பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, July 29, 2010

மருமகளிடமிருந்து மகனைக் காக்கத் தந்தை தற்கொலை


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.


என்ற திருக்குறளுக்கேற்ப பல தந்தையர் தங்களது பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து பலதுறைகளிலும் சாதனை செய்யும் அறிஞர்களாக உருவாக்குகிறார்கள். கடைசியில் இந்தக்காலத்தில் மகனை சான்றோக்கினால் மட்டும் போதாது மகனை மருமகளிடமிருந்து காப்பாற்ற உயிரையும் விடவேண்டும் என்று திருக்குறளையே மாற்றி எழுதவேண்டிய நிலையில் இந்தியத் திருமண தகனமேடை அப்பாவிக் கணவர்களின் பெற்றோர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது.

சான்றோனாகிய தன் மகனின் வாழ்க்கைப் பயணத்தில் திருமணம் என்ற நிகழ்வின் மூலம் “மனைவி” என்ற உறவை ஏற்படுத்தி கண்டு மகிழ நினைக்கும் பெற்றோர் இப்போது மருமகளின் பொய் வரதட்சணை வழக்கிலிருந்து தன் மகனைக் காப்பாற்ற தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்யும் அவலநிலைக்கு பெற்றவர்களின் நிலை தள்ளப்பட்டிருக்கிறது. கீழுள்ள செய்தியில் பாருங்கள். மருமகளின் பொய் வரதட்சணை வழக்கிலிருந்து மகனைக் காப்பாற்ற ஒரு தந்தை தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார்.


Click and Read

The Telegraph 24 July 2010
"If there should be a law like 498A to protect housewives from cruel husbands and in-laws, there should also be a law to protect them from the hands of cruel women like my daughter-in-law"
-Suicide note of Prasanta Kumar Ghosh, 71


A septuagenarian father has taken his own life to “save” his son and other tortured husbands.

Prasanta Kumar Ghosh blamed his death on his daughter-in-law’s threats to slap false torture charges and demanded a law to protect husbands and in-laws in such a predicament.


“My daughter-in-law is responsible for my death. I take the decision to end my life only to save thousands of husbands and their family members from the hands of cruel women like her,” the retired government employee in Hooghly’s Mogra wrote in a neatly folded three-page note he left behind in his shirt pocket.

Ghosh’s daughter-in-law was allegedly involved in an extra-marital affair with a cop in the area. “(But) neither me nor my son could protest as she threatened every day that she would lodge a complaint against us under section 498A,” wrote the 71-year-old.

In Calcutta High Court on Friday, Justice A.K. Banerjee read the note at least twice before the division bench, also including Justice R.N. Roy, dismissed the daughter-in-law’s plea for anticipatory bail. The police have charged the 31 year-old daughter-in-law with abetment to suicide.

“I know my letter will reach a judge one day. I would like him to consider my case. If there should be a law like 498A to protect housewives from cruel husbands and in-laws, there should also be a law to protect them from the hands of cruel women like my daughter-in-law,” wrote Ghosh.

Section 498A of the Indian Penal Code was introduced in 1983 to fight harassment for dowry. Under the law, a husband and his relatives can be jailed for life. The “cruelty” charge means immediate arrest and lawyers said the accused had no option but to
wait out the investigation period. "Once the investigation reveals that a false complaint had been lodged, they can sue the woman and her kin," said advocate and ex-mayor Bikash Ranjan Bhattacharyya. Complaints about the misuse of

Section 498A have been levelled before by in-laws at the receiving end of threats.
Advocate Jayanta Narayan Chatterjee said such complaints were on the rise. “Around four out of 10 complaints of harassment against husbands and in-laws do not stand in court.” Pratip Ghosh found his father hanging at their home in Mogra, about 65km from Calcutta, when he returned home after dropping his six-year-old son at school on June 25. The police found the note in Ghosh’s pocket.

Opposing the daughter-inlaw’s plea for a reprieve, government counsel Pradip Roy furnished a copy of the FIR Pratip had filed after his father’s death. “My wife was adamant in nature and did not want to keep a good relationship with me and my father. In my absence, she used to meet a person (the cop)…. He sometimes came to our house in my absence…. My father had opposed all this... the matter has maligned us in society,” it said. Pratip is married for eight years. Ghosh had initially opposed his son’s relationship with her “but he accepted her after some time”, Pratip wrote in the FIR.

Women’s organisations chose not to read too much into the tragedy. “It is not so easy to misuse the law,” said Indrani Sinha of Sanlaap. “Even if a woman is trying to misuse section 498A, her family, in this case her father-inlaw and husband, could easily have taken precaution in the form of going to the police first and lodging a complaint. If they are innocent, they need not fear.” Sinha also pointed to the domestic violence law that “does try to protect women” but can also “be used by the men, or any member of a family who is facing a problem at home”.


இளைஞர்களே,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்கொல் எனும் சொல்.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.



என்ற குறளை பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை உங்களது இந்திய திருமணத்தின் மூலம் உங்களது பெற்றோரின் உயிருக்கு உலை வைத்து விடாதீர்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் நன்றிக் கடன் செய்யவேண்டுமென நினைத்தால் வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களின் திருமணத்திற்கு உங்களது பெற்றோரை பலியாக்கி விடாதீர்கள்.

“My daughter-in-law is responsible for my death. I take the decision to end my life only to save thousands of husbands and their family members from the hands of cruel women like her,” the retired government employee in Hooghly’s Mogra wrote in a neatly folded three-page note he left behind in his shirt pocket.


இந்த தந்தை தன் மகனுக்காக மட்டுமல்லாமல் தன் மகனைப்போல பொய்வரதட்சணை வழக்கில் சிக்கித் தவிக்கும் பல அப்பாவிகளைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரை விட்டிருக்கிறார். இப்போதாவது இந்திய தகனமேடையின் கொடூரத்தை உணர்ந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.


கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை



Wednesday, July 28, 2010

வஞ்சகத்தின் மறுபெயர் 498A மனைவி

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்வதால் நீங்கள் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் வேறுவித இன்னல்களும் காத்திருக்கிறது. பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்களுக்காகவே கணவனுக்கெதிரான புகாரில் எழுதுவதற்கென்றே ஒரு சிறப்பான குற்றச்சாட்டுப் பட்டியலே இந்தியாவில் சில வழக்கறிஞர்களிடம் கிடைக்கிறது. அந்தப்பட்டியலில் சில கேவலமான தரக்குறைவான குற்றச்சாட்டுகளும் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் கீழுள்ள செய்தியில் வந்திருப்பது போல “கணவனுக்கு ஆண்மையில்லை” அதனால் கணவனின் குடும்பம் கொடுமை செய்கிறார்கள் என்பது போன்ற புகார்கள். இன்னும் சில வினோதமான குற்றச்சாட்டுக்கள் எப்படியிருக்குமென்றால் “90 வயது தள்ளாடிக் கொண்டிருக்கும் வயதான மாமனார் மருமகளின் கையைப்பிடித்து இழுத்தார்”, இன்னும் சில புகாரில் கணவனின் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களுடனும் மருமகளை உறவு கொள்ளச் சொல்லி நாத்தனார் வற்புறுத்தியதாகவும் இருக்கும். அதற்கு உதாரணம் இந்த வழகில் இருக்கிறது --> செக்ஸ் கதை எழுதும் 498a மனைவியர். இதுபோன்ற ஆபாசக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் “வரதட்சணைக் கொடுமை” என்ற போர்வைக்குள் வைத்து நயவஞ்சகமாக IPC498A என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும். தான் நினைத்ததை அடையவேண்டும் என்பதற்காக பச்சையாக பொய் சொல்லத் துணிந்துவிட்ட பெண்ணிற்கு கொச்சையாக எழுத எந்தத் தயக்கமும் இருக்காது.


பொய் வரதட்சணைப் புகாரில் சிக்குவதே அவமானம் அதிலும் இதுபோன்ற இழிவான குற்றச்சாட்டுகளில் சிக்குவது என்பது எவ்வளவு வேதனையான விஷயம் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். வரதட்சணை வழக்கில் நீங்கள் சிக்கினால் அன்று ஒருநாள் மட்டும் செய்தித்தாள்கள் உங்களை குற்றவாளியாக சித்தரித்து செய்தி வெளியிட்டுவிடுவார்கள். அதன்பிறகு உங்கள் வழக்கில் கடைசியில் நீங்கள் குற்றமற்றவர் என்று சொல்லப்படும் தீர்ப்பை எந்த செய்தித்தாளும் வெளியிடாது. அதனால் இந்தியாவில் பொய்வழக்கில் சிக்கினால் ஏற்படும் அவமானம் எந்த நஷ்ட ஈடு கொடுத்தாலும் அழிக்கமுடியாது. குறிப்பாக ஆண்களுக்கு மானம் இருப்பதாக இந்தியாவில் யாருக்கும் எண்ணமே கிடையாது. அதனால் இதுபோன்ற இன்னல்களில் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.


