பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, March 25, 2011

“நல்ல” காதலனுடன் சேர்ந்து “கெட்ட” கணவனைக் கொன்ற மனைவி

“நல்ல” காதலனுடன் சேர்ந்து “கெட்ட” கணவனைக் கொன்ற மனைவி! என்ன தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

எத்தனை நாட்கள்தான் “கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி” என்று இந்திய சட்டத்திற்கு விரோதமாக செய்திக்குத் தலைப்பு எழுதமுடியும்?

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் நல்லவர். அவருக்கு எந்தவித தண்டனையும் கொடுக்கக்கூடாது என்று 1861லேயே IPC497 என்ற சட்டப்பிரிவில் அழுத்தந்திருத்தமாக எழுதிவைத்திருக்கிறார்கள் இந்தியத் தலைவர்கள். இந்த சட்டப்படி ஆண் மட்டுமே கள்ளக்காதலில் ஈடுபடுவான். பெண்ணுக்கு கள்ளக்காதல் என்றால் என்னவென்றே தெரியாது. இதுதான் இந்திய சட்டத்தின் விளக்கம்.
... ... ...the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime... ... ... (Madras High Court/ W.P.No.45974 of 2006/DATED: 28.02.2011)
இதுபற்றிய மேலும் விபரங்களை இங்கே படித்துக்கொள்ளவும்:சட்டப்பூர்வமான இந்திய கள்ளக்காதல்!சட்டமேதைகளும், தலைவர்களும் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டால் அது தவறில்லை என்று கருதும்போது அந்த மனைவியின் (கள்ளக்)காதல் புனிதமாகத்தானே கருதப்படவேண்டும்? அதனால் அவர் தனது காதலருடன் சேர்ந்து (கள்ளக்)காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனைக் கொலை செய்தால் அந்தக் கணவரைத்தானே கெட்டவராகக் கருதவேண்டும்? அதுதானே இந்திய சட்டப்படி சரியானதாக இருக்கும்? அதுதான் இப்போது செய்தியாக செய்தித்தாளில் வந்திருக்கிறது.

இனி நீங்களும் செய்தித்தாளில் இதுபோன்ற செய்திகளை வாசிக்கும்போது இந்திய சட்டத்திற்கேற்ப செய்தியை சரியாகப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும்!

25/3/2011 தினகரன்

புதுடெல்லி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவியையும் அவளுடைய காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

டெல்லி சுல்தான்புரியை சேர்ந்தவர் சமர் சிங். தச்சுத்தொழில் செய்து வந்தார். அவரது மனைவி பீனா. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பீனாவின் உறவினர் அஸ்வின் குமார். இவர் லகோரி கேட்டில் வசிக்கிறார்.

உறவினர் என்ற முறையில் பீனாவின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இது நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்துப் உறவாட தொடங்கினர். இவர்களின் கள்ள உறவு பற்றி அறிந்ததும் பீனாவை சமர்சிங் கண்டித்தார். ஆனாலும், அஸ்வின் குமாருடனான தொடர்பை பீனா விடவில்லை. வீட்டில் கணவர் இல்லாதபோது அஸ்வினை வரவழைக்க தொடங்கினார். இதையறிந்த சமர்சிங் 2 நாளுக்கு முன் பீனாவை அடித்து உதைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பீனா, சமர் சிங் உயிருடன் இருந்தால் காதலனுடன் உறவாட முடியாது என்று எண்ணி, உடனே அஸ்வினுக்கு போன் செய்து வீட்டுக்கு வரச் சொன்னார். அவரும் இரவில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி இரவில் சமர் சிங்கின் வீட்டுக்கு வந்த அஸ்வின்குமார், காதலியின் திட்டப்படி அவரை கண்மூடித்தனமாக அடி த்து உதைத்தார். பிறகு கீழே தள்ளி கழுத்தை நெரித்தார். திமிறிய சமர் சிங்கை, அருகில் இருந்த பீனா அமு க்கி பிடித்துக் கொண்டார்.

அஸ்வின் குமாரின் பிடி இறுகியதால் சற்று நேரத்தில் மூச்சுத் திணறி சமர் சிங் இறந்தார். பிறகு உடலை அருகில் இரு க்கும் புதருக்குள் கொண்டு சென்று போட்டு விட்டனர்.

