இந்த செய்தியில் இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு சொல்லியிருக்கிறார்கள் பல பெரியவர்கள். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று பார்த்தால் அது மிகவும் சந்தேகமே. அதனால் இந்தியாவில் திருமணம் செய்யாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்வதுதான் உத்தமம். செய்தியைப் படியுங்கள். பிறகு அதனைத்தொடர்ந்து இந்திய தகனமேடையில் உள்ள சட்டசிக்கல்களைப் பற்றி பார்ப்போம்....
ரகசிய உறவு...! 81 பேர் கொலை: அதிரும் குடும்பங்கள்
மாறி வரும் சமூக, பொருளாதாரச் சூழல்; தனி மனித ஒழுங்குணர்வு குறைவு; எல்லை மீறும் காமம் உள்ளிட்ட காரணங்களால் "குடும்ப அமைப்பின்' ஆணிவேர் மெல்ல, மெல்ல ஆட்டம் கண்டுவருகிறது. கணவன் - மனைவி என்ற புனித உறவைத் தாண்டிய கள்ள உறவுகள் பெரும்பாலும் கொலை, தற்கொலையில் முடிகின்றன. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 371 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், கள்ள உறவால் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 81.
மாற்றானுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவங்களும், தனது கள்ள உறவை கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலுடன் சேர்ந்து கணவனையே தீர்த்துக்கட்டிய சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்துள்ளன; சில கொலைகள், சந்தேகம் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்துகின்றன. கொலைக்குப்பின் தலைமறைவாகும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் பணி நேரத்தை அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆதாயக்கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, திருட்டுச் சொத்துக்களை கைப்பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் வழங்க வேண்டிய நிர்பந்தத்திலுள்ள போலீசார், கள்ள உறவு கொலைகள் அதிகரிப்பால் பணி நெருக்கடிக்கு உள்ளாகி விழிபிதுங்கி நிற்கின்றனர். திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைக்கூட, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி போலீசாரால் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், கள்ள உறவு கொலைகள் தனி நபர்களின் ஒழுங்குணர்வு சார்ந்தது என்பதால், கட்டுப்படுத்துவது எப்படி? எனத்தெரியாமல் திணறுகின்றனர்.கொலை அதிகரிக்க காரணம் என்ன: கள்ள உறவு தொடர்பான பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பிரதிபலிக்கின்றன. எனினும், இப்பிரச்னையை சரியானபடி எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கும் குடும்பங்களிலேயே ஆவேச கொலைகள் அதிகளவில் நிகழ்கின்றன. குறிப்பாக கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கள்ள உறவு கொலைகள் அதிகம் நடப்பதாக தமிழக மேற்கு மண்டல போலீசாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கணவனோ அல்லது மனைவியோ பிறருடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்தால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் துணைக்கு மனோ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பிரச்னையை எதிர்கொள்ள தெரிவதில்லை. ஆக்ரோஷத்தில் வாக்குவாதம் முற்றி துணையை கொலை செய்து விடுகின்றனர்.
வாழ்க்கை சீரழியும்!கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவி தேன்மொழி கூறியதாவது: திருமண வாழ்க்கை பந்தம் முழுக்க, முழுக்க நம்பிக்கை அடிப்படையிலானது. தம்பதியர் தங்களது துணை மீது முழு நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்வை இனிமையாக தொடர முடியும். கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததும், அமைதியான வாழ்வில் புயல் ஆரம்பிக்கும்; ஆவேசத்தில் கொலையும் நிகழும். இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிக்கு ஆட்பட்டு எவ்வித குற்றத்திலும் ஈடுபடத் தேவையில்லை. கள்ள உறவை காரணமாக கூறி கோர்ட்டில் விவகாரத்து பெற முடியும். சட்ட ரீதியான நிவாரணத்தை தேடும் போது, குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுவிடாமல் தடுக்க முடியும். "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற "மந்திரம்' மட்டுமே வாழ்க்கையை வளமுள்ளதாக்கும். ரகசியமான கள்ள உறவுகள் என்றேனும் ஓர்நாள் அம்பலமாகும் போது, வாழ்க்கை நிச்சயம் சீரழிந்துவிடும்.இவ்வாறு, தேன்மொழி தெரிவித்தார்.ஐ.ஜி.,சிவனாண்டி கூறியதாவது: கள்ள உறவு கொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இது, முற்றிலும் தனி மனித ஒழுக்க குறைபாட்டால் நிகழ்கிறது. கள்ள உறவு பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் உள்ளன. போதிய கல்வியறிவு உடையோர், இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்கின்றனர். தமக்கு துரோகமிழைத்த துணையை கொலை செய்யும் அளவுக்கு உணர்ச்சி வசப்படுவதில்லை. அவ்வாறு செய்தால், தங்களது குழந்தைகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கை அவர்களிடம் மேலிடுகிறது. இதனால், தங்களது மணவாழ்க்கையை சட்ட ரீதியாக முறித்துக்கொள்கின்றனர்.
அதேவேளையில், போதிய கல்வியறிவு பெற்றிராத குடும்பங்களில் கள்ள உறவு பிரச்னை எழும்போது, எதிர்விளைவுகளை உணர்ந்து சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் விழிப்புணர்வு பெற்றிருப்பதில்லை. துணையை கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் மேலோங்குகிறது. சில நேரங்களில், ஏதுமறியா குழந்தைகளையும் ஈவு, இரக்கமின்றி கொன்று விடுகின்றனர். தங்களது வாழ்க்கை துணை தாம்பத்ய உறவுக்கு துரோகம் செய்துவிட்டதாக தெரிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ கொலை செய்யும் அளவுக்கு துணிய வேண்டியதில்லை.
இப்பிரச்னையை முன்னெச்சரிக்கையுடன் கையாண்டால் மட்டுமே, பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகாமல் தவிர்க்க முடியும். இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் செயல்படும் தற்கொலை தடுப்பு மையத்தை 99440 95555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; தகுந்த ஆலோசனை வழங்கப்படும். சட்ட உதவி தேவைப்பட்டால் அதற்கும் உதவ தயாராக உள்ளோம்.இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில், ""கள்ள உறவு தொடர்பான கொலைகள் திட்டமிட்டும், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசத்திலும் நடக்கின்றன. கொலையால் ஏற்படப்போகும் சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன,'' என்றார்.
45 பேர் தற்கொலை : கள்ள உறவால் கொலைகள் மட்டுமல்ல; தற்கொலைகளும் அதிகம் நிகழ்கின்றன. இவ்வாறாக, தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 293 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தியாவில் கள்ள உறவு சட்டம் இப்படி இருக்கிறது....
497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
இந்த IPC497 பிரிவின் கீழ் கணவன் புகார் செய்ய சரியான ஆதாரங்கள் தேவை. அப்படியே புகார் கொடுத்தாலும் மனைவி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது.
வரதட்சணை சட்டம் இப்படி இருக்கிறது...
IPC498A. HUSBAND OR RELATIVE OF HUSBAND OF A WOMAN SUBJECTING HER TO CRUELTY: Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine. Section 498A of the Indian Penal Code, is a criminal offense. It is a cognizable, non-bailable, and non-compoundable offense.இந்த IPC498A பிரிவின் கீழ் மனைவி கணவன் மீது புகார் செய்வதற்கு எந்தவித ஆதாரமும் தேவையில்லை. உடனடி கைதுதான்!
கள்ள உறவு சட்டத்திற்கும், வரதட்சணை சட்டத்திற்கும் ஒரு எண்தான் வித்தியாசம். IPC497, IPC498A. எது பெரிய எண்? சந்தேகமேயில்லை 498Aதான் பெரியது. கணவன் 497ஐ எடுத்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. அப்படியே துணிந்து எடுத்தால் மனைவி IPC498A-ஆல் கணவனை அடித்து நொறுக்கிவிடுவார்.
மேலுள்ள செய்தியில்
- “கள்ள உறவை காரணமாக கூறி கோர்ட்டில் விவகாரத்து பெற முடியும்.”
- “போதிய கல்வியறிவு உடையோர், இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்கின்றனர்.”
- “கொலையால் ஏற்படப்போகும் சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன”
ஆனால் நடைமுறையில் நாட்டில் இருக்கும் நிலவரமோ வேறுவிதமாக இருக்கிறது. மனைவிக்கு கள்ள உறவு இருந்து கணவர் அதைப்பற்றி புகார் கூறினால் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருக்கும் ஆணை மட்டுமே சட்டம் தண்டிக்கும். கள்ள உறவில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க சட்டத்தில் வழி இல்லை. அப்படியே கணவர் புகார் கொடுத்தாலும் கள்ளஉறவில் சந்தோஷமாக இருக்கும் மனைவி என்ன கணவனுக்கு மலர் அர்ச்சனையா செய்து கொண்டிருப்பார்? மனைவிக்கு இதுபோன்ற தருணங்களில் பாதுகாப்பு கொடுப்பதற்காகத்தானே வரதட்சணை சட்டம் இருக்கிறது?
மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதாகக் கூறி கணவர் விவாகரத்து கோரினால் உடனே மனைவி தனது “நற்பெயருக்கு” கலங்கம் வரக்கூடாது, ஊரார் நம்மைப் பற்றி தவறாக நினைத்துவிடுவார்களே என்ற உயரிய நோக்கத்தில் கணவன் மீது வரதட்சணை கொடுமை செய்வதாக பொய்யான குற்ற வழக்குப் பதிவு செய்து கணவனை குடும்பத்தோடு சிறையில் அடைத்துவிடுவார்.
இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளில் பொய் வழக்குப்போடும் பெண்களுக்கு இந்திய சட்டங்களும், காவல்துறையும், நீதித்துறையும் நன்றாகவே உதவி செய்து வருகின்றன என்பது உலகறிந்த உண்மை. இல்லையென்றால் 2005ல் இந்திய உச்ச நீதிமன்றமே இந்த பொய் வரதட்சணை வழக்குகளை அப்பாவிகளுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள “சட்ட தீவிரவாதம்” என்று வர்ணித்திருக்குமா?
இப்போது சொல்லுங்கள் படித்த, சமூக அந்தஸ்துள்ள எந்தக் கணவனாவது கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவியிடமிருந்து அமைதியாக சட்டப்படி விலகிச்செல்ல முடியுமா?
இதுபோன்ற IPC497, 498A சட்ட நுணுக்கங்கள் தெரியாததால்தான் என்னவோ மேலே செய்தியில் குறிப்பிட்டுள்ள போதிய கல்வியறிவில்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ளிவிடுகிறார்கள். அதேபோல கணவன் கள்ளக்காதலில் ஈடுபடும் மனவியை கொலை செய்யத்துணிகிறான்.
இதில் இருக்கும் ஒரு வேடிக்கை என்னவென்றால் கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டால் அவன் மீது மட்டும்தான் வழக்குப் பதிவு செய்யப்படும். கொலை செய்தவர் என்றால் காவல்நிலையத்தில்கூட கொஞ்சம் பயங்கலந்த மரியாதையுடன் நடத்துவார்கள்.
நான் மெத்தப் படித்த மேதாவி, மனைவியின் கள்ளக்காதலை சட்டத்தின் துணையோடு நேர்வழியில் சந்திப்பேன் என்று நிற்கும் முட்டாள் கணவன்கள் மீது அவனது குடும்பத்தோடு சேர்த்து பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து தீவிரவாதிகளை அள்ளிச் செல்வதுபோல அதிகாலை, இரவு போன்ற நேரங்களில் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள். அங்கு “படிதாண்டாமல் மனைவியை அடக்கிவைக்கத் தெரியாமல் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கிக்கொண்டான்” என்று மிகவும் கேவலமான விமர்சனங்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.
பிறகு பொய்யான விசாரணை அறிக்கை மூலம் வழக்கு ஆரம்பமாகி குடும்பத்தோடு பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். இந்த சமயத்தில் கள்ளக்காமத்தலைவனுடன் மனைவி சந்தோஷமாக சல்லாபமாக கற்புக்கரசி போல வாழலாம்.
இவையனைத்தும் இந்திய சட்டங்கள், காவல்துறை, நீதித்துறை இவற்றின் கண்ணெதிரேயே இன்றும் பல பொய் வரதட்சணை வழக்குகளில் நடந்துகொண்டிருக்கிறது!
இதுஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது சரி விவாகரத்து செய்து ஒழித்துவிடலாம் என்று போனால் இந்தியாவில் ஆண்களுக்கு விவாகரத்து என்பது ஒரு கானல்நீர் போல. பின்வரும் செய்தியைப் பாருங்கள். இது ஒரு துளி மட்டுமே...
Octogenarian man gets divorce after a 30-year legal battle | |
New Delhi, Jan 13 2011 Deccan Herald | |
After a three-decade-long legal battle, an octogenarian man today finally got divorce on grounds of desertion with the Delhi High Court rejecting his wife's appeal challenging a lower court order. |
இப்போது சொல்லுங்கள். கள்ளக்காம குடும்பப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் யார் புத்திசாலி? படிக்காதவர்களா அல்லது நான் படித்திருக்கிறேன் என்று சொல்லி சட்டத்தின் வழி செல்ல நினைப்பவனா?
இந்தியாவில் உள்ள தவறான சட்டங்கள், ஊழல், சமுதாய பாதுகாப்புப் பணியில் நேர்மையின்மை என்ற அழுகிப்போயிருக்கும் அடிப்படை அஸ்திவாரம் சரிசெய்யப்படும்வரை இதுபோன்ற கள்ளக்காமக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இதற்கு சட்டம் தெரிந்தவன், தெரியாதவன், படித்தவன், படிக்காதவன், பணவசதி உள்ளவன், பணவசதி இல்லாதவன் என்ற காரணமெல்லாம் செய்தியைப் படிப்பவர்களுக்கு சொல்லும் செய்தியாக மட்டுமே இருக்குமே தவிர பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது.
அதுவரை இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு இந்தியாவில் திருமணம் செய்யாமல் இருப்பதுதான். அப்படி திருமணம் செய்ய நினைத்தால் பின்வரும் வீடியோவில் இருக்கும் கணவனின் வழிமுறையைப் பின்பற்றவேண்டும். இந்த இரண்டில் எது சிறந்தது என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment