பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, January 24, 2010

திருமண ரகசியம் - வயதுவந்த வாலிபர்களுக்கு மட்டும்!

உங்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இந்த விஷயத்தை ஒவ்வொரு இந்திய இளைஞனும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு பல இளைஞர்கள் இந்த விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதில்லை. பிறகு திருமணமானவுடன் அவர்கள் இது முன்பே தெரியாமல் போய்விட்டதே என்று திண்டாடி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் இப்போது பல வடிவங்களில் வந்துகொண்டிருக்கிறது.

பள்ளியில் படிக்கும்போது ஜாதிகள் இல்லை, வரதட்சணை கேட்பது தவறு போன்ற நீதிகளை உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நீங்கள் அதன்படி நடக்க முற்படும்போது தண்டிக்கப்படுவீர்கள். இது தான் நடந்துகொண்டிருக்கும் உண்மை.

இதுவரை வரதட்சணை கேட்காமலும், வாங்காமலும் திருமணம் செய்த இளைஞர்கள் மட்டும் தான் வரதட்சணை சட்டங்களில் சிக்கவைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதை உறுதி செய்யும் விதமாக இந்திய தேசிய குற்ற ஆவணப் புள்ளிவிவரப்படி 2007ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 75,930 IPC498A வழக்குகளில் போலிஸ் "விசாரணை" என்ற பெயரில் ஏதோ ஒரு அறிக்கை தயார் செய்து புகார் "உண்மை!" என்று 93.9% புகார்களை நீதிமன்றத்திற்கு அனுப்பி அங்கு அவற்றில் வெறும் 20 சதவீதம் மட்டுமே உண்மை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது எதைக்காட்டுகிறது என்றால் வரதட்சணை வாங்காமல் நேர்மையாக திருமணம் செய்பவர்கள் பொய் கேசுகளால் சீரழிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

National Crime Record Bureau Statistics on 498a Case


இந்த 20% வழக்குகள் மேல்முறையீட்டிற்காக மேல் கோர்ட்டிற்கு போகும்போது மேலும் பல பொய் வழக்குகள் தெளிவாகத் தோலுரித்துக்காட்டப்பட்டுவிடும். அதற்குப் பிறகு வரும் தீர்ப்புகளில் கடைசியில் எத்தனை புகார்கள் உண்மையானவை எத்தனை பொய்யானவை என்று நீங்கள் யூகிக்க முடியும்.

அதுமட்டுமல்ல இந்த 75,930 புகார்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு புகாரிலும் ஒரு குடும்பத்திலிருந்து 5 பேராவது குற்றவாளிகளாக பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதாவது 75,930 X 5 = 3,79,650 நபர்களின் (இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்) வாழ்க்கை வழக்கு முடியும் வரை (குறைந்தபட்சம் 5 - 7 ஆண்டுகள்) கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இதில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ஒருவராக இருக்கின்ற வாய்ப்பு மிக அதிகம்.

பொதுவாக போலிஸ் எந்த வரதட்சணைப் புகாரையும் நேர்மையாக விசாரணை செய்யமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை புகாரில் இருப்பதை நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும். அவ்வளவுதான். நீங்கள் தவறு செய்தவரா அல்லது தவறு செய்யாதவரா என்ற கவலையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகளில் இருக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் நாட்டு போலிஸையோ அல்லது நீதிமன்றத்தையோ அனுகாமல் இந்தியப் போலிஸில் கொடுக்கும் புகாரைக்கூட இந்திய நீதிமன்றங்களில் வழக்காக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இன்று நீதிமன்றங்களில் பல வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. இதுபோன்ற விசித்திர வழக்குகளை நீங்கள் வேறு நாடுகளில் நடத்தமுடியுமா?

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 4,51,496.
Total Pendency of Civil and Criminal Cases at the end of 31-12-08

Madras High Court
= 4,51,496

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி தமிழ்நாட்டிலுள்ள சார்பு நிலை நீதிமன்றங்களில் (சென்னை உயர்நீதிமன்றத்தை தவிர) நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 10,16,598

Total Pendency of Civil and Criminal Cases at the end of
31-12-08 in District and Subordinate Courts in Tamilnadu (Except Madras High Court) = 10,16,598



நீங்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தாலும் இந்தப் பொய் வழக்குகளில் சிக்கும் துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். நல்லது மட்டும் தான் நாள் பார்த்து வரும். கெடுதல்கள் நீங்கள் கேட்காமலேயே திடீரென்று வரும். அதனால் கெடுதல்கள் வரும் வழியை அறிந்து அதை தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம். இந்தியத் திருமணம் என்பதுதான் இந்தப் பொய் வழக்குகள் வருவதற்கான வாயிற்படிகள். அதனால் கெடுதல்களைத் தேடிப் போகாதீர்கள்!

இந்தியாவில் திருமணம் செய்ய நினைத்தால் வரதட்சணை வாங்கி திருமணம் செய்வது தான் புத்திசாலித்தனம். ஏனென்றால் வரதட்சணை வாங்கித் திருணம் செய்தவர்கள் இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உங்களது மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த எத்தனை பேர் சட்டத்திற்குப் புறம்பாக வரதட்சணை கொடுத்து அல்லது வாங்கித் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? மேலே புள்ளிவிவரத்தில் சொல்லப்பட்டது போல மொத்த இந்திய மக்கள் தொகையில் வெறும் 75000 பேர் மட்டும் தான் வரதட்சணை வாங்கி திருமணம் செய்திருக்கிறார்களா?

ஆகவே வரதட்சணை சட்டம் என்பது வரதட்சணைக் கொடுமைக்காக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக வேறு விதமான தவறான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் இளைஞர்கள் தப்பிப் பிழைக்கலாம். வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற தவறான முறையில் சட்டங்களைப் பயன்படுத்தும் கீழ்த்தரமான நடைமுறை இல்லை. அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழுங்கள்.

அதற்கடுத்தபடியாக நீங்கள் முற்போக்குவாதி போல செயல்பட்டு ஜாதியை ஒழிக்க கலப்புத்திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்தால் அதையும் அடியோடு விட்டொழித்துவிடுங்கள். ஏனென்றால் கலப்புத்திருமணம் செய்தாலும் ஜாதியை ஒழிக்க முடியாது என்று சமீபத்தில் உயர்நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் கலப்புத்திருமணங்களின் மூலம் மற்றுமொரு ஆபத்தும் காத்திருக்கிறது. அதுதான் "வன்கொடுமை தடுப்புச் சட்டம்" நீங்கள் உயர்ந்த சாதியிலும் பெண் தாழ்ந்த சாதியிலும் இருந்து ஏதோ ஒரு காரணத்தில் உங்கள் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்யப்படும்போது கூடவே இந்த சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவும் சேர்க்கப்படலாம். இது மிகவும் ஆபத்தானது.

கொலை வழக்கில் கூட தகுந்த ஆதாரமில்லாமல் அவ்வளவு எளிதாகப் புகார் கொடுக்க முடியாது. ஆனால் வரதட்சணை வழக்கிலும், வன்கொடுமை வழக்கிலும் மிகவும் எளிதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்குகள் பதிவுசெய்யலாம். புகார் கொடுத்தவுடனே நீங்கள் உங்கள் குடும்பத்தோடு கைது செய்யப்படுவீர்கள். பிறகு 5 - 6 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் வழக்குப் பொய்யானது என்று தீர்ப்பு சொல்லும். அதுவரை உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கப்போகும் இழப்புகளை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

உதாரணத்திற்கு....

பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்தவுடன்

1. உங்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல் கைது செய்து சிறையில் தள்ளப்படுவார்கள்.

2. உங்கள் குடும்பத்தை காப்பாற்ற முயற்சிசெய்து நீங்கள் ஜாமின் வாங்க அலையும் போது பலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களிடம் பணம் பிடுங்க முயற்சி செய்வார்கள்.

3. எல்லாவற்றையும் தாண்டிவந்த பிறகு வழக்கு விரைவாக நடத்தப்படாமல் உங்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் பல ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும்.

4. வழக்கு முடிந்து தீர்ப்பு கிடைப்பதற்குள் உங்களின் வயதான பெற்றோர் குற்றவாளி என்ற அவப்பெயருடன் கவலையடைந்து மரணமடையலாம்.

5. உங்களது சகோதர சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது உழைப்பும் அறிவும் திறமையும் வாழ்க்கையும் வீணாகப்போவதோடு மட்டுமல்லாமல் உங்கள் கண்ணெதிரேயே உங்களது ஒட்டுமொத்தக்குடும்பமும் அற்பத்தனமான பொய்வழக்கால் சிதைந்து போவதை உங்களால் தடுக்க முடியாமல் வேதனையோடு பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.

இன்னும் பல இழப்புக்கள் இருக்கின்றன...

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பொய்வழக்குகளில் சிக்குவோருக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அவல நிலை. இது அப்பட்டமான உண்மை.

இந்த அனைத்து இழப்புகளுக்குப்பிறகு நீங்கள் வழக்கில் வெற்றி பெற்றால் என்ன? தோற்றுப் போனால் என்ன? ஒரு வித்தியாசமும் இல்லை.

அதனால் உங்களது பெற்றோரையும் குடும்பத்தையும் காப்பாற்றவேண்டுமானால் திருமணம் செய்வதற்கு முன் யோசித்து சரியான முடிவெடுங்கள்.


சமீபத்தில் செய்தித்தாளில் வந்த செய்தி..... ஒருபக்கம் இதுபோன்ற அறிவுரைகள்...

இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. அதை விடுத்து உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது நாட்டில், சமுதாயத்தில் நடக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.



