பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, April 14, 2012

இந்திய பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் தெரியுமா?

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் அதிகமாகிவிட்டன என்று பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்களே அது எப்படி இருக்கும்? என்று பலருக்கும் தெரிந்திருக்காது. ஏனென்றால் பொதுவாக நமக்கு எதுவும் நடக்காதவரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் பல காலமாக வழக்கமாக இருக்கிறது. அதனால் இந்த பொய் வரதட்சணை வழக்கின் தீவிரம் எப்படிப்பட்டது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே குற்றமாக செய்தால் எந்த அளவிற்கு ஒரு அப்பாவிக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவிற்கான மீளமுடியாத பாதிப்பை மருமகள் கொடுக்கும் ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கே அரசாங்கத்தின் உதவியுடன் சட்டத்தின் துணையோடு கட்டவிழுத்துவிடப்படும் இந்த வன்முறையின் மூலம் உருவாக்கிவிடுவார்கள். அதனால்தான் இதனை இந்திய உச்ச நீதிமன்றமே “சட்ட தீவிரவாதம்” (Legal Terrorism) என்று வன்மையாக கண்டித்திருக்கிறது.

இந்த இந்திய சட்ட தீவிரவாதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பாருங்கள். இளைஞர்களே, இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்வது எந்த அளவிற்கு ஆபத்தானது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவில் பெண்ணை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் இருக்கும் தவறான சட்டங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் கூறியிருக்கும் உண்மையை பாருங்கள்.8 comments:

498ஏ அப்பாவி said...

நான் வரதட்ச​ணை வாங்காமல் திருமணம் ​செய்​தேன்.
அதற்கு கி​டைத்த பரிசு 498A ​பொய் வரதட்ச​ணை வழக்கு...

​மேலதிக விபரங்களுக்கு

http://ipc498a-victim.blogspot.com

Anonymous said...

Hi Kindly go through the following link..This content has been removed from original source Mumbai mirror due legal requirements, so kindly remove this post from your blog. Thanks for your understanding and co-operation
Thanks & Regards,

http://ipc498a-crematorium.blogspot.com/2009/12/blog-post_27.html

ganabathy said...

சமீப காலமாக இந்தியாவில் பெண்ணுரிமை என்னும் பெயரில் இந்திய ஆண்களை ஒடுக்கும் அராஜகங்கள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பாவி ஆண்களும், குடும்பங்களும், கலாச்சாரங்களும் ஆண்களின் தொழில்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.
அவைகளில் முக்கியமானவை,
1 ) வரதட்சினை தடுப்புச்சட்டம் :
பாதிக்கப்பட்ட பெண்களை விட பாதிக்கப்படாத பெண்கள் தரும் பொய் புகார்களால் நிலைகுலையும் குடும்பங்களும், முதியவர்களும், பணிகளில் கவனம் செலுத்தமுடியாத ஆண்களும் அதிகம்.
2 ) குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்.
பெண் என்னும் ஒரே போர்வையில் நல்லொழுக்க பெண்களையும், தரம் கெட்ட பெண்களையும் சமமாக வைப்பதால் தரம் கெட்ட, பலி, பாவங்களுக்கு அஞ்சாத பெண்களால் உண்டாகும் விளைவுகள் தனிமனித உயிருக்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இவைகள் போதாதென்று மனைவி விவாகரத்து கோரினால் கணவன் எதிர்த்தாலும் மனைவிக்கு உடனே விவாகரத்து வழங்கப்படுவதொடு கணவனின் சொத்தில் மனைவிக்கு சரி பாதி உரிமையுண்டு. அதே காரணத்திற்காக கணவன் விவாகரத்து கோரினால் மனைவி மறுத்தால் கணவனுக்கு விவாகரத்து மறுக்கப்படும். ஒருவேலை மனைவியின் ஒப்புதலுடன் கணவனுக்கு விவாகரத்து கிடைத்தாலும் மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற சமநீதி இல்லாத சட்டத்திற்கு கேபினெட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்தகைய சட்டங்களால் பெண்கள் திருமணங்களின் மூலம் பெருமளவு பொருள் ஈட்டும் எளிய வழி உருவாக்கப்பட்டுள்ளது., திருமணங்கள் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய சட்டபூர்வமான, லாபகரமான தொழிலாக ( LEGAL PROSTITUTION ) மாற்றப்பட்டுள்ளது.

ganabathy said...

நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களின் வளமான வாழ்விற்கு வழி செய்தால் வரவேற்கலாம். ஆனால் ஏற்கனவே பெண்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட சட்டங்களால் சாதித்திருப்பது என்ன ?
1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.
2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்
3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.
4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.
5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.
6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
7 ) இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன.

ganabathy said...

இத்தகைய சட்டங்களை இந்த மண்ணில் பிறந்த, தேச பற்று மிக்க உண்மையான இந்திய குடிமகனுக்கு ஆதரிக்கும் எண்ணம் இருக்காது.
ஆனால் இத்தகைய அநியாய சட்டங்கள் அரங்கேருவதற்க்கு யார் காரணம் ? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? யார் ?
நிச்சயமாக வர்த்தக நோக்கம் கொண்ட திருடர்களான பன்னாட்டு நிறுவனங்களும் , ஊழல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும், தான்.


