பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, March 29, 2010

இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான இன்ஷுரன்ஸ்

சில மனைவிகள் இப்போதெல்லாம் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை வைத்து போலிஸ் S. I. கணவனை கொலை செய்யத் துணிந்த மனைவியைப் பற்றி செய்தி வந்திருந்தது. இப்போது அதுபோலவே மற்றொரு செய்தி. பெண்கள் எப்படியெல்லாம் முன்னேறிவிட்டார்கள்!

கணவரை கார் ஏற்றி கொலை செய்த மனைவி கூலிப்படையினருடன் கைது
தினமலர் மார்ச் 29,2010

சாணார்பட்டி:கூலிப்படை உதவியுடன் கணவனை, கார் ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், அதிகாரிப்பட்டி மெயின் ரோட்டில் மார்ச் 23ல் அடையாளம் தெரியாத ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிலுவத்தூர் வி.ஏ.ஓ., தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். இறந்தவர் தாராபுரம் விஜயகுமார் என தெரிய வந்தது.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறியதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இறந்த விஜயகுமார், தாராபுரம் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும், மனைவி ஜோஸ் மேரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. விஜயகுமார் சில ஆண்டுகளாக பழநி அருகே கீரனூரில் வசித்து வந்துள்ளார். இங்கு எலக்ட்ரிக் கடையும் வைத்துள்ளார்.

இவருக்கு தாராபுரம், உடுமலைப்பேட்டையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.தாராபுரத்தில் வசித்து வந்த மனைவி ஜோஸ் மேரி(43), பிரிந்து வாழும் கணவர் விஜயகுமாரிடம் ஜீவனாம்சம் கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த விஜயகுமார் கடந்த வாரம் தாராபுரம் சென்று, ஜோஸ் மேரி வசிக்கும் வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்துள்ளார். தாராபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் இவர்களை சமாதானம் செய்துள்ளார்.

பஞ்சாயத்து பேச வந்த ஹரிதாசிடமே, தனது கணவர் விஜயகுமாரை கொலை செய்தால் பணம் தருவதாக ஜோஸ் மேரி பேரம் பேசியுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்ட ஹரிதாஸ், தனது நண்பரான திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த நடராஜன் உதவியுடன், விஜயகுமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.விஜயகுமாரிடம், திண்டுக்கலில் வைத்து பேசி முடித்துக் கொள்ளலாம் என கூறிய ஹரிதாஸ், அவரையும், ஜோஸ் மேரியையும் தனது காரில் அழைத்து வந்துள்ளார்.

திண்டுக்கலில் சிறிது நேரம் பேசிய பின், சாணார்பட்டியில் பேசலாம் என நடராஜன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில், அதிகாரிப்பட்டியில் விஜயகுமார் சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளார். அங்கேயே அவர் மீது காரை ஏற்றி கொலை செய்து விட்டனர். சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஜோஸ் மேரி, ஹரிதாஸ், நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

==========================

இந்த விஷயத்தில் நகரத்துப்பெண்கள் கொஞ்சம் நல்லவர்கள்! பொய் வரதட்சணை கேசு போட்டு கணவரையும் அவரது குடும்பத்தையும் நடமாடும் பிணமாக்கிவிடுவார்கள். கிராமத்து அப்பாவிப் பெண்கள் இந்த சட்டநடைமுறையெல்லாம் தெரியாமல் கூலிப்படை வைத்து ஆளையே தீர்த்துவிடுகிறார்கள்.

இளைஞர்களே, இந்தியாவில் திருமணம் செய்வதாக இருந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். திருமணத்திற்கு முன்பு ஜாமின் இன்ஷுரன்ஸ், லைஃப் இன்ஷுரன்ஸ் போன்றவற்றை தயார் செய்துவிட்டு பிறகு திருமணம் என்ற தகனமேடையில் இறங்குங்கள்.

ஜாமின் இன்ஷுரன்ஸ் - பொய் வரதட்சணை கேசில் சிக்கி கைதாகி ஜாமின் வேண்டி நீதிமன்றத்திற்கு வரும்போது ஜாமின் தொகை கட்டுவதற்கு ஆளில்லாமல் கஷ்டப்பட்டு தேடி அலையாமல் உங்களது இன்ஷுரன்ஸ் உங்களுக்குக் கைகொடுக்கும்.

லைஃப் இன்ஷுரன்ஸ் - மனைவியின் கள்ளக்காதலால் நீங்கள் கொலைசெய்யப்பட்டாலோ அல்லது மனைவியின் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டாலோ உங்களது இறுதிச்சடங்கினை நடத்துவதற்கு உதவும்.

Saturday, March 27, 2010

போலிஸ் வருது. அப்பாவிகளே ஜாக்கிரதை!

போலிஸின் அராஜகத்தால் 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி இந்திய குடிமகனுக்கு டில்லி காவல்துறை ஆறு லட்சம் ரூபாய் நஷ்டஈடாக கொடுக்கவேண்டும் என்று சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அப்பாவி செய்த குற்றம் என்னவென்றால் போலிஸின் அராஜகத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுதான். அவர் மீது 18 பிரிவுகளில் பொய் குற்ற வழக்குகள் ஒரே காவல் நிலையத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பதிவு செய்து சிறையில் தள்ளி பல ஆண்டுகளாக துன்புறுத்தியிருக்கிறார்கள்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறதென்றால் போலிஸுக்கு தேவை குற்றவாளிகளோ, ஆதாரங்களோ அல்ல. அப்பாவிகள் சிக்கினால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று வெளிப்படையாக உண்மையை சொல்லியிருக்கிறது. ஆனாலும் இந்த தீர்ப்பின் மூலம் அப்பாவிக்கு நீதி கிடைத்ததா? உண்மையான குற்றவாளியான போலிஸ் தண்டிக்கப்பட்டதா? அதற்குக் கிடைக்கும் பதில் எப்போதும் போல்தான் இருக்கும். சிந்தித்துப்பாருங்கள்.

அந்த நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதி:3. After narrating the long history of the suffering undergone by Prempal, at the hands of the police for about 15 years in a number of false cases, including the one in which he was being acquitted, the learned ASJ concluded:

“This case is a glaring example that the poor in this country have no say and if they cry for justice, their cries fall on deaf ears. They are made to suffer and pay by their life and liberty, when they complain against police officials.”

“I consider that this is an eye-opener case, which reveals the manner in which police lets off real culprits and falsely implicates innocent persons, who dare ask for justice or who want erring police officials to be brought to book. The police torture of Prempal has converted him into a living corpse. It is a case which shows that police force has persons of criminal character in it, who are out to damage the whole institution and needed to be weeded out. It is recommended that all police officials who were involved in framing Prempal in different cases be given exemplary punishment and Prempal be adequately compensated for loss of valuable years of life and wrongful imprisonment for several years and his harassment for 15 years and physical and mental torture. Copy of this judgment be sent to Commissioner of Police, New Delhi for necessary action.”

இந்த நீதிமன்ற தீர்ப்பினை படிக்கும்போது அமெரிக்க அரசாங்க இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த செய்தியையும் ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள்.

U.S. Department of State
International Travel Information

India
Country Specific Information

CRIMINAL PENALTIES:

Since the police may arrest anyone who is accused of committing a crime (even if the allegation is frivolous in nature) , the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, estranged spouses, or other persons with whom the U.S. citizen has a disagreement, occasionally resulting in the jailing of U.S. citizens pending resolution of their disputes. At the very least, such circumstances can delay the U.S. citizen's timely departure from India, and may result in an unintended long-term stay in the country. Corruption in India, especially at local levels, is a concern, as evidenced by Transparency International’s Corruption Perception Index of 2008, ranking India in 85th place among the world’s 180 countries.மேலுள்ள வழக்குத் தொடர்பான செய்தி:

Police to pay Rs 6 lakh for framing false cases
India Today New Delhi March 26, 2010


The Delhi High Court on Thursday awarded a compensation of Rs 5.62 lakh to a person, who was falsely implicated in 18 criminal cases by the police.

Prempal had sought a compensation of Rs 60 lakh from the Delhi Police for implicating him in 18 false cases between 1991 and 2007. But he got only a fraction of his claims.


The court directed Delhi Police commissioner Y. S. Dadwal to compensate the victim as well as tender a written apology to the victim and his family for their suffering.


"If the confidence has to be restored among the citizenry that the police are meant to protect their rights, then such an expression of contrition by those at the helm is imperative," the court said.


The court asked Dadwal to review the criminal cases pending against Prempal and asked him to take a decision within four weeks on whether these cases needed to be pursued against him.


Prempal was slapped with the cases because he had dared to take on the local policemen after they refused to return his household goods recovered from robbers.>


"It started in 1991 when I filed an FIR of theft at my house. The police after arresting the accused and recovering the household goods did not return it. I took on the police and registered a case against them. After that a vigilance inquiry was done and the officials were suspended," "In revenge, the police destroyed 15 years of my life and my family by implicating me in false cases but could not prove any of the cases," he added.


Out of the 18 cases, he was acquitted in 13 after facing a prolonged trial. However in five cases, the police managed to get him convicted, which included four cases of theft and one under the Arms Act.


Prempal moved the high court in 2006 against the Delhi Police for falsely implicating him in a rape case of a minor girl in 2002.


The police accused him of raping the daughter of his landlord as he was having frequent quarrels with him. He was arrested, tortured in custody and suffered incarceration in jail for nearly seven years. Prempal was acquitted by a trial court in September 2004.


The trial court in its order had stated that the police officers involved in framing the case against Prempal should be given exemplary punishment, but the Delhi Police did not abide by it.


"I consider this as an eye-opener case, which reveals the manner in which police lets off real culprits and falsely implicates innocent persons, who dare ask for justice or who want erring police officers to be brought to book," the court observed.

"The torture of Prempal has converted him into a living corpse. It is a case which shows that the police force has persons of criminal character in it, who are out to damage the whole institution and need to be weeded out," the court added.


In all the five cases in which Prempal was convicted, the FIRs were lodged at the Sangam Vihar police station.


Four out of the five cases in which he was convicted were registered in 1999 under sections 457/ 380/ 411 of IPC related to trespass and house break- in by night to commit offence. He was sentenced to rigorous imprisonment for 18 months in each of the cases. However, Prempal was acquitted in seven similar cases.


The fifth conviction was under sections 25/ 27/ 54 and 59 of the Arms Act in which he was sentenced to rigorous imprisonment for one year and six months and was fined Rs 100.
But he was acquitted in three other cases under the Arms Act.

Prempal was also acquitted in a case (FIR No 117/ 1991) where he was charged under sections 302/ 34 IPC. The Sangam Vihar police not only implicated him but also his son Sanjay and his wife. The court expressed surprise over the Delhi Police continuing to dub Prempal as a " hardened criminal". " Despite so many acquittals, the Delhi Police continue to dub him as a hardened criminal, this is an appellation that is at once unfair and unjustified.

The most precious years of his life were spent in trying to defend himself against these false cases," Justice S. Murlidhar said.


"What is disconcerting is the number of cases registered at the same police station and the ordeal that Prempal has had to undergo over several years to get relieved of the cases," he added.


Case Record:

18 false cases slapped against him

5 cases in which he was convicted

7 years Prempal had to spend in jail

Rs 5.62 lakh compensation awarded to him by the Delhi High Court

Rs 60 lakh compensation he had claimed for the harassment meted out to him

==============================

அப்பாவி இளைஞர்களே, இது இந்திய போலிஸுக்கு புதிய விஷயமல்ல. இதுபோலத்தான் பல பொய் வரதட்சணை கேசுகள் நாட்டில் பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையென்றாலும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல பொய்வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது இந்த நாட்டில். உங்களால் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் திறமையிருந்தால் மட்டுமே இந்தியாவில் திருமணம் செய்யலாமா என்று யோசியுங்கள். இல்லையென்றால் உங்களது வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும்.

பொய் வரதட்சணை வழக்குகளில் போலிஸுக்குத் தேவை குற்றவாளிகளோ அல்லது வழக்கை நடத்துவதற்கான ஆதாரங்களோ அல்ல உங்களைப்போன்ற அப்பாவிகள் மட்டுமே போதும். அதனால் தான் 98% வரதட்சணை வழக்குகளில் பொய் வழக்குப்போடும் கூட்டம் கடைசியில் நீதிமன்ற விசாரணையில் தோற்றுப்போகிறது.

கடைசியில்
நீங்கள் வழக்கில் வெற்றிபெற்றாலும் பொய்வழக்கில் சிக்கிய உங்களின் நிலை பல ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். "வாய்மையே வெல்லும்" என்று சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் போனால் திரும்பக் கிடைக்காத காலத்தையும், உங்களது பொன்னான வாழ்க்கையையும் தொலைத்திருப்பீர்கள்.

கடைசியில் வெல்வது வாய்மை மட்டும் தான். அதுவும் கடைசியில் தான். இதுபோன்ற காவல்துறையும், நீதித்துறையும் இருந்தால் வாய்மையாவது கடைசியில் வெல்லுமா என்பதும் சந்தேகம்தான்.

பொய் வழக்கால் இழந்த உங்களின் பொன்னான வாழ்க்கையையும் எதிர்காலக்கனவுகளையும் உங்களது வழக்கின் வெற்றி திரும்பக் கொடுக்குமா? பொய்வழக்கில் சிக்கியபிறகு பலஆண்டுகள் உங்களது வாழ்க்கையைத்தொலைத்தபிறகு நீங்கள் வெற்றிபெற்றதாக எப்படிக் கருதமுடியும்.


இப்போதாவது உண்மை நிலையை புரிந்துகொண்டு உங்கள் திருமணத்தைப் பற்றி ஒரு நல்ல முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

Thursday, March 25, 2010

இன்று, நேற்று, நாளை

கிருஷ்ண ராதையை உதாரணம் காட்டி உச்சநீதிமன்றம் உறவுமுறையைப் பற்றி ஒரு கருத்து வெளியிட்டிருந்தது. அதற்கு பொருந்தும் விதமாக கிருஷ்ணரின் உபதேசம் போன்றே இன்று நடப்பதும், நேற்று நடந்ததும், நாளை நடக்கப்போவதும் நன்றாகவே நடக்கிறது இந்த நாட்டில்.


இன்று நீதிமன்றம் சொன்னது..........

தினமலர் மார்ச் 24,2010

புதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

======================================================

நேற்று......

இன்றைய நீதிமன்ற கருத்திற்கு முன்பே காவல்துறை ஜோடி நீதிமன்ற கருத்தை மதித்து நடக்கும் விதமாக முன்னுதாரணம் காட்டி நேற்றே ஆரம்பித்துவிட்ட நிகழ்ச்சி. அதனால் நீதிமன்றம் சொல்வதெல்லாம் பழைய செய்திதான்!

தினமலர் மார்ச் 25,2010

திண்டுக்கல் : அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர் ஒருவர், தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, மற்றொரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாக, பெண் போலீஸ் ஒருவர், திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமியிடம் புகார் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டியைச் சேர்ந்தவர் உதயசூரியன்(25); அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் உள்ளார். இவருக்கும், வீரசிக்கம்பட்டியைச் சேர்ந்த கனி (23) என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கனி, வேலூர் ஆயுதப்படையில் பெண் போலீசாக உள்ளார். இவர், ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்; நான்கு வயதில் ஒரு மகன் உண்டு. உதயசூரியனும், கனியும் இரண்டு ஆண்டுகளாக பழகி வந்தனர். உதய சூரியனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையறிந்த பெண் போலீஸ் கனி, திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமியிடம் கொடுத்துள்ள புகாரில், 'போலீஸ்காரர் உதயசூரியன், என்னுடன் குடும்பம் நடத்தினார். என் குழந்தை, அவரை அப்பா என்று தான் அழைக்கும். என்னை ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அவர் பதில் சொல்லட்டும்' என்று கூறியுள்ளார். விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

=========================================================

நாளை......

நீதிமன்றம் சொல்வதற்கு முன்பே என்றோ ஆரம்பித்து நாளை நன்றாக செழித்து வளரப்போகும் உறவுகள்.......


தினமலர் பிப்ரவரி 28,2010

புதுடில்லி:திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் வியப்பான விஷயம் தெரியவந்துள்ளது; இந்த விஷயத்தில், நகர மக்களை, கிராம ஜோடிகள் மிஞ்சி வருகின்றன என்பது தான் அந்த தகவல். இந்தியாவில், 15 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்று சர்வே தெரிவிக்கிறது.மத்திய சுகாதார அமைச்சகம் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்த சர்வேயை எடுக்க ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களை தேர்ந்தெடுத்தது; 15 சதவீத இளைஞர்களிடமும், 4 சதவீத இளம் பெண்களிடமும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்: திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் வகையில் மொத் தம் 51 ஆயிரம் பேர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது.பெண்களை ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 24 சதவீத இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வகையில் 9 சதவீதம் பேர் தான் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துள்ளனர்.திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வது இந்தியாவில் பரவலாக இருந்து வருகிறது. டில்லியில் உள்ள மக்கள் தொகை கவுன்சிலும், மும்பையில் உள்ள பன்னாட்டு மக்கள் தொகை விஞ்ஞான பயிற்சி மையமும் சேர்ந்து நடத்திய விரிவான கணக்கெடுப்பில் இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் இளம் வயதினர் திருமணத்திற்கு முன் அதிகமாக செக்ஸ் வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இளைஞர்களில், திருமணத்துக்கு முன், நகர்ப்பகுதியில் 17 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 29 சதவீதம் பேரும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இளம்பெண்களில் கிராமப்பகுதியில் 46 சதவீதமும், நகர்ப்பகுதியில் 31 சதவீதம் பேரும், திருமணத்துக்கு முன்னதாகவே உடலுறவு கொள்கின்றனர். நகர்ப்புறத்தில் ஒரு சதவீதமும், கிராமப்புறத்தில் 6 சதவீத இளைஞர்களும் 18 வயதை அடையும் முன்னர் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். 26 சதவீத இளைஞர்களும், 46 சதவீத இளம்பெண்களும், 15 வயதை அடையும் முன்னர் தங்களுடைய காதலருடன் செக்சில் ஈடுபட்டு அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.பெரும்பாலானவர்களின் செக்ஸ் உறவுகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர். 25 சதவீத இளைஞர்களும், 21 சதவீத இளம் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர்; உறவின் போது காண்டம் பயன்படுத்துவது குறைந்த அளவே இருந்து வருகிறது. ஆண்களில் 13 சதவீதத்தினரும், பெண்களில் மூன்று சதவீதத்தினரும் காண்டம் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆறு மாநிலங்களை பொறுத்தவரையில் உடலுறவுகள் பரவலாக பாதுகாப்பற்ற முறையில் தான் நடக்கின்றன. இந்த வித்தியாசம் மாநிலங்களிடையே மாறுபடுகின்றன. ராஜஸ்தான் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் இளைஞர்கள் 32 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட் டோருடன் உறவு கொள் கின்றனர். ராஜஸ்தானில் 14 சதவீதமே நடக்கிறது.இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

( பாதுகாப்பற்ற இந்த உறவுகளால் இளமையில் கருவுறுதல், பாலியல் வியாதிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த சூழ்நிலையை எப்படிக்கையாள்வது என்று இப்போதே சட்டங்களை எழுதிவிட்டால் நல்லது. பிறகு எதிர்காலத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து வேலையற்ற ஏதாவது ஒரு சமூகநல விரும்பி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதை சமாளிக்க எந்தவித சட்டங்களும் இயற்றப்படவில்லையே என்று நீதிமன்றங்கள் குழப்பமடையாமல் இருக்க உதவியாக இருக்கும். இல்லையென்றால் புராணங்களில் ஏதாவது நாட்டுவைத்திய முறை இருக்கிறதா என்று தேடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.)

=============================================================

நேற்று நடந்ததும், நாளை நடக்கப்போவதும் இதுவரை இது சரியா தவறா என்ற சந்தேகத்துடனே நடந்துகொண்டிருக்கிறது. நீதிமன்றமே அங்கீகாரம் கொடுத்தபிறகு இனி எந்தவித அச்சமும் இல்லாமல் இது நன்றாகவே நடக்கும்.

நீதிமன்றத்தின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை கவனத்தில் வைத்துக்கொண்டு இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவரவர் மத வழக்கத்திற்குட்பட்டு முறைப்படி திருமணம் செய்து வாழும்போதே பல பொய் கேசுகளில் சிக்கி பல இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றனர் இந்த நாட்டில்.

முறையற்ற, கட்டுப்பாடற்ற உறவுமுறைக்கு நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியபிறகு இளைஞர்களுக்குத்தான் மேலும் பல ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. இதுபோன்ற உறவுகளில் வரதட்சணை கொடுமை வழக்கைத்தவிர பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற பல கேசுகளை எளிதாகப் போட்டு நினைத்ததை சாதித்துக்கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம். அதனால் இளைஞர்களே மிகவும் விழிப்புடன் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

இங்கு சொல்லப்பட்ட விஷயம் “கற்பு”, “கத்தரிக்காய்” என்று பிதற்றுவதற்காக அல்ல. இளைஞர்களே, எதிர்காலத்தில் அமோகமாக செழித்துவளரப்போகும் பொய்வழக்குகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத்தான் இந்த பதிவு.Saturday, March 20, 2010

செக்ஸ் கதை எழுதும் 498a மனைவியர்பொய்கேசு போடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நம்ம ஊர் பத்தினிகள் நாகூசாமல் எந்தக் குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சொல்வார்கள் என்பதற்கு சமீபத்தில் பாம்பே கோர்ட்டில் வந்த வழக்கு ஒரு நல்ல உதாரணம்.

இந்த பொய்கேசில் ஒரு பத்தினி தனது கணவரின் குடும்பத்திற்கெதிராக IPC498A என்ற பெண்கள் (வரதட்சணை) பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி வழக்குப்போட பயன்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் கணவரின் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களுடனும் உறவுகொள்ளவேண்டும் என்று கணவரின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தியதாக எழுதியிருக்கிறார். அதைப்பற்றி நாத்தனாரிடம் கேட்டபோது இது தான் எங்கள் குடும்பத்தின் வழக்கம் என்று அந்த நாத்தனார் அறிவுரை கூறி ஒத்துழைக்கச்சொன்னாராம். இல்லையென்றால் உன்னால் இங்கு வாழமுடியாது என்று மிரட்டினார்களாம்.

இதில் கொடுமை என்னவென்றால் கணவரின் சகோதரர்கள் மற்றும் கணவரின் சகோதரியின் கணவர் இவர்களுடன் உறவு கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி கணவரின் மொத்தக்குடும்பமும் ஆண் பெண் உட்பட அனைவரும் சேர்ந்து அந்த மருமகளை கொடுமை செய்ததாக புகார் எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் புகாரின் பின்னணி என்னவென்றால் கூட்டுக்குடும்பத்திலிருந்து கணவர் தனிக்குடுத்தனம் வர மறுத்தது தான் காரணம்.

இதோ நீதிமன்ற தீர்ப்பின் ஒரு ஆபாசமான பச்சையான கொச்சைப் பகுதி:


IN THE HIGH COURT OF JUDICATURE AT BOMBAY
CIVIL APPELLATE JURISDICTION
FAMILY COURT APPEAL NO.68 OF 2005

CORAM : D.B.BHOSALE AND R.Y.GANOO,JJ.
DATE : 12 /03/2010.
the appellant filed a criminal case under section 498-A of IPC against the respondent and his family members some time in October, 1997 making very serious and wild allegations against the respondent and his family members. She alleged that there is a custom in the respondent’s family to share each others wives with other male members in the family and that she was consistently and persistently told by the respondent and the female members in the family to have illicit relations with the brother and the brother in-law of the respondent. She also alleged that the brother of the respondent-Puranmal also outraged her modesty.

The appellant in her deposition has endeavoured to show that she was subjected to cruelty by the respondent and his family members and her emphasis was on the alleged custom in
the family. According to the appellant, the huabands’s brother – Puranmal made attempt to outrage her modesty by gestures, by touching her private part and by forcibly kissing her. She also deposed that Puranmal, at one point of time, asked her to undress and allow him to have sexual intercourse with her. She further deposed that her sister-in-law Bhavna informed her about the alleged family custom

இந்த ஆபாச சட்ட நாவலை
முழுதாகப் படிக்க இங்கே சென்று டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் -->

http://bombayhighcourt.nic.in/data/judgements/2010/CFCA1278205.pdf

1997 ல் வந்துள்ள இந்த வழக்கிற்கு இன்னும் விடிவுகாலம் வரவில்லை. இந்தப் பெண் கணவரின் குடும்பத்தார் மீது அபாண்டமான பழியை சுமத்தியதின் காரணமாக இந்தக்கணவருக்கு விவாகரத்து வழக்கில் விவாகரத்துக்கொடுத்து இந்தப்பெண்ணிடம் இருந்து விடுதலை கொடுத்து பாம்பே உயர்நீதிமன்றம் கணவருக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறது. 1997 லிருந்து எத்தனை ஆண்டுகள் இந்தக் கணவர் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார் என்று கவனியுங்கள்.

இந்திய சட்டப்படி தவறான மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவது கணவருக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. வாழ்வோ சாவோ வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். அது தான் சட்டம். இந்தத்திருணங்களும் தவறான சட்டங்களும்தான் இந்தியாவில் திருமணம் செய்ய நினைக்கும் ஆண்களுக்கான தகனமேடை. தகனமேடைக்குச் சென்றபின் மீளமுடியுமா?

பொய்யான ஆபாச குற்றச்சாட்டுக் கூறிய பெண்ணிற்கு எந்தத் தண்டனையும் இந்திய சட்டங்களில் கிடையாது. ஆனால் ஜீவனாம்சம், பராமரிப்பு செலவு போன்ற பல சிறப்புச் சலுகைகள் உண்டு. வாழ்க இந்தியப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம்!

இதோ அந்த செய்தியைப் பாருங்கள்.


MUMBAI: Making wild and baseless allegations in court against your spouse and in-laws amount to cruelty, Bombay high court has ruled while upholding a trial court's order dissolving the marriage of a Mumbai couple in their 30s.

Following an application for divorce filed by Mazgaon resident Jitesh Agarwal, his wife Geeta had alleged that there was a bizarre custom in her in-laws' family where they shared each other's wives. Geeta claimed that she was persistently told to have illicit relations with her husband's brother and brother-in-law and there was even an attempt to outrage her modesty.


"The allegations levelled by Geeta against the husband and other members of the family at various places and at every stage are absolutely baseless, irresponsible, wanton and scandalous and they were made for the reasons best known to her," said a division bench of Justice D B Bhosale and Justice R Y Ganoo.


"The expression — treating the other party with cruelty (in the Hindu Marriage Act) — is wide enough to cover cruel treatment (even after the filing of the petition) by making wild and serious allegations which, according to the accused spouse, are false and scandalous. A (divorce) decree could be passed based on such allegations."


Geeta's lawyers claimed that as Jitesh had not amended his petition to include her allegations as cruel, a divorce could not be granted on that ground. The HC judges, however, did not agree. "If these allegations were true, neither the appellant nor her father would have kept quiet for such a long time," said the division bench even as it said the family court was right in granting divorce on the ground of cruelty.


The court added that Geeta's behaviour even before she lodged criminal complaints against her husband would amount to cruelty. "(Geeta's conduct) shows that she had made Jitesh and his family's lives miserable. The manner in which she used to lodge criminal complaints one after another against Jitesh undoubtedly would constitute mental cruelty," said the HC.இளைஞர்களே, இந்த தீர்ப்பை படித்த பிறகாவது நீங்கள் உங்கள் திருமணத்தைப் பற்றி ஒரு நல்ல முடிவெடுங்கள். நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் பெண் நல்லவராக இருந்தாலும் கூட அவர்களை சுற்றியிருக்கும் பெண்கள் பாதுகாப்புச்சட்டங்களும் அதனை செயல்படுத்துபவர்களும் நல்லவர்கள் கிடையாது. அதனால் எப்போது எந்தக் குடும்பத்தில் குழப்பம் வரும் என்று காத்திருந்து அந்தக் குடும்பங்களை அழிக்கத் தயாராக இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்தான்.

இளைஞர்களே, நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனைகள் மற்றும் அவமானங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குச் செல்ல தயாராகுங்கள். இல்லையென்றால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களது வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.

இளைஞர்களே, தான் நினைத்ததை அடையவேண்டும் என்பதற்காக நாகூசாமல் எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லும் கூட்டத்தில் உங்களின் ஒளிமயமான எதிர்காலத்தை தொலைத்து விடாதீர்கள். நேர்மையான சட்டங்கள் இல்லாத நாட்டில் திருமணம் செய்வதும் தகனமேடைக்குச் செல்வதும் ஒன்றுதான். விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார்.
Sunday, March 14, 2010

சிவப்புக்கம்பளமும் செருப்படியும்

இந்தியாவில் திருமணம் செய்வது மூலம் தங்கள் சொந்த நாட்டிலேயே எவ்வளவு துன்பங்கள் காத்திருக்கின்றன என்ற போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் பல இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து தங்களின் குடிமக்களை இந்திய திருமண அபாயத்திலிருந்து பாதுகாப்பதை தலையாய கடமையாக செய்கின்றன.

உதாரணத்திற்கு கனடா நாட்டு அரசாங்கம் தங்களுடைய இணைய தளத்தில் இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல நினைக்கும் அல்லது திருமணம் செய்யவிரும்பும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பல அரிய உண்மைகள் சொல்லப்பட்டிருக்கிறது இந்த இணைய தளத்தில். அதில் இளைஞர்களுக்குத்தேவையான பகுதியை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

=============================================================
Foreign Affairs and International Trade Canada

Travel Report
India


8. LAWS AND CUSTOMS

Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. Individuals facing charges may be forced to remain in India until their cases have been settled or pay off their spouses in exchange for the dismissal of charges. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.

============================================================

இந்த நாடு மட்டுமல்ல நம்ம நாட்டுத் தலைவர்களும், நீதிபதிகளும் சுற்றுப்பயணம் என்ற பெயரில் பலமுறை சென்று சிவப்புக் கம்பளத்தில் மரியாதை பெற்றுக்கொள்ளும் நாடான அமெரிக்கா ஒருபடி மேலே சென்று இந்தியாவில் பொய் கேசுகளுக்காக போலிஸ் யாரைவேண்டுமானாலும் கைதுசெய்வார்கள் என்று அருமை பெருமைகளைச் சொல்லி இந்தியா செல்ல விரும்பும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறது.

அந்த இணைய தளத்தில் உள்ள அந்த அறிவிப்பின் ஒரு பகுதியை இங்கே காணுங்கள்.

============================================================
U.S. Department of State
International Travel Information

India
Country Specific Information

CRIMINAL PENALTIES:

Furthermore, since the police may arrest anyone who is accused of committing a crime (even if the allegation is frivolous in nature) , the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, estranged spouses, or other persons with whom the U.S. citizen has a disagreement, occasionally resulting in the jailing of U.S. citizens pending resolution of their disputes. At the very least, such circumstances can delay the U.S. citizen's timely departure from India, and may result in an unintended long-term stay in the country. Corruption in India, especially at local levels, is a concern, as evidenced by Transparency International’s Corruption Perception Index of 2008, ranking India in 85th place among the world’s 180 countries.
===============================================================


இதற்குப் பெயர் தான் சிவப்புக்கம்பளத்தில் உட்காரவைத்து செருப்படி கொடுப்பது. தேசப்பற்றுமிக்கத் தலைவர்கள் இதுவரை யாரும் இதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது பொய்யான தகவலாக இருந்தால் இதற்கு மறுப்பு தெரிவித்து இந்த செய்திகளை அந்த அரசாங்கத்தின் இணைய தளங்களிலிருந்து அகற்றியிருக்கவேண்டும். அல்லது உண்மையான தகவலாக இருந்தால் இந்த அவமானத்தைப் போக்க நாட்டில் சீர்திருத்தங்களை செய்திருக்கவேண்டும். இந்த இரண்டும் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.

இந்த வெளிநாட்டு அரசாங்க இணைய தளங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகளால் ஒவ்வொரு இந்தியனுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிவப்புக்கம்பள பெருமை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும்தான். ஆனால் இந்த இணைய தளங்களில் சொல்லப்பட்டுள்ள அவமானம் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் போய் சேரும் விஷயம். யாராவது இதைப்பற்றி கவலைப்பட்டார்களா?

அதனால் இளைஞர்களே, தவறான சட்டப்பயன்பாடுகள் மூலம் நீங்கள் அடையும் துன்பங்களிலிருந்து உங்களைக்காப்பாற்றவேண்டும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். இனியாவது நீங்கள் விழித்துகொண்டால் தான் பெரிய ஆபத்திலிருந்து நீங்கள் தப்ப முடியும்.

“நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டிற்கு நீ என்ன செய்தாய்” என்று எண்ணவேண்டும் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தக்காலத்தில் இளைஞர்கள் எப்படி சிந்திக்கவேண்டுமென்றால் “நாட்டிற்கு நீ எதுவும் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, பெண்கள் ஆதரவுச்சட்டங்கள் என்ற பெயரில் நாடு உனக்கு செய்யப்போகும் தீமைகளிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள். அதுவே நீ நாட்டிற்கும் உனது வீட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும். ” அதற்கு ஒரே வழி உங்கள் திருமணத்தைப் பற்றி நீங்கள் எடுக்கப்போகும் முடிவுதான்.
இளைஞர்களே சிந்தியுங்கள். நீங்கள் எந்தவகையான நன்மையை நாட்டிற்கு செய்யப்போகிறீர்கள்.

தவறான வரதட்சணை தடுப்புச் சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் அப்பாவிகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மையாகிவிட்டது. உள்நாட்டில் வாழும் உங்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லையென்றால் பிறகு உங்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

Saturday, March 6, 2010

வரதட்சணை என்றால் என்ன?இளைஞர்களே,

பல இந்திய மனைவிகள் வரதட்சணை தடுப்புச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும், பணம் பிடுங்குவதற்காகவும் பயன்படுத்திவருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.


சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பதற்கு தங்களுக்கேற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழிசெயலுக்குப் பல சட்டம்படித்த மாமேதைகளும், காவல் நண்பர்களும் உதவிவேறு செய்து வருகிறார்கள்.

இந்தக் கூட்டத்தினர் வைத்திருக்கும் அகராதியில் "வரதட்சணைக் கொடுமை" என்றால் கணவனால் செய்யப்படும் பின்வரும் செயல்கள் அனைத்தும் வரதட்சணைக் கொடுமை என்ற சட்டப்பிரிவின் கீழ் வருகிறது.

  • வயதான மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்ட மறுத்தல்
  • தனிக்குடித்தனம் வர மறுத்தல்
  • ஆடம்பரச் செலவு செய்ய மறுத்தல்
  • மனைவியின் குடும்பத்திற்கு பெருந்தொகையை கொடுக்க மறுத்தல்
  • கணவனின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்தல்
  • மனைவி கள்ளக்காதலனுடன் சல்லாபம் செய்வதை கையும் ‘கலவுமாக’ பார்த்துவிடுதல்
  • கள்ளக்காதலை தடுக்க முயலுதல்
  • குழந்தைகளை பராமரிக்கும்படி மனைவிக்கு அறிவுரை கூறுதல்
  • மனைவி கணவனிடம் தன்னுடைய குடும்பத்திற்கு பணம் வேண்டும் என்று கணவ்னை மிரட்டலாம். ஆனால் அதுவே கணவன் தன் ஆபத்துக்கால உதவிக்கு மனைவியிடம் பணம் கேட்டால் அது வரதட்சணை.

இது போன்ற "வரதட்சணைகொடுமைகளை" செய்யும் ஆணாக நீங்கள் இருந்தால் தயவு செய்து இந்தியாவில் திருமணம் செய்து "அப்பாவிப் பெண்களுக்கு" வரதட்சணைக் கொடுமை செய்யாதீர்கள். வேறுநாடுகளில் நீங்கள் திருமணம் செய்துகொண்டு இந்தியப் பெண்களை வரதட்சணைக்கொடுமை இல்லாமல் நிம்மதியாக வாழவிடுங்கள்.

இது போன்று தனி அரசாங்கம் வைத்துக்கொண்டு தங்களுக்கென்று ஒரு வரதட்சணை சட்டத்தை வரையறுத்துக்கொண்டு அப்பாவிகளை வதைக்கும் பிணந்திண்ணிக் கழுகுகள் போல் வாழும் பல பெண்களுக்காக சமீபத்தில் தில்லி உயர்நீதிமன்றம் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கீழுள்ள செய்தியில் படித்துப்பாருங்கள்.

தினமலர் மார்ச் 06, 2010

புதுடில்லி :"திருமணத்துடன் தொடர்பில்லாத வகையில், ஒரு பெண்ணின் கணவர் வீட்டார் விடுக்கும் கோரிக்கைகளை வரதட்சணையாக கருத முடியாது' என, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கணவன் வீட்டை சேர்ந்த மூன்று நபர்களை, குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த, டில்லி ஐகோர்ட் நீதிபதி வி.கே.ஜெயின் அளித்த தீர்ப்பு:கணவன், கடை வாங்குவதற்காக, மனைவியின் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தியது, திருமணத்தின் போதோ, அதற்கு முன்னரோ அல்லது பின்போ கொடுக்கப்பட்ட வாக்குறுதி அல்ல. இது எதிர்பாராத ஒன்று. இதை கணவன் வீட்டாரே சிந்தித்திருக்க மாட்டார்கள். இது திருமணத்தின் போது, வழக்கமாக கொடுப்பதோ அல்லது எதிர்பார்க்கும் ஒன்றோ இல்லை. மேலும், இது திருமணத்துடன் தொடர் புடையது என்று கூற முடியாது. எனவே, இது வரதட்சணை கொடுமையுடன் தொடர்புடையது அல்ல.இவ்வாறு வி.கே.ஜெயின் கூறினார்.

============================================================
There is growing tendency these days to take revenge from the husband, by implicating all his family members, by making allegations of general nature against all of them, though the husband alone may be responsible for the cruelty inflicted to the woman. The Courts, therefore, need to carefully analyze the evidence and need to separate the chaff from the grain, so as to arrive at a just and fair conclusion.

- Justice K.V. Jain (2 March 2010), Delhi High Court

இதுபோன்று பல நீதிபதிகள் பல நீதிமன்றங்களில் பல முறை சொல்லிவிட்டார்கள். ஆனால் செவிகொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை இந்த நாட்டில். அதனால் இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்த சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக தப்பித்துக்கொள்ளவேண்டும். இந்தியத்திருமணம் என்ற சிக்கலில் மாட்டிக்கொண்டால் கடைசியில் உங்கள் வாழ்க்கை தகனமேடையில்தான்!
============================================================


நீதிமன்றத்தின் முழு தீர்ப்பினை கீழுள்ள இணைப்பிலிருந்து PDF வடிவில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.Thursday, March 4, 2010

காக்கி தேவதைகள்


படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்Indian Express

CHENNAI: Francis (53) of Velachery, a former bank employee, has had an unhappy married life. Matters came to a head when wife Cecilia Celene approached the allwomen police station (AWPS) at Guindy. Instead of giving him and his bedridden mother and unmarried siblings a fair hearing, the women cops allegedly harassed him.

“Ever since our marriage in 1999, Cecilia wanted to send my sick mother and my siblings out of the house and take total control over my savings. I own a house, which I built from my hard earned money. She wanted control over the property,” claims Francis. In 2005, his wife left him and their two little sons and filed a dowry harassment complaint at the AWPS.

Francis, his siblings and sick mother were called for inquiry. “They were verbally abused by the women cops. But the worst was yet to come. My unmarried sister was taken to the police station for inquiry around 10 am kept there till 11 pm,” claims Francis.

Does anybody care about human rights? Cecilia filed three cases against Francis, the last one in 2009. “What is annoying is that the police don’t seem to be interested in listening to my side of the story. They ask me to keep my mouth shut and threaten to arrest me. We were subjected to a volley of verbal abuse,” says Francis.

“The women cops went around the neighbhourhood making not-so-discreet enquiries about my sister’s character. Isn’t that character assassination? My sister takes care of my mother and they live on the first floor of the house.

Since the inquiry, we feel ashamed to even step out of our house,” he says.
“What is appalling is that even experienced cops aren’t giving us a fair hearing.
They just go by Cecilia’s version. We never sought dowry. In fact, I spent a lot of money on our wedding.” If Francis’s version is right, he should perhaps approach the Association For Protection of Men, which is a pressure group of harassed husbands.


அனைத்து பொய் வரதட்சணைப் புகார்களையும் கண்மூடித்தனமாக பதிவு செய்து அப்பாவிக் கணவர் குடும்பத்தாரை அவமானப்படுத்தி, மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் இடங்கள்தான் பெண் காவல் நிலையமும் அங்குள்ள அலுவலர்களும். அப்பாவிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் இனி கீழுள்ள செய்தி போல பல செய்திகள் மேலும் வரும். இயற்கை இந்த வகையில்தான் அநீதிகளுக்குத் தண்டனை தரும்.


பெண் எஸ்.ஐ.,யுடன் கள்ளத்தொடர்பு :அ.தி.மு.க., பிரமுகரை பிடிக்க தனிப்படை
தினமலர் மார்ச் 04,2010

திண்டுக்கல்:அ.தி.மு.க, பிரமுகருடன், கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் எஸ்.ஐ.,மீது விசாரணை நடத்த டி.ஐ.ஜி., சைலேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(35). இவர் அ.தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி தீபா.

வெள்ளைச்சாமிக்கும்,இடையகோட்டையில் பெண் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய ராணிக்கும், கள்ளத்தொடர்பு இருப்பதாகவும்,ராணி தூண்டுதலின் பேரில் கணவர் வெள்ளைச்சாமி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, தீபா மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் எஸ்.ஐ., ராணி, வெள்ளைச் சாமி உட்பட 5 பேர் மீது வேடசந்தூர் இன்ஸ்பெக் டர் அருள்அமரன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.இது குறித்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் கூறியதாவது:
பெண் எஸ்.ஐ.,ராணியிடம் விசாரணை நடத்தப்படும். அவர் மீது துறை வாரியான நடவடிக்கையா, இல்லை வேறு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.அ.தி.மு.க, பிரமுகரை பிடிக்க இன்ஸ் பெக்டர் அருள்அமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.