ஹர்தா : பிரிந்து வாழும் கணவனின் ஆண்மை தன்மையை குறை கூறிய பெண், இரண்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு அளிக்கும்படி, மத்திய பிரதேச கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஹேமந்த் சலோதர். இவருக்கும், வந்தனா குர்ஜார் என்ற பெண்ணுக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. மூன்று மாதங்களில், வந்தனா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மாமியார் வீட்டில் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கணவருக்கு ஆண்மையில்லை எனவும், வந்தனா தன் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஹேமந்த் மீதும், அவர் பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வந்தனா புகாரில் உண்மையில்லை என்பதால், இந்த வழக்கிலிருந்து ஹேமந்தையும், அவரது பெற்றோரையும் விடுவித்து விட்டது.

இதை எதிர்த்து, வந்தனா மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட், கணவன் ஆண்மையற்றவர் என்ற புகாரின் பேரில் அவருக்கு விவாகரத்து வழங்கியது. "வந்தனாவின் புகாரால், எனக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. என்னை மணக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. இதற்கெல்லாம் காரணமான வந்தனா எனக்கு நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறி ஹேமந்த், கோர்ட்டில் மனு செய்திருந்தார். இவரது மனுவை விசாரித்த கோர்ட், "முன்னாள் கணவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, வந்தனாவுக்கு உத்தரவிட்டுள்ளது.


Monday, July 19, 2010

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?

இளைஞர்களே,

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்குகள் எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் உங்களுக்கு வரலாம். ஆனால் அப்படியும் உங்களுக்குள் ஒரு நம்பிக்கை இருக்கலாம். யார் எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் கடைசியில் நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது அங்கு நேர்மையாக நீதி கிடைக்கும் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கலாம். அப்படி நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால் எந்த நீதிமன்றத்தில் எந்த நீதிபதி இருக்கிறார் என்று ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும்.

பெரும்பாலான கீழ்நிலை நீதிமன்றங்களில் போலிஸ் கொடுக்கும் அறிக்கையை நீதிபதிகள் படித்துக்கூட பார்ப்பதில்லை. இதற்கு நல்ல உதாரணம் மும்பையில் ஒரு நீதிபதி குற்றவாளி பட்டியலில் இடம்பெற்ற 2 மாதக் குழந்தைக்கு ஜாமின்கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு நீதி எப்படி அவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதனால் இந்தியாவில் திருமணம் செய்து சட்டத்துடன் நீதிமன்றங்களில் சத்திய சோதனை செய்து பார்க்க முயலாதீர்கள்.

Two-month-old Zoya gets dragged into a dowry harassment case filed by her father's first wife. Legal experts, child rights activists react in shock at her having to get anticipatory bail to avoid arrest. In a case straight out of Ripley's Believe It Or Not, the Mumbai Sessions court last Wednesday (June 17, 2009) granted anticipatory bail for what must have been their youngest applicant ever a two-month-old baby: Zoya aka Mehak Shamshuddin Khan. Lucky for her, or Zoya could have ended up behind bars. Zoya, who has got bail on a surety amount of Rs 10,000, is a member of the Khan family from Kurla who have been accused by Shakila Khan (27) in a dowry harassment case and for a criminal breach of trust. The sessions judge S N Sardesai in his order granted bail for seven of the eight applicants who applied for the anticipatory bail.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)

Report from 2005 Report from the Transparency International India

The former Chief Justice of Supreme Court Sam Piroj Bharucha had observed that “up to 20 per cent of judges in India were corrupt.”

Is Judiciary Corrupt?

More than three-fourths (79%) of the respondents, who had been interacting with the judiciary, admitted that corruption was prevalent in the Department. Surprisingly, only 8% of those respondents felt that there was ‘no corruption’ in Judiciary. However, not much difference is seen in perception of corruption in judiciary for states having different strength of judiciary.

Experience of Corruption in Judiciary

While 38% of the respondents had experienced corruption every time they had interacted with judiciary, 53% had experienced it some time or the other. On the other hand, only 5% never experienced corruption.

Modus operandi for Bribing

During the last one year, three-fifths (59%) of respondents had paid money to lawyer, whereas 30% had paid money to court officials, and 14% to middle men to get their work done. There were higher number of respondents claiming to have paid bribe to court officials in states having low judicial strength compared to respondents from states having high judicial strength.


இதெல்லாம் எப்படி நடக்கிறது என்று உங்களுக்கு வியப்பாக இருந்தால் பின்வரும் செய்தியையும் படியுங்கள்.


புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் பணிநியமனத்தின்போது அவர்களின் நன்னடத்தை குறித்த போலீஸ் சான்றிதழ் அவசியம் என்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996-ல் காஷியா முகம்மது முஜாமில் என்பவரை கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த அவரை, குற்றச்சாட்டுகளின்பேரில் உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், காஷியா குறித்த ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மஜ்லிஸ்-இஸô-ஓ-தான்ஜிம் என்ற அமைப்பின் பொதுச்செயலராக செயல்பட்ட காஷியா, அப் பகுதி போலீஸ் நிலைய பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

1993-ல் பத்கல் பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்துக்கு காரணமானவர் என்பது உள்பட அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், அவரது குற்றப் பின்னணி குறித்து விசாரிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகம் அவரை நீதிபதியாக நியமனம் செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவந்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காஷியாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் நியமனத்தின்போது, அவர்களின் நன்னடத்தை குறித்த உள்ளூர் போலீஸôரின் சான்றிதழ் அவசியம் என்றும், நீதிபதிகள் குறித்த ரகசிய ஆய்வறிக்கையை ஆண்டுதோறும் தயார் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

=================

Indian Express Fri May 21 2010

Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him.

The Madhya Pradesh High Court has suspended Additional District and Sessions Judge Narendra Kumar Jain for concealing the matter.

As a student of Christian College in Indore, Jain, along with four friends, was involved in a brawl with a hotel owner and his son in 1983. The owner, whose nasal bone was broken, lodged a police complaint that led to the arrest of Jain and his friends.

Jain was released on bail and appeared in court once in 1985. He was declared an absconder by the court when he did not appear later despite repeated summons.

Jain cleared an examination meant for judicial officers in 1994 but suppressed the fact that he was involved in a criminal case and was facing trial.

Registrar General of Madhya Pradesh High Court T K Kaushal told The Indian Express that Jain was suspended after a vigilance inquiry. He said an inquiry had been initiated against him.

Two months ago, the High Court suspended G P Agarwal, another Additional District Judge posted in Indore. His suspension followed the seizure of his laptop after a complaint. The laptop contained two orders, one of acquittal and another conviction, in one case of chain snatching.

Agarwal alleged that a secretary he had fired, in collusion with another judge, conspired against him.

=======================

இந்தக் கதையையும் கொஞ்சம் படித்துக்கொள்ளுங்கள்.....

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 5.1.2010


M.Mohamed Essath Ali ... Petitioner

Vs.

1.The Registrar General,

High Court,

Chennai-600104.

2.The Registrar,

Vigilance,

High Court, Chennai-600104.

... Respondents

* * *

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying to issue a Writ of Certiorari to call for the entire records ending with order No.C No.39/2006/VC (in Roc.No.363/2005/VC), dated 25.6.2009, passed by the 1st respondent and quash the same.

* * *


Based on the complaint, dated 19.4.2005, sent by one T.Chandran of Tirunelveli to the Registry of the High Court, to the effect that the petitioner, while working as I Additional Sub Judge, Tirunelveli had some intimacy with Tmt.Jayanthi, Head Clerk, Fast Track Court No.I, Tirunelveli, thus facilitating her to collect money from the parties in respect of the proceedings pending before the petitioner assuring favourable judgments, a discreet enquiry was conducted by the Registrar (Vigilance) High Court, Madras against the petitioner, then I Additional Sub Judge, Tirunelveli and now a District Judge, working as Sessions Judge, Mahila Court, Chengalpattu and others.


18. However, since the time of 15 days granted in the impugned communication to the petitioner to submit his written statement of defence has already lapsed, we grant two more weeks time, from the date of receipt of a copy of this order, to the petitioner to submit his explanation to the said memo. and the disciplinary authority is directed to complete the disciplinary proceedings in accordance with law within a period of six weeks from the date of receipt of written statement of defence from the petitioner. Consequently, M.P.Nos.1 and 2 of 2009 are also dismissed. No costs.


==========

இதற்குப் பிறகும் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வரவிருக்கும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தில் நீதி பெற்று தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அந்த ஆண்டவன்தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும். இதை நான் சொல்லவில்லை. உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் சொல்லிவிட்டன.


NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.


The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system..........






Sunday, July 18, 2010

உங்கள் குடும்பம் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம் தெரியுமா?

சமீபத்தில் மக்களின் நலன் கருதி சென்னை குடும்பநல நீதிமன்றங்கள் வார விடுமுறை நாட்களில் செயல்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். அதற்கான விழாவும் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் பலரின் குடும்பப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கம் போல வழக்கறிஞர் நண்பர்கள் கூட்டம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.


