பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, January 31, 2011

“டம்மி பீஸ்” ஆண்களுக்கு பிடித்த வீடியோ!


சமீபகாலமாக இந்திய செய்தித்தாள்களில் மனைவியின் கள்ளக்காமத்திற்கு பலியாகும் பல அப்பாவிக் கணவன்களைப் பற்றி செய்திகள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன.


அதே சமம் தனது கள்ளக்காதலை மறைக்க கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பொய் வரதட்சணை வழக்குகள் பதிவுசெய்யப்படுவதும் அதிகரித்து அதன் உச்சவரம்பை அடைந்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.

இதற்கு உதாரணமாக ஜனவரி 29ல் ஒரே நாளில் தினமலர் என்ற ஒரு செய்தித்தாளில் மட்டும் வந்துள்ள செய்திகளைப் பாருங்கள்.


கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் : தப்பிய ஓடிய போது கார் மோதியதில் படுகாயம் ஜனவரி 29,2011
தர்மபுரி : தர்மபுரி அருகே, மது அருந்தி விட்டு, கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை, போலீசார் எனக் கூறி மர்ம நபர்கள் துரத்திய போது, கார் மோதி படுகாயம் அடைந்தார். தர்மபுரி அடுத்த [...]

கள்ளக் காதலை தட்டிக் கேட்ட மனைவி கொலை : கணவருக்கு வலை; கள்ளக்காதலி கைது ஜனவரி 29,2011
திருவள்ளூர் : அடுத்தவர் மனைவியுடன் ஏற்பட்ட தொடர்பை, தட்டிக் கேட்ட மனைவியை கொலை செய்த கணவரை ,போலீசார் தேடுகின்றனர். கள்ளக் காதலியை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் [...]

திருமணத்திற்கு பின்னும் கள்ளத்தொடர்பு : தங்கையை வெட்டிக் கொன்ற சகோதரர்கள் ஜனவரி 29,2011
திருநெல்வேலி: திருமணத்திற்குப் பின்னர் வேறொருவருடன் வாழ்க்கை நடத்திய தங்கையை, அண்ணன்களே வெட்டி கொலை செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள கட்டுடையார்புரத்தைச் [...]

பழநி : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்தவரை, அடித்துக்கொன்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னிவாடி அருகே உள்ள சுரக்காபட்டியை சேர்ந்தவர் [...]

கடலூர் : கடலூரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர், காதல் விவகாரத்தால் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மஞ்சக்குப்பம் [...]


கள்ளக்காதல் மற்றும் பொய் வரதட்சணை வழக்குகள் என்ற இந்த இரண்டு பிரச்சனைகளும் நாட்டில் நிலவும் ஊழல் பிரச்சனைகளைவிட மிகவும் ஆபத்தானவை. இந்த கள்ளக்காதல் மற்றும் பொய் வரதட்சணை வழக்குகளிலிருந்து அப்பாவிக் கணவன்கள் தப்பித்துக்கொள்ள எளிய வழி ஒன்று இருக்கிறது. அதுதான் காந்தி காட்டிய வழியான "சகிப்புத்தன்மை."

இந்த சகிப்புத்தன்மை இல்லாத கணவன்கள்தான் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்து பொய் வரதட்சணை வழக்குகளில் மாட்டிக்கொள்கிறார்கள், அல்லது மனைவியும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து போடும் கொலைத்திட்டத்தில் உயிரை விடுகிறார்கள், அல்லது பின்வரும் செய்தியில் இருப்பதுபோல் தங்களது வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறார்கள்.


ஆலந்தூர், ஜன. 14-
ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் காசிவிசுவநாதன். இவரது மனைவி சாந்தகுமாரி (29). இவர்களுக்கு அரி, விஷ்ணு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அரி எல்.கே.ஜியும், விஷ்ணு 1-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கணவர் கடைக்கு போன பிறகு கள்ளக்காதலனை வரவழைத்து சாந்தகுமாரி உல்லாசமாக இருந்து வந்தார்.


இதுபோன்ற சிக்கலில் இருந்து விடுபட சில அப்பாவிக் கணவன்கள் சட்டத்தின் உதவியை நாடி விவாகரத்து கோரும்போது புத்திசாலி மனைவியர் அதேசட்டத்தைப் பக்குவமாக பயன்படுத்தி கணவனை பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைத்துவிடுகின்றனர். பிறகு இந்த பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கும் கணவன்கள் ஆயுள் முழுதும் நீதிமன்றத்திற்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பல கணவன்கள் மனைவியின் கள்ளக்காமத்திற்காக கொலையே செய்யப்படுகிறார்கள். இவை அனைத்தையும் நீங்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.


மனைவியிடம் “விட்டுக்கொடுத்து” வாழ்க்கையை நடத்தத் தெரியாமல் இதுபோன்று பிரச்சனைகளில் சிக்கி உயிரையும், மானத்தையும் விட்டுக்கொண்டிருக்கும் “டம்மி பீஸ்” கணவனாக இல்லாமல் இந்தியாவில் புத்திசாலியாக திருமண வாழ்க்கையை நடத்துவது எப்படி என்று சமீபத்தில் “மைனா” என்ற திரைப்படத்தில் நாட்டு நடப்பை பக்குவமாக படம்பிடித்துக்காட்டியிருக்கிறார்கள். அதை பின்வரும் வீடியோவில் பார்த்து இந்தியாவில் தெரியாமல் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்குகளில் மாட்டிக்கொண்டிருக்கும் “டம்மி பீஸ்” கணவன்கள் பாடம் படித்துக்கொள்ளவேண்டும்.






Monday, January 24, 2011

சீனப்பெண்ணின் காதலால் தப்பித்த தமிழக இளைஞர்


முறையற்ற திருமண (வரதட்சணை) சட்டங்கள் உள்ள இந்தியாவில் திருமணம் செய்து சிக்கிக்கொள்ளும் பல அப்பாவி இளைஞர்களுக்கு நடுவே புத்திசாலித்தனமாக தப்பித்துக்கொண்ட இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்!

சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் விருத்தாசலம் மாப்பிள்ளை தாலி கட்டினார்
தினமலர் ஜனவரி 24,2011

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கண்மணி நகரைச் சேர்ந்தவர் ராஜவேல் - மலர்கொடி தம்பதியினர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமார் டிப்ளமா எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் சீன நாட்டின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டத்தைச் சேர்ந்த லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் தம்பதியின் ஒரே மகளான லியூயிங், விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நிறுவனத்தின் பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற போது ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்கினர்.தங்கள் காதலை பெற்றார்களிடம் கூறி சம்மதம் பெற்றனர். அதைத் தொடர்ந்து இரு வீட்டார் விருப்பத்துடன் விருத்தாசலம் ராஜா மகால் திருமண மண்டபத்தில் இந்து ஐதீக முறைப்படி மந்திரம், மேளதாளம் முழங்க நேற்று திருமணம் நடந்தது. மணமகள் லியூயிங் கழுத்தில் மணமகன் செந்தில்குமார் தாலி கட்டினார். திருமண விழாவில், லியூயிங் பெற்றோர் வேட்டி, சேலை அணிந்து திருமண சடங்குகளை ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்தது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மணமகள் லியூயிங் கூறுகையில், "முதலில் செந்தில்குமார் தான் காதலை வெளிப்படுத்தினார். என் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மொழி மட்டும் தடையாக இருக்கிறது. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்' என்றார். மணமகளின் தந்தை லியூ ஹாங்க்யூ கூறுகையில், "எனக்கு எனது மகள் முக்கியம். அவளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது எனது கடமை. என் மகளுக்கு நல்ல தமிழ்க் குடும்பம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

===========

இதுபோன்ற புத்திசாலி இளைஞர்களுக்கு நடுவே இப்படியும் சிலர் இந்தியாவில் காதலித்து வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறார்கள்.

மதம் மாற காதலன் மறுப்பு காதலி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தினகரன் 22.1.2011

சென்னை : புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜுபைரியா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: நான் குழந்தையாக இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு காலில் குறைபாடு ஏற்பட்டதால் தாங்கித் தாங்கியே நடப்பேன். இந்நிலையில், எனது பள்ளி தோழியின் அண்ணன் விஜயகுமாருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள்.

என்னை திருமணம் செய்வதற்காக அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற சம்மதித்தார். அதன்படி அவரது பெயரை நியாஸ் என்று மாற்றினார். இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்ய விஜயகுமார் வீட்டில் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, முதலில் பதிவுத் திருமணம், பின்னர் இஸ்லாம் முறைப்படி திருமணம் என்று விஜயகுமார் தெரிவிக்கவே, 2009 மே 22ல் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். ஜூன் 7ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்காக பத்திரிகை அடித்தோம். ஆனால், அதற்கு விஜயகுமார் வீட்டில் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், பதிவுத் திருமணமே போதும், எங்களுடன் வந்துவிடு என்று விஜயகுமார் வீட்டில் என்னை வற்புறுத்துகிறார்கள். இந்த பிரச்னை போலீஸ் வரை சென்றது. போலீசாரும் விஜயகுமாருக்கு அறிவுரை கூறினர். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் வேறு திருமணம் செய்ய முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. எனவே, என்னை திருமணம் செய்துவிட்டு வாழ மறுக்கும் விஜயகுமார் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அருகில் உள்ள மகளிர் போலீசில் புதிய புகார் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

=======

அப்படியே தவறுதலாக இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் வீழ்ந்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு எளிதாக தப்பவும் முடியாது. ஏனென்றால் இந்தியத் திருமண சட்டங்கள் பெண்களை பாதுகாக்கிறேன் என்று ஆண்களை திருமணத் தகனமேடைக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

பாடாய் படுத்தும் பாடகி படாதபாடு படும் பாடகர்
தினகரன் 10.1.2011

சென்னை : தி.நகரை சேர்ந்தவர் பாடகர் பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மனைவியிடம் விவாகரத்து கோருவதற்கு அவர் கூறியுள்ள காரணம் புதுமையானது. பாடகரான அவர், தனது மனைவியிடம் படும் பாடு பற்றி அந்த மனுவில் பட்டியலிட்டுள்ளார். மனு வருமாறு:

கர்நாடக இசைப் பாடகி ஒருவரை காதலித்தேன். இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் அவரது கொடுமை தாங்க முடியவில்லை. நான் பாடகர் என்பதால், இசை நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். திரும்பி வரும்போதெல்லாம் என் நடத்தையில் மனைவி சந்தேகப்படுவார். ‘எத்தனை பெண்களுடன் உனக்கு தொடர்பிருக்கிறது?’ என்று கேட்டு பாடாய் படுத்துவார். கோபம் வந்தால் செல்போனை எடுத்து என் மேல் வீசி தாக்குவார். ஒரு முறை செல்போனை எறிந்ததில் எனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் கண்டுகொள்ளவில்லை. நானும் பொறுத்துக் கொண்டேன்.

இசைக் கச்சேரியில் நான் மேடையில் பாடும்போது முன்சீட்டில் வந்து அமர்ந்து கொள்வார். ‘என்னை மட்டும் பார்த்து பாடுங்கள். வேறு யாரையும் பார்க்கக் கூடாது’ என்று பிரச்னை செய்வார். என்னால் மனைவியின் கொடுமைகளை தாங்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில், நீதிபதி மீனாட்சிசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை அவர் அடுத்த வாரம் தள்ளி வைத்தார்.


‘‘அவருடன் சேர்ந்து வாழவும் விருப்பமில்லை. அவர் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வார் என்பதால், சமாதானமாகவும் போகமாட்டேன்’’ என்று பாடகி பிடிவாதமாக இருப்பதாக, பாடகரின் வக்கீல் தெரிவித்தார்.




Monday, January 17, 2011

பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது எப்படி



லண்டன் : பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் இந்திய உயரதிகாரி ஒருவரின் மனைவி, கணவரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தன் ஐந்து வயது மகனுடன் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்கும்படியும், தனக்கு பாதுகாப்பு கோரியும் அந்நாட்டு அரசுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் வர்மா. இவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் பொருளாதாரத் துறை உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்திய ஹை கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோரை அடுத்து மூன்றாவது இடத்தில் அனில் வர்மா உள்ளார். இவரது மனைவி பரோமித வர்மா. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

கடந்தாண்டு டிசம்பர் 11ம் தேதி, வடமேற்கு லண்டனில், "கோல்டர்ஸ் கிரீன்' பகுதியில் உள்ள வர்மாவின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பிடுங்கி எறிய முயன்றார். அம்மரம், பரோமிதாவின் உறவினர்களால் கொடுக்கப்பட்டது என்பது தான் அவரது கோபத்துக்கு காரணம். அதைத் தடுக்க முயன்ற பரோமிதாவின் முகத்தில் வர்மா ஓங்கிக் குத்து விட்டார். அதனால் மூக்குடைந்து ரத்தம் வழிய, பரோமிதா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அண்டை வீட்டார்கள், அவரை அழைத்து சிகிச்சை அளித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

வர்மாவின் பதவியின் காரணமாக அவரிடம் போலீசார் அதிகளவில் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து, வர்மா, தனது பதவியை காரணம் காட்டி, போலீசால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், பரோமிதாவையும், அவரது குடும்பத்தையும் ஒழித்துக் கட்டி விடுவதாகவும், அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் மிரட்டினார். இதனால் பயந்து போன பரோமிதா, தனது ஐந்து வயது குழந்தையுடன் தலைமறைவானார்.

பிரிட்டன் அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தன் விருப்பத்துக்கு மாறாக கணவர் இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பதால், தான் பிரிட்டனில் இருக்கும்படி மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விவகாரத்தை அமைச்சகமும், இந்திய ஹை கமிஷனும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

====

ஐயோ பாவம் இந்தப் பெண். பிரிட்டன் அரசாங்கத்திடம் பாதுகாப்பு கேட்டிருக்கிறார். இந்திய தேசிய பெண்கள் வாரியம் மற்றும் பெண்கள் நல்வாழ்வு அமைச்சகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையீடு செய்து இந்த இந்தியப் பெண்ணுக்கு நீதி வாங்கித் தருவார்களா? குடும்பவன்முறை தடுப்புச் ட்டம், IPC498A, வரதட்சணைக் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டார்களா? InterPol மூலம் தேடப்படும் சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் செய்துவிட்டார்களா?

இந்தியாவில் சாதாரணமான குடும்பப்பிரச்சனைக்கு ஒரு மருமகள் வர்ணம் பூசி பொய் வரதட்சணை வழக்குப் போட்டாலே போதும் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் முதலில் குடும்பவன்முறை தடுப்புச் சட்டம், IPC498A, வரதட்சணைக் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டுப் பிறகுதான் விசாரணை என்ற பெயரில் எதையோ செய்வார்கள். இதுதான் ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சட்ட நடைமுறை.

இதே போன்ற நடைமுறைகள் வெளிநாட்டில் இருக்கும் இந்தியாவின் கௌரவத்தை பாதுகாக்கும் இந்த உயரதிகாரிக்கும் செயல்படுத்தப்படுமா?

எப்படியோ இந்தப் பொங்கல் நன்னாளில் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது எப்படி என்று தெரிந்துகொண்டீர்கள்!



Saturday, January 15, 2011

முட்டுச்சந்திற்குள் திருமணம் செய்யலாமா?

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் என்பது ஒரு அபாயகரமான ஒருவழிப்பாதை போன்றது. அப்படியே இந்த ஒருவழிப்பாதை நீண்டதூரம்வரை செல்கிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பாதை தொடங்கிய சில மைல் தூரத்திலேயே பொய் வரதட்சணை வழக்குகள் குவிக்கப்பட்டு அது ஒரு முட்டுச்சந்தைப் போல் முடிவடைந்துவிடுகிறது. முன்னேறிச்செல்லவும் முடியாது, பயணத்தை முடித்துத் திரும்பவும் முடியாது.