நேற்று முன்தினம் புதரில் கிடந்த உடல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் பிணமாகக் கிடந்தவர் சமர் சிங் என்று தெரிந்ததும் அவரது வீட்டுக்கு சென்று பீனாவிடம் விசாரித்தனர்.

முதலில் எதுவும் தெரியாது என்று மழுப்பினார். போலீசார், வீட்டை சோதனை போட்டனர். அப்போது அஸ்வின் குமாரின் ரத்தக்கறை படிந்த மேல்சட்டை அங்கு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதைப்பற்றி விசாரித்தபோது இனி தப்ப முடியாது என்று உணர்ந்த பீனா, காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் லகோரி கேட்டில் தங்கி இருந்த அஸ்வின் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

=====

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களின் உயிருக்கும், மானத்திற்கும் இந்திய சட்டங்களின் ஆதரவுடன் கண்டிப்பாக ஆபத்து இருக்கிறது!

1. மனைவியின் கள்ளக்காதலுக்கு அல்லது மனைவியின் பொருந்தாத ஆசைகளுக்கு கணவன் ஒத்துழைக்காமல் தடையாக இருந்தால் அது இந்திய தண்டனை சட்டப்படி மனைவிக்கு உடலளவில் அல்லது மனதளவில் கணவனால் இழைக்கப்படும் கொடுமையாகக் கருதப்படும் (Refer: IPC498A) அதனால் மனைவி கொடுக்கும் பொய் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறைக்குச் செல்ல நேரிடும்.

அல்லது...

2. செய்தியில் இருப்பதுபோல “நல்ல” காதலனும், “நல்ல” மனைவியும் சேர்ந்து செய்யும் கொலையில் “கள்ள” கணவனாக உயிரை விடவேண்டும். (Refer: IPC497)

அல்லது... மேலுள்ள இரண்டும் உங்களுக்கு நடக்கக்கூடாது என்றால்...

புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு மனைவியின் மனம் கோணாத இந்தியக் கணவனாக பக்குவமாக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். அது எப்படி என்று பின்வரும் வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Thursday, March 17, 2011

மானமுள்ள இந்தியர்கள் மட்டும் பார்க்கவேண்டிய வீடியோஇளைஞனே,

இந்தியத்திருமண தகனமேடைக்குள் சென்று பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கிக்கொண்டால் உனக்கு நீதி கிடைக்குமா? மேலுள்ள வீடியோவைப் பார்த்தபிறகாவது சிந்தித்துப்பார். உனக்கு நீதி வழங்க யாருக்காவது நேரமிருக்குமா?

Tuesday, March 8, 2011

தப்பித்துவிட்ட மற்றொரு தமிழக இளைஞர்!

இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குள் சென்று பொய் வரதட்சணை வழக்குகளால் வாழ்வை சீரழித்துக்கொள்ளும் பல இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த இளைஞர் புத்திசாலித்தனமாக வேறு நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து காட்டியிருக்கிறார்.

இளைஞர்களே, உங்களால் முடியும்! வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு வாழ்வில் வளமடையுங்கள்!! இந்தியப் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து விடுதலை பெறுங்கள்!!!

இளம் தம்பதிகள் வாழ்க பல்லாண்டு!

பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் இளைஞர்
மார்ச் 08,2011 தினமலர்


விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்த சிவகுமாருக்கும், பிலிப்பைன்ஸ் மரியா மெர்சிடஸ்க்கும் துபாயில் கனிந்த காதல், விருதுநகரில் திருமணத்தில் முடிந்தது.

விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி, தாமரை தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சிவகுமார்(29). பி.எஸ்சி., விஷûவல் கம்யூனிகேஷன் படித்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், துபாயில் எலக்ட்ரிக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். இதே கடையில் பிலிப்பைன்சின் மணிலா நகரைச் சேர்ந்த மரியா மெர்சிடஸ் என்பவரும் வேலை செய்தார். அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

தற்போது சிவகுமார், துபாயில் வேறு நிறுவனத்தில் முதன்மை கட்டுப்பாட்டாளராகவும், மரியா மெர்சிடஸ், அங்குள்ள தனியார் விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முதுநிலை அலுவலராகவும் பணி புரிகின்றனர். சமீபத்தில் அங்கு பதிவு திருமணம் செய்த இருவரும், இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். பெற்றோரின் சம்மதம் கிடைத்தது. இவர்களது திருமணம், விருதுநகரில் நேற்று நடந்தது.

மஞ்சள் நிறத்தை இயற்கையாகவே பூசிக் கொண்ட, மரியா மெர்சிடஸ் கூறியதாவது:இந்தியா மீது எனக்கு நல்ல எண்ணம் உண்டு. தமிழகத்தை பற்றி சிவகுமாரை காதலித்த பின், அதிகம் தெரிந்து கொண்டேன். நட்போடு பழகிய போது, இவரது தமிழர் குணம் என்னை கவர்ந்தது. பெற்றோர், என் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால், இதய நோயாளிகளான அவர்கள், திருமணத்திற்கு வரவில்லை. இருப்பினும், உறவினர்களை அனுப்பி வைத்தனர். இரு நாட்டிற்கும், பண்டைய காலத்திலேயே நல்ல உறவு இருந்தது என்பதை கேள்விபட்டேன். இது போல எங்கள் உறவும் இறுதி மூச்சு வரை இருக்கும்.இவ்வாறு மரியா மெர்சிடஸ் கூறினார்.சிவகுமாரிடம் கேட்ட போது, புன்னகையை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.
====

குடும்பம் ஒரு கோயிலாக வேண்டுமென்றால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்!

இடுகாடு உங்களது குடும்பமாக அமையவேண்டுமென்றால் தகனமேடை என்ற இந்தியத் திருமணத்திற்குள் காலடி எடுத்துவையுங்கள்!! பொய் வரதட்சணை வழக்குகள் உங்களை தானாக அழைத்துச் செல்லும்!!!


Monday, March 7, 2011

இந்தியத் திருமணத்தில் இளைஞர்களுக்கு காத்திருக்கும் இனிய அனுபவங்கள்!

இந்தியாவில் இப்போதெல்லாம் கொலை, கொள்ளை, திருட்டு என கள்வர்களால் ஏற்படும் ஆபத்தைவிட கல்யாணம் செய்து குடும்பத்திற்குள் கள்ளக்காமங்களால் ஏற்படும் குற்றங்கள்தான் அதிகமாகிவிட்டதாம். காவல்துறையால் இதை சமாளிக்க முடியவில்லையாம்! செய்தித்தாளில் சிறப்புக்கட்டுரையாக வந்திருக்கிறது இந்த செய்தி.

இந்த செய்தியில் இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு சொல்லியிருக்கிறார்கள் பல பெரியவர்கள். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று பார்த்தால் அது மிகவும் சந்தேகமே. அதனால் இந்தியாவில் திருமணம் செய்யாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்வதுதான் உத்தமம். செய்தியைப் படியுங்கள். பிறகு அதனைத்தொடர்ந்து இந்திய தகனமேடையில் உள்ள சட்டசிக்கல்களைப் பற்றி பார்ப்போம்....


ரகசிய உறவு...! 81 பேர் கொலை: அதிரும் குடும்பங்கள்
மார்ச் 06,2011 தினமலர் செய்தியின் ஒரு பகுதி

மாறி வரும் சமூக, பொருளாதாரச் சூழல்; தனி மனித ஒழுங்குணர்வு குறைவு; எல்லை மீறும் காமம் உள்ளிட்ட காரணங்களால் "குடும்ப அமைப்பின்' ஆணிவேர் மெல்ல, மெல்ல ஆட்டம் கண்டுவருகிறது. கணவன் - மனைவி என்ற புனித உறவைத் தாண்டிய கள்ள உறவுகள் பெரும்பாலும் கொலை, தற்கொலையில் முடிகின்றன. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 371 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், கள்ள உறவால் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 81.

மாற்றானுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவங்களும், தனது கள்ள உறவை கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலுடன் சேர்ந்து கணவனையே தீர்த்துக்கட்டிய சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்துள்ளன; சில கொலைகள், சந்தேகம் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்துகின்றன. கொலைக்குப்பின் தலைமறைவாகும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் பணி நேரத்தை அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆதாயக்கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, திருட்டுச் சொத்துக்களை கைப்பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் வழங்க வேண்டிய நிர்பந்தத்திலுள்ள போலீசார், கள்ள உறவு கொலைகள் அதிகரிப்பால் பணி நெருக்கடிக்கு உள்ளாகி விழிபிதுங்கி நிற்கின்றனர். திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைக்கூட, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி போலீசாரால் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், கள்ள உறவு கொலைகள் தனி நபர்களின் ஒழுங்குணர்வு சார்ந்தது என்பதால், கட்டுப்படுத்துவது எப்படி? எனத்தெரியாமல் திணறுகின்றனர்.

கொலை அதிகரிக்க காரணம் என்ன: கள்ள உறவு தொடர்பான பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பிரதிபலிக்கின்றன. எனினும், இப்பிரச்னையை சரியானபடி எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கும் குடும்பங்களிலேயே ஆவேச கொலைகள் அதிகளவில் நிகழ்கின்றன. குறிப்பாக கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கள்ள உறவு கொலைகள் அதிகம் நடப்பதாக தமிழக மேற்கு மண்டல போலீசாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கணவனோ அல்லது மனைவியோ பிறருடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்தால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் துணைக்கு மனோ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பிரச்னையை எதிர்கொள்ள தெரிவதில்லை. ஆக்ரோஷத்தில் வாக்குவாதம் முற்றி துணையை கொலை செய்து விடுகின்றனர்.

வாழ்க்கை சீரழியும்!கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவி தேன்மொழி கூறியதாவது: திருமண வாழ்க்கை பந்தம் முழுக்க, முழுக்க நம்பிக்கை அடிப்படையிலானது. தம்பதியர் தங்களது துணை மீது முழு நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்வை இனிமையாக தொடர முடியும். கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததும், அமைதியான வாழ்வில் புயல் ஆரம்பிக்கும்; ஆவேசத்தில் கொலையும் நிகழும். இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிக்கு ஆட்பட்டு எவ்வித குற்றத்திலும் ஈடுபடத் தேவையில்லை. கள்ள உறவை காரணமாக கூறி கோர்ட்டில் விவகாரத்து பெற முடியும். சட்ட ரீதியான நிவாரணத்தை தேடும் போது, குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுவிடாமல் தடுக்க முடியும். "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற "மந்திரம்' மட்டுமே வாழ்க்கையை வளமுள்ளதாக்கும். ரகசியமான கள்ள உறவுகள் என்றேனும் ஓர்நாள் அம்பலமாகும் போது, வாழ்க்கை நிச்சயம் சீரழிந்துவிடும்.இவ்வாறு, தேன்மொழி தெரிவித்தார்.

ஐ.ஜி.,சிவனாண்டி கூறியதாவது
: கள்ள உறவு கொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இது, முற்றிலும் தனி மனித ஒழுக்க குறைபாட்டால் நிகழ்கிறது. கள்ள உறவு பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் உள்ளன. போதிய கல்வியறிவு உடையோர், இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்கின்றனர். தமக்கு துரோகமிழைத்த துணையை கொலை செய்யும் அளவுக்கு உணர்ச்சி வசப்படுவதில்லை. அவ்வாறு செய்தால், தங்களது குழந்தைகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கை அவர்களிடம் மேலிடுகிறது. இதனால், தங்களது மணவாழ்க்கையை சட்ட ரீதியாக முறித்துக்கொள்கின்றனர்.

அதேவேளையில், போதிய கல்வியறிவு பெற்றிராத குடும்பங்களில் கள்ள உறவு பிரச்னை எழும்போது, எதிர்விளைவுகளை உணர்ந்து சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் விழிப்புணர்வு பெற்றிருப்பதில்லை. துணையை கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் மேலோங்குகிறது. சில நேரங்களில், ஏதுமறியா குழந்தைகளையும் ஈவு, இரக்கமின்றி கொன்று விடுகின்றனர். தங்களது வாழ்க்கை துணை தாம்பத்ய உறவுக்கு துரோகம் செய்துவிட்டதாக தெரிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ கொலை செய்யும் அளவுக்கு துணிய வேண்டியதில்லை.

இப்பிரச்னையை முன்னெச்சரிக்கையுடன் கையாண்டால் மட்டுமே, பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகாமல் தவிர்க்க முடியும். இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் செயல்படும் தற்கொலை தடுப்பு மையத்தை 99440 95555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; தகுந்த ஆலோசனை வழங்கப்படும். சட்ட உதவி தேவைப்பட்டால் அதற்கும் உதவ தயாராக உள்ளோம்.இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில்
, ""கள்ள உறவு தொடர்பான கொலைகள் திட்டமிட்டும், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசத்திலும் நடக்கின்றன. கொலையால் ஏற்படப்போகும் சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன,'' என்றார்.

45 பேர் தற்கொலை
: கள்ள உறவால் கொலைகள் மட்டுமல்ல; தற்கொலைகளும் அதிகம் நிகழ்கின்றன. இவ்வாறாக, தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 293 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

=====

இனி இந்திய சட்ட சிக்கல்களைப் பார்ப்போம்...

இந்தியாவில் கள்ள உறவு சட்டம் இப்படி இருக்கிறது....

497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

இந்த IPC497 பிரிவின் கீழ் கணவன் புகார் செய்ய சரியான ஆதாரங்கள் தேவை. அப்படியே புகார் கொடுத்தாலும் மனைவி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது.

வரதட்சணை சட்டம் இப்படி இருக்கிறது...

IPC498A. HUSBAND OR RELATIVE OF HUSBAND OF A WOMAN SUBJECTING HER TO CRUELTY: Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine. Section 498A of the Indian Penal Code, is a criminal offense. It is a cognizable, non-bailable, and non-compoundable offense.
இந்த IPC498A பிரிவின் கீழ் மனைவி கணவன் மீது புகார் செய்வதற்கு எந்தவித ஆதாரமும் தேவையில்லை. உடனடி கைதுதான்!


கள்ள உறவு சட்டத்திற்கும், வரதட்சணை சட்டத்திற்கும் ஒரு எண்தான் வித்தியாசம். IPC497, IPC498A. எது பெரிய எண்? சந்தேகமேயில்லை 498Aதான் பெரியது. கணவன் 497ஐ எடுத்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. அப்படியே துணிந்து எடுத்தால் மனைவி IPC498A-ஆல் கணவனை அடித்து நொறுக்கிவிடுவார்.

மேலுள்ள செய்தியில்
  • “கள்ள உறவை காரணமாக கூறி கோர்ட்டில் விவகாரத்து பெற முடியும்.”
  • “போதிய கல்வியறிவு உடையோர், இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்கின்றனர்.
  • “கொலையால் ஏற்படப்போகும் சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன
என்று கூறியிருக்கிறார்கள்!

ஆனால் நடைமுறையில் நாட்டில் இருக்கும் நிலவரமோ வேறுவிதமாக இருக்கிறது. மனைவிக்கு கள்ள உறவு இருந்து கணவர் அதைப்பற்றி புகார் கூறினால் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருக்கும் ஆணை மட்டுமே சட்டம் தண்டிக்கும். கள்ள உறவில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க சட்டத்தில் வழி இல்லை. அப்படியே கணவர் புகார் கொடுத்தாலும் கள்ளஉறவில் சந்தோஷமாக இருக்கும் மனைவி என்ன கணவனுக்கு மலர் அர்ச்சனையா செய்து கொண்டிருப்பார்? மனைவிக்கு இதுபோன்ற தருணங்களில் பாதுகாப்பு கொடுப்பதற்காகத்தானே வரதட்சணை சட்டம் இருக்கிறது?

மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதாகக் கூறி கணவர் விவாகரத்து கோரினால் உடனே மனைவி தனது “நற்பெயருக்கு” கலங்கம் வரக்கூடாது, ஊரார் நம்மைப் பற்றி தவறாக நினைத்துவிடுவார்களே என்ற உயரிய நோக்கத்தில் கணவன் மீது வரதட்சணை கொடுமை செய்வதாக பொய்யான குற்ற வழக்குப் பதிவு செய்து கணவனை குடும்பத்தோடு சிறையில் அடைத்துவிடுவார்.

இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளில் பொய் வழக்குப்போடும் பெண்களுக்கு இந்திய சட்டங்களும், காவல்துறையும், நீதித்துறையும் நன்றாகவே உதவி செய்து வருகின்றன என்பது உலகறிந்த உண்மை. இல்லையென்றால்
2005ல் இந்திய உச்ச நீதிமன்றமே இந்த பொய் வரதட்சணை வழக்குகளை அப்பாவிகளுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள “சட்ட தீவிரவாதம்” என்று வர்ணித்திருக்குமா?

இப்போது சொல்லுங்கள் படித்த, சமூக அந்தஸ்துள்ள எந்தக் கணவனாவது கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவியிடமிருந்து அமைதியாக சட்டப்படி விலகிச்செல்ல முடியுமா?

இதுபோன்ற IPC497, 498A சட்ட நுணுக்கங்கள் தெரியாததால்தான் என்னவோ மேலே செய்தியில் குறிப்பிட்டுள்ள போதிய கல்வியறிவில்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ளிவிடுகிறார்கள். அதேபோல கணவன் கள்ளக்காதலில் ஈடுபடும் மனவியை கொலை செய்யத்துணிகிறான்.

இதில் இருக்கும் ஒரு வேடிக்கை என்னவென்றால் கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டால் அவன் மீது மட்டும்தான் வழக்குப் பதிவு செய்யப்படும். கொலை செய்தவர் என்றால் காவல்நிலையத்தில்கூட கொஞ்சம் பயங்கலந்த மரியாதையுடன் நடத்துவார்கள்.

நான் மெத்தப் படித்த மேதாவி, மனைவியின் கள்ளக்காதலை சட்டத்தின் துணையோடு நேர்வழியில் சந்திப்பேன் என்று நிற்கும் முட்டாள் கணவன்கள் மீது அவனது குடும்பத்தோடு சேர்த்து பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து தீவிரவாதிகளை அள்ளிச் செல்வதுபோல அதிகாலை, இரவு போன்ற நேரங்களில் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள். அங்கு “படிதாண்டாமல்
மனைவியை அடக்கிவைக்கத் தெரியாமல் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கிக்கொண்டான்” என்று மிகவும் கேவலமான விமர்சனங்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.

பிறகு பொய்யான விசாரணை அறிக்கை மூலம் வழக்கு ஆரம்பமாகி குடும்பத்தோடு பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். இந்த சமயத்தில் கள்ளக்காமத்தலைவனுடன் மனைவி சந்தோஷமாக
சல்லாபமாக கற்புக்கரசி போல வாழலாம்.

இவையனைத்தும் இந்திய சட்டங்கள், காவல்துறை, நீதித்துறை இவற்றின் கண்ணெதிரேயே இன்றும் பல பொய் வரதட்சணை வழக்குகளில் நடந்துகொண்டிருக்கிறது!

இதுஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது சரி விவாகரத்து செய்து ஒழித்துவிடலாம் என்று போனால் இந்தியாவில் ஆண்களுக்கு விவாகரத்து என்பது ஒரு கானல்நீர் போல. பின்வரும் செய்தியைப் பாருங்கள். இது ஒரு துளி மட்டுமே...

Octogenarian man gets divorce after a 30-year legal battle
New Delhi, Jan 13 2011 Deccan Herald

After a three-decade-long legal battle, an octogenarian man today finally got divorce on grounds of desertion with the Delhi High Court rejecting his wife's appeal challenging a lower court order.


இப்போது சொல்லுங்கள். கள்ளக்காம குடும்பப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் யார் புத்திசாலி? படிக்காதவர்களா அல்லது நான் படித்திருக்கிறேன் என்று சொல்லி சட்டத்தின் வழி செல்ல நினைப்பவனா?

இந்தியாவில் உள்ள தவறான சட்டங்கள், ஊழல், சமுதாய பாதுகாப்புப் பணியில் நேர்மையின்மை என்ற அழுகிப்போயிருக்கும் அடிப்படை அஸ்திவாரம் சரிசெய்யப்படும்வரை இதுபோன்ற கள்ளக்காமக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இதற்கு சட்டம் தெரிந்தவன், தெரியாதவன், படித்தவன், படிக்காதவன், பணவசதி உள்ளவன், பணவசதி இல்லாதவன் என்ற காரணமெல்லாம் செய்தியைப் படிப்பவர்களுக்கு சொல்லும் செய்தியாக மட்டுமே இருக்குமே தவிர பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது.

அதுவரை இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு இந்தியாவில் திருமணம் செய்யாமல் இருப்பதுதான். அப்படி திருமணம் செய்ய நினைத்தால் பின்வரும் வீடியோவில் இருக்கும் கணவனின் வழிமுறையைப் பின்பற்றவேண்டும். இந்த இரண்டில் எது சிறந்தது என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
Thursday, March 3, 2011

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் இந்தியக்காதல்!

இந்தியாவில் இன்றும் சில பகுதிகளில் பெண் பார்த்து திருமணம் செய்யும் திருமண நடைமுறை இருந்துவருகிறது. பல பகுதிகளில் காதல் அல்லது காமம் என்ற பெயரில் ஆண், பெண் தானாகவே “ஆளை” தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கமும் இருந்துவருகிறது.

இந்த இரண்டு வகையில் எந்தவகையிலாவது உங்கள் திருமணம் இந்தியாவில் நடக்கவிருந்தால் திருமணத்திற்கு முன் பெண்ணிடம் இளைஞர்கள் கேட்கவேண்டிய முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது. பெண்ணிடம் எதைப்பற்றிக் கேட்க மறந்தாலும் கண்டிப்பாக இதை ஒவ்வொரு இளைஞனும் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்தியாவில் திருமணம் செய்யலாம் என்ற தவறான எண்ணத்துடன் இருக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் எதிர்கால தலையெழுத்தையே நிர்ணயிக்கும் சக்தி இந்த இரண்டு கேள்விகளுக்கு இருக்கின்றன.

அந்தக் கேள்விகள் இவைதான்:

1. நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணிற்கு இதற்கு முன் வேறு ஏதாவது காதல் விவகாரம் இருந்ததா (Past Love Story!) அல்லது தற்பொழுது ஏதாவது (Current Love Story!) இருந்துகொண்டிருக்கிறதா?

2. பெண்ணின் காதலுக்கு (Past or Current Love) எதிராக பெண்ணின் பெற்றோர்கள் உங்களுடனான இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார்களா?

இந்தக் கேள்விகள் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ள சமீபத்தில் வந்த செய்தியை நீங்கள் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

திருமணமான சில நாட்களிலேயே புது மணப்பெண் காணாமல் போனதால் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை கணவனும் அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக் கேட்டு கொலை செய்து தீயிட்டுக் கொளுத்திவிட்டதாக கணவனையும் அவனது பெற்றோரையும் வரதட்சணைக் கொலை வழக்கில் காவல்துறையின் வழக்கமான தவறான புலன்விசாரணை அறிக்கை உதவியுடன் சிறையில் அடைத்துவிட்டார்கள்.

இவர்கள் இப்படி நான்கு மாதங்களாக சிறையில் துன்பப்பட்டிருக்கும்போது புதுமணப் பெண் உயிரோடு இருக்கும் தகவல் கிடைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையின்போது அந்த புதுமணப்பெண் வீட்டை விட்டு ஓடிப்போய் தனது பழைய காதலனுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். வழக்கம்போல நீதிமன்றம் பெண்ணுக்கு மரியாதை செய்யும்விதமாக அந்தப்பெண் தன் விருப்பப்படி யாருடன் வாழவேண்டும் என்று நினைக்கிறாரோ அவருடன் செல்லலாம் என்று தாராள மனதுடன் வாழ்த்தி வழியனுப்பியிருக்கிறார்கள்.

செய்யாத தவறுக்காக சட்டவிரோதமாக வரதட்சணைக்கொலை என்ற பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு கணவனும் அவனது குடும்பத்தாரும் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எந்தவித பதிலும் இல்லை. இதுபோன்ற விஷயங்களில் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி யாருமே கவலைப்படமாட்டார்கள். இந்தியாவில் திருமணம் செய்தால் உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்.இப்போது மேலுள்ள இரண்டு கேள்விகளின் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்திருக்கும்.