பலருக்கு சிவில் வழக்குகள்தான் நீண்ட நாளாக சோறுபோட்டுக்கொண்டிருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால் இதுபோல பலரின் குடும்பங்களில் ஏற்படும் குடும்பப்பிரச்சனைகள் எளிதாக முடிந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை என்னவாகும்? அதைப் பற்றிய விஷயத்தை தெளிவாக வாரமலரில் எழுதியிருக்கிறார் அந்துமணி. இந்த செய்தியினை தொடர்ந்து வரும் அந்தக் கட்டுரையையும் படியுங்கள். பிறகு உங்களுக்கே புரியும்.

சென்னை, ஜூலை 10: கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இலவச ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைன்' தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.



இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் விவாகரத்து வரை செல்வது தடுக்கப்படுவதோடு, விவாகரத்து மனுக்களும் பெருமளவில் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வார விடுமுறையில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியது: நாட்டிலேயே முதல்முறையாக வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இங்கு செயல்பட உள்ளன.

விவாகரத்து தவிர ஜீவனாம்ச வழக்குகளும் இதேபோன்று பல மடங்கு அதிகரித்துள்ளன.மொத்தம் 12,659 வழக்குகள் சென்னையிலுள்ள 3 குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல ஆலோசனைகள் வழங்கினால் தீர்க்கப்பட்டு விடும்.கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்ட உடனேயே அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்னை சிறிதாக இருக்கும்போதே தீர்வு காண்பதோடு, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். இதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைனை' தொடங்கும் திட்டம் உள்ளது.

அதேபோல், சட்ட உதவி மையத்தில் செயல்படும் ஆலோசனை மையங்களையும் இரவு 10 மணி வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது.

=============


Women lawyers oppose holiday court proposal
The Times of India, July 8, 2010

CHENNAI: Chief justice M Yusuf Eqbal's proposal to unveil holiday courts' to hear family court cases on Saturdays has evoked mixed reactions from advocates and their associations.

While the two top associations -- Madras High Court Advocates Association and the Tamil Nadu Advocates Associations -- have made it clear that they had no objection to the proposal so long as advocates were not forced to accept the idea, two others forums -- Women Lawyers Association and the Federation of Women Lawyers in Tamil Nadu -- have condemned the suggestion.

Pointing out that several states had six-day week for the judiciary, the MHAA president RC Paul Kanagaraj said that courts could function on Saturdays only with the consent of the advocates concerned. "We, however, are not in favour of any court works on Sundays. We deprecate any move to extent holiday courts to Sundays as well," he told reporters on Wednesday.

S Prabakaran, president of TNAA, said holiday courts, as a policy, should not be thrust upon advocates. "If counsel appearing for their clients are willing to participate in holiday court proceedings, let them do so. We will not oppose it. However, constitution of more courts to hear family cases would avoid unnecessary complications," he said.

The WLA, on its part, condemned the proposal and called upon the authorities to withdraw the proposal forthwith. An extraordinary general body meeting of the WLA was convened on Wednesday, and resolutions against the proposal were adopted at the meeting, according to the WLA president D Prasanna. "We resolve to take necessary steps for sanction of more additional family courts for speedy disposal of pending cases," it said.

The federation president, K Santhakumari, said no quality justice could be expected from judges who were stressed out in the first five working days of the week, and then asked to preside over holiday courts. She denied the claim that most of the adjournments in family courts was due to non-availability of leave for the litigants. "It is wrong to assume that all litigants before family courts are working couples or those from IT background," she said, adding that the authorities must focus on simplifying the procedural formalities in family courts. "Parties need not be made to visit courts for every hearing and adjournments. It is enough if they are present for counselling, trial and examination," Santhakumari said.

Former CBI counsel Gita Ramaseshan said the higher judiciary too should think of working on holidays. Whereas rights activist Sudha Ramalingam said it was a short-sighted idea, which would not bring the desired results. A delegation of advocates is likely to meet chief justice Eqbal on Thursday to press for withdrawal of the proposal.

=======================

இந்த செய்தியைப் பாருங்கள்..... வழக்கில் சிக்கிய ஒரு அப்பாவிப் பெண்ணின் நிலை.....

