பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, May 8, 2012

வெளிநாட்டில் சம்பாதிக்கும் கணவர்களே உங்கள் பணம் ஜாக்கிரதை!

பல இந்திய இளைஞர்கள் தங்களது குடும்ப பாரத்தை சுமக்க வெளிநாடுகளுக்குச் சென்று இரத்தம் சிந்தி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதித்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பணத்தை இந்தியாவிற்கு அனுப்பி வருகிறார்கள்.

ஆனால் சில பாசக்கார மனைவிகள் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டு ஒட்டு மொத்த பணத்தையும் சட்டத்தின் துணையோடு சுருட்டிக் கொள்கிறார்கள். வெளியே தெரியாமல் இது பல காலமாக நடந்துவரும் கொடுமை. வெளியில் தெரிந்த செய்தி இன்று செய்தித்தாளில் வந்திருக்கிறது. அதனால் இளைஞர்களே உங்களது திருமண வாழ்க்கையைப் பற்றி சரியாக முடிவெடுங்கள். இந்தியாவில் திருமணம் செய்யலாமா என்று யோசியுங்கள்.

வெளிநாட்டில் சம்பாதித்த ரூ.12 லட்சம்: மனைவி மீது கணவர் புகார்

மே 07,2012 தினமலர்

ராமநாதபுரம்: வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய 12 லட்ச ரூபாயுடன் பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்த மனைவியை, தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க கோரி கணவர், போலீசில் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இரட்டை ஊரணியை சேர்ந்தவர் கதிரவன், 32. இவருக்கும், மண்டபம் அருகே நாரை ஊரணியை சேர்ந்த சிவசங்கமூர்த்தி மகள் விஜயலட்சுமிக்கும், 26, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து, 20 நாட்களில் மனைவியை, தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கதிரவன் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார்.

சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை மாதந்தோறும் மனைவி பெயரில் வங்கியில் செலுத்தி வந்தார். கடந்த மார்ச்சில் சொந்த ஊர் திரும்பியபோது வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். மறுத்த மனைவி, "வாழ பிடிக்கவில்லை' எனக்கூறி தன்னை துரத்தி விட்டதோடு, சம்பாதித்து அனுப்பிய 12 லட்ச ரூபாயையும் திருப்பி தரவில்லை.

தன்னுடன் வாழ மனைவியை அறிவுறுத்த வேண்டும். அல்லது ரூ.12 லட்சத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதிரவன், காளிராஜ் மகேஷ்குமார் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தார். எஸ்.பி., கூறுகையில், ""உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மணிவண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.

=====
முந்தைய பதிவு இதையும் சேர்த்து படியுங்கள்... கணவன் வெளிநாட்டில் வேலை செய்யும்போது மனைவி இந்தியாவில் கள்ளக்காதலனுடன் போனில் சல்லாப பேச்சு: பில் தொகையை மனைவியே கட்ட கோர்ட் உத்தரவு

There was an error in this gadget