelty by in-laws), 34 (common intention) and 406 (criminal breach of trust) of the Indian Penal Code, following which the Pals fled from their home.

தனக்கு பொய்வரதட்சணை வழக்கு மூலம் இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக போராடி தற்கொலை செய்துகொண்ட ஒரு கணவரை ஊரே திரண்டு வேடிக்கை பார்த்த சம்பவமும் நாட்டில் நடந்திருக்கிறது.பொய் வரதட்சணை வழக்கில் நீங்கள் சிக்கினால் உங்களைப் பற்றி அரசாங்கமோ, நீதிமன்றங்களோ, பொதுமக்களோ யாரும் கவலையே படமாட்டார்கள். இந்தியாவில் திருமணம் செய்தால் நீங்கள் குடும்பத்தோடு சிறைக்குச் சென்று வாழ்க்கையை இழக்கவேண்டியதுதான்.இந்த பதிவில் உள்ள விஷயங்களை உங்களால் நம்பமுடியவில்லையென்றால் இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் திரைப்படத்தை பார்த்தாவது இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

498A The Wedding Gift திரைப்பட முன்னோட்டம்
Monday, July 16, 2012

இளைஞர்களை ஒழித்துக்கட்ட உருவாக்கப்பட்டுள்ள இந்திய சட்டங்கள்!

இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தங்களது வாழ்வை இழந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு ஏற்றபடி கணவன் செயல்படவில்லையென்றால் (உதாரணத்திற்கு - தனிக்குடித்தனம் வரமறுத்தால்) உடனடியாக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து கணவனை குடும்பத்தோடு கைது செய்யும் வழக்கம் பல காலமாக இந்தியாவில் இருந்துகொண்டிருக்கிறது.

இந்த பொய் வழக்குகளின் பின்னணியில் இளைஞர்களின் வாழ்வை நாசமாக்க எத்தனை ஒருதலைபட்சமான சட்டங்களை அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, எப்படியெல்லாம் இளைஞர்களின் வாழ்வு நாசமாக்கப்படுகிறது என்பதுபோன்ற விஷயங்கள் “கோகுலம் கதிர்” என்ற பத்திரிக்கையின் கட்டுரையில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை படித்தபிறகு வாழ்வை நாசமாக்கிக்கொள்ள விரும்பாத புத்திசாலி இளைஞர்கள் யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.

(Click and Read)

Page-1


Thursday, June 28, 2012

முதலிரவில் சொல்லவேண்டிய காதல் கதை

இளைஞர்களே இந்தியாவில் இருக்கும் வினோதமான சட்ட நடைமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.


ராமநாதபுரம் : முதலிரவில் கணவரிடம், காதலித்து கர்ப்பமாக இருப்பதை கூறிய மனைவி, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதலனை கைப்பிடித்தார்.

ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டையை சேர்ந்த பாண்டி மகள் உமா மகேஷ்வரி, 22. ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பட்டதாரி கார்த்திக் ராஜா,27. இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர். இதில், உமா மகேஷ்வரி மூன்று மாதம் கர்ப்பமானார். இதையறியாத உமா மகேஷ்வரியின் பெற்றோர், சாயல்குடி முனியசாமி என்பவருக்கு, கடந்த மாதம் 23ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.

முதலிரவில், "தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து கர்ப்பமாக உள்ளதாக' கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து முனியசாமி, ஊர் பெரியவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உமாமகேஷ்வரியை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

இதன்பின், ராமநாதபுரம் மகளிர் போலீசில் உமா மகேஷ்வரி புகாரின்படி, காதலன் கார்த்திக் ராஜா மற்றும் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்மதம் பெற்றார். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில், இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் தலைமையில், உமா மகேஷ்வரிக்கும், கார்த்திக் ராஜாவுக்கும், நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது.

=======

  • காதல் புரிந்து கர்பவதியான மகளை ஒரு அப்பாவி இளைஞனை ஏமாற்றி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். முதலிரவில் பெண் உண்மையை சொன்னதும் காவல்நிலையத்தில் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

  • மணமகனை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோருக்கு தண்டனை இல்லை. மணமகனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தை ஏமாற்றி திருமணம் செய்தால் மட்டும்தான் தண்டனையா? பெண்ணை பெற்றவர்கள் ஏமாற்றினால் தண்டனை கிடையாதா?

  • சட்டப்படி “மேஜரான” பெண்ணின் விருப்பத்திற்கெதிராக அதுவும் ஒரு கர்பவதியை கட்டாயப்படுத்தி வேறு ஒரு ஆணுக்கு திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் குற்றவாளி கிடையாதா? பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எங்கே போனது?

  • முறைப்படி நடந்த திருமணத்தை சட்டப்படியாக ரத்து செய்யாமல் காவல் நிலையத்தில் திருமணத்தை ரத்து செய்து வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய திருமண சட்டங்கள் வெறும் வெற்றுச் சட்டங்களா? நீதிமன்றங்கள் வெட்டி மன்றங்களா?

  • இவையெல்லாம் அப்படியே தலைகீழாக நடந்து ஏதோ ஒரு காரணத்தால் மணமகன் திருமணத்தை நிறுத்தியிருந்தால் உடனடியாக மணமகனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்திருப்பார்கள்.

  • காவல் நிலைய தெய்வங்கள் கண்ணை மூடிக்கொண்டு மணமகனின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்திருப்பார்கள்.

  • நீதிமன்றம் பெண்ணுக்கு நீதி வழங்காமல் ஓய மாட்டோம் என்று வரதட்சணை சட்டங்களை பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டிருக்கும்.

இதுதான் இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்தியத் திருமணம் என்ற தகனமேடையில் சிக்கினால் அப்பாவி இளைஞர்களின் வாழ்வு நாசமாவது உறுதி.

Monday, June 18, 2012

ஐயோ பாவம் எத்தனை பேர் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கப் போகிறார்களோ!

தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக 1006 ஜோடிகளுக்கு நடந்த திருமணத்தில் எத்தனை அப்பாவி ஆண்கள் பொய் வரதட்சணை வழக்கில் (IPC498A) சிக்கப்போகிறார்களோ! நல்லா வாழப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள். வழக்கில் சிக்கப் போகிறவர்களுக்கு அனுதாபங்கள்.

வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி சீர்வரிசை பொருட்களை பட்டியலிட்டு மணமகன், மணமகள் இரு தரப்பினரும் கையொப்பமிட்டு பாதுகாக்க வேண்டும். திருமண பதிவு விண்ணப்பத்தில் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ இல்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் இந்த திருமணத்தில் நடக்குமா?

இவையெல்லாம் இருந்தாலும் மருமகள் தொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கை யாராலும் தடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் திருமணம் செய்யும் ஆணுக்கு என்றாவது ஒருநாள் சிறைவாசம் கண்டிப்பாக உண்டு என்பது எழுதப்படாத சட்டம்.

சென்னை: சென்னை திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். இன்று காலை கோலாகலமாக நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை அறநிலையத்துறை செய்துள்ளது. இலவச திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ‌ஜோடிகள் வந்துள்ளனர். திருமணத்தையொட்டி ரூ. 4.5 ‌கோடி செலவில் சீர்வரிசை பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கோயில் முன்பு ஹோமம் வளர்த்து திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Friday, June 15, 2012

திருவண்ணாமலை இளைஞர் உக்ரேனிய நாட்டில் சாதனை

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வு சிறைச்சாலையில்தான் சென்று முடியும் என்ற ஆபத்தான நிலை இருக்கும் இந்த கால கட்டத்தில் பல தமிழக இளைஞர்கள் புத்திசாலித்தனமாக வேறு நாட்டு பெண்களை மணந்து நல்வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

இந்தியாவில் திருமணம் செய்யும் பல இளைஞர்களை பொய் வரதட்சணை வழக்கு மூலம் அரசாங்கம் தண்டித்து வருகிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த உண்மையை அறிந்துகொண்ட இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 2010ல் பொய் வரதட்சணை வழக்கு மூலம் அப்பாவிகளின் வாழ்வை நாசமாக்குவதை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPEAL NO. 1512 OF 2010
(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)
Preeti Gupta & Another …Appellants
Versus

State of Jharkhand & Another ….Respondents
J U D G M E N T
Dalveer Bhandari, J.


34. Before parting with this case, we would like to observe that a serious relook of the entire provision is warranted by the legislation. It is also a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over implication is also reflected in a very large number of cases.

35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not
be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.


வழக்கம் போல இந்த அறிக்கையை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு விவாகரத்து கோரும் பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பாதி பங்கு கொடுக்க வேண்டும் என்றும், மனைவி விவாகரத்து கோரினால் கணவனால் அதை எதிர்க்க முடியாத வகையில் புதிய சட்டத்தை அவசர அவசரமாக இயற்றி மேலும் பல பொய் வழக்குகள் உருவாக உதவி செய்திருக்கிறது.