தினமலர் ஜூலை 18,2010,

மேட்டூர்: வழக்கு தொடர்பாக கொடுத்த ஆவணங்கள் திரும்ப கேட்டதால் ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய வக்கீல்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூர் தாலுகா, கருங்கல்லூரை சேர்ந்த குப்புசாமி மனைவி குஞ்சம்மாள் (45). மேச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் அருணாசலம், வேலு. கருங்கல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ், குமார் ஆகியோருக்கும், குஞ்சம்மாளுக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட முடிவு செய்த குஞ்சம்மாள் வக்கீல் அருணாசலம் உதவியை நாடியுள்ளார். மேலும் வழக்கிற்கு தேவைப்படும் என்பதால் பிரச்னைக்குறிய நிலம் சம்பந்தபட்ட ஆவணங்களையும் கொடுத்துள்ளார். கடந்த 15ம் தேதி மேட்டூர் சப்-கோர்ட் முன் வக்கீல்கள் அருணாசலம், வேலு நின்று கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த குஞ்சம்மாள் வழக்கு சம்பந்தமாக கொடுத்த நிலம் சம்பந்தமான ஆவணங்களை திரும்ப தருமாறு வக்கீல்களிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக வக்கீல்களுக்கும், அவரது கட்சிக்காரரான குஞ்சம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வக்கீல் அருணாசலம் திடீரென குஞ்சம்மாளை விறகு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.நெற்றியில் தாக்கியதால் காயம் அடைந்த குஞ்சம்மாள் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி, அருணாசலம், வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலுள்ள எல்லா செய்திகளுக்கும் விளக்கம் அளிக்கின்ற வகையில் வாரமலரில் வந்த கட்டுரை.

நவம்பர் 9, 2008 அன்று தினமலர்-வாரமலரில் வந்த கட்டுரை

"கோர்ட்டுகளுக்கு ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ... லட்சக்கணக்கான கேசுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் கிடக்க, லீவு என்ன லீவு... வெள்ளைக்காரன் நீதிபதி, வக்கீல்களாக இங்கே இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்னும் தொடரணுமா? அவனுகளுக்குத்தான் கோடை வெப்பம் தாங்காதுன்னு, லீவு போட்டுட்டு அவன் ஊருக்கு ஓடினான்... இங்கேயே பொறந்து, இந்த வெயிலிலேயே வளந்த நம்ம ஆளுங்களுக்கு எதுக்கய்யா கோடைவிடுமுறை...' எனப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார் நடுத்தெரு நாராயணன் சார்.

சொத்து சம்பந்தமான அவரது வழக்கு ஒன்று, நீதி மன்றத்துக்குச் சென்று 18 வருடமாகிறதாம்... இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லையாம்... இதுதான் புலம்பலுக்குக் காரணம். அத்துடன், "பாதிக்கப்பட்டோர் கழகம்' என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட 16 பக்க இலவச வெளியீடு ஒன்றையும், என்னிடம் கொடுத்து, "படித்துப்பார்...' என்றார். புத்தகத்தில் இருந்த சில குறிப்புகள்...

"ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிற வன் ஒரு கோழியை இழப்பான்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை; இந்தக் கொடுமைக்கு யார் காரணம்?

பஸ்சில் கண்டக்டர் 25 காசு சில்லரை குறைவாகக் கொடுத்தால் அவரோடு மல்லுக்கட்டுகிறவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆயிரம் பீஸ் கொடுத்தாலும் ஒரு ரசீது வேண்டும் என்று கேட்டுப் பெறத் திராணியில்லை.

சிலர் ரசீது வேண்டும் என்று கேட்டால், "ரசீது தருகிற வழக்கமெல்லாம் கிடையாது!' என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். "பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்!' என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மீது திடீரென்று வழக்கறிஞர்களுக்குக் கரிசனம் ஏற்பட்டது எப்படி?

"ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் போது, முழு அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். பிரதிவாதி பதில் அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட வேண்டும்...' என சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

"இந்த சட்ட திருத்தத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்!' என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிகமான நன்மை தானே இருக்கிறது!


வழக்கறிஞர்கள், எந்த ஒரு வழக்கையும் நீட்டித்துக் கொண்டே போகத்தான் விரும்புகின்றனர். வழக்கறிஞர் என்றாலே வாய்தா வாங்குபவர் என்று பொருள் கொள்ளும்படி கோர்ட்டில் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஆவணங்களை மொத்தமாகத் தாக்கல் செய்து விடுவதால், எந்த ஒரு வழக்கும் இரண்டு விசாரணைகளில் முடிந்து விடும். ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து பத்து வருடம், பதினைந்து வருடம் அலைந்து திரியும் பொதுமக்களுக்கு, இரண்டே விசாரணையில் முடிந்து விட்டால் எத்தனை பெரிய ஆதாயம்! ஆனால், வழக்கு உடனடியாக முடிந்து விட்டால் வழக்கறிஞர்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவேதான், இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. போலி ஆவணங்களைத் தயார் செய்வது முழுக்க, முழுக்க தடுக்கப்பட்டு விடும்.

