பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, March 8, 2011

தப்பித்துவிட்ட மற்றொரு தமிழக இளைஞர்!

இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குள் சென்று பொய் வரதட்சணை வழக்குகளால் வாழ்வை சீரழித்துக்கொள்ளும் பல இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த இளைஞர் புத்திசாலித்தனமாக வேறு நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து காட்டியிருக்கிறார்.

இளைஞர்களே, உங்களால் முடியும்! வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு வாழ்வில் வளமடையுங்கள்!! இந்தியப் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து விடுதலை பெறுங்கள்!!!

இளம் தம்பதிகள் வாழ்க பல்லாண்டு!

பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் இளைஞர்
மார்ச் 08,2011 தினமலர்


விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்த சிவகுமாருக்கும், பிலிப்பைன்ஸ் மரியா மெர்சிடஸ்க்கும் துபாயில் கனிந்த காதல், விருதுநகரில் திருமணத்தில் முடிந்தது.

விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி, தாமரை தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சிவகுமார்(29). பி.எஸ்சி., விஷûவல் கம்யூனிகேஷன் படித்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், துபாயில் எலக்ட்ரிக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். இதே கடையில் பிலிப்பைன்சின் மணிலா நகரைச் சேர்ந்த மரியா மெர்சிடஸ் என்பவரும் வேலை செய்தார். அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

தற்போது சிவகுமார், துபாயில் வேறு நிறுவனத்தில் முதன்மை கட்டுப்பாட்டாளராகவும், மரியா மெர்சிடஸ், அங்குள்ள தனியார் விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முதுநிலை அலுவலராகவும் பணி புரிகின்றனர். சமீபத்தில் அங்கு பதிவு திருமணம் செய்த இருவரும், இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். பெற்றோரின் சம்மதம் கிடைத்தது. இவர்களது திருமணம், விருதுநகரில் நேற்று நடந்தது.

மஞ்சள் நிறத்தை இயற்கையாகவே பூசிக் கொண்ட, மரியா மெர்சிடஸ் கூறியதாவது:இந்தியா மீது எனக்கு நல்ல எண்ணம் உண்டு. தமிழகத்தை பற்றி சிவகுமாரை காதலித்த பின், அதிகம் தெரிந்து கொண்டேன். நட்போடு பழகிய போது, இவரது தமிழர் குணம் என்னை கவர்ந்தது. பெற்றோர், என் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால், இதய நோயாளிகளான அவர்கள், திருமணத்திற்கு வரவில்லை. இருப்பினும், உறவினர்களை அனுப்பி வைத்தனர். இரு நாட்டிற்கும், பண்டைய காலத்திலேயே நல்ல உறவு இருந்தது என்பதை கேள்விபட்டேன். இது போல எங்கள் உறவும் இறுதி மூச்சு வரை இருக்கும்.இவ்வாறு மரியா மெர்சிடஸ் கூறினார்.சிவகுமாரிடம் கேட்ட போது, புன்னகையை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.
====

குடும்பம் ஒரு கோயிலாக வேண்டுமென்றால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்!

இடுகாடு உங்களது குடும்பமாக அமையவேண்டுமென்றால் தகனமேடை என்ற இந்தியத் திருமணத்திற்குள் காலடி எடுத்துவையுங்கள்!! பொய் வரதட்சணை வழக்குகள் உங்களை தானாக அழைத்துச் செல்லும்!!!


No comments: