தினமலர் ஜூலை 13,2010சண்டிகார் : கனடாவில் குடியேறுவதற்காக, தந்தையையும் மகனையும் திருமணம் செய்து ஒரு இளம்பெண் மோசடி செய்துள்ளார். அவர் மீது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடா வாழ் இந்தியரான ராஜேந்தர் சிங் மான் (60), கடந்த 2001 ம் ஆண்டு கனடாவிலிருந்து, இந்தியா சண்டிகாரில் நிரந்தரமாக குடியேறினார். மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில், மிகப்பெரிய வீட்டில் ராஜேந்தர் தனியாக வசித்து வந்தார். கனடா நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியை அவர் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில், பிரியா இந்தர் கவுர் என்ற இளம்பெண், அவரது வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடிவந்தார். ராஜேந்தர் சிங், அவளைப் பற்றிய விவரங்களை வெளியில் விசாரித்தார். எனினும், பிரியா குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, அவளை வீட்டை காலி செய்து அனுப்பிவிட்டார். சில மாதங்கள் கழித்து, பிரியா மீண்டும் ராஜேந்தர் சிங்கிடம் வந்து, தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கேட்டாள். அவள்மீது இரக்கம் கொண்ட ராஜேந்தர் தனக்கு உதவியாளராக வேலைக்கு வைத்துக்கொண்டார்.பின்னர், அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட, இருவரும் 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தன்னை கனடாவுக்கு அழைத்துப் போகுமாறும், அங்கேயே குடியேறிவிடலாம் என்றும் நச்சரிக்கத் தொடங்கினாள். ஆனால், தான் இனிமேல் ஒருபோதும் கனடாவுக்கு திரும்பிச் செல்லப்போவதில்லை என, ராஜேந்தர் உறுதியாக தெரிவித்து விட்டார். கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த பிரியா, அவரை கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து செய்துவிட்டாள். அதன் பிறகு, பிரியாவைப் பற்றி எந்த தகவலும் ராஜேந்தரின் காதுக்கு வரவில்லை. மாற்றம் விரும்பி, ராஜேந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2004ம் ஆண்டு சண்டிகாரில் உள்ள பழைய வீட்டிற்கு மீண்டும் பிரியா வந்தார். அங்கு ராஜேந்தரின் மகன் ராஜன் மான் இருந்தார். அவர், ராஜேந்தருக்கும், அவரின் கனடா மனைவிக்கும் பிறந்தவராவார். அவர் கனடாவிலேயே படித்து வளர்ந்தவர். அவருக்கு கனடா குடியுரிமை உள்ளது. ராஜனுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, சில வாரங்களில் அவரை திருமணமும் செய்து கொண்டார் பிரியா. பின்னர், அவரிடமும் தன்னை கனடா அழைத்துப்போக வேண்டும் என்ற வற்புறுத்தினார். இதனிடையே, தனது மகனைப் பார்க்க வந்த ராஜேந்தர், தனது முன்னாள் மனைவி, தனது மகனுக்கு மனைவியாக இருப்பதை கண்டு அதிர்ந்து, எல்லா உண்மைகளையும் ராஜனிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, ராஜன் தங்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்தார்.மேலும், டில்லியில் உள்ள கனடா தூதரகத்தின் மூலம், பிரியா தன்னை ராஜன் மனைவி என்று கூறிக்கொண்டு அந்நாட்டு விசாவுக்காக, போலி ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மத்திய பிரதேசத்தில் ஒரு கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கனடாவுக்குச் செல்ல பிரியா காட்டிய அதீத ஆர்வத்திற்கு என்ன காரணம் என்றும், அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இப்படித்தான் கொஞ்ச நாட்களுக்கு முன் மாமனாரின் சொத்தை தன் பெயருக்கு மாற்ற “குடும்ப வன்முறை சட்டத்தை’’ பயன்படுத்தினார் ஒரு மருமகள்! அந்த செய்தியை கீழே உள்ள இணைப்பில் படித்துப்பாருங்கள்.
நீங்கள் அஜாக்கிரதையாக இருந்தால் வெளிநாட்டுக் குடியுரிமை, குடும்ப சொத்து போன்றவை கிடைக்கிறது என்று தெரிந்தால் “குடும்ப வன்முறை” சட்டத்தின் மூலம் உங்கள் குடும்பத்திலுள்ள ஆண்கள் அனைவரையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ளலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
1 comment:
உட்காந்து யோசிப்பாங்களோ!
நல்லவேலை முன்னாடியே compliant கொடுத்துட்டார் இல்லவிடில் இவரையும அதவாது மகனையும் தந்தையையும் திருமணம் செய்த பெண்குலதிலகம் இருவர் மீதும் வரதட்சணை கொடுமையில் சிக்கவைத்து சின்னாபின்னமாக்கி பணம் கறந்திருப்பார்
தொடரட்டும் புதுமைகள்! வாழ்க வளர்க இதுபோல் புதுமை பெண்கள்(??)
Post a Comment