"ரிட் மனு தீர்ப்பின் மீது மேல் முறையீடு, உயர்நீதி மன்றத்தில் கிடையாது. மேல்முறையீடு செய்வதென்றால் இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்!' என திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கே எட்டு வருடம், பத்து வருடம் ஆகிறது. இதன் பிறகு தீர்ப்பாகி, நகல் எடுத்து அப்பீல் தொடர்ந்து முடிய மேலும் பல வருடங்கள் ஆகின்றன.

இந்தச் சட்டத்தால் உயர்நீதி மன்றத்தில் உள்ள பாதி வழக்கறிஞர்களுக்கு வருமானம் போய் விடும். எனவே தான் எதிர்க்கின்றனர். வழக்கறிஞராகத் தொழில் செய்து வருபவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

வெறுங்கையில் முழம் போடுகிற கதை முன்பு நடந்ததோ, இல்லையோ - இப்போது நடக்கிறது. எந்த முதலுமே போடாமல் லட்சம், லட்சமாக சம்பாதிப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே! வருமான வரித் துறை இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால், வழக்கறிஞர் தொழிலில் போலிகள் நிறைய புகுந்து விட்டனர். இதைக் கட்டுப் படுத்தும் ஒரு சிறு முயற்சி தான் இந்த சட்டம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்.

இந்தியாவை பொறுத்தமட்டில் சிவில் கோர்ட் நடவடிக்கைகள் வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், வழக்கறிஞர்கள் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கின்றனர். உண்மையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் பொதுமக்களைப் பாதிப்பதாக இருந்தால் மேடை போட்டுப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களைக் களத்தில் இறக்க வேண்டியதுதானே!

வழக்கறிஞர்களிடம் இருந்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தங்களை அமல் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நலம் காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஒரு விளம்பர நோட்டீஸ் அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர். இந்த நோட்டீஸில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்திய அரசு சிவில் நடைமுறை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்களை சென்னை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என உள்ளது.

சென்னையில் செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நூற்றுக் கணக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தனித்தமிழ் ஆர்வலர்கள் இவர்கள். இவர்கள் முதலில், இப்படி எழுத்துப் பிழைகளோடு வெளியிட்டு தமிழைப் பாழடித்ததற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தால் நல்லது. பாராளுமன்றம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத இவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடி ஜெயிப்பார்கள் என்று பாமரன் கூட சிரிக்க மாட்டானா?

வழக்கறிஞர்களே, உங்கள் நலனுக்காக நீங்கள் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதில் கொஞ்சமாவது பொதுநலம் கலந்திருக்க வேண்டாமா?


பொதுவாக வழக்கறிஞர்களைப் பற்றி மக்களிடம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இந்தப் போராட்டத்தால் மேலும் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமா? சிந்திப்பீர்!

இப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் கழகம், சென்னை.

— இவ்வாறு அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது; சட்டத் திருத்தங்களால் வழக்குகள் சீக்கிரம் முடியுமென்றால் நல்லது தானே!

* * *

நீதிமன்றங்களில் சிக்குபவர்களின் வாழ்வு எங்குபோய் முடியும் என்று யாரும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்து தேவையில்லாமல் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி கிரிமினல் நீதிமன்றங்களிலும், விவாகரத்திற்காக சிவில் நீதிமன்றங்களிலும் அலைந்து வாழ்வை தொலைத்துக் கொள்ளாதீர்கள்.

ஒருபுறம் காவல்துறை மறுபுறம் நீதித்துறை நடுவில் நீங்கள் சிக்கினால் ஆலையில் அகப்பட்ட கரும்புபோல உங்கள் வாழ்க்கை அவர்களுக்கு இனிக்கும், ஆனால் கடைசியில் சக்கையாகப்போவது நீங்களும் உங்களது வாழ்க்கையும்தான். அதனால் உங்கள் திருமணத்தை யோசித்து முடிவு செய்யுங்கள்.




Tuesday, July 13, 2010

அப்பாக்களும் மகன்களும் ஜாக்கிரதை!

தான் நினைத்ததை அடைய எது வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விட்டார்கள் சில பெண்கள். இளைஞர்களே ஜாக்கிரதை. கனடா நாட்டு விசா வாங்குவதற்காக தந்தையையும், மகனையும் சேர்த்து திருமணம் செய்த கலியுக பத்தினியைப் பற்றிய செய்தியைப் பாருங்கள். இதற்கும் பொய் வரதட்சணை வழக்குகளுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் கிடையாது. தான் நினைத்ததை அடையவேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் பொய் வழக்கு எழுதுவதும் இப்படித்தான். அதனால் இளைஞர்களே ஜாக்கிரதையாக இருங்கள்.