அதனால் இளைஞர்களே, முடிந்த அளவிற்கு இந்தியாவில் திருமணம் செய்வதை தவிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பமும் மானத்துடன் வாழலாம். இல்லையென்றால் செய்யாத தவறுக்காக (இந்தியாவில் திருமணம் செய்த ஒரே குற்றத்திற்காக) குடும்பத்தோடு சிறைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.
KANPUR: Deepika alias Neha, whose in-laws are behind the bars on charges of dowry death since the last four months, was arrested and produced before the court on Monday.

The girl was taken into judicial custody and sent to nari niketan. The judicial official fixed February 22 as next date to hear the case.

Counsel for accused Dinesh Awasthi (Deepika's father-in-law), Sonu Awasthi (husband) and Raman, brother-in-law moved an application before the court to summon the guardians of Deepika and ask them to identify the girl in the court.

Deepika, daughter of Kamlesh Shukla, was married to Sonu Awasthi, a resident of Ganj Gopalpur on July 9, 2010.

She disappeared from her in-laws' house in October, 2010. The girl could not be traced. Hence, her mother Sudha Shukla lodged an FIR and charged her husband and in-laws of dowry death. She identified a woman's body, which was found in Panki canal, as that of Deepika on October 27, 2010.

The Chaubeypur police arrested Dinesh, Sonu and Raman Awasthi on charges of dowry death. Since then, the three accused were in jail. The police completed its investigation and filed chargesheet against them on December 27, 2010. The investigation officer gave a list of 15 witnesses including parents of the girl and brother.

According to defence counsel PN Tripathi, the girl was spotted in Barra locality. Soon it was confirmed that Deepika was alive and living at Barra with her paramour Manish, a resident of Baikunthpur in Bithoor.

Once it was confirmed that Deepika was alive, her parents filed an affidavit in support of accused, claiming them as innocent. The kin of accused and Deepika's mother Sudha Shukla also reported the matter to DIG, who passed the investigation to the circle officer, Chaubeypur. The police claimed to nab her from Chaubeypur railway station and produced her in the court of chief judicial magistrate, Ramabai Nagar.

Since CJM was on leave, judicial magistrate took her in judicial custody and asked her to appear before the court on February 22 to get her statement.

=====KANPUR: Deepika alias Neha, whose in-laws and husband are behind the bar facing dowry death charges, was allowed to go anywhere according to her will by chief judicial magistrate of Ramabai Nagar on Tuesday.

After hearing the arguments of Deepika and the counsel for accused, the CJM passed the order and allowed her to go to the place of her choice but only after furnishing a personal bond of Rs 50,000 with an undertaking that whenever summoned, she would appear before the court.

Deepika was married to Sonu Awasthi in July 2010. She disappeared from her in-laws' house in October 2010. Her mother Sudha Shukla lodged a dowry death case against the in-laws, after identifying a woman's body which was found from Panki canal on October 27, 2010 as that of Deepika.

The police registered a case of dowry death against husband Sonu Awasthi, his father Dinesh Awasthi and brother Raman Awasthi and arrested them. Since then, all the three are behind the bars.

After some time, Neha was spotted by some persons in Barra locality and on confirmation she was found living with one Manish Trivedi of Baikunthpur in Bithore. Her in-laws informed the DIG and a fresh investigation took place and police nabbed Deepika from Barra on Sunday last. She was produced in the court on Monday.

Neha was produced before the court of chief judicial magistrate on Tuesday.

Manish Trivedi moved an application before the court and pleaded that he was her husband the girl should be released. Neha was major and her will must be considered by the court.

Counsel for accused objected and submitted that they were behind the bar under the charges of murder of girl and facing the trial. The sessions court had fixed February 24 for the prosecution evidence. If the girl would be released, then she would not turn up before the court. Therefore, she be sent to nari niketan till February 24.

மேலுள்ள செய்தியைப் படித்துவிட்டு இந்த வீடியோவைப்பார்த்தால் பொய்வழக்கில் சிக்கும் அப்பாவிகளின் நிலை எப்படியிருக்கும் என்று உங்களுக்குப் புரியும்.


======