ஜப்பானிய மங்கையின் கனவை நனவாக்கிய விருதுநகர் வாலிபர்
பிலிப்பைன்ஸ் மணமகளை கரம் பிடித்தார் தமிழக மணமகன்
பிரான்ஸ் பெண்ணை மணந்த புதுச்சேரி வாலிபர்: இந்து முறைப்படி கோவிலில் திருமணம்
செப்டம்பர் 03,2011 தினமலர்
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை இந்து முறைப்படி, நேற்று திருமணம் செய்து கொண்டார்.புதுச்சேரி கொசக்கடை வீதியைச் சேர்ந்த பையா கெல்ஸ்வானின் மகன் பையா அந்துவான்,24. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர், மேல் படிப்புக்காக, 2006ல் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார்.அங்கு, மாணவர் விடுதியில் தங்கி, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அந்துவானை பார்த்த அதே நாட்டைச் சேர்ந்த எல்சா என்ற ராதா, 22, என்ற பெண் காதலித்து வந்ததோடு, இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். இந்தியா திரும்பிய இவர்கள், உறவினர்கள் சம்மதத்துடன் நேற்று, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அந்துவான் கூறியதாவது: பிரான்சில் படிக்கும் போது, குழுவாகச் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடினோம். அவ்விழாவில் கலந்து கொள்ள வந்த எல்சா, என்னை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளாக என்னைத் தேடிப் பார்த்துள்ளார்.அவரது பார்வைக்கு கிடைக்காத நான், சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த எல்சா மகிழ்ச்சியானார். என்னை நேசிப்பதாக மெயில் மூலமாக தெரிவித்தார். நானும் அவர் மீது ஆசைப்பட்டேன். பெற்றோரின் ஒப்புதலுடன், இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.இவ்வாறு, அந்துவான் கூறினார்.
No comments:
Post a Comment