முறையற்ற திருமண (வரதட்சணை) சட்டங்கள் உள்ள இந்தியாவில் திருமணம் செய்து சிக்கிக்கொள்ளும் பல அப்பாவி இளைஞர்களுக்கு நடுவே புத்திசாலித்தனமாக தப்பித்துக்கொண்ட இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்!
சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் விருத்தாசலம் மாப்பிள்ளை தாலி கட்டினார்
தினமலர் ஜனவரி 24,2011
விருத்தாசலம்:விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கண்மணி நகரைச் சேர்ந்தவர் ராஜவேல் - மலர்கொடி தம்பதியினர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமார் டிப்ளமா எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் சீன நாட்டின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டத்தைச் சேர்ந்த லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் தம்பதியின் ஒரே மகளான லியூயிங், விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நிறுவனத்தின் பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற போது ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்கினர்.தங்கள் காதலை பெற்றார்களிடம் கூறி சம்மதம் பெற்றனர். அதைத் தொடர்ந்து இரு வீட்டார் விருப்பத்துடன் விருத்தாசலம் ராஜா மகால் திருமண மண்டபத்தில் இந்து ஐதீக முறைப்படி மந்திரம், மேளதாளம் முழங்க நேற்று திருமணம் நடந்தது. மணமகள் லியூயிங் கழுத்தில் மணமகன் செந்தில்குமார் தாலி கட்டினார். திருமண விழாவில், லியூயிங் பெற்றோர் வேட்டி, சேலை அணிந்து திருமண சடங்குகளை ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்தது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மணமகள் லியூயிங் கூறுகையில், "முதலில் செந்தில்குமார் தான் காதலை வெளிப்படுத்தினார். என் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மொழி மட்டும் தடையாக இருக்கிறது. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்' என்றார். மணமகளின் தந்தை லியூ ஹாங்க்யூ கூறுகையில், "எனக்கு எனது மகள் முக்கியம். அவளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது எனது கடமை. என் மகளுக்கு நல்ல தமிழ்க் குடும்பம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
சென்னை : புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜுபைரியா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: நான் குழந்தையாக இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு காலில் குறைபாடு ஏற்பட்டதால் தாங்கித் தாங்கியே நடப்பேன். இந்நிலையில், எனது பள்ளி தோழியின் அண்ணன் விஜயகுமாருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள். |
சென்னை : தி.நகரை சேர்ந்தவர் பாடகர் பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மனைவியிடம் விவாகரத்து கோருவதற்கு அவர் கூறியுள்ள காரணம் புதுமையானது. பாடகரான அவர், தனது மனைவியிடம் படும் பாடு பற்றி அந்த மனுவில் பட்டியலிட்டுள்ளார். மனு வருமாறு:
|
No comments:
Post a Comment