பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, January 2, 2010

கற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும்

கற்பழிப்புச் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள், அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தினந்தோறும் இந்த நாட்டில் பல ஆண்கள் சட்டத்தின் துணையோடு பெண்களால் கற்பழிக்கப்படுகிறார்கள். இந்த உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?

கற்பழிப்பு என்ற உடனே எல்லோருக்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை உடலளவில் சேதப்படுத்துவதாக மட்டுமே மூளைக்குள் திரைப்படமாக ஓடும். அது போன்ற மரத்துப்போன மூளைகளுக்கு வேறுவிதமான கற்பழிப்புகளும் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது. அது அவர்களின் தவறல்ல. ஏனென்றால் நாட்டில் பெரும்பாலோருக்கு கற்பு என்றால் என்னவென்றே தெரியாது. அது போன்றவர்கள் இனியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.


கற்பழிப்பு என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது மட்டுமன்று. ஒரு பெண்ணும் ஆணை கற்பழிக்கலாம். அதில் இருவகை உண்டு.


முதல் வகை கற்பழிப்பு


1. ஒரு பெண் எந்தவொரு அச்சுறுத்தலோ அல்லது தூண்டுதலோ இல்லாமல் தானாக விரும்பி ஒரு ஆணிடம் உறவு கொண்டு, பிறகு
தனக்கு ஒன்றும் தெரியாதது போல் அந்த ஆணின் மீது கற்பழித்துவிட்டான் என்று பழி சொல்லுவது அந்த ஆணை கற்பழித்ததற்கு சமம். இது ஒரு வகையில் ஆணை ஒரு பெண் கற்பழித்ததற்குச் சமம்.

இது போன்ற கற்பழிப்புகளில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் முறிந்து போன காதல், கள்ளக்காதலில் பிடிபடும் பெண்கள், தவறான உறவில் ஈடுபட்டு கணவரிடம் கையும் களவுமாக மாட்டும் பெண்கள் போன்ற வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இது போன்று ஆண்கள் மீது அபாண்டமாக பழிபோட்டு அவர்களை கற்பழிப்பதற்கு கொஞ்சம் கூட தயங்கமாட்டார்கள்.


இந்த முதல் வகை கற்பழிப்பிற்கு சரியான உதாரணங்கள் தான் இந்த இரண்டு செய்திகள்


தவறான உறவில் ஈடுபட்ட பெண் கொடுத்த விசித்திரமான கற்பழிப்பு புகார்

வீடு புகுந்த வாலிபர்கள் செல்போனை திருடிக்கொண்டு போனதாக போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். அவர்களுடன் பெண்ணுக்கு தொடர்பு இருக்கும் பரபரப்பு தகவல் விசாரணையில் தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் சுகந்தி(30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை போலீஸ் கமிஷனரிடம் இவர் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:

சொந்த ஊர் திருச்சி. திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். கணவருக்கு சென்னையில் வேலை கிடைத்ததால், மந்தைவெளியில் குடியேறினோம். அருகே உள்ள பள்ளியில் மகன் படிக்கிறான். வீட்டில் நான் தனியாக இருந்த நேரத்தில் 4 வாலிபர்கள் வந்தனர். என்னிடம் தவறாக நடக்க முயன்ற அவர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை பார்த்தால் அடையாளம் காட்டுவேன். இவ்வாறு புகாரில் சுகந்தி கூறியிருந்தார்.

பெண்ணிடம் பலாத்கார முயற்சி நடந்திருப்பதால் போலீஸ் அதிகாரிகளுடன் சமூக நலத்துறை அதிகாரிகளும் இணைந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சுகந்தி சொன்ன அடையாளத்தை வைத்து 4 பேரும் பிடிபட்டனர். விசாரணையின்போது கிடைத்த தகவல்கள் போலீசை அதிர்ச்சி அடைய வைத்தது.

வாலிபர்கள் கூறியது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

அவர்கள் 4 பேரும் நண்பர்கள் அல்ல. ஒருவருக்கொருவர் அறிமுகம்கூட கிடையாது. சுகந்தி மகன் படிக்கும் பள்ளிக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு வருபவர்கள். மகனை அழைக்க வரும்போது அவர்களுடன் சுகந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தனித்தனியே வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இது தெரியவந்ததால் சுகந்தியிடம் போலீசார் விசாரித்தனர். முதலில் இதை சுகந்தி மறுத்தார். சுகந்தியே போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளார் என்பது அவரது செல்போன் அழைப்புகளை பார்த்தபோது தெரியவந்தது. இதன் பின்னர், நடந்ததை ஒப்புக்கொண்டார்.

சுகந்தி மேலும் கூறுகையில், ‘4 பேரில் ஒருவர்தான் செல்போனை திருடிவிட்டார். அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. பலாத்கார புகார் கொடுத்தால் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் போலீசுக்கு போனேன். போலீசார் வெறுமனே செல்போனை மட்டும் கண்டுபிடித்து தருவார்கள் என நினைத்தேன். நான் சிக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த விஷயத்தை கணவரிடம் சொல்லிவிடாதீர்கள் என்றார்.

சுகந்தியின் கணவரோ, “என் மனைவி நல்லவள். அவளிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்களை சிறையில் தள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்போன் ஆதாரங்களை போலீசார் காட்டிய பிறகே, மனைவியின் நடத்தை பற்றி அவருக்கு தெரியவந்தது. ‘இனி தவறு செய்ய மாட்டேன் என்று அவரது காலில் விழுந்து சுகந்தி கதறினார். குழந்தைக்காக மன்னிப்பதாக கூறி அவரை கணவர் ஏற்றுக்கொண்டார். வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


காதலனுக்கு எதிராக கற்பழிப்பு புகார் கொடுத்த கல்லூரி மாணவி
தினமலர் டிசம்பர் 20,2009

புதுடில்லி:
"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.
டில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்," பவானும், நானும்
காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேற்கண்ட இரண்டு கற்பழிப்பு செய்திகளிலும் ஆண்களை கற்பழித்த பெண்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதுவே ஆண் ஒரு பெண்ணை கற்பழித்திருந்தால் இதுபோல மன்னிப்பு கேட்டுவிட்டால் விட்டுவிடுவார்களா? அல்லது ஒரு பெண்ணின் நடத்தையைப் பற்றி தவறாக சொல்லியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா?


#####################################################

இனி ஆண்களுக்கு நடக்கும் இரண்டாவது வகை கற்பழிப்பைப் பாருங்கள்.

2. இரண்டாவது வகை கற்பழிப்பில் ஒரு பெண் தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு ஆணின் மீது ஏதோ சில காழ்ப்புணர்ச்சி காரணமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய்யாக பழி போடுவதும் அந்த ஆணை கற்பழித்ததற்கு சமமாகும்.

இந்த வகையானப் பெண்கள் பெரும்பாலும் அலுவலக மேலதிகாரி, தான் விரும்பிய ஆள் தனக்கு கிடைக்காத சூழ்நிலை, அல்லது தான் நினைத்த காரியத்தை செயல்படுத்திக்கொள்வதற்காக தயங்காமல் ஒரு அப்பாவி ஆண் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்வதற்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். இதுவும் ஒருவிதத்தில் அப்பாவி ஆணை கற்பழித்ததற்குச் சமமாகும்.


இந்த இரண்டாவது வகை கற்பழிப்பிற்கு சரியான உதாரணங்கள் இந்த செய்திகள்

அதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரி 'டிஸ்மிஸ்'

சண்டிகார்: உயரதிகாரிகள் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரியை, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும்படி ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானா, கல்கா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளவாடப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் கேப்டன் பூனம்.

உயரதிகாரிகள் மூன்று பேர் தன்னை பாலியல் ரீதியாகவும், மன அளவிலும் தொந்தரவு செய்ததாக ஒரு ஆண்டுக்கு முன்னர் புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருந்தாலும், ராணுவ தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு, ராணுவ கோர்ட்டில் நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் பூனம் வக்கீல் அகர்வால் கூறியதாவது: உயரதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டு கூறியது, ராணுவப் பணி தொடர்பான விஷயங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கேப்டன் பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக பூனத்தை பணியிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.

