இளைஞர்களே,
இந்தியாவில் திருமணம் என்பது ஒரு அபாயகரமான ஒருவழிப்பாதை போன்றது. அப்படியே இந்த ஒருவழிப்பாதை நீண்டதூரம்வரை செல்கிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பாதை தொடங்கிய சில மைல் தூரத்திலேயே பொய் வரதட்சணை வழக்குகள் குவிக்கப்பட்டு அது ஒரு முட்டுச்சந்தைப் போல் முடிவடைந்துவிடுகிறது. முன்னேறிச்செல்லவும் முடியாது, பயணத்தை முடித்துத் திரும்பவும் முடியாது.
இதுபோன்ற அபாயகரமான இந்தியத்திருமண ஒருவழிப்பாதையில் பலர் பயணம் செய்து திரும்பமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். பலருக்கு இந்தப் பாதை பொய்வரதட்சணை வழக்குகளால் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்த கொஞ்ச தூரத்திலேயே முட்டுச்சந்தாக்கப்படுகிறது. இவர்களால் அந்த முட்டுச்சந்திற்குள் பயணத்தைத் தொடரவும் முடியாது விவாகரத்து செய்து பயணத்தை முடித்துத் திரும்பவும் முடியாது. ஏனென்றால் இந்திய சட்டங்கள் “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் தவறான திருமணங்களில் சிக்கித்தவிக்கும் ஆண்களுக்கு இப்படித்தான் உதவி செய்கின்றன.
இந்த ஒருவழிப்பாதை முட்டுச்சந்திற்குள் சிக்குபவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவரும் உயிர்காக்கும் அவசரஉதவியை வழங்குபவைதான் விவாகரத்துக் கொடுக்கும் இந்திய நீதிமன்றங்கள். ஆனால் அங்கே குவிந்திருக்கும் பொய்வழக்குகளை முடித்துவிட்டு உங்களைக் காப்பாற்ற வரும் வேளையில் உங்களது வாழ்க்கையே முடிந்துபோயிருக்கும். இந்த சம்பவங்களை விளக்கும் செய்திதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு இந்தியாவில் திருமணம் என்ற பொய்வரதட்சணை வழக்குகள் நிறைந்த ஆபத்தான ஒருவழிப்பாதைப்பயணமும் வேண்டாம், தப்பிக்க வழிதெரியாமல் திண்டாடும் விவாகரத்தும் வேண்டாம். இந்த இரண்டு கொடிய சம்பவங்களும் உங்கள் வாழ்வில் நடக்கக்கூடாது என்று நீங்கள் எண்ணினால் வேறுநாடுகளில் திருமணம் செய்து வாழ்க்கை என்னும் உண்மையான சோலையில் பயணம் செய்யுங்கள். இந்தியத்திருமணம் என்ற அபாயகரமான ஒருவழிப்பாதையான பாலைவன முட்டுச்சந்திற்குள் நுழையாதீர்கள்!
புதுடில்லி:முப்பது ஆண்டுகளாக நடந்த வழக்கில் 85 வயது முதியவருக்கு அவரின் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்துள்ளது.
டில்லி ஐகோர்ட் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.டில்லியைச் சேர்ந்தவர் ஜே.எம்.கோக்லி. இவர் 1953ம் ஆண்டில் விமலா என்ற பெண்ணை மணந்தார். 1979ம் ஆண்டில் விமலாவின் சகோதரர், முனிர்கா என்ற இடத்தில், டில்லி மேம்பாட்டு நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைப் பெற்றார். அதற்கான பணம் முழுவதையும் செலுத்தும்படி, கணவர் கோக்லியை விமலா கேட்டுக் கொண்டார். அவரும் அதன்படியே செய்தார். பின்னர் தன் மகளுடன் விமலா அந்த வீட்டில் குடியேறினார்.
சில நாட்களில் விமலாவுக்கும், கோக்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1979ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறினார் கோக்லி. தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, 1982ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். இவர்கள் இருவருக்கும் கீழ் கோர்ட், 1994ம் ஆண்டில் விவாகரத்து வழங்கியது. இதன்பின் உஷா என்ற பெண்ணை கோக்லி மணந்தார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.ஆனால், கீழ்க்கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் மனு செய்தார். அதில், விவாகரத்து வழங்கும் முன்னர் கீழ்க்கோர்ட் தனது தரப்பு கருத்தை கேட்கவில்லை எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோக்லிக்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த டில்லி ஐகோர்ட் நீதிபதி கைலாஷ் கம்பீர், ""நீண்ட நாட்களாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதால், வழக்கில் தொடர்புடையவர்கள் தங்களின் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாமல் போய் விட்டது. அவர்கள் தங்களின் வாழ்க்கையில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை கோர்ட்டுகளுக்கு அலைவதிலேயே செலவிட நேரிட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற விவாகரத்து வழக்குகளை இனியாவது விரைவாக விசாரித்து கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் வழக்கில் தொடர்புடையவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட முடியும்,'' என்றார். கோக்லிக்கு தற்போது 85 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு
-
இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு
காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி
வழங்குவதற்கு பதிலாக ...
10 years ago
No comments:
Post a Comment