பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, February 26, 2010

ஐயோ பாவம் நீதி தேவதைஆந்திராவில், நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். கர்னூலை சேர்ந்தவர் ராதாராணி. இவர், நான்காவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்தக் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் சண்முகம்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கோர்ட்டுக்கு ராதாராணி வந்தார். அப்போது, தனது செருப்பை கழற்றாமல் கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார். இதை கவனித்த நீதிபதி சண்முகம், செருப்புக் காலுடன் கோர்ட்டுக்கு வருவதற்கு பதிலாக, செருப்பை தலையில் சுமந்தபடியே வரலாமே என, கமென்ட் அடித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராதாராணி, தனது செருப்பைக் கழற்றி நீதிபதி சண்முகத்தை நோக்கி வீசினார். அதிஷ்டவசமாக, செருப்பு அவர் மீது படாமல் சென்றது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நீதிபதி சண்முகம், விசாரணையை ஒத்திவைத்தார். அத்துடன், ராதாராணியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில், ராதாராணியை போலீசார் கைது செய்தனர். ராதா ராணியை கடந்த ஏழு மாதங்களாக நீதிபதி சண்முகம் பல்வேறு வகைகளிலும் அவமானப்படுத்தி வந்ததுடன், மன அளவிலும் தனக்கு தொந்தரவுகளை செய்து வந்ததாக நிருபர்களிடம் பேசிய ராதாராணி கூறினார்.

===================================================
இளைஞர்களே ஜாக்கிரதை! இதுபோன்ற நீதிமன்றங்கள் தான் உங்கள் மீது போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பதிலாக பொய் வழக்குகளில் சிக்காமல் இருப்பது தானே நல்லது. அதனால் அப்படி பொய்வழக்குகளில் சிக்காமல் இருக்க வேண்டுமானால் உங்களின் திருமண விஷயத்தில் நீங்கள் ஜாக்கிரதையாக ஒரு முடிவெடுக்கவேண்டும். தகனமேடையா அல்லது நல்வாழ்க்கையா என்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.
No comments: