பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, March 6, 2010

வரதட்சணை என்றால் என்ன?



இளைஞர்களே,

பல இந்திய மனைவிகள் வரதட்சணை தடுப்புச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும், பணம் பிடுங்குவதற்காகவும் பயன்படுத்திவருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.


சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பதற்கு தங்களுக்கேற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழிசெயலுக்குப் பல சட்டம்படித்த மாமேதைகளும், காவல் நண்பர்களும் உதவிவேறு செய்து வருகிறார்கள்.

இந்தக் கூட்டத்தினர் வைத்திருக்கும் அகராதியில் "வரதட்சணைக் கொடுமை" என்றால் கணவனால் செய்யப்படும் பின்வரும் செயல்கள் அனைத்தும் வரதட்சணைக் கொடுமை என்ற சட்டப்பிரிவின் கீழ் வருகிறது.

  • வயதான மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்ட மறுத்தல்
  • தனிக்குடித்தனம் வர மறுத்தல்
  • ஆடம்பரச் செலவு செய்ய மறுத்தல்
  • மனைவியின் குடும்பத்திற்கு பெருந்தொகையை கொடுக்க மறுத்தல்
  • கணவனின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்தல்
  • மனைவி கள்ளக்காதலனுடன் சல்லாபம் செய்வதை கையும் ‘கலவுமாக’ பார்த்துவிடுதல்
  • கள்ளக்காதலை தடுக்க முயலுதல்
  • குழந்தைகளை பராமரிக்கும்படி மனைவிக்கு அறிவுரை கூறுதல்
  • மனைவி கணவனிடம் தன்னுடைய குடும்பத்திற்கு பணம் வேண்டும் என்று கணவ்னை மிரட்டலாம். ஆனால் அதுவே கணவன் தன் ஆபத்துக்கால உதவிக்கு மனைவியிடம் பணம் கேட்டால் அது வரதட்சணை.

இது போன்ற "வரதட்சணைகொடுமைகளை" செய்யும் ஆணாக நீங்கள் இருந்தால் தயவு செய்து இந்தியாவில் திருமணம் செய்து "அப்பாவிப் பெண்களுக்கு" வரதட்சணைக் கொடுமை செய்யாதீர்கள். வேறுநாடுகளில் நீங்கள் திருமணம் செய்துகொண்டு இந்தியப் பெண்களை வரதட்சணைக்கொடுமை இல்லாமல் நிம்மதியாக வாழவிடுங்கள்.

இது போன்று தனி அரசாங்கம் வைத்துக்கொண்டு தங்களுக்கென்று ஒரு வரதட்சணை சட்டத்தை வரையறுத்துக்கொண்டு அப்பாவிகளை வதைக்கும் பிணந்திண்ணிக் கழுகுகள் போல் வாழும் பல பெண்களுக்காக சமீபத்தில் தில்லி உயர்நீதிமன்றம் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கீழுள்ள செய்தியில் படித்துப்பாருங்கள்.

தினமலர் மார்ச் 06, 2010

புதுடில்லி :"திருமணத்துடன் தொடர்பில்லாத வகையில், ஒரு பெண்ணின் கணவர் வீட்டார் விடுக்கும் கோரிக்கைகளை வரதட்சணையாக கருத முடியாது' என, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கணவன் வீட்டை சேர்ந்த மூன்று நபர்களை, குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த, டில்லி ஐகோர்ட் நீதிபதி வி.கே.ஜெயின் அளித்த தீர்ப்பு:கணவன், கடை வாங்குவதற்காக, மனைவியின் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தியது, திருமணத்தின் போதோ, அதற்கு முன்னரோ அல்லது பின்போ கொடுக்கப்பட்ட வாக்குறுதி அல்ல. இது எதிர்பாராத ஒன்று. இதை கணவன் வீட்டாரே சிந்தித்திருக்க மாட்டார்கள். இது திருமணத்தின் போது, வழக்கமாக கொடுப்பதோ அல்லது எதிர்பார்க்கும் ஒன்றோ இல்லை. மேலும், இது திருமணத்துடன் தொடர் புடையது என்று கூற முடியாது. எனவே, இது வரதட்சணை கொடுமையுடன் தொடர்புடையது அல்ல.இவ்வாறு வி.கே.ஜெயின் கூறினார்.

============================================================
There is growing tendency these days to take revenge from the husband, by implicating all his family members, by making allegations of general nature against all of them, though the husband alone may be responsible for the cruelty inflicted to the woman. The Courts, therefore, need to carefully analyze the evidence and need to separate the chaff from the grain, so as to arrive at a just and fair conclusion.

- Justice K.V. Jain (2 March 2010), Delhi High Court

இதுபோன்று பல நீதிபதிகள் பல நீதிமன்றங்களில் பல முறை சொல்லிவிட்டார்கள். ஆனால் செவிகொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை இந்த நாட்டில். அதனால் இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்த சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக தப்பித்துக்கொள்ளவேண்டும். இந்தியத்திருமணம் என்ற சிக்கலில் மாட்டிக்கொண்டால் கடைசியில் உங்கள் வாழ்க்கை தகனமேடையில்தான்!
============================================================


நீதிமன்றத்தின் முழு தீர்ப்பினை கீழுள்ள இணைப்பிலிருந்து PDF வடிவில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.



2 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தகனமேடை said...

உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சசிகுமார்.
உங்களின் நண்பர்களுக்கும் இந்த விழிப்புணர்வு செய்திகளை அனுப்பி அவர்களின் குடும்ப நல்வாழ்விற்கு உதவுங்கள்.