சில மனைவிகள் இப்போதெல்லாம் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை வைத்து போலிஸ் S. I. கணவனை கொலை செய்யத் துணிந்த மனைவியைப் பற்றி செய்தி வந்திருந்தது. இப்போது அதுபோலவே மற்றொரு செய்தி. பெண்கள் எப்படியெல்லாம் முன்னேறிவிட்டார்கள்!
கணவரை கார் ஏற்றி கொலை செய்த மனைவி கூலிப்படையினருடன் கைதுதினமலர் மார்ச் 29,2010
சாணார்பட்டி:கூலிப்படை உதவியுடன் கணவனை, கார் ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், அதிகாரிப்பட்டி மெயின் ரோட்டில் மார்ச் 23ல் அடையாளம் தெரியாத ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிலுவத்தூர் வி.ஏ.ஓ., தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். இறந்தவர் தாராபுரம் விஜயகுமார் என தெரிய வந்தது.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறியதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இறந்த விஜயகுமார், தாராபுரம் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும், மனைவி ஜோஸ் மேரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. விஜயகுமார் சில ஆண்டுகளாக பழநி அருகே கீரனூரில் வசித்து வந்துள்ளார். இங்கு எலக்ட்ரிக் கடையும் வைத்துள்ளார்.
இவருக்கு தாராபுரம், உடுமலைப்பேட்டையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.தாராபுரத்தில் வசித்து வந்த மனைவி ஜோஸ் மேரி(43), பிரிந்து வாழும் கணவர் விஜயகுமாரிடம் ஜீவனாம்சம் கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த விஜயகுமார் கடந்த வாரம் தாராபுரம் சென்று, ஜோஸ் மேரி வசிக்கும் வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்துள்ளார். தாராபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் இவர்களை சமாதானம் செய்துள்ளார்.
பஞ்சாயத்து பேச வந்த ஹரிதாசிடமே, தனது கணவர் விஜயகுமாரை கொலை செய்தால் பணம் தருவதாக ஜோஸ் மேரி பேரம் பேசியுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்ட ஹரிதாஸ், தனது நண்பரான திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த நடராஜன் உதவியுடன், விஜயகுமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.விஜயகுமாரிடம், திண்டுக்கலில் வைத்து பேசி முடித்துக் கொள்ளலாம் என கூறிய ஹரிதாஸ், அவரையும், ஜோஸ் மேரியையும் தனது காரில் அழைத்து வந்துள்ளார்.
திண்டுக்கலில் சிறிது நேரம் பேசிய பின், சாணார்பட்டியில் பேசலாம் என நடராஜன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில், அதிகாரிப்பட்டியில் விஜயகுமார் சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளார். அங்கேயே அவர் மீது காரை ஏற்றி கொலை செய்து விட்டனர். சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஜோஸ் மேரி, ஹரிதாஸ், நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
==========================
இந்த விஷயத்தில் நகரத்துப்பெண்கள் கொஞ்சம் நல்லவர்கள்! பொய் வரதட்சணை கேசு போட்டு கணவரையும் அவரது குடும்பத்தையும் நடமாடும் பிணமாக்கிவிடுவார்கள். கிராமத்து அப்பாவிப் பெண்கள் இந்த சட்டநடைமுறையெல்லாம் தெரியாமல் கூலிப்படை வைத்து ஆளையே தீர்த்துவிடுகிறார்கள்.
இளைஞர்களே, இந்தியாவில் திருமணம் செய்வதாக இருந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். திருமணத்திற்கு முன்பு ஜாமின் இன்ஷுரன்ஸ், லைஃப் இன்ஷுரன்ஸ் போன்றவற்றை தயார் செய்துவிட்டு பிறகு திருமணம் என்ற தகனமேடையில் இறங்குங்கள்.
ஜாமின் இன்ஷுரன்ஸ் - பொய் வரதட்சணை கேசில் சிக்கி கைதாகி ஜாமின் வேண்டி நீதிமன்றத்திற்கு வரும்போது ஜாமின் தொகை கட்டுவதற்கு ஆளில்லாமல் கஷ்டப்பட்டு தேடி அலையாமல் உங்களது இன்ஷுரன்ஸ் உங்களுக்குக் கைகொடுக்கும்.
லைஃப் இன்ஷுரன்ஸ் - மனைவியின் கள்ளக்காதலால் நீங்கள் கொலைசெய்யப்பட்டாலோ அல்லது மனைவியின் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டாலோ உங்களது இறுதிச்சடங்கினை நடத்துவதற்கு உதவும்.
No comments:
Post a Comment