இரண்டாவது வகை கற்பழிப்பை கந்தசாமி என்ற திரைப்படத்திலும் காட்டியிருக்கிறார்கள். பாருங்கள்.




###################################################

ஆனால் இந்த சமுதாயத்தில் குறிப்பாக இந்தியர்களுக்கு ஒரு பெண் வந்து எது சொன்னாலும் உடனே நம்பிவிடும் மனப்பான்மை தான் இருக்கிறது. அதிலும் கற்பழிப்புப் புகார் என்றால் உடனே பெண்கள் சொல்வதைத்தான் நம்புவார்கள். அதை இங்கே அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.




அதனால் ஒரு பெண் கற்பழிப்பு புகார் கொடுத்ததுமே சம்பந்தப்பட்ட ஆணை சிறையில் தள்ளிவிடுவார்கள். பிறகு பல ஆண்டுகள் வழக்கு நடைபெற்று அது பொய் என்று நிருபித்து அந்த ஆண் வெளியே வரவேண்டும்.

அப்போது இந்த சமூகம் அந்த ஆணுக்கு ஒன்றுமே நடக்காதது போலத்தான் நினைத்துக்கொண்டிருக்கும். உண்மையில் இதுபோன்றே பொய் கற்பழிப்பு கேசுகளில் அபாண்டமான பழிசுமத்தப்பட்டு ஆண்களின் மானமும் மரியாதையையும் தான் கற்பழிக்கப்படுகிறது.


ஆனால் சமூகத்தின் பார்வையில் கற்பு என்பது பெண்ணிற்கு மட்டும் தான் இருப்பது போலவும் ஆண்களுக்கு அப்படி எதுவும் இருப்பதாக நினைப்பதில்லை. மானமும் மரியாதையும் ஆண் பெண் இருவருக்கும் சமம்.

கற்பழிப்பு என்பது எப்போதும் ஒரு ஆண் ஒரு பெண்ணை உடலளவில் தீண்டுவதால் மட்டும் நடக்கின்ற செயல் அன்று. ஒரு பெண் ஒரு ஆணின் மீது கற்பழித்ததாகஅபாண்டமாக பழிபோடும் போதும் அந்த ஆணுக்கும் ஒரு பெண்ணால் இந்த கற்பழிப்பு நடக்கிறது.


இந்திய சட்டப் பிரிவு 506-கூட யாராவது ஒரு பெண்ணின் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும்
கற்பழிப்பு அல்லாத செயலில் ஈடுபட்டால் கூட 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குள்ளாவார்கள் என்று எச்சரிக்கிறது.

IPC Section 506. Punishment for criminal intimidation

Whoever commits, the offence of criminal intimidation shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both;

If threat be to cause death or grievous hurt, etc.: -And if the threat be to cause death or grievous hurt, or to cause the destruction of any property by fire, or to cause an offence punishable with death or 1[imprisonment for life], or with imprisonment for a term which may extend to seven years, or to impute, unchastity to a woman, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.
ஆனால் இதுவே ஒரு பெண் ஒரு ஆணின் நடத்தைக்கோ கற்பிற்கோ களங்கம் விளைவித்தால் ஒரு தண்டனையும் கிடையாது. அது ஏன்? இந்த சமூகம் ஆண்கள் என்றால் மானங்கெட்ட ஒரு இழிபிறவியாக மட்டுமே கருதுகிறது.
அதைத்தான் சிவகாசி என்ற படத்தில் சொல்கிறார்கள்.



இப்போதுள்ள சட்டங்கள் போதாது என்று இப்போது புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

பாலியல் தொந்தரவு செய்வோருக்கு இனி...பிடியை இறுக்க மத்திய அரசு முடிவு

தினமலர் ஜனவரி 02,2010

புதுடில்லி:பாலியல் குற்றங்கள் செய்வோர், இனி, ஜாமீனில் வெளிவர முடியாத, சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படும் குற்றவாளியாகக் கருதப்பட்டு, குறைந்தது ஐந்து ஆண்டு சிறையில் இருக்கும் வகையில், சட்டத்தை மாற்றியமைக்க, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.டில்லியில், ருசிகா என்ற மாணவியை, அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர், பாலியல் தொந்தரவு செய்ததாக, புகார் எழுந்தது. ஆனால், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன் மீது புகார் எழாதபடி தப்பித்தார் ரத்தோர். புகார் கொடுத்ததற்காக, ருசிகாவின் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட்டு, தொந்தரவு கொடுத்தார்; மிரட்டலும் விடுத்தார். தான் படித்த பள்ளியிலிருந்து, ருசிகா நீக்கப்பட்டார். மனம் உடைந்த ருசிகா, 1993ல் தற்கொலை செய்து கொண்டார்.

ரத்தோர் வழக்கில் சிக்காமல் அதிகாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தியதால், ருசிகாவின் தந்தையும், சகோதரரும், நியாயம் கிடைக்க வேண்டி, கோர்ட் படி ஏறினர். ஆனால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை, கடந்த வாரம் தான் நடந்தது. அதில், ரத்தோருக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தண்டனையும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.இதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ரத்தோரின் தண்டனையை அதிகரிக்கக் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அரியானா முன்னாள் டி.ஜி.பி., ஆர்.ஆர்.சிங் என்பவரும், ரத்தோருக்கு எதிரான தகவல்களைத் திரட்டி, பாட்டியாலா மற்றும் அம்பாலா கோர்ட்களில் வழக்கு தொடுத்தார்.
#####################################################

போலிஸ்துறையில் இருந்த ஒரு ஓநாயால் ஒரு பெண் பாதிக்கப்பட்டவுடன் தங்களது இயலாமையை மறைக்க ஏதோ புது சட்டம் இயற்றுவது போல் பாசாங்கு செய்யும் அரசாங்கம் பல ஆண்டுகளாக பல அப்பாவி ஆண்கள் இப்படிப் பெண்களால் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிப்பதற்கு என்ன பரிகாரம் செய்திருக்கிறது?

இந்த புதிய சட்டம் வரவேற்கத் தக்கது தான். ஆனால் இந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்காததற்கு யார் காரணம் சட்டங்கள் அல்ல காவல் துறையும் நீதித்துறையும் தான் காரணம். இந்த உண்மையை புரிந்து கொள்ளாதவரை எத்தனை சட்டங்கள் போட்டாலும் அவை அப்பாவிப் பெண்களை காப்பாற்றப்போவதில்லை. அதற்குப் பதிலாகத் தவறான பெண்கள் தான் இவற்றையெல்லாம் பயன்படுத்தப்போகிறார்கள்.


ஏற்கனவே பெண்களைக் காப்பாற்றுவதாகக் கூறி பெண்கள் கையில் கொடுக்கப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டங்களால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றன. அதை தினந்தோறும் செய்தித்தாள்கள் எத்தனை விவாகரத்துக்கள் அதிகரித்திருக்கின்றன என்று
புள்ளி விவரத்தோடு வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பொய் வரதட்சணை கேசுகளில் பாதிக்கப்பட்ட பல கோடி பெண்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டிருக்கிறது?

இந்த புதிய கற்பழிப்புச் சட்டத்தின் துணை கொண்டு எத்தனைப் பெண்கள் இனி எத்தனை அப்பாவி ஆண்களை கற்பழிக்கப்போகிறார்களோ! எனவே ஆண்களே இனி நீங்கள் கையில் எப்போதும் ஒரு வீடியோ கேமராவுடன் தான் நாட்டில் அலையவேண்டும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் உங்களை இலவசமாக கற்பழித்துவிடுவார்கள். ஜாக்கிரதை! இங்கு மட்டும் தான் சட்டத்தின் துணையோடு ஆண்களை கற்பழிக்கும் விசித்திரம் நடைபெறுகிறது.




1 comment:

Anonymous said...

கேமராவிலும் கிராபிக்ஸ்னு சொல்லிபுடுவாங்க. நல்ல பதிவு.