பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, March 14, 2010

சிவப்புக்கம்பளமும் செருப்படியும்

இந்தியாவில் திருமணம் செய்வது மூலம் தங்கள் சொந்த நாட்டிலேயே எவ்வளவு துன்பங்கள் காத்திருக்கின்றன என்ற போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் பல இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து தங்களின் குடிமக்களை இந்திய திருமண அபாயத்திலிருந்து பாதுகாப்பதை தலையாய கடமையாக செய்கின்றன.

உதாரணத்திற்கு கனடா நாட்டு அரசாங்கம் தங்களுடைய இணைய தளத்தில் இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல நினைக்கும் அல்லது திருமணம் செய்யவிரும்பும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பல அரிய உண்மைகள் சொல்லப்பட்டிருக்கிறது இந்த இணைய தளத்தில். அதில் இளைஞர்களுக்குத்தேவையான பகுதியை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

=============================================================
Foreign Affairs and International Trade Canada

Travel Report
India


8. LAWS AND CUSTOMS

Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. Individuals facing charges may be forced to remain in India until their cases have been settled or pay off their spouses in exchange for the dismissal of charges. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.

============================================================

இந்த நாடு மட்டுமல்ல நம்ம நாட்டுத் தலைவர்களும், நீதிபதிகளும் சுற்றுப்பயணம் என்ற பெயரில் பலமுறை சென்று சிவப்புக் கம்பளத்தில் மரியாதை பெற்றுக்கொள்ளும் நாடான அமெரிக்கா ஒருபடி மேலே சென்று இந்தியாவில் பொய் கேசுகளுக்காக போலிஸ் யாரைவேண்டுமானாலும் கைதுசெய்வார்கள் என்று அருமை பெருமைகளைச் சொல்லி இந்தியா செல்ல விரும்பும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறது.

அந்த இணைய தளத்தில் உள்ள அந்த அறிவிப்பின் ஒரு பகுதியை இங்கே காணுங்கள்.

============================================================
U.S. Department of State
International Travel Information

India
Country Specific Information

CRIMINAL PENALTIES:

Furthermore, since the police may arrest anyone who is accused of committing a crime (even if the allegation is frivolous in nature) , the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, estranged spouses, or other persons with whom the U.S. citizen has a disagreement, occasionally resulting in the jailing of U.S. citizens pending resolution of their disputes. At the very least, such circumstances can delay the U.S. citizen's timely departure from India, and may result in an unintended long-term stay in the country. Corruption in India, especially at local levels, is a concern, as evidenced by Transparency International’s Corruption Perception Index of 2008, ranking India in 85th place among the world’s 180 countries.
===============================================================


இதற்குப் பெயர் தான் சிவப்புக்கம்பளத்தில் உட்காரவைத்து செருப்படி கொடுப்பது. தேசப்பற்றுமிக்கத் தலைவர்கள் இதுவரை யாரும் இதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது பொய்யான தகவலாக இருந்தால் இதற்கு மறுப்பு தெரிவித்து இந்த செய்திகளை அந்த அரசாங்கத்தின் இணைய தளங்களிலிருந்து அகற்றியிருக்கவேண்டும். அல்லது உண்மையான தகவலாக இருந்தால் இந்த அவமானத்தைப் போக்க நாட்டில் சீர்திருத்தங்களை செய்திருக்கவேண்டும். இந்த இரண்டும் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.

இந்த வெளிநாட்டு அரசாங்க இணைய தளங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகளால் ஒவ்வொரு இந்தியனுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிவப்புக்கம்பள பெருமை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும்தான். ஆனால் இந்த இணைய தளங்களில் சொல்லப்பட்டுள்ள அவமானம் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் போய் சேரும் விஷயம். யாராவது இதைப்பற்றி கவலைப்பட்டார்களா?

அதனால் இளைஞர்களே, தவறான சட்டப்பயன்பாடுகள் மூலம் நீங்கள் அடையும் துன்பங்களிலிருந்து உங்களைக்காப்பாற்றவேண்டும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். இனியாவது நீங்கள் விழித்துகொண்டால் தான் பெரிய ஆபத்திலிருந்து நீங்கள் தப்ப முடியும்.

“நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டிற்கு நீ என்ன செய்தாய்” என்று எண்ணவேண்டும் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தக்காலத்தில் இளைஞர்கள் எப்படி சிந்திக்கவேண்டுமென்றால் “நாட்டிற்கு நீ எதுவும் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, பெண்கள் ஆதரவுச்சட்டங்கள் என்ற பெயரில் நாடு உனக்கு செய்யப்போகும் தீமைகளிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள். அதுவே நீ நாட்டிற்கும் உனது வீட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும். ” அதற்கு ஒரே வழி உங்கள் திருமணத்தைப் பற்றி நீங்கள் எடுக்கப்போகும் முடிவுதான்.
இளைஞர்களே சிந்தியுங்கள். நீங்கள் எந்தவகையான நன்மையை நாட்டிற்கு செய்யப்போகிறீர்கள்.

தவறான வரதட்சணை தடுப்புச் சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் அப்பாவிகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மையாகிவிட்டது. உள்நாட்டில் வாழும் உங்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லையென்றால் பிறகு உங்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.





3 comments:

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

498ஏ அப்பாவி said...

காரித்துப்பாதக்கு​றைத்தான்... இதுல ஒரு நாட்டுக்கும் உற​வை வளர்கி​றேன் என்று நி​னைத்த​​பொழுது மக்களின் வரிப்பணத்தில் ஒசி பி​ளைட்டில் கிளம்பிவிட ​வேண்டியது...

--ஒரு அரசியல்வாதி - நீங்க என்ன ​சொன்னாலும் அ​தை​யெல்லாம் காதில் வாங்கிக்​கொள்ளமாட்​டொம் ஏன்எ ன்றால் கட்சியல் ​​சேரும்​பொழுது​தெ மான உணர்​வை​யெல்லாம் எப்படி மறப்பது என்று ​செய்மு​றை​யோடு பயிற்சி ​கொடுப்பார்கள்

498ஏ அப்பாவி said...

எவ்வள​வோ அப்பாவி கூட்டம் பாதிக்கப்பட்டும், உயர்நீதிமன்ற​மே ​பொய் வரதட்ச​ணை வழக்கு ​பொடும் கூட்டதி​னை சட்டப்பூர்வ தீவிரவாதிகள் என்று அறிவித்தும் இன்னும் ஒரு தீர்வும் ஏற்படாதது தான் ​கொடு​மை