பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, April 14, 2012

இந்திய பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் தெரியுமா?

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் அதிகமாகிவிட்டன என்று பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்களே அது எப்படி இருக்கும்? என்று பலருக்கும் தெரிந்திருக்காது. ஏனென்றால் பொதுவாக நமக்கு எதுவும் நடக்காதவரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் பல காலமாக வழக்கமாக இருக்கிறது. அதனால் இந்த பொய் வரதட்சணை வழக்கின் தீவிரம் எப்படிப்பட்டது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே குற்றமாக செய்தால் எந்த அளவிற்கு ஒரு அப்பாவிக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவிற்கான மீளமுடியாத பாதிப்பை மருமகள் கொடுக்கும் ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கே அரசாங்கத்தின் உதவியுடன் சட்டத்தின் துணையோடு கட்டவிழுத்துவிடப்படும் இந்த வன்முறையின் மூலம் உருவாக்கிவிடுவார்கள். அதனால்தான் இதனை இந்திய உச்ச நீதிமன்றமே “சட்ட தீவிரவாதம்” (Legal Terrorism) என்று வன்மையாக கண்டித்திருக்கிறது.

இந்த இந்திய சட்ட தீவிரவாதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பாருங்கள். இளைஞர்களே, இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்வது எந்த அளவிற்கு ஆபத்தானது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவில் பெண்ணை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் இருக்கும் தவறான சட்டங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் கூறியிருக்கும் உண்மையை பாருங்கள்.Wednesday, April 11, 2012

இந்திய ஆண்களுக்கு எந்த சட்டமும் கிடையாது. இப்பொழுதாவது நம்புவீர்களா?

இளைஞர்களே,

ஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டான் அவனை போலிஸ் சிறையில் அடைத்தார்கள் என்ற செய்தியை நீங்கள் அடிக்கடி செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். ஆனால் பெண் ஒரு ஆணை காதலித்து ஏமாற்றினாள் என்ற செய்தியை எப்போதாவது செய்தித்தாளில் பார்திருப்பீர்களா? அப்படியென்றால் காதலிக்கும் ஆணை எந்தப் பெண்ணும் ஏமாற்றுவதே கிடையாதா??

நீங்கள் தவறு செய்தாலும் சரி, தவறு செய்யாவிட்டாலும் சரி இந்தியாவில் ஒரு பெண் உங்கள் மீது புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் நீங்கள் எந்த வழக்கும் அந்தப் பெண்மீது தொடுக்க முடியாது. ஏனென்றால் தவறு செய்யும் பெண்ணை தண்டிக்க இந்தியாவில் சட்டங்களே இல்லை.

அப்படி இருக்கும் ஒன்றிரண்டு சட்டங்களையும் காவல்துறையும் நீதித்துறையும் மதிப்பதில்லை. ஒட்டு மொத்த சமுதயாமும் ஆணைத் தண்டிக்க மட்டுமே தயாராக இருக்கிறது. அவன் தவறு செய்யவில்லை என்றாலும் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அதுபோல ஒரு ஆணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றியும் யாரும் கவலைப்படமாட்டார்கள்.

பின்வரும் செய்தியையும் வீடியோவையும் பாருங்கள்.

தாம்பரம்: பொறியியல் படித்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். மேற்கு தாம்பரம், லட்சுமிபுரம் விரிவை சேர்ந்தவர் சர்மிளா,32. பொறியியல் பட்டதாரி. இவர், தாம்பரம் மகளிர் போலீசில், நேற்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2001ம் ஆண்டு பி.இ., படித்தபோது, என்னுடன் படித்த வண்டலூரை சேர்ந்த கார்த்திகேயன்,32, என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை காதலித்தேன். என்னை அவர் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, தனக்கு இரண்டு சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு திருமணம் முடிந்த பின், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். இருவருக்கும் திருமணம் முடிந்தும், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

தற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடைய தாயின் தூண்டுதலின்படி, பத்து வருடங்களாக காதலித்த என்னை, திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டு, மற்றொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். போலீசார் கார்த்திகேயனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.Sunday, April 8, 2012

லஞ்சம் வாங்கினால் தண்டனையே இல்லாத ஒரு துறை!!!

ஒன்இந்தியா வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 6, 2012


சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த மக்களிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் 14 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் வீடியோ தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் பிரிவு, ஆவண மோசடி தடுப்பு பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு, நிலமோசடி தடுப்பு பிரிவு உள்பட 15 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள 6 சிறப்பு எஸ்.ஐ. உள்பட 14 காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் ராதிகாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அவர்கள் 14 பேரையும் ரகசியமாக கண்காணிக்க அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு கட்டபஞ்சாயத்து செய்ததும், மாமூல் வாங்கியதும் தெரிய வந்தது. இதனையடுத்து துணை ஆணையர் ராதிகா பரிந்துரைப்படி மக்களிடம் லஞ்சம் வாங்கிய 14 பேரையும் இடமாற்றம் செய்து ஆணையர் திரிபாதி உத்தரவிட்டார்.

இடமாற்றம் செய்யப்பட்ட போலீசாரில் 6 பேர் சிறப்பு எஸ்.ஐ.களாக உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடதக்கது.


Tuesday, April 3, 2012

இந்திய ஆண்கள் படிக்கக்கூடாத ஒரு செய்திக் கட்டுரை!

பெண்ணுரிமை என்ற பெயரில் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள ஒருதலைபட்சமான சட்டங்களால் இந்திய ஆண்களுக்கு தினந்தோறும் சட்டத்தின் துணையோடு இழைக்கப்படும் அநீதியைப் பற்றிய விழிப்புணர்ச்சிக் கட்டுரையை ஒரு பெண் எழுத்தாளர் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார்.

இளைஞர்களே, இதைப் படித்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்யலாமா என்று சற்று யோசியுங்கள்.

(நன்றி: http://inandoutchennaifortnightly.blogspot.com/)

(Click and Read)

பக்கம்-1