• தற்போதைய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 சதவீதத்திற்கும் மேர்பட்டவர்கள் மீது கிரிமினல் குற்றசாட்டுகள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவிக்கிறது.
• ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவதர்க்காக இந்திய அமைச்சகங்களுக்கும், பெண்ணுரிமை வாத அமைப்புகளுக்கும் 2010-2011 ஆண்டிற்காக ரூபாய் 67,749.80 கோடி பண பட்டுவாட செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


நமது நாட்டு மக்கள் ஊழல் பெருச்சாளிகளை தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளுக்கு வியாபார உலகின் திருடர்கள் லஞ்சத்தை வாரி வழங்குகிறார்கள். இதன் மூலம் இந்த பன்னாட்டு வியாபாரிகள் நாட்டை தங்களின் மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள்.
ஏமாற்று பிரசாரங்களை செய்து எத்தகைய பொருட்களையும் விற்று தீர்க்கும் வல்லமை படைத்த வியாபார உலகம், பலகாலமாக ஆண்களை தங்கள் வியாபார இலக்காக கொண்டு விரும்பத்தகாத மணமுடைய சிகரேட், பீடி, மற்றும் மது வகைகளையே ஆண்மையின் அடையாளம் என்று விற்று வந்தது. ஆண்களை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளையும் விற்று ஒரு உச்சபட்ச நிலையை ( saturation ) அடைந்த நிலையில், ஆண்களை குறிவைத்து ஒரு சில பொருட்களையே வியாபாரம் செய்ய வாய்ப்புகள் உள்ள நிலையில், பெண் இனத்தை தங்கள் வியாபார இலக்காக கொண்டால் கணக்கிலடங்காத பொருட்களை சந்தை படுத்த வாய்ப்புகள் உள்ளதாக உணர்ந்தது. அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பெண்களால் தங்கள் வியாபாரம் வளர்ச்சி அடையாது என்பதை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் சாதுரியமான செயல்பாடுகளால் பெண்களின் அறநெறி கட்டுப்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்ய திட்டமிட்டது. அதற்காக ஒவ்வொரு பொருளாதார நாடுகளிலும் ஊழல் பெருசாளிகலான அரசியல் வாதிகளை லஞ்ச லாவண்யங்கள் மூலம் அடக்கி நாட்டை தங்கள் மறைமுக கட்டுப்பட்டில் கொண்டு வந்தனர். இதன்பிறகு பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவது மட்டுமல்ல தங்கள் வியாபாரத்திற்கு தடையாக பெண்களை கட்டுபடுத்தும் ஆண்களை ஒடுக்கும் பணிகளையும் ஒருசேர செய்துவந்தனர். அவர்கள் நவீன யுகத்தில் சொந்த மண்ணில் பிறந்த ஆண்களை தொலைவிலிருந்து ஒடுக்கும் ரிமொட்கான்ரோல்களாக செயல்படுகின்றனர்.
அமேரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார நாடுகளை பதம் பார்த்து, அங்கு மனநல மருத்துவர்களுக்கு பற்றாகுறை ஏற்படுமளவுக்கு மனநல நோயாளிகளை உருவாக்கி சமூகத்தை சீரழித்த இந்த பன்னாட்டு வியாபார சக்திகளின் தற்போதைய இலக்கு தற்பொழுது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நம் இந்திய நாடு.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் தாராளமயமாக்கல் கொள்கையின் முழு பலனையும் அடைய விரும்பும் வியாபார சக்திகள், இந்திய பெண் இனத்தை முழுமையாக பயன்படுத்த தலைப்பட்டுவிட்டன. பெண்களுக்கான சமூக கட்டுபாடுகளை நீக்கி, பெண்களின் உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதற்க்கு ஆண் இனத்தை அடி பணிந்து போகும் படியான அபாண்டமான சட்டங்களை பெண்ணுரிமை என்னும் பெயரால் அரங்கேற்றி வருகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையோடு, வியாபார சக்திகளின் சேவகனான நம் நாட்டு ஊழல் அரசியல்வாதிகள் அரங்கேற்றி வருகிரார்கள். கூலிக்கு மாரடிப்பவர்கலாக ஊடகங்கள் தன் பங்கை செய்கிறது.

ganabathy said...

