பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, February 21, 2010

பையில காசு கையில தாலி

கீழுள்ள செய்திகளில்அப்பாவிக் கணவர்கள் பொய் வரதட்சணைக்கேசில் சிறையில் அடைக்கப்படாமல் தப்பித்திருப்பதே மிகப்பெரிய அதிசயம்!

தேவையான அளவு கையில் காசு இருந்தால் மட்டும் தாலியை கையில் தொடுங்கள். இல்லையென்றால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

கள்ளக்காதலனுடன் போனில் சல்லாப பேச்சு: பில் தொகையை மனைவியே கட்ட உத்தரவு

தினமலர் ஜனவரி 25,2010

திருவனந்தபுரம்:"வெளிநாட்டில் வசிக்கும் கள்ளக்காதலனுடன் போனில் மணிக்கணக்கில் பேசிய மனைவியே தொலைபேசி கட்டண நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்' என, குடும்ப நலக் கோர்ட் உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (36) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர், வெளிநாட்டில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீலேகா(30) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பினார்.வீட்டுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தொலைபேசி கட்டண நிலுவைத் தொகையாக நான்கு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கட்டவேண்டும் என, நிறுவன கடிதத்தை கண்டார். மேலும், அந்த நிறுவனம் நிலுவைத் தொ கையை உடனடியாக செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அவர் தொலைபேசி நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது தொலைபேசியில் இருந்து எந்தந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளப் பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து அறிந்தார்.அதில் தனது மனைவி வெளிநாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அடிக் கடி தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் யார் எங்கிருக்கிறார் போன்ற விவரங்களையும் அவர் சேகரித்தார்.அதில் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபருடன் தனது மனைவி பேசியதும், அந்த நபர் தனது மனைவியின் கள்ளக்காதலன் என்பதையும் கண்டறிந்து அதற்கான விவரங்களையும் சேகரித்தார். பின் இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள குடும்ப நலக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இ.எம்.முகமது இப்ராகிம், "கள்ளக் காதலனை போனில் அழைத்து சல்லாபத்தில் ஈடுபட்ட மனைவியே தொலைபேசி நிலுவைக் கட்டணத்தை பதினைந்து தினங்களுக்குள் செலுத்தவேண்டும்' என்று உத்தரவிட்டார்.மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த கணவன், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தீயவற்றை கேட்காதே, பார்க்காதே, பேசாதே என்ற போதனைக்கேற்ப பொதுவாக இதுபோன்ற தவறான விஷயங்களைக் காணும் கணவர்களுக்குத் தீய செயல்களைக் கண்டதற்காக (வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு) தண்டனை வழங்கப்படும். மனைவியின் உரிமையில் தலையிட்டு கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கணவரின் குடும்பத்தோடு அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் தீய செயல்களைக் காணாதீர்கள் (கள்ளக்காதல் விஷயங்களை கண்டுகொள்ளாதீர்கள்), தீயவிஷயங்களைச் செவிகொடுத்துக் கேட்காதீர்கள் (கள்ளக்காதல் விஷயங்களில் தலையிடாதீர்கள்), தீயவிஷயங்களைப் பற்றி பேசாதீர்கள் (கள்ளக்காதல் தவறு என்று அறிவுரை சொல்ல முயற்சிக்காதீர்கள்). இவற்றை செய்தால் IPC498A, DV, DP போன்ற பிரிவுகளில் தண்டனை நிச்சயம் கணவருக்குத் தான் கிடைக்கும்!

ஆனால் சிலசமயம் நீதிதேவதையின் கருணையால் சில எதிர்மறையான அதிசயங்களும் நடக்கலாம்! அது அவரவரின்அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

=======================

Married woman can live with her lover, says court


Can a married woman lawfully live with her lover against the will of her husband? The Rajasthan High Court says yes.

In a judgment on Wednesday, the court allowed a married woman, Manju, to live with her lover, Suresh. “It is improper to pass an order to hand over any unwilling married woman to her husband with whom she does not want to stay,” said justices GS Mishra and KC Sharma. The court also said that nobody should consider an adult woman as a consumer product.

=======================


4 comments:

498ஏ அப்பாவி said...

ஜாலிக்கு கள்ளக்காதல்
பில்லி கட்டுவதற்கு நல்ல காதலா?

சபாஷ் சரியான தீர்ப்பு...

498ஏ அப்பாவி said...

இது மாதிரி சட்டம் நடுநி​லை​யோடு இருந்தால் நாங்கள் 498ஏ இருந்து தப்பிக்கலாம்.. என்னச்​செய்யவது இது​போல் சம்பங்கள் அத்திப்பூத்தார்​போல் ந​டை​பெறுகின்றது

Emirates Coast Contracting said...

இதுபோன்ற பெண்கள் விவகரதுகுபிறகு என்ன ஆவார்கள் செய்த தவறுக்காக வருந்துவர்களா இவர்களுக்கு குழந்தை இருந்தால் அதன் நிலை என்ன ஏன் இந்த அற்ப அசைகள்.

தகனமேடை said...

கீழே தொடர்ந்து வரும் Married woman can live with her lover, says court என்ற செய்தியை நீங்கள் படிக்கவில்லையா? கணவனை விட்டபிறகு விட்டது தொல்லை என்று காதலனுடன் உல்லாசமாக புதிய வாழ்க்கையை ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளை இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். இப்படித்தான் அரசாங்கத்தின் நற்செயலால் பல குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறது.