பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, April 12, 2014

இந்திய ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி எண்


இந்தியாவில் அப்பாவி ஆண்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் “சட்ட தீவிரவாதம்” என்னும்  பொய் வரதட்சணை வழக்குகள், பொய் குடும்ப வன்முறை வழக்குகள், பொய் கற்பழிப்பு வழக்குகள் போன்றவற்றில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கும்போது பிணந்திண்ணும் கழுகு போல காவல் நண்பர்கள், சட்ட நண்பர்கள்  எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று பல ஆயிரங்கள், லட்சங்கள்  என பணம் பறிக்க முயற்சி செய்வார்கள்.

இது போன்று இந்திய சட்ட தீவிரவாதத்தால் திக்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்ய Save Indian Family Foundation – SIFF என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலவச உதவி தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது.  குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.  கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் தேவைப்படும்.  ஏனென்றால் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு ஆணின் தலைமேலும் பொய் வழக்கு என்ற கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.  இது என்று தலையில் விழும் என்று தெரியாது.  அதுவரை ஏதோ சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால் கண்டிப்பாக ஒருநாள் அந்த கத்தி உங்கள் தலையை பதம் பார்த்துவிடும் என்பது உறுதி.