பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, September 21, 2011

காதலிக்கும் இளைஞர்களுக்கான செய்தி!

செய்தியைப் படித்தவுடன் அதனைத் தொடர்ந்து வரும் வீடியோவையும் பாருங்கள்..பிறகு சிந்தியுங்கள். எங்கே தவறு நடக்கிறது என்று புரியும்!

பெண்னை ஏமாற்றிய டாக்டர் கைது

செப்டம்பர் 21,2011, தினமலர்

சென்னை: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண்ணை ஏமாற்றிய டாக்டர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை துறைமுக அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவர் தரணீஸ்வரன், 27. இவர், துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிக டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கொருக்குபேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த, தன் அண்ணியின் தங்கை விசாலாட்சியை, 25, மூன்று வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த அவர், விசாலாட்சி வரவழைத்து, திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின், திருமணம் செய்து கொள்ள விசாலாட்சி கேட்டும், தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அவர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து, தரணீஸ்வரனை கைது செய்து, ஜார்ஜ் டவுன் கோர்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.ஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் சிறைத் தண்டனை. ஆனால் பெண் ஒரு ஆணை காதலித்து ஏமாற்றினால் அப்போதும் ஆணுக்குத்தான் மரணதண்டனை. மொத்தத்தில் ஏமாற்றினாலும், ஏமாற்றப்பட்டாலும் ஆணுக்குத்தான் தண்டனை!Saturday, September 3, 2011

தப்பித்துக்கொள்ளும் தமிழக இளைஞர்கள்

இந்த வாரத்தில் மட்டும் தமிழக இளைஞர்களின் திருமணம் பற்றி செய்தி வந்தவாறு இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இதுபோலவே அனைத்து இளைஞர்களும் வேறு நாடுகளில் திருமணம் செய்து இந்திய பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி சீரழியாமல் வளமாக வாழவேண்டும்.

ஜப்பானிய மங்கையின் கனவை நனவாக்கிய விருதுநகர் வாலிபர்

பிலிப்பைன்ஸ் மணமகளை கரம் பிடித்தார் தமிழக மணமகன்

பிரான்ஸ் பெண்ணை மணந்த புதுச்சேரி வாலிபர்: இந்து முறைப்படி கோவிலில் திருமணம்
செப்டம்பர் 03,2011 தினமலர்


புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை இந்து முறைப்படி, நேற்று திருமணம் செய்து கொண்டார்.புதுச்சேரி கொசக்கடை வீதியைச் சேர்ந்த பையா கெல்ஸ்வானின் மகன் பையா அந்துவான்,24. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர், மேல் படிப்புக்காக, 2006ல் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார்.அங்கு, மாணவர் விடுதியில் தங்கி, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அந்துவானை பார்த்த அதே நாட்டைச் சேர்ந்த எல்சா என்ற ராதா, 22, என்ற பெண் காதலித்து வந்ததோடு, இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். இந்தியா திரும்பிய இவர்கள், உறவினர்கள் சம்மதத்துடன் நேற்று, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அந்துவான் கூறியதாவது: பிரான்சில் படிக்கும் போது, குழுவாகச் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடினோம். அவ்விழாவில் கலந்து கொள்ள வந்த எல்சா, என்னை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளாக என்னைத் தேடிப் பார்த்துள்ளார்.அவரது பார்வைக்கு கிடைக்காத நான், சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த எல்சா மகிழ்ச்சியானார். என்னை நேசிப்பதாக மெயில் மூலமாக தெரிவித்தார். நானும் அவர் மீது ஆசைப்பட்டேன். பெற்றோரின் ஒப்புதலுடன், இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.இவ்வாறு, அந்துவான் கூறினார்.There was an error in this gadget