இளைஞர்களே,
இந்தியாவில் திருமணம் செய்வதால் நீங்கள் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் வேறுவித இன்னல்களும் காத்திருக்கிறது. பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்களுக்காகவே கணவனுக்கெதிரான புகாரில் எழுதுவதற்கென்றே ஒரு சிறப்பான குற்றச்சாட்டுப் பட்டியலே இந்தியாவில் சில வழக்கறிஞர்களிடம் கிடைக்கிறது. அந்தப்பட்டியலில் சில கேவலமான தரக்குறைவான குற்றச்சாட்டுகளும் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் கீழுள்ள செய்தியில் வந்திருப்பது போல “கணவனுக்கு ஆண்மையில்லை” அதனால் கணவனின் குடும்பம் கொடுமை செய்கிறார்கள் என்பது போன்ற புகார்கள். இன்னும் சில வினோதமான குற்றச்சாட்டுக்கள் எப்படியிருக்குமென்றால் “90 வயது தள்ளாடிக் கொண்டிருக்கும் வயதான மாமனார் மருமகளின் கையைப்பிடித்து இழுத்தார்”, இன்னும் சில புகாரில் கணவனின் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களுடனும் மருமகளை உறவு கொள்ளச் சொல்லி நாத்தனார் வற்புறுத்தியதாகவும் இருக்கும். அதற்கு உதாரணம் இந்த வழகில் இருக்கிறது --> செக்ஸ் கதை எழுதும் 498a மனைவியர். இதுபோன்ற ஆபாசக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் “வரதட்சணைக் கொடுமை” என்ற போர்வைக்குள் வைத்து நயவஞ்சகமாக IPC498A என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும். தான் நினைத்ததை அடையவேண்டும் என்பதற்காக பச்சையாக பொய் சொல்லத் துணிந்துவிட்ட பெண்ணிற்கு கொச்சையாக எழுத எந்தத் தயக்கமும் இருக்காது.
பொய் வரதட்சணைப் புகாரில் சிக்குவதே அவமானம் அதிலும் இதுபோன்ற இழிவான குற்றச்சாட்டுகளில் சிக்குவது என்பது எவ்வளவு வேதனையான விஷயம் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். வரதட்சணை வழக்கில் நீங்கள் சிக்கினால் அன்று ஒருநாள் மட்டும் செய்தித்தாள்கள் உங்களை குற்றவாளியாக சித்தரித்து செய்தி வெளியிட்டுவிடுவார்கள். அதன்பிறகு உங்கள் வழக்கில் கடைசியில் நீங்கள் குற்றமற்றவர் என்று சொல்லப்படும் தீர்ப்பை எந்த செய்தித்தாளும் வெளியிடாது. அதனால் இந்தியாவில் பொய்வழக்கில் சிக்கினால் ஏற்படும் அவமானம் எந்த நஷ்ட ஈடு கொடுத்தாலும் அழிக்கமுடியாது. குறிப்பாக ஆண்களுக்கு மானம் இருப்பதாக இந்தியாவில் யாருக்கும் எண்ணமே கிடையாது. அதனால் இதுபோன்ற இன்னல்களில் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

ஹர்தா : பிரிந்து வாழும் கணவனின் ஆண்மை தன்மையை குறை கூறிய பெண், இரண்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு அளிக்கும்படி, மத்திய பிரதேச கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஹேமந்த் சலோதர். இவருக்கும், வந்தனா குர்ஜார் என்ற பெண்ணுக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. மூன்று மாதங்களில், வந்தனா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மாமியார் வீட்டில் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கணவருக்கு ஆண்மையில்லை எனவும், வந்தனா தன் புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஹேமந்த் மீதும், அவர் பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வந்தனா புகாரில் உண்மையில்லை என்பதால், இந்த வழக்கிலிருந்து ஹேமந்தையும், அவரது பெற்றோரையும் விடுவித்து விட்டது.
இதை எதிர்த்து, வந்தனா மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட், கணவன் ஆண்மையற்றவர் என்ற புகாரின் பேரில் அவருக்கு விவாகரத்து வழங்கியது. "வந்தனாவின் புகாரால், எனக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. என்னை மணக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. இதற்கெல்லாம் காரணமான வந்தனா எனக்கு நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறி ஹேமந்த், கோர்ட்டில் மனு செய்திருந்தார். இவரது மனுவை விசாரித்த கோர்ட், "முன்னாள் கணவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, வந்தனாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment