சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்டம்படித்தவர்கள் சிலர் ஒன்று கூடி சட்டமேதையான அம்பேத்கரின் சிலைக்கருகில் குடித்து கூத்தடித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தக் கூத்தின்போது அவ்வழியே சென்ற ஒரு மூத்த வழக்கறிஞரை கேலி செய்து, மிரட்டி, அவரது காரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இரு நபர்களை கைது செய்திருக்கிறார்கள். அப்படியென்றால் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில்பல கோடி செலவு செய்திருக்கிறார்களே! அந்தப் பணம் என்னவானது? இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்துள்ள ஒரு காவல் அதிகாரி இதுபோல வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் குடித்து கும்மாளம் அடிப்பது ஒன்றும் புதிதல்ல. பல முறை இதுபோல நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அதை தட்டிக்கேட்டால் எங்கள் மீது வீண் பழியும், தாக்குதலும் நடத்தப்படும். அதனால் அஞ்சி ஒதுங்கி நிற்கிறோம் என்று கூறியுள்ளார். அந்த பேட்டியை பின்வரும் செய்தியில் பாருங்கள். இந்த செய்தியின் மூலம் என்ன தெரிகிறதென்றால் காவல்துறையே அஞ்சி நடுங்கும் அளவிற்கு சட்டம் படித்தவர்கள் அவ்வளவு மோசமானவர்களா? சற்று யோசித்து பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ( “வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார்.” ). அல்லது வழக்கு பதிவு செய்யும் காவல்துறையை சற்று மிரட்டினால் வழக்குப் போட வரும் காவலர்கள்அஞ்சி ஓடிவிடுவார்களா? அல்லது கையில் சிக்கும் அப்பாவிகள் மீது மட்டும்தான் பொய் (வரதட்சணை) வழக்கு பதிவு செய்ய தைரியம் இருக்கிறதா? (பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் அப்பாவிக் குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை) அப்படியென்றால் பொய் வரதட்சணை வழக்குப் போடும் காவலருக்கு பாடம் கற்பிக்க அந்த காவலரை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் அப்பாவிகள் சற்று மிரட்டினால் போதும்போலிருக்கிறதே! இப்படி சில சம்பவங்கள் நடந்தால் பொய் வழக்குப்போடும் காவலர்கள் அப்பாவிக் கணவர்களைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். இதுதான் பொய் வரதட்சணை வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி. ஏனென்றால் நீதிமன்றங்களே குடிகார விடுதிகளாக மாறிவரும்போது அங்கே அப்பாவிகளுக்கு நீதி எப்படி கிடைக்கும்? Drunk lawyer assaults senior on HC campus, held
25th October 2012 The Indian Express
|
வழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு
-
இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு
காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி
வழங்குவதற்கு பதிலாக ...
10 years ago
No comments:
Post a Comment