இளைஞர்களே, இதைப் படித்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்யலாமா என்று சற்று யோசியுங்கள்.
(நன்றி: http://inandoutchennaifortnightly.blogspot.com/)


ஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRASM.P. No.1 of 2008 in Crl.O.P. No.10896 of 2008
DATED: 04.08.2008
CORAM
THE HON'BLE MR. JUSTICE R.REGUPATHI
Citation: JT 2005 (6) SC 266
Honourable Judges: Arijit Pasayat and H.K. Sema, JJ."The object of the provision is prevention of the dowry menace. Merely because the provision is constitutional and intra vires, does not give a licence to unscrupulous persons to wreck personal vendetta or unleash harassment. It may, therefore, become necessary for the legislature to find out ways how the makers of frivolous complaints or allegations can be appropriately dealt with. As noted above the object is to strike at the roots of dowry menace. But by misuse of the provision a new LEGAL TERRORISM can be unleashed. The provision is intended to be used a shield and not an assassin's weapon. If cry of "wolf" is made too often as a prank assistance and protection may not be available when the actual "wolf" appears. "
3 comments:
http://inandoutchennaifortnightly.blogspot.com
பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது
சமீப காலமாக இந்தியாவில் பெண்ணுரிமை என்னும் பெயரில் இந்திய ஆண்களை ஒடுக்கும் அராஜகங்கள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பாவி ஆண்களும், குடும்பங்களும், கலாச்சாரங்களும் ஆண்களின் தொழில்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.
அவைகளில் முக்கியமானவை,
1 ) வரதட்சினை தடுப்புச்சட்டம் :
பாதிக்கப்பட்ட பெண்களை விட பாதிக்கப்படாத பெண்கள் தரும் பொய் புகார்களால் நிலைகுலையும் குடும்பங்களும், முதியவர்களும், பணிகளில் கவனம் செலுத்தமுடியாத ஆண்களும் அதிகம்.
2 ) குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்.
பெண் என்னும் ஒரே போர்வையில் நல்லொழுக்க பெண்களையும், தரம் கெட்ட பெண்களையும் சமமாக வைப்பதால் தரம் கெட்ட, பலி, பாவங்களுக்கு அஞ்சாத பெண்களால் உண்டாகும் விளைவுகள் தனிமனித உயிருக்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இவைகள் போதாதென்று மனைவி விவாகரத்து கோரினால் கணவன் எதிர்த்தாலும் மனைவிக்கு உடனே விவாகரத்து வழங்கப்படுவதொடு கணவனின் சொத்தில் மனைவிக்கு சரி பாதி உரிமையுண்டு. அதே காரணத்திற்காக கணவன் விவாகரத்து கோரினால் மனைவி மறுத்தால் கணவனுக்கு விவாகரத்து மறுக்கப்படும். ஒருவேலை மனைவியின் ஒப்புதலுடன் கணவனுக்கு விவாகரத்து கிடைத்தாலும் மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற சமநீதி இல்லாத சட்டத்திற்கு கேபினெட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்தகைய சட்டங்களால் பெண்கள் திருமணங்களின் மூலம் பெருமளவு பொருள் ஈட்டும் எளிய வழி உருவாக்கப்பட்டுள்ளது., திருமணங்கள் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய சட்டபூர்வமான, லாபகரமான தொழிலாக ( LEGAL PROSTITUTION ) மாற்றப்பட்டுள்ளது.
நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களின் வளமான வாழ்விற்கு வழி செய்தால் வரவேற்கலாம். ஆனால் ஏற்கனவே பெண்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட சட்டங்களால் சாதித்திருப்பது என்ன ?
1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.
2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்
3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.
4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.
5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.
6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் உள்ள பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, நாட்டின் எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
7 ) இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன.
இத்தகைய சட்டங்களை இந்த மண்ணில் பிறந்த, தேச பற்று மிக்க உண்மையான இந்திய குடிமகனுக்கு ஆதரிக்கும் எண்ணம் இருக்காது.
Post a Comment