விருதுநகர் வாலிபருடன் ஜப்பான் பெண் திருமணம் :
இந்து முறைப்படி நடந்தது
செப்டம்பர் 02,2011 தினமலர்
சென்னை : விருதுநகர் பகுதியைச் சேர்ந்த வீர சுரேஷ்குமார் என்பவரும், ஜப்பானைச் சேர்ந்த யுகிகோ தொகுரா என்ற பெண்ணும், சென்னையில் நேற்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்து முறைப்படி திருமணம் நடந்தது. விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர சுரேஷ்குமார், 34; ஜப்பானில் உள்ள பானாசோனிக் எலக்ட்ரிக் ஒர்க்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், 2004ம் ஆண்டு ஜப்பானில் ஒசாகா மாநிலத்தில் உள்ள கோபை பல்கலையில் சட்ட மேற்படிப்பு படிக்கச் சென்றார். அப்போது, இவருடன் படித்த ஜப்பானைச் சேர்ந்த யுகிகோ தொகுரா என்ற பெண்ணுக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவீட்டார் சம்மதத்துடன், சென்னையில் நேற்று காலை இவர்களின் திருமணம் நடந்தது.
இத்திருமணம் குறித்து வீர சுரேஷ்குமார் கூறும் போது,""ஜப்பானில் கோபை பல்கலையில் படித்த போது எனக்கும் யுகிகோ தொகுராவுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்திய கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கம் அவருக்கு பிடித்திருப்பதாக சொன்னார். எனக்கு அங்கு பானாசோனிக் எலக்ட்ரிக் ஒர்க்ஸ் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. எங்கள் நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இருவீட்டாருக்கும் தெரிவித்தோம். முதலில் மவுனம் காத்த எங்கள் பெற்றோர், எங்கள் நியாயமான ஆசையை புரிந்து கொண்டு, திருமணத்திற்கு சம்மதித்தனர். இருவீட்டாரின் பூரண சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.
மணமகள் யுகிகோ தொகுரா கூறும் போது, "இந்திய பாரம்பரியம், கலை, கலாசாரம் எனக்கு பிடித்திருந்தது. இந்தியாவிற்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என நினைத்தேன். ஆனால், தமிழகத்தின் மருமகளாகி விட்டேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.
மணமகளின் தந்தை எய்ஷுதொகுராவிடம் இந்தியா குறித்து கேட்டதற்கு, "இந்தியாவை எனக்கு பிடிக்கும். என் மகள் தமிழகத்தின் மருமகள் ஆகியிருக்கிறாள். அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய, அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்,'' என்றார்.
திருமண விழாவுக்கு வந்தவர்களை மணமகனின் பெற்றோர் வீரப்பன், சுசிலா தம்பதிகளும், மணமகளின் பெற்றோர் எய்ஷுதொகுரா, ரெய்கோ தொகுரா தம்பதிகளும் வரவேற்றனர்.
============
இந்திய கலாச்சாரம் பிடித்து தமிழகத்திற்கே மருமகளாகிவிட்ட ஜப்பானிய மங்கை எவ்வளவு பூரிப்புடன் இருக்கிறார்.
நம் நாட்டிலிருந்து சிலர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிற்குச் சென்று அங்கு தாங்கள் நினைத்தபடி கணவன் நடக்கவில்லை என்றவுடன் இந்தியாவிற்கு ஓடிவந்து கணவன் வெளிநாட்டில் என்னை அறையில் பூட்டிவைத்தான், தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்று தடுத்தான், தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான், சாப்பாடு போடாமல் கொடுமை செய்தான், “பீரால்” (Beer) குளிப்பாட்டினான், சிகரெட்டால் சுட்டான், வயிற்றில் எட்டி உதைத்தான் என்று பல கதைகள் சொல்லி எல்லாவற்றிற்கும் காரணம் வரதட்சணை என்று சொல்லி பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே சிறைக்கு அனுப்பி குடும்ப மானத்தை வாங்கி விடுகிறார்கள். இதுபோன்ற பெண்களுக்கு நடுவே இந்த ஜப்பானிய மங்கை மாணிக்கமாகத் திகழ்கிறார்.
கணவனைப் பழிவாங்க இந்தியாவிற்கு படையெடுத்து வரும் NRI மருமகள்கள்

No comments:
Post a Comment