====================

தினமலர் ஜூலை 13,2010

சண்டிகார் : கனடாவில் குடியேறுவதற்காக, தந்தையையும் மகனையும் திருமணம் செய்து ஒரு இளம்பெண் மோசடி செய்துள்ளார். அவர் மீது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கனடா வாழ் இந்தியரான ராஜேந்தர் சிங் மான் (60), கடந்த 2001 ம் ஆண்டு கனடாவிலிருந்து, இந்தியா சண்டிகாரில் நிரந்தரமாக குடியேறினார். மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில், மிகப்பெரிய வீட்டில் ராஜேந்தர் தனியாக வசித்து வந்தார். கனடா நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியை அவர் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில், பிரியா இந்தர் கவுர் என்ற இளம்பெண், அவரது வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடிவந்தார். ராஜேந்தர் சிங், அவளைப் பற்றிய விவரங்களை வெளியில் விசாரித்தார். எனினும், பிரியா குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, அவளை வீட்டை காலி செய்து அனுப்பிவிட்டார். சில மாதங்கள் கழித்து, பிரியா மீண்டும் ராஜேந்தர் சிங்கிடம் வந்து, தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கேட்டாள். அவள்மீது இரக்கம் கொண்ட ராஜேந்தர் தனக்கு உதவியாளராக வேலைக்கு வைத்துக்கொண்டார்.

பின்னர், அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட, இருவரும் 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தன்னை கனடாவுக்கு அழைத்துப் போகுமாறும், அங்கேயே குடியேறிவிடலாம் என்றும் நச்சரிக்கத் தொடங்கினாள். ஆனால், தான் இனிமேல் ஒருபோதும் கனடாவுக்கு திரும்பிச் செல்லப்போவதில்லை என, ராஜேந்தர் உறுதியாக தெரிவித்து விட்டார். கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த பிரியா, அவரை கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து செய்துவிட்டாள். அதன் பிறகு, பிரியாவைப் பற்றி எந்த தகவலும் ராஜேந்தரின் காதுக்கு வரவில்லை. மாற்றம் விரும்பி, ராஜேந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 2004ம் ஆண்டு சண்டிகாரில் உள்ள பழைய வீட்டிற்கு மீண்டும் பிரியா வந்தார். அங்கு ராஜேந்தரின் மகன் ராஜன் மான் இருந்தார். அவர், ராஜேந்தருக்கும், அவரின் கனடா மனைவிக்கும் பிறந்தவராவார். அவர் கனடாவிலேயே படித்து வளர்ந்தவர். அவருக்கு கனடா குடியுரிமை உள்ளது. ராஜனுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, சில வாரங்களில் அவரை திருமணமும் செய்து கொண்டார் பிரியா. பின்னர், அவரிடமும் தன்னை கனடா அழைத்துப்போக வேண்டும் என்ற வற்புறுத்தினார். இதனிடையே, தனது மகனைப் பார்க்க வந்த ராஜேந்தர், தனது முன்னாள் மனைவி, தனது மகனுக்கு மனைவியாக இருப்பதை கண்டு அதிர்ந்து, எல்லா உண்மைகளையும் ராஜனிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, ராஜன் தங்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்தார்.

மேலும், டில்லியில் உள்ள கனடா தூதரகத்தின் மூலம், பிரியா தன்னை ராஜன் மனைவி என்று கூறிக்கொண்டு அந்நாட்டு விசாவுக்காக, போலி ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மத்திய பிரதேசத்தில் ஒரு கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கனடாவுக்குச் செல்ல பிரியா காட்டிய அதீத ஆர்வத்திற்கு என்ன காரணம் என்றும், அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

====================

இப்படித்தான் கொஞ்ச நாட்களுக்கு முன் மாமனாரின் சொத்தை தன் பெயருக்கு மாற்ற “குடும்ப வன்முறை சட்டத்தை’’ பயன்படுத்தினார் ஒரு மருமகள்! அந்த செய்தியை கீழே உள்ள இணைப்பில் படித்துப்பாருங்கள்.

நீங்கள் அஜாக்கிரதையாக இருந்தால் வெளிநாட்டுக் குடியுரிமை, குடும்ப சொத்து போன்றவை கிடைக்கிறது என்று தெரிந்தால் “குடும்ப வன்முறை” சட்டத்தின் மூலம் உங்கள் குடும்பத்திலுள்ள ஆண்கள் அனைவரையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ளலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.