அணைவரும் அறிந்த ஒரு புகழ் பெற்ற கதையை இங்கு காண்போம் .
ஒரு முட்டாள் மன்னனிடம் வியாபாரம் செய்ய நினைத்த துணி வியாபாரி “ தான் கொடுக்கப்போகும் ஆடை முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும் “ என்று இல்லாத ஆடையை இருப்பதாக பொய் கூறி மன்னனிடம் ஒரு காலி பெட்டியை கொடுக்க, அதனை பெற்ற முட்டாள் மன்னன் தன்னை புத்திசாலி என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள தான் அந்த ஆடையை உடுத்திகொண்டதாக நிர்வாணமாக உலாவருவதும், அதனை கண்ட மக்களும் தங்களை புத்திசாளிகலாக காட்டிக்கொள்ள மன்னன் அழகான ஆடை அணிந்திருப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிகொண்டிருக்கும் சம்பவங்களே நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.
நாட்டு நலனில் உண்மையான அக்கறை இல்லாத ஊழல் அரசியல்வாதிகள் தங்களை புரட்சியாலர்களாகவும்,புத்திசாலிகளாகவும் மட்டுமே நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பியும், தனிப்பட்ட ஆதாயத்திர்க்காகவும் “ ஆண் ஆதிக்கம், பெண் அடிமை “ என்னும் இல்லாத ஆடையை அணிந்துகொண்டு நிர்வாணமாக உலாவருகிரார்கள். ஊடகங்களும்,பேச்சாளர்களும் அரசியல்வாதிகளை அப்பட்டமாக அறிந்த நிலையிலும் கூட தங்களை புத்திசாலிகள் என்று மற்றவர்களுக்கு உணர்த்த விரும்பியும்,சுய ஆதாயத்திற்க்காகவும் இந்த கோஷங்களுக்கு கொடிபிடித்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதோடு ஏதுமறியாத மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். ஒன்றுமறியாத மக்கள் இவர்களை பின்தொடர்ந்து கோசங்களை எழுப்பிகொண்டுள்ளனர். இதனால் உச்சிகுளிர்ந்து ஓட்டுகளை கணக்கு போடும் அரசியல்வாதிகள் தங்கள் செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்துகிரார்கள். இவ்வாறு ஆபத்தான சுழற்சிமுறை ( VISIOUS CYCLE ) தொடர்கிறது.
இன்று ஆண்கள் பெண்களை அடிமை படுத்தியிருப்பது உண்மையானால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் ஆண்களிடமிருந்து முற்றிலும் விடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை சுதந்திரமாக தாங்களே தேடிக்கொள்ளட்டுமே. விவாகரத்திற்கு பிறகும் ஆண்களின் இரத்தத்தை ஏன் குடிக்கவேண்டும்.

ganabathy said...

வியாபார சக்திகள் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெறுவது ஒன்றரை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதிவேக வாகனப் பந்தயத்தில் சீறி பாய்ந்து கொண்டிருக்க, அந்த வாகன சக்கரங்களில் நசுங்கி சாகும் ஏறும்புகளாக செத்துக்கொண்டிருக்கிறது நமது அறநெறி கலாச்சாரம்.
பலநூறு ஆண்டுகளாக ஆண்களை மையப்படுத்திய வியாபாரத்தில் பெரிய அளவில் கலாச்சார சீரழிவு ஏற்பட்டதில்லை. ஆனால் பெண்களை குறியாக கொண்ட வியாபாரத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இந்திய கலாச்சாரம் தனது இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறது.
வாழ்வியல் நெறிமுறைகள் இல்லாமல், கெட்டழிந்து, புத்தி தெளிவுபெற நினைக்கும் மேலை நாடுகள், அஹிம்சை, ஆன்மிகம், அறநெறி என்று நல்வாழ்வியல் நெறிக்கு பாடம் பயில நம்மிடம் யாசகம் கேட்கும்பொழுது நாம் அவர்களை ஆசானாக நினைப்பது தகுமா? நம் கலாச்சார பொக்கிஷங்களை அழித்து அந்நிய அழுகிய பிணங்களை நிரப்புவது நியாயமா ?
பொதுநலமுடைய, அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமே கொண்டு அறநெறி பாதையில் செல்லும் குடிமக்கள் உள்ள சமூகத்தில் பணத்திற்கு மதிப்பு இருக்காது. இந்த காகிதங்களுக்கு மதிப்பு கூட்ட சுயநல சிந்தனைகளை விதைக்கும் வியாபார உலகை ஊக்குவிப்பது நியாயமா ? சுயநல எண்ணம் கொண்டோர் உள்ள குடும்பமே உருப்பட வாய்ப்பு இல்லாத பொழுது, நாடு தாங்குமா ?
18 ம் நூற்றாண்டில் தொடங்கி இந்தியாவை அடிமைபடுத்தி சுரண்டிவந்த மேற்கத்தியர்களிடமிருந்து விடுதலை அடைந்த நம்மை நமது ஊழல் அரசியல்வாதிகள் “பெண் அடிமை” என்னும் மாயை வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் மேற்கத்தியர்களின் “ அடிமை தேசமாக “ மாற்றிவருகிறார்கள்.
மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்கள் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.

தகனமேடை said...

//Anonymous Anonymous said...

Hi Kindly go through the following link..This content has been removed from original source Mumbai mirror due legal requirements, so kindly remove this post from your blog. Thanks for your understanding and co-operation
Thanks & Regards,

http://ipc498a-crematorium.blogspot.com/2009/12/blog-post_27.html//

This post has been removed.