பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, January 29, 2010

இந்தியத்தம்பதிகளுக்கு காவல்நிலையத்தில் தேனிலவு!

உலகளவில் கலாச்சாரத்தில் பெருமையாகப் பேசப்பட்டுவந்த இந்தியத் திருமணங்களின் தற்போதைய நிலை இரு கிரிமினல் கூட்டத்திற்கிடையே நடக்கும் தொழில் முறை ஒப்பந்தம் போன்ற இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் செய்தித்தாளில் வந்துள்ள செய்தியின்படி இந்தியத் திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டு காவல் நிலையத்தில் தேனிலவு கொண்டாடும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

1961 ம் ஆண்டு முதல் வரதட்சணை தடுப்புச் சட்டம் என்று ஒன்று இருக்கிறது . உண்மையாகவே அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தங்களுக்குச் சாதகமாக ஒரு கூட்டம் அதை பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களை பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு பலர் இந்த சட்டங்களைப் பயன்படுத்தி வேறு விதமாகத் தான் தொழில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சட்டப்படி வரதட்சணை கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் தண்டனைக்குட்படுத்தப்படவேண்டும். ஆனால் 1961 முதல் இன்று வரை வரதட்சணை கொடுப்பவர் யாரும் குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதில்லை.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த நகரத்தில் வாழும் நவ நாகரீகப் பெண்கள் என்று சொல்லப்படும் ஒரு கிரிமினல் கூட்டம்
காலப்போக்கில் இந்த சட்டத்தை எப்படி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என நன்கு யோசித்து அதற்குப் பெண்ணுரிமை என்ற சாயத்தைப் பூசி தங்களின் சொல்லுக்கு அடிபணியாத அப்பாவி ஆண்களை துன்புறுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பல படித்த இளைஞர்கள் மத்தியில் வரதட்சணை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு பல வருடங்களாக இளைஞர்கள் வரதட்சணையற்ற திருமணம் செய்துவருகிறார்கள்.

ஆனால் வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட கைதேர்ந்த கிரிமினலாக மாறிவிட்ட பல படித்த மனைவியர் தங்களது தவறான நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பொய் வரதட்சணைப் புகார் கொடுக்கும் போது தாங்கள் பெருந்தொகையை வரதட்சணையாகக் கொடுத்து திருமணம் செய்ததாகவும் மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்படுவதாகவும் கணவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகள் போட ஆரம்பித்துவிட்டனர்.

இவர்கள் இதுபோன்று வரதட்சணை கொடுத்ததாகத் தைரியமாகப் புகாரில் எழுதினாலோ, செய்தித்தாளில் செய்தியாக வெளியிட்டாலோ, நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னால் சொன்னால் கூட அவர்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது என்ற ஒரு நம்பிக்கையை இந்த சட்டங்களும் நீதிமன்றங்களும் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டன. மேலும் கணக்கில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் வரதட்சணை கொடுத்ததாகப் பொய் சொல்லாம் என்ற தைரியத்தையும் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பெண்களுக்கு கொடுத்திருக்கிறது. இதுபோன்ற தவறான சட்ட, நீதிமன்ற நடைமுறைகள் தான் இந்தப் பெண்கள் கிரிமினலாக மாறக் காரணமாக அமைந்துவிட்டது.

அதனால் வரதட்சணை கேட்கும் ஆண்களை தண்டிப்பதற்காக வந்த சட்டம் நாளடைவில் பல இந்திய மனைவிகளை கிரிமினலாகவே மாற்றிவிட்டது. பெண்களைப் பாதுகாக்க வந்த சட்டங்கள் இப்போது பெண்களில் ஒரு பிரிவினரை கிரிமினலாகவே மாற்றும் அளவிற்கு தவறான சட்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

இதன் விளைவாக இந்தியாவில் திருமணம் என்ற உறவுமுறையே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பல தன்னார்வ அமைப்புகள் அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டியதும் இதுவரை வரதட்சணை கொடுமை நாட்டில் இன்னும் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த பெண்கள் நல்வாழ்வு அமைச்சகம் இந்திய மனைவிகள் கிரிமினலாகிக்கொண்டிருக்கும் அவலநிலையை உணரத்தொடங்கியிருக்கிறது.

அதன்விளைவாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த புதிய மாற்றங்களின் படி திருமணம் ஆனதும் கணவர், மனைவி மற்றும் இரு குடும்பத்தாரும் காவல் நிலையத்திற்கு சென்று திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அனைத்தையும் பட்டியலிட்டு சான்றிதழ் பெறவேண்டும் என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறது.

இந்த சட்டதிருத்தத்திற்கு முக்கிய காரணம் கணவர்களோ, வரதட்சணை கொடுமையோ அல்ல.

திருமணத்திற்குப் பிறகு தனக்கு அடிபணியாத கணவரையும் அவரது குடும்பத்தையும் தன் காலடியில் கொண்டுவருவதற்காக பல கிரிமினல் மனைவிகள் தனக்குத் திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களையும், தனது பெற்றோர் தானாக விருப்பப்பட்டு கொடுத்த சீர்வரிசைப் பொருட்களையும் கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தி பெற்ற வரதட்சணையாக சித்தரித்து பொய் வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கிரிமினல் மனைவிகளை சட்டப்படி தண்டிக்கவோ அல்லது தடுக்கவோ இயலாத அளவிற்கு நிலைமை எல்லை மீறிபோய்விட்டது. அதனால் இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் பொய் வழக்குகள் போடப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று பெண்கள் அமைச்சகம் நினைக்கிறது.

இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதனால் பல அப்பாவி ஆண்களும் பல குடும்பங்களும் பொய் வழக்குகளிலிருந்து தப்பமுடியும்.

ஆனால் இனி இந்தியாவில் திருமணங்கள் என்பது அன்பின் அடிப்படையிலும் ஒருவரையொருவர் நம்பிக்கையுடன் புரிந்துகொண்டு துவங்கும் ஒரு இனிய வாழ்க்கையாக இல்லாமல் நம்பிக்கையற்ற ஏதோ ஒரு ஒப்பந்தம் போலத்தான் மாறப்போகிறது. ஏற்கெனவே பாதி திருமணங்கள் இப்படித்தான் மாறிவிட்டது.

இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் சட்டங்களை சரியாக செயல்படுத்தாமல் போன சுயநலவாதிகள் தான் காரணம். இருக்கின்ற ஒரு சட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தாமல் பல சட்டங்களை இயற்றி கடைசியில் மனைவிகளையே கிரிமினல்களாக்கிவிட்டார்கள் இந்த சட்டமேதைகளும் சமூகக்காவலர்களும்!

திருமணம் முடிந்த கையோடு பெரியோர்களிடம் ஆசி பெற்று நல்வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டிய தம்பதிகள் காவல்நிலையத்திற்கு சென்று பிற்காலத்தில் பொய்வழக்குகள் வரக்கூடாது என்பதற்காக பரிசுகளை பட்டியலிட்டு சான்றிதழ் பெறும் அவலநிலையுடன் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல் வாழ்க்கையின் முதல் படியில் காலடிவைக்கப்போகிறார்கள்.

இந்தியத் திருமணங்களின் அவலநிலையை அரசாங்கமே உங்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இது நாட்டில் திருமணங்கள் எப்படி தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதைக் காட்டுகின்றன.

அரசாங்கம் நினைத்திருந்தால் 1961ல் இயற்றிய வரதட்சணை தடுப்புச் சட்டத்தை ஒழுங்ககாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. அதனால் நீங்கள் இப்போதாவது உண்மையை உணர்ந்து தப்பித்துக்கொள்ளுங்கள். இன்னும் இந்த நிலைமை மேலும் மோசமடைவதற்குத் தான் அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றுவார்களே தவிர எந்தவிதத்திலும் திருமணங்களின் புனிதத்தைக் காப்பாற்ற முன்வரப்போவதில்லை. இந்தியாவில் திருமணம் என்பது உங்களுக்கு ஒரு சாபமாகத்தான் இருக்கும்.

அதனால் இளைஞர்களே சிந்தியுங்கள். இதுபோன்ற கிரிமினல் ஒப்பந்தங்கள் தான் உங்களது திருமண வாழ்க்கையா? இதுபோன்ற கேவலமான உறவுகளில் சிக்குவதை விட இதுபோன்ற கீழ்த்தரமான நடைமுறைகளும் பொய்கேசுகளும் இல்லாத நாடுகளில் திருமணம் செய்து திருமணம் என்ற புனிதமான உறவின் உண்மையான சுகத்தை அனுபவியுங்கள். உங்களது பெற்றோர்களையும் காப்பாற்றுங்கள்.

இதோ இந்த செய்தியில் இந்திய சட்டங்கள் மூலம் கிரிமினலாகிவிட்ட மனைவியரின் நிலையைப் பாருங்கள்:


All wedding gifts may now have to be listed

January 15, 2010

Marriages may be made in heaven but the government is going to keep a close watch on what goes on in the ground.

The ministry of women and child development (MWCD) is planning to make it mandatory for the families of the bride and the groom to maintain a list of gifts and other exchanges made at the time of marriage. The Dowry Prohibition Act (DPA), 1961, will be amended to provide it with more teeth while plugging loopholes that allow women to misuse the act.