இதுபோன்ற சமயத்தில் ஆபத்தான இந்திய திருமண புதைகுழியில் சிக்காமல் புத்திசாலித்தனமாக உக்ரேனிய நாட்டுப் பெண்ணை மணந்து இந்தியாவில் வரவிருந்த பொய் வரதட்சணை வழக்கிலிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றியிருக்கிறார் இந்த இளைஞர். அவருக்கு வாழ்த்துக்கள்!!!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெண்ணை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி, இந்து முறைப்படி, திருமணம் செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் சம்பத். இவர் மகன், இன்ஜினியரிங் பட்டதாரி, தினேஷ். இவர், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் நாட்டில், வங்கியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திர சாப்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இதே வங்கியில், உக்ரைனை சேர்ந்த ஸ்வெட்லானா இசெங்கோ பணிபுரிந்து வருகிறார். இவரை, தினேஷ் காதலித்து வந்தார்.

இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், ரஷ்ய தூதரகம் மற்றும் இந்திய தூதரகத்தின் அனுமதி பெற்று, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அனுமதி பெற்றனர்.

இருவரும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மேல், தீவிர பக்தி கொண்டதில், திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று காலை, கிரிவலப் பாதையில் உள்ள ஓட்டலில், இந்து முறைப்படி, வேத மந்திரம் முழங்க, ஸ்வெட்லானா இசெங்கோ கழுத்தில், தினேஷ் தாலி கட்டினார். இருவரையும், இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினர். மணமக்கள், அருணாசலேஸ்வரர் கோவிலிலில் சாமி தரிசனம் செய்தனர்.


Tuesday, May 8, 2012

வெளிநாட்டில் சம்பாதிக்கும் கணவர்களே உங்கள் பணம் ஜாக்கிரதை!

பல இந்திய இளைஞர்கள் தங்களது குடும்ப பாரத்தை சுமக்க வெளிநாடுகளுக்குச் சென்று இரத்தம் சிந்தி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதித்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பணத்தை இந்தியாவிற்கு அனுப்பி வருகிறார்கள்.

ஆனால் சில பாசக்கார மனைவிகள் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டு ஒட்டு மொத்த பணத்தையும் சட்டத்தின் துணையோடு சுருட்டிக் கொள்கிறார்கள். வெளியே தெரியாமல் இது பல காலமாக நடந்துவரும் கொடுமை. வெளியில் தெரிந்த செய்தி இன்று செய்தித்தாளில் வந்திருக்கிறது. அதனால் இளைஞர்களே உங்களது திருமண வாழ்க்கையைப் பற்றி சரியாக முடிவெடுங்கள். இந்தியாவில் திருமணம் செய்யலாமா என்று யோசியுங்கள்.

வெளிநாட்டில் சம்பாதித்த ரூ.12 லட்சம்: மனைவி மீது கணவர் புகார்

மே 07,2012 தினமலர்

ராமநாதபுரம்: வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய 12 லட்ச ரூபாயுடன் பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்த மனைவியை, தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க கோரி கணவர், போலீசில் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இரட்டை ஊரணியை சேர்ந்தவர் கதிரவன், 32. இவருக்கும், மண்டபம் அருகே நாரை ஊரணியை சேர்ந்த சிவசங்கமூர்த்தி மகள் விஜயலட்சுமிக்கும், 26, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து, 20 நாட்களில் மனைவியை, தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கதிரவன் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார்.

சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை மாதந்தோறும் மனைவி பெயரில் வங்கியில் செலுத்தி வந்தார். கடந்த மார்ச்சில் சொந்த ஊர் திரும்பியபோது வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். மறுத்த மனைவி, "வாழ பிடிக்கவில்லை' எனக்கூறி தன்னை துரத்தி விட்டதோடு, சம்பாதித்து அனுப்பிய 12 லட்ச ரூபாயையும் திருப்பி தரவில்லை.

தன்னுடன் வாழ மனைவியை அறிவுறுத்த வேண்டும். அல்லது ரூ.12 லட்சத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதிரவன், காளிராஜ் மகேஷ்குமார் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தார். எஸ்.பி., கூறுகையில், ""உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மணிவண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.

=====
முந்தைய பதிவு இதையும் சேர்த்து படியுங்கள்... கணவன் வெளிநாட்டில் வேலை செய்யும்போது மனைவி இந்தியாவில் கள்ளக்காதலனுடன் போனில் சல்லாப பேச்சு: பில் தொகையை மனைவியே கட்ட கோர்ட் உத்தரவு

Saturday, April 14, 2012

இந்திய பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் தெரியுமா?

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் அதிகமாகிவிட்டன என்று பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்களே அது எப்படி இருக்கும்? என்று பலருக்கும் தெரிந்திருக்காது. ஏனென்றால் பொதுவாக நமக்கு எதுவும் நடக்காதவரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் பல காலமாக வழக்கமாக இருக்கிறது. அதனால் இந்த பொய் வரதட்சணை வழக்கின் தீவிரம் எப்படிப்பட்டது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே குற்றமாக செய்தால் எந்த அளவிற்கு ஒரு அப்பாவிக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவிற்கான மீளமுடியாத பாதிப்பை மருமகள் கொடுக்கும் ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கே அரசாங்கத்தின் உதவியுடன் சட்டத்தின் துணையோடு கட்டவிழுத்துவிடப்படும் இந்த வன்முறையின் மூலம் உருவாக்கிவிடுவார்கள். அதனால்தான் இதனை இந்திய உச்ச நீதிமன்றமே “சட்ட தீவிரவாதம்” (Legal Terrorism) என்று வன்மையாக கண்டித்திருக்கிறது.

இந்த இந்திய சட்ட தீவிரவாதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பாருங்கள். இளைஞர்களே, இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்வது எந்த அளவிற்கு ஆபத்தானது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவில் பெண்ணை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் இருக்கும் தவறான சட்டங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் கூறியிருக்கும் உண்மையை பாருங்கள்.Wednesday, April 11, 2012

இந்திய ஆண்களுக்கு எந்த சட்டமும் கிடையாது. இப்பொழுதாவது நம்புவீர்களா?

இளைஞர்களே,

ஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டான் அவனை போலிஸ் சிறையில் அடைத்தார்கள் என்ற செய்தியை நீங்கள் அடிக்கடி செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். ஆனால் பெண் ஒரு ஆணை காதலித்து ஏமாற்றினாள் என்ற செய்தியை எப்போதாவது செய்தித்தாளில் பார்திருப்பீர்களா? அப்படியென்றால் காதலிக்கும் ஆணை எந்தப் பெண்ணும் ஏமாற்றுவதே கிடையாதா??

நீங்கள் தவறு செய்தாலும் சரி, தவறு செய்யாவிட்டாலும் சரி இந்தியாவில் ஒரு பெண் உங்கள் மீது புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் நீங்கள் எந்த வழக்கும் அந்தப் பெண்மீது தொடுக்க முடியாது. ஏனென்றால் தவறு செய்யும் பெண்ணை தண்டிக்க இந்தியாவில் சட்டங்களே இல்லை.

அப்படி இருக்கும் ஒன்றிரண்டு சட்டங்களையும் காவல்துறையும் நீதித்துறையும் மதிப்பதில்லை. ஒட்டு மொத்த சமுதயாமும் ஆணைத் தண்டிக்க மட்டுமே தயாராக இருக்கிறது. அவன் தவறு செய்யவில்லை என்றாலும் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அதுபோல ஒரு ஆணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றியும் யாரும் கவலைப்படமாட்டார்கள்.

பின்வரும் செய்தியையும் வீடியோவையும் பாருங்கள்.

தாம்பரம்: பொறியியல் படித்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். மேற்கு தாம்பரம், லட்சுமிபுரம் விரிவை சேர்ந்தவர் சர்மிளா,32. பொறியியல் பட்டதாரி. இவர், தாம்பரம் மகளிர் போலீசில், நேற்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2001ம் ஆண்டு பி.இ., படித்தபோது, என்னுடன் படித்த வண்டலூரை சேர்ந்த கார்த்திகேயன்,32, என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை காதலித்தேன். என்னை அவர் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, தனக்கு இரண்டு சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு திருமணம் முடிந்த பின், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். இருவருக்கும் திருமணம் முடிந்தும், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

தற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடைய தாயின் தூண்டுதலின்படி, பத்து வருடங்களாக காதலித்த என்னை, திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டு, மற்றொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். போலீசார் கார்த்திகேயனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.Sunday, April 8, 2012

லஞ்சம் வாங்கினால் தண்டனையே இல்லாத ஒரு துறை!!!

ஒன்இந்தியா வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 6, 2012


சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த மக்களிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் 14 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் வீடியோ தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் பிரிவு, ஆவண மோசடி தடுப்பு பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு, நிலமோசடி தடுப்பு பிரிவு உள்பட 15 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள 6 சிறப்பு எஸ்.ஐ. உள்பட 14 காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் ராதிகாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அவர்கள் 14 பேரையும் ரகசியமாக கண்காணிக்க அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு கட்டபஞ்சாயத்து செய்ததும், மாமூல் வாங்கியதும் தெரிய வந்தது. இதனையடுத்து துணை ஆணையர் ராதிகா பரிந்துரைப்படி மக்களிடம் லஞ்சம் வாங்கிய 14 பேரையும் இடமாற்றம் செய்து ஆணையர் திரிபாதி உத்தரவிட்டார்.

இடமாற்றம் செய்யப்பட்ட போலீசாரில் 6 பேர் சிறப்பு எஸ்.ஐ.களாக உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடதக்கது.


Tuesday, April 3, 2012

இந்திய ஆண்கள் படிக்கக்கூடாத ஒரு செய்திக் கட்டுரை!

பெண்ணுரிமை என்ற பெயரில் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள ஒருதலைபட்சமான சட்டங்களால் இந்திய ஆண்களுக்கு தினந்தோறும் சட்டத்தின் துணையோடு இழைக்கப்படும் அநீதியைப் பற்றிய விழிப்புணர்ச்சிக் கட்டுரையை ஒரு பெண் எழுத்தாளர் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார்.

இளைஞர்களே, இதைப் படித்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்யலாமா என்று சற்று யோசியுங்கள்.

(நன்றி: http://inandoutchennaifortnightly.blogspot.com/)

(Click and Read)

பக்கம்-1Friday, March 30, 2012

இந்தியக் கணவர்களை கொலையாளிகளாக மாற்ற புதிய சட்டமா?

இந்திய குடும்பங்களை அழிப்பதில் சட்டப்பூர்வமான அணுகுமுறை என்ற பதிவின் தொடர்ச்சியாக இன்று செய்தித்தாளில் வந்திருக்கும் செய்தியை பாருங்கள்.

இந்தியாவில் நாகரீக வளர்ச்சியால் அதிக அளவில் குடும்பப் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை புதிய சட்டங்கள் மூலம் தீர்க்கலாம் என்று எண்ணிய அரசாங்கம் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு பதிலாக குடும்பங்களை ஒழித்துவிட்டால் குடும்பப் பிரச்சனையே இருக்காது என்ற முடிவுக்கு வந்து இரண்டு புதிய சட்டங்களை அமலாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த புதிய சட்டங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பெண்கள் சட்டங்களை மேலும் தவறாகப் பயன்படுத்தி கணவனிடம் பணம் பறிக்க நன்றாக வழிவகை செய்திருக்கிறது.

கணவன் மனைவிக்கிடையே தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கும்பட்சத்தில் எளிதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துசெல்ல வழிவகை செய்வதாகக் கூறப்பட்டிருக்கும் இந்த சட்டத்தில் மனைவி விவாகரத்து கோரினால் உடனடியாக கிடைக்கும்படியும் ஆனால் கணவன் அதே காரணத்திற்காக விவாகரத்து கோரினால் அவனது ஆயுள் முழுதும் போராடினாலும் அவனுக்கு விவாகரத்து கிடைக்காத வகையிலும் இயற்றப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்து பெற நினைக்கும் பெண்ணுக்கு கணவனின் சொத்தில் சமபங்கு கிடைக்கும் வகையிலும் சட்டம் வரப்போகிறது. இதன்மூலம் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வுகிடைக்குமா?

இந்தியாவில் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் ஆண்களை ஒடுக்கும் விதமாக பலவிதமான ஒருதலைபட்சமான சட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்கு அல்லது குடும்பப் பிரச்சனைகளில் சிக்கும் இளைஞர்களுக்கு சட்டப்பூர்வமாக எந்தவித தீர்வும் கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. அதன் அடையாளமாகத்தான் பின்வரும் செய்தி வெளிவந்திருக்கிறது. இளைஞர்களே, சிந்தியுங்கள். இதுபோன்ற ஆபத்தான இந்தியத் திருமணம் தேவையா?


The recent Marriage Laws (amendment) Bill, which received the Union Cabinet’s nod, may be aimed at helping women as it gives them a share in the husband’s property after divorce, however, it has led to the murder of a woman in the city. What’s tragic is that the offender saw the news scrolling on TV shortly before the murder. The easing of divorce norms for women and the legal right of the woman over the property of her husband disturbed him.

Though that’s not the sole reason for the murder, it certainly had a hand in A. Ravi Shankar Goud, 34, brutally murdering his wife and her brother in Kacheguda a few days ago, according to East Zone DCP Y. Gangadhar. As their marriage was on the verge of breakdown and divorce meant giving her a share in property, the local BJP leader killed his wife instead, say cops.

Ravi Shankar, who had been absconding since the murders on Saturday evening, was nabbed by a police team at the Imblibun bus stand. A resident of Metherbasti in Kacheguda, he married Renuka, 22, from the Adibatla village of Ibrahimpatnam in 2010 and had a daughter in 2011. However, differences cropped up between the couple. Ravi Shankar had burn marks over the entire left portion of his body from shoulder to abdomen. He had sustained these burns in a childhood accident. However, because of the scars, his wife reportedly refused to cooperate with him in marital life.

The efforts of elders from both sides couldn’t reconcile them. The police too counselled the couple but the situation remained the same. On the evening of March 24, she was getting ready to go to her parents’ house to celebrate the first birthday of her daughter. Ravi Shankar objected to this and in the heat of the moment, he slapped her following which she called up her father Rajkumar who in turn sent his son Hari Kumar, 20, to his daughter. Hari Kumar tried to cool down tempers. However, the couple sent Hari Kumar out to get Amruthanjan and resumed the argument.

Police said that before Hari Kumar could return, Ravi Shankar killed his wife by stabbing her in the abdomen, chest and neck. Enraged at seeing his sister dead, Hari Kumar caught Ravi Shankar by the collar. But the accused overpowered him and stabbed him to death with the same knife. When Renuka’s parents turned up, he was trying to set himself afire. However, he managed to escape. Police recovered the knife and blood stained clothes from his possession.Saturday, March 24, 2012

இந்திய குடும்பங்களை அழிப்பதில் சட்டப்பூர்வமான அணுகுமுறை

இந்தியாவில் நாகரீக வளர்ச்சியால் அதிக அளவில் குடும்பப் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை புதிய சட்டங்கள் மூலம் தீர்க்கலாம் என்று எண்ணிய அரசாங்கம் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு பதிலாக குடும்பங்களை ஒழித்துவிட்டால் குடும்பப் பிரச்சனையே இருக்காது என்ற முடிவுக்கு வந்து இரண்டு புதிய சட்டங்களை அமலாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த புதிய சட்டங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பெண்கள் சட்டங்களை மேலும் தவறாகப் பயன்படுத்தி கணவனிடம் பணம் பறிக்க நன்றாக வழிவகை செய்திருக்கிறது.

கணவன் மனைவிக்கிடையே தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கும்பட்சத்தில் எளிதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துசெல்ல வழிவகை செய்வதாகக் கூறப்பட்டிருக்கும் இந்த சட்டத்தில் மனைவி விவாகரத்து கோரினால் உடனடியாக கிடைக்கும்படியும் ஆனால் கணவன் அதே காரணத்திற்காக விவாகரத்து கோரினால் அவனது ஆயுள் முழுதும் போராடினாலும் அவனுக்கு விவாகரத்து கிடைக்காத வகையிலும் இயற்றப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்து பெற நினைக்கும் பெண்ணுக்கு கணவனின் சொத்தில் சமபங்கு கிடைக்கும் வகையிலும் சட்டம் வரப்போகிறது. இதன்மூலம் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வுகிடைக்குமா?


இனி என்ன நடக்கப் போகிறதென்றால் நல்ல வசதியான ஆணை பார்த்து திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களில் அவன் வரதட்சணை கொடுமை செய்கிறான் என்று அவன் மீது ஒரு பொய்யான கிரிமினல் வழக்கை IPC498A பிரிவின் கீழ் பதிவு செய்துவிட்டு, கொடுமை செய்கிறான் என்ற அதே அடிப்படையில் இனி அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விவாகரத்தையும் எளிதாகப் பெற்றுக் கொண்டு போகிற போக்கில் அவனது சொத்தில் சரிபாதியையும் எடுத்துக் கொண்டு மனதிற்குப் பிடித்த அடுத்த ஆணைத் தேடிச் செல்வார்கள் கலியுக மனைவிகள். இதுபோல நடக்காது என்று மட்டும் கனவுகூட காணாதீர்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது, இனியும் நன்றாக நடக்கப்போகிறது. இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கிறதோ!

இதுபோன்ற குடும்பப் பிரச்சனையை சட்டத்தின் மூலம் அரபு நாடு எப்படி கையாள்கிறது என்ற பின்வரும் செய்தியையும் பாருங்கள். எந்த நாடு குடிமக்களின் குடும்ப நலனில் அக்கறையுடன் சட்டம் இயற்றியிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.

இளைஞர்களே, இந்திய திருமண தகனமேடை உங்களுக்குத் தேவையா?


புதுடில்லி : பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெறும் வகையில், புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

திருமண சட்டத்திருத்த மசோதா, கடந்த 2010ல், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த நிலைக் குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களை செய்யும்படி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஏற்ப, மசோதாவை மாற்றி அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிரிந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற காத்திருக்க வேண்டும். இனி அந்த நிலைமை இருக்காது. "இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம்' என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரிந்தவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று விட முடியும். அவர்கள் இனி ஒன்று சேர முடியாது என, கோர்ட் தீர்மானித்தால், உடனடியாக விவாகரத்து வழங்கலாம். இதன் மூலம், ஆறு மாதம் முதல் 18 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், உடனே கிடைக்கும். இதே போல, "சேரவே முடியாது' என்ற புதிய பிரிவின்படி, கணவன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை.துபாய் : சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவது குறித்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும், திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக, சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சவுதி அரேபியாவில் தற்போது, குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னி தன்மை பரிசோதனை குறித்த மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர். இது போன்ற பிரச்னைகளையெல்லாம் குறைக்க, திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியினருக்கு திருமணத்துக்கு முன்பாக, சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை நடத்துவது குறித்த மேலாண்மை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது குறித்து, சவுதி நீதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. நீதித்துறை அமைச்சகத்தின் இந்த திட்டத்துக்கு, சமூகத்துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்க உள்ளது.Saturday, March 3, 2012

பொதுமக்கள் யாரைத்தான் நம்புவதோ?

பெங்களூரு: பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது, வழக்கறிஞர்கள் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தினர். உதவிக்கு வந்த போலீசார் மீதும், வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால், பல மணி நேரம் பதட்டம் நிலவியது. கோர்ட் வளாகம் போராட்டக்களமானது. போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்; கண்ணீர் புகை குண்டு வீசினர். வழக்கறிஞர்கள் தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

சட்ட விரோத சுரங்கத் தொழில் விவகாரம் தொடர்பாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம், கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த ஐதராபாத்திலிருந்து அவரை அழைத்து வந்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருப்பதை பார்த்து, வழக்கறிஞர்கள் கடும் கோபமடைந்தனர். ஏற்கனவே சில சம்பவங்களால், பத்திரிகையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் கோபம் கொண்டிருந்தனர். இந்த விரோதம் நேற்று கலவரத்துக்கு காரணமானது.

போலீசார் குவிப்பு
: பெங்களூரு கோர்ட் வளாகத்தில், ரெட்டி காரிலிருந்து இறங்கும் இடத்தில் கேமராமேன்கள் தயாராக இருந்தனர். இதைக் கண்ட வழக்கறிஞர்கள், இவர்களுக்கு எந்த வேலையும் இல்லையா. "எங்களை ரவுடிகள் என்று விமர்சித்த மீடியாக்களை, கோர்ட் வளாகத்தில் அனுமதிக்க முடியாது' என்று கூறி விரட்டினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, கேமராமேன் ஒருவரை, வழக்கறிஞர்கள் கல்லால் தாக்கினர். ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோர்ட் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், ஜனார்த்தன ரெட்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, வெளியே அழைத்து வரும் போது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள், ஜனார்த்தன ரெட்டியிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். அதை பார்த்த சில வழக்கறிஞர்கள், ஆத்திரத்துடன் சத்தம் போட்டனர். அப்போது, வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர்.

கலவரமாக மாற்றம்: ஆனால், போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. வழக்கறிஞர்களை கோர்ட்டுக்குள் செல்லுமாறு போலீசார் கூறினர். அதை வழக்கறிஞர்கள் பொருட்படுத்தவில்லை. ஒரு புறம் பத்திரிகையாளர், வழக்கறிஞர்கள் மோதிக்கொண்டனர்; மறுபுறம் போலீசார், வழக்கறிஞர்கள் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது.

போலீசார் கெஞ்சல்: கோர்ட்டுக்குள் தனியாக சிக்கிக் கொண்ட போலீசாரை, வழக்கறிஞர்கள் ஓட, ஓட விரட்டித் தாக்கினர். போலீசார், தப்பித்தோம், பிழைத்தோம் என்று கோர்ட் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர். ஆங்காங்கே இருந்த கோர்ட் ஹால்களிலும் பதட்டம் நிலவியது. நீதிபதிகளிடம், தங்களை காப்பாற்றுமாறு போலீசார் கெஞ்சினர். கோர்ட் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கோர்ட் அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளம்பியது. இதனால், போலீசார் மொத்த கோர்ட்டையும் சுற்றி வளைத்து, எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில் எச்சரிக்கை செய்தனர்.

விரட்டி, விரட்டி தாக்குதல்: இதே நேரத்தில், கோர்ட்டிலிருந்த சில வழக்கறிஞர்கள், தங்கள் கையில் கிடைத்த கற்கள், செங்கற்கள், பூந்தொட்டிகள், இரும்பு நாற்காலிகள் ஆகியவற்றை எடுத்து போலீசார், பத்திரிகையாளர்களை நோக்கி வீசினர். அதே போன்று, கோர்ட்டின் வெளிப்பகுதியிலிருந்து வழக்கறிஞர்களை நோக்கியும், கற்கள் சரமாரியாக வீசப்பட்டன. கண்ணில் கண்டவர்களை எல்லாம் விரட்டி, விரட்டி வழக்கறிஞர்கள் தாக்கினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். சிட்டி சிவில் கோர்ட் வளாகம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. இச்சம்பவத்தில், மத்திய மண்டல டி.ஜி.பி., ரமேஷ் படுகாயம் அடைந்தார். 20 க்கும் மேற்பட்ட போலீசார், பத்திரிகையாளர்கள் பலர் காயமடைந்தனர். பப்ளிக் "டிவி', ஸ்வர்ணா "டிவி', ஜனஸ்ரீ "டிவி' உட்பட பல கன்னட சேனல்களின் கேமராமேன்கள் படுகாயமடைந்தனர். நேரடி ஒளிபரப்பு செய்ய நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சூறையாடப்பட்டன.

துப்பாக்கிச் சூடு: இந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்த, போலீசார் இரு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், கண்ணீர்புகை குண்டு வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். நிலைமை மோசமடைவதைக் கண்ட போலீசார், பத்திரிகையாளர்களை, கே.ஆர்.சர்க்கிள் அருகில் அழைத்துச் சென்று, கோர்ட் அருகில் போகாத வகையில் எச்சரித்தனர்.

இந்த தகவல் வெளியானவுடனேயே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, கூடுதல் கமிஷனர் சுனில் குமார், கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி விக்ரமித்ஜித் சென், கோர்ட் நடவடிக்கையை நிறுத்தினார். கூடுதல் போலீசார் அங்கு குவிக்கபட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோர்ட் அருகிலுள்ள அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் மீதும் வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து, அவர்கள் போராட்டம் நடத்தினர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் கோர்ட் வளாகத்தில் பிரச்னை உருவானது. கோர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்த, 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. கூட்டத்தினரைக் கலைக்க, போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போலீஸ்காரர் படுகாயம்
: இதற்கிடையில், வழக்கறிஞர்கள் இரும்பு நாற்காலிகளைத் தூக்கி வீசியதில், பலத்த காயமடைந்த கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் சந்திரப்பாவுக்கு, பவுரிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒன்பது போலீசாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால, பெங்களூருவில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை: முதல்வர்: "வழக்கறிஞர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது. பத்திரிகையாளர், போலீசார் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. கலவரம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதியின் மூலம் விசாரணை நடத்தப்படும்' என, முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார்.

பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில், பத்திரிகையாளர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து, தன் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், முதல்வர் சதானந்த கவுடா ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அசோக், மாநில தலைமைச் செயலர் ரங்கநாத், உள்துறை செயலர், டி.ஜி.பி., சங்கர் பிதரி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில், ""சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்துள்ள சம்பவம், வெட்கி தலைகுனிய வேண்டிய அவமான நிகழ்ச்சி. வழக்கறிஞர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் அவசரமாக விசாரணை நடத்தி, மாலைக்குள் விரிவான முதல் தகவலை தெரிவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.இதற்கிடையில், முதல்வர் சதானந்த கவுடாவை சந்தித்த பத்திரிகையாளர்கள், தங்கள் மீது வழக்கறிஞர்கள், ரவுடிகளைப் போன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்; 30 பேரை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும், ஒன்பது பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில், பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர். நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை கண்டித்து, மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

==========

பெங்களூரில் நடந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல!!!!!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 2009ல் நடந்த சம்பவம்

Police, lawyers clash at Madras HC
19 Feb 2009


==============

சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட சட்டங்களை பயிற்றுவித்து சட்ட மேதைகளை உருவாக்கும் சென்னை சட்டக் கல்லூரியில் 2009ம் ஆண்டு நடந்த கலவரம்
(எச்சரிக்கை: இளையவர்கள், இதயம் பலகீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்)