இதுபோன்ற அபாயகரமான இந்தியத்திருமண ஒருவழிப்பாதையில் பலர் பயணம் செய்து திரும்பமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். பலருக்கு இந்தப் பாதை பொய்வரதட்சணை வழக்குகளால் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்த கொஞ்ச தூரத்திலேயே முட்டுச்சந்தாக்கப்படுகிறது. இவர்களால் அந்த முட்டுச்சந்திற்குள் பயணத்தைத் தொடரவும் முடியாது விவாகரத்து செய்து பயணத்தை முடித்துத் திரும்பவும் முடியாது. ஏனென்றால் இந்திய சட்டங்கள் “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் தவறான திருமணங்களில் சிக்கித்தவிக்கும் ஆண்களுக்கு இப்படித்தான் உதவி செய்கின்றன.

இந்த ஒருவழிப்பாதை முட்டுச்சந்திற்குள் சிக்குபவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவரும் உயிர்காக்கும் அவசரஉதவியை வழங்குபவைதான் விவாகரத்துக் கொடுக்கும் இந்திய நீதிமன்றங்கள். ஆனால் அங்கே குவிந்திருக்கும் பொய்வழக்குகளை முடித்துவிட்டு உங்களைக் காப்பாற்ற வரும் வேளையில் உங்களது வாழ்க்கையே முடிந்துபோயிருக்கும். இந்த சம்பவங்களை விளக்கும் செய்திதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு இந்தியாவில் திருமணம் என்ற பொய்வரதட்சணை வழக்குகள் நிறைந்த ஆபத்தான ஒருவழிப்பாதைப்பயணமும் வேண்டாம், தப்பிக்க வழிதெரியாமல் திண்டாடும் விவாகரத்தும் வேண்டாம். இந்த இரண்டு கொடிய சம்பவங்களும் உங்கள் வாழ்வில் நடக்கக்கூடாது என்று நீங்கள் எண்ணினால் வேறுநாடுகளில் திருமணம் செய்து வாழ்க்கை என்னும் உண்மையான சோலையில் பயணம் செய்யுங்கள். இந்தியத்திருமணம் என்ற அபாயகரமான ஒருவழிப்பாதையான பாலைவன முட்டுச்சந்திற்குள் நுழையாதீர்கள்!


புதுடில்லி:முப்பது ஆண்டுகளாக நடந்த வழக்கில் 85 வயது முதியவருக்கு அவரின் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்துள்ளது.

டில்லி ஐகோர்ட் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.டில்லியைச் சேர்ந்தவர் ஜே.எம்.கோக்லி. இவர் 1953ம் ஆண்டில் விமலா என்ற பெண்ணை மணந்தார். 1979ம் ஆண்டில் விமலாவின் சகோதரர், முனிர்கா என்ற இடத்தில், டில்லி மேம்பாட்டு நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைப் பெற்றார். அதற்கான பணம் முழுவதையும் செலுத்தும்படி, கணவர் கோக்லியை விமலா கேட்டுக் கொண்டார். அவரும் அதன்படியே செய்தார். பின்னர் தன் மகளுடன் விமலா அந்த வீட்டில் குடியேறினார்.

சில நாட்களில் விமலாவுக்கும், கோக்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1979ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறினார் கோக்லி. தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, 1982ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். இவர்கள் இருவருக்கும் கீழ் கோர்ட், 1994ம் ஆண்டில் விவாகரத்து வழங்கியது. இதன்பின் உஷா என்ற பெண்ணை கோக்லி மணந்தார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.ஆனால், கீழ்க்கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் மனு செய்தார். அதில், விவாகரத்து வழங்கும் முன்னர் கீழ்க்கோர்ட் தனது தரப்பு கருத்தை கேட்கவில்லை எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோக்லிக்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த டில்லி ஐகோர்ட் நீதிபதி கைலாஷ் கம்பீர், ""நீண்ட நாட்களாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதால், வழக்கில் தொடர்புடையவர்கள் தங்களின் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாமல் போய் விட்டது. அவர்கள் தங்களின் வாழ்க்கையில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை கோர்ட்டுகளுக்கு அலைவதிலேயே செலவிட நேரிட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற விவாகரத்து வழக்குகளை இனியாவது விரைவாக விசாரித்து கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் வழக்கில் தொடர்புடையவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட முடியும்,'' என்றார். கோக்லிக்கு தற்போது 85 வயது என்பது குறிப்பிடத்தக்கது.