The list, in the form of a sworn affidavit, has to be notarised and signed by a protection officer or a dowry prohibition officer. Both the parties will have a copy of the list. The punishment for lapse is heavy, including a three-year jail term, not only for the bride and the groom but also their parents.

The ministry will move a cabinet note seeking amendment to the existing provisions of the DPA. It is expected to be placed before the cabinet for approval by the end of this month.

The amendments include lesser penalty for dowry givers; allowing a woman to file a case where she resides permanently or temporarily; including parents and relatives of the bride as aggrieved persons who can complain; and linking the Protection of Women from Domestic Violence (PWDV) with the dowry laws for quick relief.

The definition of dowry is also being widened by changing the phrase “in connection with marriage” to “given before the marriage, at the time and at any time after the marriage.” In case of a woman’s death, all property obtained as dowry would need to be returned to the parents of the woman or her children.

The ministry wants a clear distinction between `gifts’ given voluntarily from those given under duress or compulsion. It also wants the expression `presents’ used in Section 3 (2) of the DPA to be substituted with `gifts’ to indicate the voluntary intent behind the exchange. The expression `gifts’ finds definition in law under the Gift-Tax Act 1958.

“The maintenance of lists of gifts is crucial for the effective implementation of the law,” the National Commission for Women (NCW), which had prepared the amendments, explained.

Senior Supreme Court advocate KTS Tulsi termed the amendments as a positive move. “Mandatory registration of lists would not only facilitate having a proof but also eliminate the possibility of abuse of law by making false allegations,’’ he said.

These changes are in the right balance as they not only protect the women but also safeguard the men, he added. “These changes would ensure speedy disposal of cases. Linking it to the PWDV Act would avoid multiplicity of cases in courts,’’ Tulsi said.

For a change, this amendment has also been welcomed by the men’s organisations. “This saves even the man from getting caught in false dowry cases,” said Virag Dhulia, of Save Indian Family Foundation, an organisation of harassed husbands.

முழுச் செய்தியை இங்கே காண்க: All wedding gifts may now have to be listed







Sunday, January 24, 2010

திருமண ரகசியம் - வயதுவந்த வாலிபர்களுக்கு மட்டும்!

உங்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இந்த விஷயத்தை ஒவ்வொரு இந்திய இளைஞனும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு பல இளைஞர்கள் இந்த விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதில்லை. பிறகு திருமணமானவுடன் அவர்கள் இது முன்பே தெரியாமல் போய்விட்டதே என்று திண்டாடி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் இப்போது பல வடிவங்களில் வந்துகொண்டிருக்கிறது.

பள்ளியில் படிக்கும்போது ஜாதிகள் இல்லை, வரதட்சணை கேட்பது தவறு போன்ற நீதிகளை உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நீங்கள் அதன்படி நடக்க முற்படும்போது தண்டிக்கப்படுவீர்கள். இது தான் நடந்துகொண்டிருக்கும் உண்மை.

இதுவரை வரதட்சணை கேட்காமலும், வாங்காமலும் திருமணம் செய்த இளைஞர்கள் மட்டும் தான் வரதட்சணை சட்டங்களில் சிக்கவைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதை உறுதி செய்யும் விதமாக இந்திய தேசிய குற்ற ஆவணப் புள்ளிவிவரப்படி 2007ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 75,930 IPC498A வழக்குகளில் போலிஸ் "விசாரணை" என்ற பெயரில் ஏதோ ஒரு அறிக்கை தயார் செய்து புகார் "உண்மை!" என்று 93.9% புகார்களை நீதிமன்றத்திற்கு அனுப்பி அங்கு அவற்றில் வெறும் 20 சதவீதம் மட்டுமே உண்மை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது எதைக்காட்டுகிறது என்றால் வரதட்சணை வாங்காமல் நேர்மையாக திருமணம் செய்பவர்கள் பொய் கேசுகளால் சீரழிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

National Crime Record Bureau Statistics on 498a Case


இந்த 20% வழக்குகள் மேல்முறையீட்டிற்காக மேல் கோர்ட்டிற்கு போகும்போது மேலும் பல பொய் வழக்குகள் தெளிவாகத் தோலுரித்துக்காட்டப்பட்டுவிடும். அதற்குப் பிறகு வரும் தீர்ப்புகளில் கடைசியில் எத்தனை புகார்கள் உண்மையானவை எத்தனை பொய்யானவை என்று நீங்கள் யூகிக்க முடியும்.

அதுமட்டுமல்ல இந்த 75,930 புகார்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு புகாரிலும் ஒரு குடும்பத்திலிருந்து 5 பேராவது குற்றவாளிகளாக பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதாவது 75,930 X 5 = 3,79,650 நபர்களின் (இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்) வாழ்க்கை வழக்கு முடியும் வரை (குறைந்தபட்சம் 5 - 7 ஆண்டுகள்) கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இதில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ஒருவராக இருக்கின்ற வாய்ப்பு மிக அதிகம்.

பொதுவாக போலிஸ் எந்த வரதட்சணைப் புகாரையும் நேர்மையாக விசாரணை செய்யமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை புகாரில் இருப்பதை நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும். அவ்வளவுதான். நீங்கள் தவறு செய்தவரா அல்லது தவறு செய்யாதவரா என்ற கவலையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகளில் இருக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் நாட்டு போலிஸையோ அல்லது நீதிமன்றத்தையோ அனுகாமல் இந்தியப் போலிஸில் கொடுக்கும் புகாரைக்கூட இந்திய நீதிமன்றங்களில் வழக்காக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இன்று நீதிமன்றங்களில் பல வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. இதுபோன்ற விசித்திர வழக்குகளை நீங்கள் வேறு நாடுகளில் நடத்தமுடியுமா?

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 4,51,496.
Total Pendency of Civil and Criminal Cases at the end of 31-12-08

Madras High Court
= 4,51,496

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி தமிழ்நாட்டிலுள்ள சார்பு நிலை நீதிமன்றங்களில் (சென்னை உயர்நீதிமன்றத்தை தவிர) நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 10,16,598

Total Pendency of Civil and Criminal Cases at the end of
31-12-08 in District and Subordinate Courts in Tamilnadu (Except Madras High Court) = 10,16,598



நீங்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தாலும் இந்தப் பொய் வழக்குகளில் சிக்கும் துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். நல்லது மட்டும் தான் நாள் பார்த்து வரும். கெடுதல்கள் நீங்கள் கேட்காமலேயே திடீரென்று வரும். அதனால் கெடுதல்கள் வரும் வழியை அறிந்து அதை தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம். இந்தியத் திருமணம் என்பதுதான் இந்தப் பொய் வழக்குகள் வருவதற்கான வாயிற்படிகள். அதனால் கெடுதல்களைத் தேடிப் போகாதீர்கள்!

இந்தியாவில் திருமணம் செய்ய நினைத்தால் வரதட்சணை வாங்கி திருமணம் செய்வது தான் புத்திசாலித்தனம். ஏனென்றால் வரதட்சணை வாங்கித் திருணம் செய்தவர்கள் இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உங்களது மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த எத்தனை பேர் சட்டத்திற்குப் புறம்பாக வரதட்சணை கொடுத்து அல்லது வாங்கித் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? மேலே புள்ளிவிவரத்தில் சொல்லப்பட்டது போல மொத்த இந்திய மக்கள் தொகையில் வெறும் 75000 பேர் மட்டும் தான் வரதட்சணை வாங்கி திருமணம் செய்திருக்கிறார்களா?

ஆகவே வரதட்சணை சட்டம் என்பது வரதட்சணைக் கொடுமைக்காக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக வேறு விதமான தவறான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் இளைஞர்கள் தப்பிப் பிழைக்கலாம். வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற தவறான முறையில் சட்டங்களைப் பயன்படுத்தும் கீழ்த்தரமான நடைமுறை இல்லை. அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழுங்கள்.

அதற்கடுத்தபடியாக நீங்கள் முற்போக்குவாதி போல செயல்பட்டு ஜாதியை ஒழிக்க கலப்புத்திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்தால் அதையும் அடியோடு விட்டொழித்துவிடுங்கள். ஏனென்றால் கலப்புத்திருமணம் செய்தாலும் ஜாதியை ஒழிக்க முடியாது என்று சமீபத்தில் உயர்நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் கலப்புத்திருமணங்களின் மூலம் மற்றுமொரு ஆபத்தும் காத்திருக்கிறது. அதுதான் "வன்கொடுமை தடுப்புச் சட்டம்" நீங்கள் உயர்ந்த சாதியிலும் பெண் தாழ்ந்த சாதியிலும் இருந்து ஏதோ ஒரு காரணத்தில் உங்கள் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்யப்படும்போது கூடவே இந்த சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவும் சேர்க்கப்படலாம். இது மிகவும் ஆபத்தானது.

கொலை வழக்கில் கூட தகுந்த ஆதாரமில்லாமல் அவ்வளவு எளிதாகப் புகார் கொடுக்க முடியாது. ஆனால் வரதட்சணை வழக்கிலும், வன்கொடுமை வழக்கிலும் மிகவும் எளிதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்குகள் பதிவுசெய்யலாம். புகார் கொடுத்தவுடனே நீங்கள் உங்கள் குடும்பத்தோடு கைது செய்யப்படுவீர்கள். பிறகு 5 - 6 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் வழக்குப் பொய்யானது என்று தீர்ப்பு சொல்லும். அதுவரை உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கப்போகும் இழப்புகளை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

உதாரணத்திற்கு....

பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்தவுடன்

1. உங்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல் கைது செய்து சிறையில் தள்ளப்படுவார்கள்.

2. உங்கள் குடும்பத்தை காப்பாற்ற முயற்சிசெய்து நீங்கள் ஜாமின் வாங்க அலையும் போது பலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களிடம் பணம் பிடுங்க முயற்சி செய்வார்கள்.

3. எல்லாவற்றையும் தாண்டிவந்த பிறகு வழக்கு விரைவாக நடத்தப்படாமல் உங்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் பல ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும்.

4. வழக்கு முடிந்து தீர்ப்பு கிடைப்பதற்குள் உங்களின் வயதான பெற்றோர் குற்றவாளி என்ற அவப்பெயருடன் கவலையடைந்து மரணமடையலாம்.

5. உங்களது சகோதர சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது உழைப்பும் அறிவும் திறமையும் வாழ்க்கையும் வீணாகப்போவதோடு மட்டுமல்லாமல் உங்கள் கண்ணெதிரேயே உங்களது ஒட்டுமொத்தக்குடும்பமும் அற்பத்தனமான பொய்வழக்கால் சிதைந்து போவதை உங்களால் தடுக்க முடியாமல் வேதனையோடு பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.

இன்னும் பல இழப்புக்கள் இருக்கின்றன...

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பொய்வழக்குகளில் சிக்குவோருக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அவல நிலை. இது அப்பட்டமான உண்மை.

இந்த அனைத்து இழப்புகளுக்குப்பிறகு நீங்கள் வழக்கில் வெற்றி பெற்றால் என்ன? தோற்றுப் போனால் என்ன? ஒரு வித்தியாசமும் இல்லை.

அதனால் உங்களது பெற்றோரையும் குடும்பத்தையும் காப்பாற்றவேண்டுமானால் திருமணம் செய்வதற்கு முன் யோசித்து சரியான முடிவெடுங்கள்.


சமீபத்தில் செய்தித்தாளில் வந்த செய்தி..... ஒருபக்கம் இதுபோன்ற அறிவுரைகள்...

இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. அதை விடுத்து உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது நாட்டில், சமுதாயத்தில் நடக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.



மறுபக்கம் இதுபோன்ற நீதிமன்றம் சொல்லும் அறிவுரை......


மும்பை : "வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வதால், ஒரு பெண்ணின் பிறந்த ஜாதி மாறி விட்டதாக கருத முடியாது' என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ராஜேந்திர ஸ்ரீவத்சவா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணை கேட்பதாகவும், ஜாதியின் பெயரால் கொடுமைப் படுத்துவதாகவும் எனக்கு எதிராக என் மனைவி புகார் அளித்துள்ளார்.


இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்,"பழங்குடியின அல்லது தலித் வகுப்பைச் சேர்ந்த பெண், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதால், அவரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என, கருத முடியாது. அவர் எந்த ஜாதியில் பிறந்தாரோ, அந்த ஜாதி அந்தஸ்தில் தான் தொடர்வார்' என, தீர்ப்பு வழங்கியது.


அதனால் இளைஞர்களே, இதுபோன்ற அறிவுரைகளைக் கேட்டு குழம்பிவிடாதீர்கள்! வரதட்சணையை ஒழிக்கிறேன், சாதியை ஒழிக்கிறேன் என்று ஏதோ புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு முட்டாள் தனமாக வாழ்க்கையை சிதைத்துக்கொள்ளாதீர்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக பல கட்சிகளும், பல அரசுகளும், சட்டங்களும் செய்ய விரும்பாததை நீங்கள் செய்யநினைத்து சதிவலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
நிலவிற்கு கூட ராக்கெட் விட்டுவிட்டார்கள். ஆனால் இதுவரைப் பள்ளிச் சான்றிதழில் கூட சாதியை எடுக்க யாருக்கும் இன்னும் மனம் வரவில்லை. காரணம் என்ன?

சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இன்று வரை கல்விக் கூடம் முதல் கட்சி வரை சாதியை வைத்துத்துத்தான் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீங்கள் சாதியை ஒழிக்க முற்பட்டால் நீங்கள் பொய் வழக்குகளால் சின்னாபின்னமாவது உறுதி.


1961 ம் ஆண்டு முதல் வரதட்சணை தடுப்புச் சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. அதற்குப் பிறகும் 498A என்ற சட்டமும் சமீபத்தில் 2005 ல் குடும்ப வன்முறை சட்டம் என்றும் புதிய புதிய உருவங்களில் ஒரே வித நோக்கத்திற்காக பல சட்டங்கள் இயற்றிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? இருக்கின்ற ஒரு சட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தாமல் போனது தான் காரணம். கடைசியில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யும் இளைஞர்கள் தான் இந்த சட்டங்களுக்குப் பலியாக்கப்பட்டு புள்ளிவிபரக்கணக்குக் காட்டப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

1961ம் ஆண்டு இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டப்படி இதுவரை வரதட்சணை கொடுத்த ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை.
ஆகவே வரதட்சணையை ஒழிக்க அரசாங்கத்திற்கு இன்றுவரை மனம் வரவில்லை.

சட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தாமல் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக எல்லா குற்றத்திற்கும் ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் தான் காரணம் என்று பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. வரதட்சணையை ஒழிக்க முன்வந்து வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய முன்வரும் அப்பாவி இளைஞர்களை இந்த சட்டங்களை ஒருதலைபட்சமாக பயன்படுத்தி பலிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் இளைஞர்களே உங்களுக்கு அந்த நாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கும் அல்லது உயர் பதவிகளில் பணி செய்வதற்கும் சாதி அடிப்படையிலா அந்த நாடுகள் உங்களை தேர்வு செய்திருக்கின்றன? யோசித்துப் பாருங்கள். உங்களின் திறமை ஒன்று மட்டும் தான் நீங்கள் அந்த நாடுகளில் வாழ்வதற்கு காரணம். அந்த நாடுகளில் நீங்கள் சாதி மத பேதங்களை மறந்து வாழவில்லையா? இன்னும் சொல்லப்போனால் சாதி மத பேதமில்லாமல் உங்களின் வாழ்க்கைத்தரம் அங்கு நன்றாகவே இருக்கிறதல்லவா? அதனால் உங்களது திறமையையும் நல்வாழ்க்கையும் இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் இழந்து விடாதீர்கள்!

ஆகவே படித்த இளைஞர்களே சிந்தியுங்கள். நீங்கள் இந்தியாவில் வரதட்சணையை ஒழிக்கவோ, சாதியை ஒழிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். தேவையில்லாத ஆபத்தான முயற்சிகளில் இறங்கி வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள். அதற்குப் பதிலாக சாதிபேதமும் வரதட்சணை முறையும் இல்லாத நாடுகளில் திருமணம் செய்து வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளுங்கள். உங்களது பெற்றோர்களைக் காப்பாற்றுங்கள். நீங்கள் உங்கள் வீட்டிற்கு செய்யும் சேவையே நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை.

Tuesday, January 19, 2010

முதலிரவிற்கு ஆவலுடன் தயாராகும் இளைஞர்களுக்கு மட்டும்!


சமீபத்தில் "குமுதம்" இதழில் (21-01-2010) கவர்ஸ்டோரியாக வந்துள்ள கட்டுரையில் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி தரப்பட்டிருக்கிறது.

திருமணம் என்ற பெயரில் ஆண்களை வலைவிரித்துப் பிடித்துப் பிறகு அவர்களை சட்டத்தின் துணையோடு கொல்லும் ஒரு கொடிய விசித்திரப் பிராணிகளின் கூட்டம் அதிகரித்துவருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக நன்கு படித்து நல்ல பணியிலுள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்றால் இந்தப் பிராணிகளுக்கு கொஞ்சம் கூடுதலான ஆசை இருக்கிறதாம். அதனால் ஆண்களே உங்களது பெற்றோர் உங்களை கஷ்டப்பட்டு படிக்கவைத்து நீங்கள் உங்கள் திறமையால் முன்னேறி வெளிநாட்டில் ஒரு நல்ல பணியையும் பெற்று வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கும்போது கண்ணைத் திறந்து கொண்டே பாழடைந்த சுனாமிக் கிணறு போல உள்ள இந்தியத் திருமணங்களில் சிக்கி விடாதீர்கள்.

கடலில் வரும் சுனாமியில் சிக்கினால் என்றைக்காவது ஒரு நாள் கரையில் ஒதுங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பாழங்கிணற்றுக்குள் ஏற்படும் சுனாமியில் நீங்கள் அகப்பட்டால் அதற்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்க வேண்டியது தான். யாரும் உங்களைக் காப்பாற்றக்கூட முன்வரமாட்டார்கள். அத்தகைய கொடிய நிகழ்ச்சியாக மாறிவிட்டது இந்தியத் திருமணங்கள். அதனால் ஜாக்கிரதையாக இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

வயதான காலத்தில் பேரக்குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து எண்ணிக்கை சொல்லித்தரவேண்டிய உங்களது பாசமிகு பெற்றோர்களை நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் சிறைக்கம்பிகளை எண்ணவைத்து விடாதீர்கள். இந்தியாவில் திருமணம் செய்வது என்பது நீங்கள் உலகத்தில் உள்ள எல்லாப் பாவங்களையும் ஒன்று சேர்த்து உங்கள் பெற்றோர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய கொடுமையாக மாறிவிடும். ஜாக்கிரதை!

குமுதத்தில் வந்துள்ள அந்தச் செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே சென்று பாருங்கள் ---> " இந்தியப் பெண்ணா? ஐயோ வேண்டாம்! "

இந்தச் செய்தியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஆராய்ச்சி செய்து பல்கலைக்கழக இணையதளத்திலேயே அவர்களது மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டார்கள்.

ஆனால் இன்னும் இந்த அபாயத்தைப் பற்றி இந்திய இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. இளைஞர்களே விழித்தெழுங்கள், உங்களது நண்பர்களுக்கும் இந்த நற்செய்திகளை அனுப்பி அவர்களையும் காப்பாற்றுங்கள்.

எல்லா நாடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். உங்களுக்குத் திருமணம் அவசியம் என்றால் எந்தநாட்டிலாவது உள்ள ஒரு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள். இந்தியத் திருமண சுனாமியில் சிக்கி சீரழிந்து விடாதீர்கள்!

இனி தப்பிப் பிழைத்துக் கொள்வதா அல்லது சிக்கி சின்னாபின்னமாவதா என்று முடிவு செய்யவேண்டியது உங்களது பொறுப்பு. பல ஆயிரம் மைல்களுக்கப்பால் வாழும் இளைஞர்களுக்கே இந்த கதி என்றால் உள்நாட்டில் வாழும் இளைஞர்களின் கதி எவ்வளவு மோசமாக இருக்கும். உள்நாட்டு இளைஞர்களே நீங்கள் தான் அதிகம் இதைப் பற்றி சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

இதோ அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை:

University of Massachusetts Dartmouth’s Center for Indic Studies, USA

Issue Date: December 16-31, 2006, Posted On: 12/18/2006

By Bal
Ram Singh

Non Resident Indians, or NRIs, have become a dominating feature of Indian culture so much so that people are not only overcoming their fascination and resentfulness but the government has started making serious policies incorporating NRIs.

From NRI quotas in train reservations to overseas citizenship, India has traveled quite a distance within the past ten years. Bollywood movie plots have increasingly included not just foreign scenes, but stories of NRIs as they relate to India and their adopted lands.

With about 25 million persons of Indian origin, all commonly referred to as NRIs, and their combined income more that of the Gross Domestic Product of India, they could become a substantial force to reckon with. While NRIs are, in general, considered a model ethnic group for their achievements in education, business and professional services, their social, cultural, and political brand is yet to be developed.

However, NRIs have already developed a reputation back in India. With several reports of NRI husbands marrying and abandoning their wives in India, many reported and highlighted cases of abuse of newly married Indian women by NRI husbands have elicited cognizance by the Overseas Indian Affairs ministry.


According to the OIA Ministry, “a national consultation on this issue was organized on Feb. 18, 2006 at Vigyan Bhavan, New Delhi by the Minister of Overseas Indian Affairs. The purpose of the national consultation was to take into account the perspectives of various stakeholders and make use of their practical experience in finalizing a booklet for the guidance of women planning to get married to Indians overseas.

That may not be necessary, though, as a new twist has come to light recently to which NRIs may be very vulnerable given the perception of their power, position, and money. A new Domestic Violence Against Women Law 2005, a law enacted last year by the Indian Parliament and effected in November this year, has prompted a major debate not as much on the need to protect women against domestic violence, but how major loopholes in the law allow women to take revenge or extort favors including money from not only husbands but also ex-boyfriends, ex-husbands, and in-laws, not only for violence but also for feeling slighted or insulted even for a comment on their foster siblings.

From my non-lawyerly reading of the Indian government gazette, the law can be used against fathers, brothers, and sons as well.

There is so much uproar that the Minister of Overseas Indian Affairs has an ongoing debate on this issue, and an activist group made of Indians and NRIs has set up a website, 498a.org, to provide update and self-help for victims of this law.

Many western governments have already issued advisories to their male citizens against the marriage trap in India. The U.S. State Department has published an advisory to U.S. Citizens of Indian Origin warning as under: “A number of U.S. citizen men who have come to India to marry Indian nationals have been arrested and charged with crime related to dowry extraction. Many of the charges stem from the U.S. citizen’s inability to provide an immigrant visa for the prospective spouse to travel immediately to the United States. The courts sometimes order the U.S.citizen to pay large sums of money to his spouse in exchange for the dismissal of charges.”

Similarly, the Canadian government has also issued the following advisory: “Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve Indo-Canadian males who abandon their wives in India after cheating them out of large sums of money. Other cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.”

Even the World Health Organization published a report titled “Abuse on Elders” and mentioned that daughter-in-laws in India were abusing dowry laws when they failed to separate their husbands from his parents and, as a result, old in-laws are being harassed and tortured by the police.

WHO, in its “Missing Voices” report, mentions: “In India, there is a law that is intended to protect the daughter-in-law from abusive in-laws. A daughter-in-law can go to the police station and lay a complaint that she is being abused by her in-laws, and the in-laws are arrested on her word alone. However, the focus group participants reported that some daughters-in-law are using this law as a form of elder abuse, by making false police reports. In general, participants stressed that the lack of caring attitude by daughters-in- law was a major problem.”

The Section 498a will only add to this widening gap, and it seems the Minister for the Welfare of Women and Children, Renuka Chaudhary, who has single-handedly pushed this law, may be motivated by more than the welfare of women in general. In 2002, as a Congress Member of Parliament, she filed a case against a British national and got him arrested.

In a combative interview with Karan Thapar on CNN-IBN TV, Chaudhary appear­ed to be set to teach lessons to men. Interestingly, several women have also started speaking against the potential misuse of this law.

On the positive side, this law now makes NRI girls more attractive to NRI boys, who otherwise used to look back to India to find homely girls for their brides. Also, it certainly provides some level of relief to those women who genuinely dream of their lives with NRI men, but end up in unscrupulous hands (and I have known at least a couple of such cases), and many times suffer, to no avail.

This sad saga, from the land where the value of relations and duties of family members were considered overriding anything and everything, perhaps needed to be played out to understand how low the society has reached.



இப்போது இந்தப்படத்தில் தப்பிச்செல்லும் இளைஞரைப்போல் நீங்களும் தப்பிப் பிழைக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்!






Friday, January 15, 2010

பர்ஸ் ஜாக்கிரதை!


லிஃப்ட் கேக்கலாம்னு பாத்தா போட்டிக்கு அவளும் நிக்கறாளே...! பரவாயில்லை, பைக் பெரிசாத்தான் இருக்கு... ரெண்டு பேருமே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்... ஆனா, பைக்காரன் பர்ஸ் எவ்ளோ பெரிசுன்னு தெரியலயே...?


மேலுள்ள உண்மை வாசகம் படத்துடன் சேர்ந்து வந்தது. உண்மையை யாரோ எழுதியிருக்கிறார்கள்!

இளைஞர்களே ஜாக்கிரதை! பர்ஸ் காலியானபிறகு ஏற்படும் பின் விளைவுகள்......... திருமணம் ஆகாதவராக இருந்தால் கற்பழிப்புப் புகார், பாலியல் கொடுமை இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்புகளில் பாருங்கள் ---> கற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும் , காதலனுக்கு எதிராக கற்பழிப்பு புகார் கொடுத்த கல்லூரி மாணவி . திருமணமானவராக இருந்தால் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, குடும்ப வன்முறை....இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள் ---> "பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் " .

இப்படி தகனமேடைகள் பலவிதம். நீங்கள் எவ்வவு பெரிய பர்ஸ் வைத்திருந்தாலும் சரி இந்தியத் திருமண தகனமேடைகளில் சிக்கினால் கடைசியில் சாம்பல் கூட மிஞ்சாது!
அதனால் யோசித்து முடிவெடுங்கள். மாய வலையில் சிக்கி சீரழிந்து விடாதீர்கள். பர்ஸையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள், அத்தோடு இழந்தால் திரும்பக் கிடைக்காத உங்களது வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

இதை இந்திய நீதிமன்றங்களும், தலைமை நீதிபதியும், ஜனாதிபதியுமே சொல்லிவிட்டார்கள் (வலது புறமுள்ள இணைப்புகளில் இந்த எச்சரிக்கை செய்திகளைப் படித்துக்கொள்ளுங்கள்). கோடி கொடுத்தாலும் இந்த உயிர் காக்கும் அறிவுரைகள் எங்குமே கிடைக்காது. இதற்குப் பிறகும் நீங்கள் துணிந்து இந்தியத்திருமணம் என்ற தகனமேடையில் இறங்கினால் நீங்கள் சந்திக்கப்போகும் இழப்புகளுக்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். உங்களது வாழ்வும் எதிர்காலமும் தகனமேடைகளில் எரிக்கப்பட்டு கடைசியில் சாம்பலில் தான் உங்களது எதிர்காலத்தை
தனியாகத் தேடிக்கொண்டிருக்கவேண்டும். இது உண்மை. அப்படி தகனமேடையின் சாம்பலில் எதிர்காலத்தை தேடிக்கொண்டிருக்கும் கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள் ---> www.498a.org.



Sunday, January 10, 2010

பதிவுகளைப் படித்தால் "BP" ஏறுமா?


தகனமேடையின் பதிவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பிய ஆர்வலர்களுக்காக இந்தப் பதிவு.......

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர்ல எல்லாப்பெண்களுமா இப்படி பண்றாங்க.எத்தனையோ ஆண்கள் தவறு செய்ற மாதிரி சில பெண்கள்.ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க.நீங்க திருமணம் செய்யாதவரா?

அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்

மதார் said...

//இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடையில் காலடி வைத்தவுடனே உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை.//

உங்க வீட்ல பெண்கள் உண்டா சார் ? உங்க ப்ளாக் படிக்கும் பொழுது மட்டும் எனக்கு BP கூடுது , உங்களுடைய பல பதிவுகள் படிச்சுருக்கேன் இப்போதான் கொஞ்ச நாளா, தொடர்ந்து படிக்கும்போதுதான் நீங்க ஒரேமாதிரி செய்திகளை போடுறது புரிஞ்சது . உங்க கண்ணுக்கு ஆண்கள் பெண்களுக்கு செய்யும் கொடுமைகளும் அதை பற்றிய செய்திகளும் தெரியாதா? இல்ல அந்த செய்தி படிக்கும் போது மட்டும் உங்களுக்கு short time memory ஆய்டுமா? உங்களுடைய செய்திகள் ஒட்டுமொத்த பெண்களுமே தப்பானவர்கள்னு சொல்ற மாதிரி இருக்கு . தப்பான செய்திகள பிறர் அறியச் செய்ங்க , ஆனா ஒருசாரா செயல்படாதீங்க , இது என்னோட வேண்டுகோள் .உங்கள் மனதை என் வார்த்தைகள் புண்படுத்தினால் மன்னிக்கவும் .

=========================================

உங்களுடைய வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

நாட்டிலுள்ள நல்ல பெண்களுக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் தான் நீங்கள் இருவரும் இங்கு உங்களின் கருத்துக்களை எழுதியிருப்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. அதற்காக எனது பாராட்டுக்களும், நன்றிகளும்.

என்னுடைய பதிவுகளில் உள்ள விஷயங்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். ஆண்கள் அனைவரும் நல்லவர்கள், தவறே செய்யாதவர்கள் என்றோ எல்லாப் பெண்களும் தவறு செய்பவர்கள் என்றோ நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

சட்டத்தின் மூலம் வன்முறை செய்துவந்த மனைவிகள் தான் இப்போது கொலை செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள் என்று எழுதியிருக்கிறேன். இது சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மனைவிகளுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் இதை "அனைத்து மனைவிகளும் அல்லது பெண்களும் கொலைசெய்வதாக" என்று தவறாக பொருள்படுத்திவிட்டீர்கள். படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிமையாக எழுதத் தெரியாததற்காக நான் வருந்துகிறேன்.

என் வீட்டிலும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாயாரும், சகோதரிகளும் இருக்கிறார்கள். பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்கும் என்வீட்டில் இருக்கும் பெண்களைப்போல நாட்டில் பல நல்ல பெண்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்தப்
பெயரையும் கெடுக்கின்றவகையில் பல பெண்கள் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி பெண்குலத்திற்கே இழிபெயரை தேடித்தந்து கொண்டிருக்கிறார்களே என்ற ஒரு ஆதங்கத்தில் எழுதப்படுவது தான் இந்த பதிவுகள்.

இது போல பல தவறான பெண்கள் இப்படி சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் பிறகு உண்மையாகவே பாதிக்கப்படும் பெண்கள் சட்டத்தின் உதவியை நாடும் போது அவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள். நீங்கள் பள்ளியில் படித்த "புலி வருது" கதையை கொஞ்சம்
ஞாபகப்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் இந்த தவறான சட்டப்பயன்பாட்டிற்கு பின்னால் உள்ள ஆபத்துப் புரியும்.

இதற்கும் இளைஞர்களை திருமணம் செய்வதைப்பற்றி எச்சரிக்கை செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அதிலும்
பெண்களுக்குத்தான் நன்மை இருக்கிறது.

தவறாக சட்டத்தைப் பயன்படுத்தி நல்ல பெண்களின் பெயருக்கு இழுக்கு விளைவிக்கும் பெண்களை கட்டுப்படுத்துமாறு பலர் அரசாங்கத்திடம் முறையிட்டனர். ஆனால் அரசாங்கம் என்ன சொல்கிறதென்றால் இன்னும் நாட்டில் வரதட்சணை கொடுமை இருக்கிறது. அதனால் தவறாக சட்டத்தைப் பயன்படுத்துபவர்களை நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டார்கள்.

வரதட்சணை கொடுப்பதை படித்த பல பெண்களும் இதுவரை விடவில்லை. அவர்கள் செய்யும் குற்றத்தை அரசால் தடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதனால் அரசாங்கத்திற்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கில் வரதட்சணையை ஒழிக்க ஒரு புதுமையானமுறைதான் இந்த பதிவுகள். இத்தனை வருடங்கள் சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் செய்ய இயலாததை இந்தப் பதிவுகள் மூலம் செய்யலாம் என்ற ஒரு சிறு முயற்சி தான்.

இந்த பதிவுகளை படிக்கும் ஆண்கள் என்ன நினைப்பார்கள் என்றால் வரதட்சணை வாங்காமலேயே இப்படி அப்பாவிகள் மீது வரதட்சணை வழக்குப் போடுகிறார்களே நாம் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் என்னவாகுமோ என்ற பயத்திலேயே வரதட்சணை வாங்கும் ஆட்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்பிவிடுவார்கள். பிறகு இந்தியாவிலுள்ள பெண்களுக்கு வரதட்சணை கேட்கும் ஆட்களால் தொல்லையே இருக்காதல்லவா?

நான் இங்கு பெண்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தும் செய்திகளை எழுதவில்லை. ஆண்களுக்குத்தானே எச்சரிக்கை செய்கிறேன். இதில் தவறென்ன இருக்கிறது. நல்ல ஆண்கள் பொய் வழக்குகளிலிருந்து தப்பித்துப் போகட்டும், வரதட்சணை கேட்கும் எண்ணமுடைய ஆண்கள் பார்த்து பயந்து ஓடட்டுமே. இதில் நல்ல பெண்களுக்கு என்ன நஷ்டம் இருக்கிறது?

இப்படி கொஞ்சம் வேறு விதமாகவும் யோசியுங்கள். எல்லா இடத்திலும் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த முறை படிக்கும் போது உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாகப் படியுங்கள் உண்மை விளங்கும். உள்ளே இருக்கும் சுளைகளின் ருசியை உணராமல் பலாப்பழத்திலுள்ள முட்களை
மட்டும் பார்த்துவிட்டு அவசரமாக ஒரு முடிவிற்கு வந்து விடாதீர்கள்.

ஆண்கள் செய்யும் குற்றங்கள் கண்ணுக்கு தெரியாதா? என்று கேட்டிருக்கிறீர்கள். ஆண்கள் செய்யும் அனைத்து குற்றங்களும் முட்டாள்கள் செய்யும் குற்றங்கள் போன்றவை. உலகத்திற்கே தெரியும். இந்த முட்டாள்கள் சிறிய குற்றம் முதல் மிகப்பெரிய குற்றம் வரை செய்வார்கள். ஆனால் ஒருபோதும் சட்டத்தைப்பயன்படுத்தி அந்தக் குற்றங்களை செய்யத்தெரியாது. மாறாக குற்றங்களை செய்துவிட்டு அந்த சட்டங்களில் மாட்டிக்கொள்வார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. அதனால் தான் சாதாரண குடிமகள் முதல் அரசாங்கம் வரை ஆண்கள் என்றால் எப்போதும் குற்றம் செய்பவர்கள் என்ற முத்திரையே குத்திவிட்டார்கள். அதைப்பற்றி நான் எழுதித்தான் அனைவருக்கும் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் தவறான பெண்கள் எப்போதும் புத்திசாலிகள். சட்டம் ஒரு இருட்டறை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்ற இருட்டறைக்குள் இருந்து கொண்டு ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் அப்பாவிகளை தாக்குகிறார்கள். அதனால் பெண்கள் செய்யும் வன்முறைகள் வெளிச்சத்திற்கே வருவதில்லை. அதை இது போன்ற பதிவுகள் ஒரு துளி விளக்கொளியில் காட்டும்போது இதுவரை பெண்கள் தவறே செய்யாதவர்கள் என்று தவறான எண்ணத்தில் ஊறிப்போன உள்ளங்களுக்கு கோபம் வருவது இயற்கையான விஷயம் தான். அதை அவ்வளவு எளிதாக அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. அவர்களின் அப்பாவித்தனமான மனநிலையைக் கண்டு வேதனையாகத்தான் இருக்கிறது.

