தர்ம சாத்திரம்
ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
தர்ம சாத்திரத்தில் எவையெல்லாம் பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் இன்று இந்தியக் குடும்பங்களில் ஊரறிய காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வரதட்சணை வழக்குப்போடும் மனைவியரால் பிரகடனப்படுத்தப்படுகிறது. அதனால் இந்தியத் திருமணத்திலிருந்து வெளியேறி வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் நல்வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் எடுக்க வேண்டிய சரியான முடிவு.
இந்தியாவில் திருமணம் செய்து மனைவி, காவல்துறை, நீதித்துறை மூன்றின் கூட்டணியில் உருவாகும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சின்னாபின்னமாவதைவிட வேறு நாடுகளில் திருமணம் செய்துகொண்டு வளமாக வாழ்வதுதான் புத்திசாலி இளைஞர்கள் எடுக்கும் சரியான முடிவு.
இதுபோன்ற புத்திசாலித்தனமாக முடிவை எடுத்து நல்வாழ்க்கையில் காலடி எடுத்துவைக்கும் இந்த தூத்துக்குடி இளைஞருக்கு வாழ்த்துக்கள்.
செப்டம்பர் 01,2011 தினமலர்
தூத்துக்குடி, சுந்தர ராமபுரம் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் சந்திரசேகரன். இவரது மகன் செந்தில்குமார், 26; ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் படித்த இவர், பக்ரைன் நாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர், அதே ஓட்டலில் பணிபுரியும், பிலிப்பைன்ஸ் நாட்டின் டார்லக் சிட்டியைச் சேர்ந்த மைக்கேல் லாசன் ஒரெபல் - எரிலிண்டா கேபிரியல் கேம்பாய் தம்பதியரின் மகள் கிறிஸ்ட்டினா மைல்ஸ், 21, என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவருக்கும், இவர்களது பெற்றோர் சம்மதம் கிடைத்தது. இதையடுத்து, தூத்துக்குடியிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை, இந்து மற்றும் தமிழ் பாரம்பரிய முறைப்படி, இவர்களது திருமணம் நடந்தது. முன்னதாக, மணமகள் கிறிஸ்ட்டினா மைல்சின் பெயர், சுவேதா என மாற்றப்பட்டு, அவர் பட்டுச் சேலை உடுத்தி மணமேடைக்கு வந்தார். மணமகன் செந்தில்குமார், மேளதாளம் முழங்க, மணமகள் சுவேதா கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணத்திற்கு வந்திருந்த ஏராளமானோர் அட்சதை தூவி, அவர்களை வாழ்த்தினர்.தொடர்ந்து சடங்குகள் நடந்தன. இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினர், மணமகளின் தாயார், அவர்களது உறவினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகள் செப்., 25ல் பக்ரைன் செல்கின்றனர்.
No comments:
Post a Comment