Friday, January 14, 2011

நீதிபதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் நீதி


காசியாபாத்:உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் கோர்ட்டில், 23 கோடி ரூபாய் அளவுக்கு, பி.எப்., நிதி மோசடி நடந்த வழக்கில், ஆறு நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, சி.பி.ஐ., கோரியுள்ளது.

காசியாபாத் கோர்ட்டில் பணியாற்றியவர் அஷுதோஸ் அஸ்தானா. இவர், கோர்ட் ஊழியர்களின் பி.எப்., பணத்தில், 23 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்தாண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார்.கடந்த 2008ல் நடந்த இந்த மோசடியில், நீதிபதிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக, இவர், தன் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபரில் இவர் மர்மமான முறையில் இறந்து விட்டார்.


காசியாபாத் நிர்வாகம் மற்றும் போலீசார், இந்த வழக்கு தொடர்பாக ஒத்துழைக்க மறுப்பதால், இவ்வழக்கை டில்லிக்கு மாற்றும் படி சி.பி.ஐ., கோரியிருந்தது.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக, 78 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூன்று பேர், அலகாபாத் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதிகள், மேலும் மூன்று பேர், மாவட்ட நீதிபதிகள்.விசாரணைக்கு ஆஜராகும் படி நீதிபதிகளுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால், அவர்களுக்கு, பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, காசியாபாத் சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., கோரியுள்ளது.

===========

மனைவி என்ற பெயரில் ஒரு பெண் கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித தேவையுமின்றி உண்மையைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் கண்ணை மூடிக்கொண்டு அப்பாவிகளை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடுவது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு அவர் மீது இருக்கும் புகார் பற்றி சரியான தகவலைக் கொடுக்காமலேயே ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் போடுவது, சிபிஐ மூலம் இண்டர் போல் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி அப்பாவிக் கணவர்களை சர்வதேச குற்றவாளிகளைப்போல சித்தரிப்பது போன்ற அடுக்கடுக்கான பலவித அபாயகராமான சட்டசிக்கல்களை உருவாக்கி பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கும் இதுபோன்ற சட்டமேதைகளுக்கே இப்போது சட்டநடைமுறையை எப்படி மதிப்பது என்று தெரியவில்லையோ?



Saturday, January 8, 2011

புதுவிதமாக புத்தாண்டு கொண்டாடும் IPS ஜோடி!


சிறிய உடல் உபாதைகளான தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் அதன் வேதனையை உணரமுடியும் என்று பலகாலமாகக் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைத்து அவர்களின் வாழ்வை சிதைக்கும்போது அவர்கள் படும் வேதனையை சொன்னால் யாருக்காவது புரியுமா? அதனால் அனைவரும் இதுபோன்ற வேதனையை அனுபவித்தால்தான் அதை உணர்வார்களோ?

Divorce notice nets IPS officer in dowry case
Bangalore Mirror.com Fri, Jan 7, 2011

It’s a strange dowry harrasment case involving an IPS officer-couple.

Sujan and Stuti Singh, both IPS officers, got married four years ago. Six months back, Sujan had sought a divorce but ended up getting arrested for domestic violence

Sujan Singh and Stuti Singh, both IPS officers from Uttar Pradesh and from the same batch, had fallen in love with each other and were married four years ago. Stuti bore Sujan a daughter, but their marriage soon hit turbulence. Two years ago, Sujan took a sabbatical and relocated to Bangalore to pursue higher studies. While in the city, Sujan had asked for a divorce. Instead, Stuti, currently posted in Kulu Manali, slapped a dowry-harassment case in Haridwar against her husband. He was arrested in the city by a police team from Uttar Pradesh – despite being unaware of the case.

Sujan and Stuti are both doctors who joined the IPS, UP cadre. Gauri Negi, a close friend of Sujan, revealed that all was well for some time after their marriage.

“Stuti is also a doctor, but when she joined the police force, Sujan too followed,” Gauri said. “They were both posted on deputation to Gorakhpur special branch for five years. The cracks in their marriage appeared just after the birth of their daughter (now two years old). Sujan felt Stuti was neglecting him and that led to a lot of problems between them.

Not long after, he took a sabbatical and shifted to Bangalore to complete his Doctor of Medicine (Orthopaedics) at Vydehi hospital. But their differences only grew wider and she began disrespecting his parents. Six months ago he sent her a divorce notice. He also resigned from his IPS post. Stuti, however, did not formally accept the notice and she sent it back. She then filed a dowry harassment case and a domestic violence case against him.”

Negi found the case perplexing as according to her, Sujan had not visited Stuti even once.

“I don’t know how an IPS officer can file a case like this,” Gauri said. “I have known Sujan for the past few years and he comes across as a nice man. He’s not even staying with his wife so how can he harass her for dowry?,” she wondered.

Mohammed Babu, Kadugodi police inspector, was peeved at the manner in which the UP police handled Sujan’s arrest.

“Police from UP arrested Sujan, who stays in our jurisdiction,” Babu said. “They had an arrest warrant in his name. They informed us about the case only after they had arrested him. They neither asked for our assistance nor did they give him (Sujan) any notice before arresting him. They did not even listen to his protests. They produced him in court and then took him to UP. I cannot understand why they had to be so rude to him.”

Sujan will now be produced before the district court in Roorkee.


முன்னையிட்டதீ முப்புரத்திலே, பின்னையிட்டதீ தென்னிலங்கையிலே. இப்போது அப்பாவிகளின் சாபத்தீ எங்கு எரிந்துகொண்டிருக்கிறது என்று செய்தியைப் படித்துத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இன்னும் இதுபோல பல சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள். இதுதான் பொய்வரதட்சணை வழக்குகளால் அப்பாவிகள் அடையும் வேதனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரே வழி.

Saturday, January 1, 2011

திருக்குறள் காட்டிய வழியில் நடக்கும் மாமனிதர்கள்!


ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர். - திருக்குறள்

திரு மு.கருணாநிதி உரை

ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.


திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப அயராமல் உழைத்து எல்லாவித இன்னல்களையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்று சுகமடைந்திருப்பவர்கள் யாரென்று பின்வரும் படங்களிலும், செய்திகளிலும் தெரிந்துகொள்ளுங்கள். (படங்கள்- தினமலர், செய்தி- தட்ஸ்தமிழ்)


ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 31, 2010 Thats Tamil

ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்
பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்
கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:


இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)


தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)


ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.


இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த
பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

=====

ஊழலுக்குத் தோன்றும் எதிர்ப்புகளையும், சட்டக் கட்டுப்பாடுகளையும் தங்களது தளராத முயற்சியால் கடந்துவந்து ஊழலையும் (ஊழையும்) உப்பக்கம் கண்டுவிட்ட இந்த மாமனிதர்களுக்கு எதிரே சாதாரண இந்தியக் குடிமகன் என்ன செய்துவிட முடியும்?

இதுபோன்ற மாமனிதர்கள் வாழும் அதே நாட்டில் தங்களது அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட தினம் தினம் திணறிக்கொண்டிருக்கும் சாரசரி இந்தியக் குடிமகனின் முகத்தில்
இன்னும் அந்த மாறாத புன்சிரிப்பும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் கூடிய ஒருவித எதிர்பார்ப்பும் இருக்கிறதே! எல்லாவிதமான கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு இன்றும் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதால் இந்த சராசரி இந்தியர்கள்தான் திருக்குறள் வழியில் நடந்து ஊழையும் உப்பக்கம் கண்டுவிட்ட மாமனிதர்கள் என்று உங்களுக்கு சொல்லத் தோன்றுகிறதா?


இந்த அப்பாவிகளுக்கு நடுவே இந்தியாவில் திருமணம் செய்து பொய்வழக்கில் சிக்கினால் உங்களை யாராவது கண்டுகொள்வார்களா? அல்லது பொய்
வழக்கின் மூலம் உங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு உங்களுக்கு உதவும் நிலையில்தான் யாராவது இருக்கிறார்களா? இளைஞர்களே, சிந்தியுங்கள். ஊழல்களிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியவில்லையென்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்களுக்கு வரப்போகும் பொய் வரதட்சணை வழக்குகளிலிருந்தாவது உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.