இதற்குப் பிறகும் உங்களுக்கு என்னுடைய பதிவுகள் "BP" யை ஏற்றினால்
அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அப்படியே உங்களுக்குப் புரியவில்லை என்றால் தாராளமாக விளக்கம் கேட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள். அது தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி.

இப்போது உங்களுக்கு இந்த பதிவின் உட்கருத்துக்கள் நன்றாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா 'Blog' பதிவுகளும் ஏதோ வேலையில்லாமல் பொழுபோக்கிற்காக எழுதப்படுவதாக நினைத்து மேலோட்டமாகப் படித்தால் கடைசியில் ஏமாற்றங்களும் அதன் விளைவாக கோபங்களும், மனக்குழப்பங்களும் தான் மிஞ்சும்.

உங்களைப் போன்றவர்கள் மேலும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் பல நல்லக் கருத்துக்களை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். அதனால் உங்கள் கருத்துக்கள் புண்படுத்திவிடுமோ என்று நீங்கள் வருத்தம் தெரிவிக்கவேண்டாம். நேர்மறையான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் தான் படைப்புகளை மெருகேற்ற உதவும்.

Saturday, January 9, 2010

இந்திய ஆண்களே ஜாக்கிரதை - உங்களுக்கு தகனமேடை தயார்

இதுவரை சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறை செய்து வந்த மனைவிகள் இப்போது அடியாட்களை வைத்து ஆளையே கொலைசெய்யும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டார்கள்.

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை இன்றே குழிதோண்டி புதைத்து விடுங்கள். இன்னும் நீங்கள் விழித்துக்கொள்ளவில்லையென்றால் உங்களுக்கு உங்கள் குடும்பத்தோடு சேர்த்து இறுதியாத்திரைக்கான சங்குதான் ஊதப்படும்.

சமீபத்தில் ஒரு மனைவி தன் கணவருக்கு எதிராக கொடுத்த வரதட்சணைப் புகாரை கணவர் உயர்நீதிமன்றத்தின் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டார் என்பதைத் தாங்கிகொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்து அந்தக் கணவரை கொலை செய்ய கூலிப்படை ஏற்பாடு செய்து தவறுதலாக அந்தக் கூலிப்படை வேறு ஒரு ஆளை கொலை செய்துவிட்டது. கூலிப்படையின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான அவர் துடிதுடிக்கும் காட்சியை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தது ஒரு பெரிய மனுஷக் கூட்டம். இது தான் ஆண்களின் உயிருக்கு அரசாங்கமும் சக இந்தியர்களும் கொடுக்கும் மரியாதை.


அந்தக் கொடுமையை பார்க்கும் தைரிய மனம் படைத்தவர்கள் மட்டும் இங்கே சென்று பாருங்கள்: வீடியோக் காட்சி

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இது நடந்ததெல்லாம் போலிஸின் குடும்பத்தில். தவறுதலாக கொலை செய்யப்பட்டதும் ஒரு போலிஸ் தான்.


தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்

ஜனவரி 09,2010

திருநெல்வேலி: நெல்லை எஸ்.ஐ., வெற்றிவேல் கொலையில் தேடப்படும் இன்னொரு எஸ்.ஐ.,யின் மனைவி, மாமியார் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்றுமுன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலைசெய்யப்பட்டார். நெல்லை டி.ஐ.ஜி., கண்ணப்பன், எஸ்.பி., ஆஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் தனிப்படைகளாக விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தேடிவருகின்றனர்.

ஆழ்வார்குறிச்சியை அடுத்துள்ள கடையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சிவசுப்பிரமணியன்(34). நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர்.

இவருக்கும், ஸ்ரீவைகுண்டத்தை அருகே வெள்ளூரை சேர்ந்த ஆறுமுகம் மகள் சிவகாமிக்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன் சிவகாமி, சிவசுப்பிரமணியன் மீது போலீசில் வரதட்சணை புகார் கொடுத்தார். இதனால், சிவசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐகோர்ட் மூலம் உத்தரவு பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.அவர் மீது கோபம்கொண்ட சிவகாமியின் சகோதரர்கள் இந்த கொலையை முன்னின்று செய்துள்ளனர். ஆழ்வார்குறிச்சி, கடையம் இரண்டுமே அருகருகே உள்ள ஸ்டேஷன்கள். சிவசுப்பிரமணியனும் அதே வழியில்தான் அடிக்கடி வந்துசெல்வார். தற்போது சிவசுப்பிரமணியன் விடுமுறையில் வெளியூர் சென்றுள்ளார். சம்பவத்தின் போது வெற்றிவேல், ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிவசுப்பிரமணியன் என நினைத்து கொலை கும்பல் எஸ்.ஐ., வெற்றிவேலை கொலை செய்தது.

கொலை குறித்து கேள்விப்பட்டதுமே சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி, அவரது தாயார், வெள்ளூரிலிருந்து தலைமறைவாகிவிட்டனர். தனிப்படையினர் சிவகாமியின் தந்தை ஆறுமுகம், அண்ணன் கந்தசாமி, தம்பி முருகன் உள்ளிட்ட ஏழு பேரை தேடிவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் கந்தசாமியின் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதால் போலீசார் இதை உறுதிப்படுத்தினர். நேற்று மாலை வரை எஸ்.ஐ., கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

=========================

ஆகவே ஆண்களே இந்தியாவில் திருமணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஒன்று சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்படுவீர்கள் அல்லது மனைவியின் கூலிப்படையால் தாக்கப்படுவீர்கள்.

வழக்கம் போல் ஒரு கூட்டம் ஐயோ பாவம் பொம்பளை தெரியாம செஞ்சிட்டா என்று சாதகமாக பேசி கொலைகாரிகளுக்கும் சட்ட தீவிரவாதிகளுக்கும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறது. இது வரை அரசாங்கம் கூட இது போன்ற கொலைகாரிகளுக்குத்தான் சாதகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் தவறான பெண்களை தவறான சட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்தியதின் ஒரு வெளிப்பாடு தான் மேலே நீங்கள் படித்த கொலை செய்தி.

வரதட்சணை கொடுமை என்ற பெயரில் பெண்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு மாறும் அளவிற்கு தவறான சட்டங்களை கொடுத்து அரசாங்கம் அவர்களை வளர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடையில் காலடி வைத்தவுடனே உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை. இது எச்சரிக்கை. பல வல்லரசு நாடுகளுக்கு இது எப்போதோ புரிந்து விட்டது. உங்களுக்கு எப்போது புரியப்போகிறதோ!



Saturday, January 2, 2010

இந்திய இளைஞர்களின் தலையில் இருக்கும் ரகசிய குறியீட்டு எண்!

திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களே நீங்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய முக்கியமான எண்கணித சோதிடம் ஒன்று இருக்கிறது. அது தான் 498A பொருத்தம். உங்களுக்கும் மணமகளுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் அவசியம் இந்த 498A பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள்.

எனக்குத் தெரிந்த வரை இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த 498A என்ற பொருத்தம் இந்தியாவில் பிறந்தவுடனே தலையில் குத்தப்பட்டுவிடுகிறது. அது பிறகு திருமணம் என்ற தகனமேடையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்குப் பிறகு எந்த நேரத்திலும் "ஆக்டிவேட்" செய்யப்படலாம். சிலருக்கு இரண்டுவருடங்களில் நடக்கலாம் சிலருக்கு 20 வருடங்கள் கழித்தும் நடக்கலாம். ஆனால் அதன் பாதிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.

அதனால் இந்த 498A என்னும் சைத்தான்களின் கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் தகனமேடைக்குச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது.

கீழே வந்துள்ள செய்தியைப் பாருங்கள் திருமணமானவர்கள் இந்தியாவில் எந்த வகையான சோதிடம் பார்க்கிறார்களென்று புரியும். இந்தியாவில் இப்போது திருமணங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. அதனால் இந்தியாவில் திருமணம் செய்ய எண்ணிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் உங்களுக்கு அது அவசியம் தேவையா என்று யோசித்து ஒரு நல்லமுடிவை எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வேறு நாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் திருமணம் என்ற தகனமேடையின் தோஷங்கள் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. இந்திய தகனமேடைகளில் சிக்காத வரை உங்களின் நல்வாழ்விற்கு எந்த வித பாதிப்பும் கண்டிப்பாக ஏற்படாது.


நாங்கள் சேர்ந்து வாழ்வோமா...? ஜோதிடர்களிடம் கேட்கும் இளைய தம்பதிகள்
தினமலர் ஜனவரி 02,2010


மும்பை : பணவரவு, வேலைவாய்ப்பு, சொத்து வாங்குதல் போன்றவற்றை விட, "விவாகரத்து ஆகாமல் தொடர்ந்து பலகாலம் குடும்பம் நடத்துவோ மா...?' என்ற கேள்வியைத்தான் இளைய தம்பதிகள் அதிகமாக கேட் கின்றனர் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Front page news and headlines today

மும்பை உள்ளிட்ட நகரங்களில் வாழும் இளைய தலைமுறையினர், தற்போதைய அவசர கால வாழ்க்கை, பணி நெருக்கடி, மன அழுத்தம் போன்றவற்றால் தங்கள் மணவாழ்வில் தோல்வியைத் தழுவுகின்றனர். கணவனோ மனைவியோ இருவரில், ஒருவர் தன்னை விட பணத்திலும் குணத்திலும் சிறந்தவர்கள் கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பழைய கணவன் அல்லது மனைவியைக் கழட்டி விடுகின்றனர். இதனால், கணவன் மனைவி உறவு என்பது பாதுகாப்பில்லாமல் தொடர்கிறது. இது குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு விளைவுகளை உண்டாக்குகிறது. இதை அவர்களும் உணர்ந்திருக்கின்றனர் என்பதைத்தான் மும்பை நகர ஜோதிடர்கள் தரும் தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. பண வரவு, வீடு கார் போன்ற சொத்து வரவு போன்றவை பற்றிதான் ஜோதிடர்களிடம் பொதுவாகக் கேட்பர்.

குறிப்பாக பெண்கள், காதல், கல்யாணம், தங்கள் குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் குறித்துக் கேட்பர். ஆண்கள், மனைவி, குழந்தைகள், பெற்றோர் இவர்களின் நிம்மதியான எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பர். ஆனால், இப்போது இளைய தம்பதியினரிடம் தங்கள் மணவாழ்வைப் பாதுகாப்பது குறித்த கவலை அதிகரித்திருப்பதால், தங்கள் மணஉறவு தொடர்ந்து நீடிக்குமா என்பது குறித்துத்தான் அதிகமாகக் கேட்பதாக மும்பை நகர ஜோதிடர்கள் கூறுகின்றனர். "இப்படி தங்கள் உறவு முறியாமல் நீடிக்க வேண்டும் என்று கேட்பவர்கள் நல்ல படித்த நிறைய சம்பாதிக்கக் கூடிய இளையவர்கள்தான்' என்கிறார் ரமாகாந்த் பண்டிட்.

"யாரும் மணமுறிவை உண்மையில் விரும்புவதில்லைதான். ஆனால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தவறி விடுவதால், அவர்களின் உறவு நீடிக்காமல் போய்விடுகிறது. "இப்படிப் பாதுகாப்பற்ற உணர்வுதான் பிறரை நாடத் தூண்டுகிறது. அந்நேரம் அவர்கள் தங்கள் பெற்றோரையே எல்லாவற்றுக்கும் சார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. இது நல்லதல்ல. நவீன கால நெருக்கடியான மனஅழுத்தம் மிக்க வாழ்க்கையும் இதற்கு ஒரு காரணம். "தன்னம்பிக்கை, அனுசரித்துப் போகும் தன்மை, மரியாதை இந்த மூன்றும் தான் மண உறவைத் தாங்கிப் பிடிக்கும் தூண் கள். இவை பலவீனமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்கிறார் உளவியல் டாக்டர் ஷெபாலி பாத்ரா.
###################################################





கற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும்

கற்பழிப்புச் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள், அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தினந்தோறும் இந்த நாட்டில் பல ஆண்கள் சட்டத்தின் துணையோடு பெண்களால் கற்பழிக்கப்படுகிறார்கள். இந்த உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?

கற்பழிப்பு என்ற உடனே எல்லோருக்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை உடலளவில் சேதப்படுத்துவதாக மட்டுமே மூளைக்குள் திரைப்படமாக ஓடும். அது போன்ற மரத்துப்போன மூளைகளுக்கு வேறுவிதமான கற்பழிப்புகளும் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது. அது அவர்களின் தவறல்ல. ஏனென்றால் நாட்டில் பெரும்பாலோருக்கு கற்பு என்றால் என்னவென்றே தெரியாது. அது போன்றவர்கள் இனியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.


கற்பழிப்பு என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது மட்டுமன்று. ஒரு பெண்ணும் ஆணை கற்பழிக்கலாம். அதில் இருவகை உண்டு.


முதல் வகை கற்பழிப்பு


1. ஒரு பெண் எந்தவொரு அச்சுறுத்தலோ அல்லது தூண்டுதலோ இல்லாமல் தானாக விரும்பி ஒரு ஆணிடம் உறவு கொண்டு, பிறகு
தனக்கு ஒன்றும் தெரியாதது போல் அந்த ஆணின் மீது கற்பழித்துவிட்டான் என்று பழி சொல்லுவது அந்த ஆணை கற்பழித்ததற்கு சமம். இது ஒரு வகையில் ஆணை ஒரு பெண் கற்பழித்ததற்குச் சமம்.

இது போன்ற கற்பழிப்புகளில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் முறிந்து போன காதல், கள்ளக்காதலில் பிடிபடும் பெண்கள், தவறான உறவில் ஈடுபட்டு கணவரிடம் கையும் களவுமாக மாட்டும் பெண்கள் போன்ற வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இது போன்று ஆண்கள் மீது அபாண்டமாக பழிபோட்டு அவர்களை கற்பழிப்பதற்கு கொஞ்சம் கூட தயங்கமாட்டார்கள்.


இந்த முதல் வகை கற்பழிப்பிற்கு சரியான உதாரணங்கள் தான் இந்த இரண்டு செய்திகள்


தவறான உறவில் ஈடுபட்ட பெண் கொடுத்த விசித்திரமான கற்பழிப்பு புகார்

வீடு புகுந்த வாலிபர்கள் செல்போனை திருடிக்கொண்டு போனதாக போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். அவர்களுடன் பெண்ணுக்கு தொடர்பு இருக்கும் பரபரப்பு தகவல் விசாரணையில் தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் சுகந்தி(30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை போலீஸ் கமிஷனரிடம் இவர் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:

சொந்த ஊர் திருச்சி. திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். கணவருக்கு சென்னையில் வேலை கிடைத்ததால், மந்தைவெளியில் குடியேறினோம். அருகே உள்ள பள்ளியில் மகன் படிக்கிறான். வீட்டில் நான் தனியாக இருந்த நேரத்தில் 4 வாலிபர்கள் வந்தனர். என்னிடம் தவறாக நடக்க முயன்ற அவர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை பார்த்தால் அடையாளம் காட்டுவேன். இவ்வாறு புகாரில் சுகந்தி கூறியிருந்தார்.

பெண்ணிடம் பலாத்கார முயற்சி நடந்திருப்பதால் போலீஸ் அதிகாரிகளுடன் சமூக நலத்துறை அதிகாரிகளும் இணைந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சுகந்தி சொன்ன அடையாளத்தை வைத்து 4 பேரும் பிடிபட்டனர். விசாரணையின்போது கிடைத்த தகவல்கள் போலீசை அதிர்ச்சி அடைய வைத்தது.

வாலிபர்கள் கூறியது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

அவர்கள் 4 பேரும் நண்பர்கள் அல்ல. ஒருவருக்கொருவர் அறிமுகம்கூட கிடையாது. சுகந்தி மகன் படிக்கும் பள்ளிக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு வருபவர்கள். மகனை அழைக்க வரும்போது அவர்களுடன் சுகந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தனித்தனியே வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இது தெரியவந்ததால் சுகந்தியிடம் போலீசார் விசாரித்தனர். முதலில் இதை சுகந்தி மறுத்தார். சுகந்தியே போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளார் என்பது அவரது செல்போன் அழைப்புகளை பார்த்தபோது தெரியவந்தது. இதன் பின்னர், நடந்ததை ஒப்புக்கொண்டார்.

சுகந்தி மேலும் கூறுகையில், ‘4 பேரில் ஒருவர்தான் செல்போனை திருடிவிட்டார். அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. பலாத்கார புகார் கொடுத்தால் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் போலீசுக்கு போனேன். போலீசார் வெறுமனே செல்போனை மட்டும் கண்டுபிடித்து தருவார்கள் என நினைத்தேன். நான் சிக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த விஷயத்தை கணவரிடம் சொல்லிவிடாதீர்கள் என்றார்.

சுகந்தியின் கணவரோ, “என் மனைவி நல்லவள். அவளிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்களை சிறையில் தள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்போன் ஆதாரங்களை போலீசார் காட்டிய பிறகே, மனைவியின் நடத்தை பற்றி அவருக்கு தெரியவந்தது. ‘இனி தவறு செய்ய மாட்டேன் என்று அவரது காலில் விழுந்து சுகந்தி கதறினார். குழந்தைக்காக மன்னிப்பதாக கூறி அவரை கணவர் ஏற்றுக்கொண்டார். வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


காதலனுக்கு எதிராக கற்பழிப்பு புகார் கொடுத்த கல்லூரி மாணவி
தினமலர் டிசம்பர் 20,2009

புதுடில்லி:
"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.
டில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்," பவானும், நானும்
காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேற்கண்ட இரண்டு கற்பழிப்பு செய்திகளிலும் ஆண்களை கற்பழித்த பெண்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதுவே ஆண் ஒரு பெண்ணை கற்பழித்திருந்தால் இதுபோல மன்னிப்பு கேட்டுவிட்டால் விட்டுவிடுவார்களா? அல்லது ஒரு பெண்ணின் நடத்தையைப் பற்றி தவறாக சொல்லியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா?


#####################################################

இனி ஆண்களுக்கு நடக்கும் இரண்டாவது வகை கற்பழிப்பைப் பாருங்கள்.

2. இரண்டாவது வகை கற்பழிப்பில் ஒரு பெண் தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு ஆணின் மீது ஏதோ சில காழ்ப்புணர்ச்சி காரணமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய்யாக பழி போடுவதும் அந்த ஆணை கற்பழித்ததற்கு சமமாகும்.

இந்த வகையானப் பெண்கள் பெரும்பாலும் அலுவலக மேலதிகாரி, தான் விரும்பிய ஆள் தனக்கு கிடைக்காத சூழ்நிலை, அல்லது தான் நினைத்த காரியத்தை செயல்படுத்திக்கொள்வதற்காக தயங்காமல் ஒரு அப்பாவி ஆண் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்வதற்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். இதுவும் ஒருவிதத்தில் அப்பாவி ஆணை கற்பழித்ததற்குச் சமமாகும்.


இந்த இரண்டாவது வகை கற்பழிப்பிற்கு சரியான உதாரணங்கள் இந்த செய்திகள்

அதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரி 'டிஸ்மிஸ்'

சண்டிகார்: உயரதிகாரிகள் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரியை, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும்படி ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானா, கல்கா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளவாடப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் கேப்டன் பூனம்.

உயரதிகாரிகள் மூன்று பேர் தன்னை பாலியல் ரீதியாகவும், மன அளவிலும் தொந்தரவு செய்ததாக ஒரு ஆண்டுக்கு முன்னர் புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருந்தாலும், ராணுவ தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு, ராணுவ கோர்ட்டில் நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் பூனம் வக்கீல் அகர்வால் கூறியதாவது: உயரதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டு கூறியது, ராணுவப் பணி தொடர்பான விஷயங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கேப்டன் பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக பூனத்தை பணியிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.

இரண்டாவது வகை கற்பழிப்பை கந்தசாமி என்ற திரைப்படத்திலும் காட்டியிருக்கிறார்கள். பாருங்கள்.




###################################################

ஆனால் இந்த சமுதாயத்தில் குறிப்பாக இந்தியர்களுக்கு ஒரு பெண் வந்து எது சொன்னாலும் உடனே நம்பிவிடும் மனப்பான்மை தான் இருக்கிறது. அதிலும் கற்பழிப்புப் புகார் என்றால் உடனே பெண்கள் சொல்வதைத்தான் நம்புவார்கள். அதை இங்கே அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.




அதனால் ஒரு பெண் கற்பழிப்பு புகார் கொடுத்ததுமே சம்பந்தப்பட்ட ஆணை சிறையில் தள்ளிவிடுவார்கள். பிறகு பல ஆண்டுகள் வழக்கு நடைபெற்று அது பொய் என்று நிருபித்து அந்த ஆண் வெளியே வரவேண்டும்.

அப்போது இந்த சமூகம் அந்த ஆணுக்கு ஒன்றுமே நடக்காதது போலத்தான் நினைத்துக்கொண்டிருக்கும். உண்மையில் இதுபோன்றே பொய் கற்பழிப்பு கேசுகளில் அபாண்டமான பழிசுமத்தப்பட்டு ஆண்களின் மானமும் மரியாதையையும் தான் கற்பழிக்கப்படுகிறது.


ஆனால் சமூகத்தின் பார்வையில் கற்பு என்பது பெண்ணிற்கு மட்டும் தான் இருப்பது போலவும் ஆண்களுக்கு அப்படி எதுவும் இருப்பதாக நினைப்பதில்லை. மானமும் மரியாதையும் ஆண் பெண் இருவருக்கும் சமம்.

கற்பழிப்பு என்பது எப்போதும் ஒரு ஆண் ஒரு பெண்ணை உடலளவில் தீண்டுவதால் மட்டும் நடக்கின்ற செயல் அன்று. ஒரு பெண் ஒரு ஆணின் மீது கற்பழித்ததாகஅபாண்டமாக பழிபோடும் போதும் அந்த ஆணுக்கும் ஒரு பெண்ணால் இந்த கற்பழிப்பு நடக்கிறது.


இந்திய சட்டப் பிரிவு 506-கூட யாராவது ஒரு பெண்ணின் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும்
கற்பழிப்பு அல்லாத செயலில் ஈடுபட்டால் கூட 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குள்ளாவார்கள் என்று எச்சரிக்கிறது.

IPC Section 506. Punishment for criminal intimidation

Whoever commits, the offence of criminal intimidation shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both;

If threat be to cause death or grievous hurt, etc.: -And if the threat be to cause death or grievous hurt, or to cause the destruction of any property by fire, or to cause an offence punishable with death or 1[imprisonment for life], or with imprisonment for a term which may extend to seven years, or to impute, unchastity to a woman, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.
ஆனால் இதுவே ஒரு பெண் ஒரு ஆணின் நடத்தைக்கோ கற்பிற்கோ களங்கம் விளைவித்தால் ஒரு தண்டனையும் கிடையாது. அது ஏன்? இந்த சமூகம் ஆண்கள் என்றால் மானங்கெட்ட ஒரு இழிபிறவியாக மட்டுமே கருதுகிறது.
அதைத்தான் சிவகாசி என்ற படத்தில் சொல்கிறார்கள்.



இப்போதுள்ள சட்டங்கள் போதாது என்று இப்போது புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

பாலியல் தொந்தரவு செய்வோருக்கு இனி...பிடியை இறுக்க மத்திய அரசு முடிவு

தினமலர் ஜனவரி 02,2010

புதுடில்லி:பாலியல் குற்றங்கள் செய்வோர், இனி, ஜாமீனில் வெளிவர முடியாத, சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படும் குற்றவாளியாகக் கருதப்பட்டு, குறைந்தது ஐந்து ஆண்டு சிறையில் இருக்கும் வகையில், சட்டத்தை மாற்றியமைக்க, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.டில்லியில், ருசிகா என்ற மாணவியை, அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர், பாலியல் தொந்தரவு செய்ததாக, புகார் எழுந்தது. ஆனால், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன் மீது புகார் எழாதபடி தப்பித்தார் ரத்தோர். புகார் கொடுத்ததற்காக, ருசிகாவின் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட்டு, தொந்தரவு கொடுத்தார்; மிரட்டலும் விடுத்தார். தான் படித்த பள்ளியிலிருந்து, ருசிகா நீக்கப்பட்டார். மனம் உடைந்த ருசிகா, 1993ல் தற்கொலை செய்து கொண்டார்.

ரத்தோர் வழக்கில் சிக்காமல் அதிகாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தியதால், ருசிகாவின் தந்தையும், சகோதரரும், நியாயம் கிடைக்க வேண்டி, கோர்ட் படி ஏறினர். ஆனால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை, கடந்த வாரம் தான் நடந்தது. அதில், ரத்தோருக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தண்டனையும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.இதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ரத்தோரின் தண்டனையை அதிகரிக்கக் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அரியானா முன்னாள் டி.ஜி.பி., ஆர்.ஆர்.சிங் என்பவரும், ரத்தோருக்கு எதிரான தகவல்களைத் திரட்டி, பாட்டியாலா மற்றும் அம்பாலா கோர்ட்களில் வழக்கு தொடுத்தார்.
#####################################################

போலிஸ்துறையில் இருந்த ஒரு ஓநாயால் ஒரு பெண் பாதிக்கப்பட்டவுடன் தங்களது இயலாமையை மறைக்க ஏதோ புது சட்டம் இயற்றுவது போல் பாசாங்கு செய்யும் அரசாங்கம் பல ஆண்டுகளாக பல அப்பாவி ஆண்கள் இப்படிப் பெண்களால் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிப்பதற்கு என்ன பரிகாரம் செய்திருக்கிறது?

இந்த புதிய சட்டம் வரவேற்கத் தக்கது தான். ஆனால் இந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்காததற்கு யார் காரணம் சட்டங்கள் அல்ல காவல் துறையும் நீதித்துறையும் தான் காரணம். இந்த உண்மையை புரிந்து கொள்ளாதவரை எத்தனை சட்டங்கள் போட்டாலும் அவை அப்பாவிப் பெண்களை காப்பாற்றப்போவதில்லை. அதற்குப் பதிலாகத் தவறான பெண்கள் தான் இவற்றையெல்லாம் பயன்படுத்தப்போகிறார்கள்.


ஏற்கனவே பெண்களைக் காப்பாற்றுவதாகக் கூறி பெண்கள் கையில் கொடுக்கப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டங்களால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றன. அதை தினந்தோறும் செய்தித்தாள்கள் எத்தனை விவாகரத்துக்கள் அதிகரித்திருக்கின்றன என்று
புள்ளி விவரத்தோடு வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பொய் வரதட்சணை கேசுகளில் பாதிக்கப்பட்ட பல கோடி பெண்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டிருக்கிறது?

இந்த புதிய கற்பழிப்புச் சட்டத்தின் துணை கொண்டு எத்தனைப் பெண்கள் இனி எத்தனை அப்பாவி ஆண்களை கற்பழிக்கப்போகிறார்களோ! எனவே ஆண்களே இனி நீங்கள் கையில் எப்போதும் ஒரு வீடியோ கேமராவுடன் தான் நாட்டில் அலையவேண்டும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் உங்களை இலவசமாக கற்பழித்துவிடுவார்கள். ஜாக்கிரதை! இங்கு மட்டும் தான் சட்டத்தின் துணையோடு ஆண்களை கற்பழிக்கும் விசித்திரம் நடைபெறுகிறது.