மறுபக்கம் இதுபோன்ற நீதிமன்றம் சொல்லும் அறிவுரை......


மும்பை : "வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வதால், ஒரு பெண்ணின் பிறந்த ஜாதி மாறி விட்டதாக கருத முடியாது' என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ராஜேந்திர ஸ்ரீவத்சவா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணை கேட்பதாகவும், ஜாதியின் பெயரால் கொடுமைப் படுத்துவதாகவும் எனக்கு எதிராக என் மனைவி புகார் அளித்துள்ளார்.


இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்,"பழங்குடியின அல்லது தலித் வகுப்பைச் சேர்ந்த பெண், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதால், அவரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என, கருத முடியாது. அவர் எந்த ஜாதியில் பிறந்தாரோ, அந்த ஜாதி அந்தஸ்தில் தான் தொடர்வார்' என, தீர்ப்பு வழங்கியது.


அதனால் இளைஞர்களே, இதுபோன்ற அறிவுரைகளைக் கேட்டு குழம்பிவிடாதீர்கள்! வரதட்சணையை ஒழிக்கிறேன், சாதியை ஒழிக்கிறேன் என்று ஏதோ புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு முட்டாள் தனமாக வாழ்க்கையை சிதைத்துக்கொள்ளாதீர்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக பல கட்சிகளும், பல அரசுகளும், சட்டங்களும் செய்ய விரும்பாததை நீங்கள் செய்யநினைத்து சதிவலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
நிலவிற்கு கூட ராக்கெட் விட்டுவிட்டார்கள். ஆனால் இதுவரைப் பள்ளிச் சான்றிதழில் கூட சாதியை எடுக்க யாருக்கும் இன்னும் மனம் வரவில்லை. காரணம் என்ன?

சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இன்று வரை கல்விக் கூடம் முதல் கட்சி வரை சாதியை வைத்துத்துத்தான் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீங்கள் சாதியை ஒழிக்க முற்பட்டால் நீங்கள் பொய் வழக்குகளால் சின்னாபின்னமாவது உறுதி.


1961 ம் ஆண்டு முதல் வரதட்சணை தடுப்புச் சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. அதற்குப் பிறகும் 498A என்ற சட்டமும் சமீபத்தில் 2005 ல் குடும்ப வன்முறை சட்டம் என்றும் புதிய புதிய உருவங்களில் ஒரே வித நோக்கத்திற்காக பல சட்டங்கள் இயற்றிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? இருக்கின்ற ஒரு சட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தாமல் போனது தான் காரணம். கடைசியில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யும் இளைஞர்கள் தான் இந்த சட்டங்களுக்குப் பலியாக்கப்பட்டு புள்ளிவிபரக்கணக்குக் காட்டப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

1961ம் ஆண்டு இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டப்படி இதுவரை வரதட்சணை கொடுத்த ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை.
ஆகவே வரதட்சணையை ஒழிக்க அரசாங்கத்திற்கு இன்றுவரை மனம் வரவில்லை.

சட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தாமல் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக எல்லா குற்றத்திற்கும் ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் தான் காரணம் என்று பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. வரதட்சணையை ஒழிக்க முன்வந்து வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய முன்வரும் அப்பாவி இளைஞர்களை இந்த சட்டங்களை ஒருதலைபட்சமாக பயன்படுத்தி பலிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் இளைஞர்களே உங்களுக்கு அந்த நாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கும் அல்லது உயர் பதவிகளில் பணி செய்வதற்கும் சாதி அடிப்படையிலா அந்த நாடுகள் உங்களை தேர்வு செய்திருக்கின்றன? யோசித்துப் பாருங்கள். உங்களின் திறமை ஒன்று மட்டும் தான் நீங்கள் அந்த நாடுகளில் வாழ்வதற்கு காரணம். அந்த நாடுகளில் நீங்கள் சாதி மத பேதங்களை மறந்து வாழவில்லையா? இன்னும் சொல்லப்போனால் சாதி மத பேதமில்லாமல் உங்களின் வாழ்க்கைத்தரம் அங்கு நன்றாகவே இருக்கிறதல்லவா? அதனால் உங்களது திறமையையும் நல்வாழ்க்கையும் இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் இழந்து விடாதீர்கள்!

ஆகவே படித்த இளைஞர்களே சிந்தியுங்கள். நீங்கள் இந்தியாவில் வரதட்சணையை ஒழிக்கவோ, சாதியை ஒழிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். தேவையில்லாத ஆபத்தான முயற்சிகளில் இறங்கி வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள். அதற்குப் பதிலாக சாதிபேதமும் வரதட்சணை முறையும் இல்லாத நாடுகளில் திருமணம் செய்து வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளுங்கள். உங்களது பெற்றோர்களைக் காப்பாற்றுங்கள். நீங்கள் உங்கள் வீட்டிற்கு செய்யும் சேவையே நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை.

No comments: