பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, February 21, 2010

இளைஞர்களுக்கு "சாந்தி" கிடைக்குமா?

படித்த மேல்தட்டு வர்க்கப் பெண்கள் அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு உதாரணம்.

மேலும் பெரியார் வழியில் புரட்சித் திருமணம் செய்ய விரும்பும் ஆண்களின் கதை என்னவாகும் என்பதற்கும் இது ஒரு உதாரணமாக இருக்கும். பெரியார் சொன்னதெல்லாம் நல்ல விஷயங்கள். ஆனால் அவற்றை செயல்படுத்தும் அளவிற்கு போதிய புத்திசாலித்தனமும், திறமையும் இந்தக்காலத்து இளைஞர்களுக்குக் கிடையாது. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற ஆண்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் மிகவும் புத்திசாலிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதனால் கலப்புத்திருமணம் செய்கிறேன், வரதட்சணை வாங்காமல் தான் திருமணம் செய்வேன், கணவனைப் பிரிந்த பெண்ணிற்கு மறுவாழ்க்கை தருகிறேன் என்பது போன்ற விஷப் புரட்சிகளில் இறங்கி வாழ்க்கையை தொலைத்துவிடாமல் புத்திசாலித்தனமாக உங்களது திருமண முடிவுகளை எடுங்கள்!

இனி ஜுனியர் விகடனில் வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்து புரட்சித்திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற தெளிவினைப் பெறுங்கள்.

(கட்டுரையின் சில முக்கிய பகுதிகள் மட்டும் தரப்பட்டிருக்கிறது)


காக்கிவாடன் பட்டி ஜெய லட்சுமி கலக்கியதெல்லாம் போலீஸ் துறைக்குள் என்றால்... அதே ரூட்டில் தமிழகத்தையே அதிர வைத்திருக்கும் சாந்தியின் விளையாட்டெல் லாம் டாக்டர்களிடம்! தீராத விளையாட்டுப் பெண்ணான இவரே ஒரு டாக்டர் என்பது கூடுதல் 'சிறப்பு'!

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த பிரபல டாக்டரின் மகள்தான் இந்த சாந்தி. சுண்டி இழுக்கும் அழகும், பிரமிக்க வைக்கும் அறிவும் சிறு வயதிலே அவரிடம் கொட்டிக் கிடந்தது. மகளை ரொம்ப செல்லமாக வளர்த்த அந்த தந்தை, சாந்தியை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தார். அங்கே மருத்துவ மாணவர்களின் கனவுக்கன்னியாக மாறி தூக்கத்தைக் கெடுத்தார் சாந்தி. நவீன கலாசார பழக்கவழக்கங்களும் அவரைப் பிடித்து அலைக்கழித்தது. படிப்பு முடித்து 21 வருடங்கள் ஆனபிறகும் தன்னை மாற்றிக் கொள்ளாமல், தற்போது 44 வயதானபோதும் சாந்தியின் தீராத தேடல், அடுத்தடுத்து ஐந்து பேரை மணந்து குப்புறக் கவிழ்த்த 'சாதனை'யாளராக இப்போது அவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது!

டாக்டர் சாந்தி மீது கும்பகோணம் போலீஸாரிடம் புகார் அளித்த பெங்களூரு வின்சென்ட் குளோரிதாஸ் என்பவரை சந்தித் தோம். ''என் சொந்த ஊர் பெங்களூரு. என் பெற்றோர் அங்கேதான் இருக்கிறார்கள். 12 வருஷம் மலேசியாவில் வேலை பார்த்தபோது அங்கே என்னுடன் வேலைபார்த்த ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணின் சொந்த ஊர் கும்பகோணம். அவளது பெற்றோர் சம்மதத்துடன் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டேன். இருவரும் பெங்களூருவில் வசித்தோம். மனைவி கர்ப்பமானதால், அவளை கும்பகோணத்தில் விட்டுவிட்டு, நானும் அங்கேயே ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கேதான் கண் டாக்டர் சாந்தியைப் பார்த்தேன். முதல் சந்திப்பிலேயே என்னை அளவெடுத்தது போல பார்த்து, என் முழு விவரத்தையும் கேட்டாள். பிறகு 'நீங்கள் ரொம்ப அழகா, கம்பீரமா இருக்கீங்க' என்றவள், என் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டாள்.

திடீரென்று ஒருநாள் இரவு 11 மணிக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு வரச்சொன்னாள். 'என் மனைவியுடன் இருக்கிறேன்' என எவ்வளவோ மறுத்தும், 'நீ வராட்டி, தற்கொலை செய்துப்பேன்' என்று மிரட்டினாள். அவசரமாகச் சென்றேன். போகும் வழியிலேயே அடுத்த போன். ஒரு தனியார் ஹோட்டல் பெயர் சொல்லி, 'வோட்கா பாட்டில் ஒன்று வாங்கிக்கொண்டு அங்கே வா' என்றாள். நான் பாட்டிலுடன் சென்றதும், ஏதேதோ சொல்லி செக்ஸ§க்கு உடன்பட வைத்தாள். வோட்காவை குடிக்கக்குடிக்க அவளுக்கு வெறியேறியது. அவளுக்கு சமமாக என்னையும் குடிக்க வைத்தாள். இப்படி ஆரம்பித்த எங்கள் உறவு, ஒருகட்டத்தில் இன்னும் நெருக்கமானது. அவளது காரில் வேளாங்கண்ணிக்கு கூட்டிச் சென்றவள், அங்கே வைத்து எனக்கு மோதிரம் மாட்டினாள்.

'வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டுட்டேன்! இனி ஆதரவு நீதான்...' என உருக்கமாகப் பேசினாள். ஒருகட்டத்தில் 'இருவரும் வெளியூர் போயிடலாம்' என்று சொல்லி, என் மனைவியின் நகைகள், வீட்டிலிருந்த பணம் எல்லாவற்றையும் எடுத்து வரச்சொல்ல... இருவரும் வேலூருக்குப் போய்விட்டோம். நான் வீட்டில் டெல்லிக்கு வேலைக்கு போவதாகச் சொல்லிவிட்டேன்.

சாந்தி, வேலூரில் கண் மருத்துவமனையில் டாக்டராக சேர்ந்தாள். அங்கேயே தனி வீடு எடுத்து தங்கினோம். அங்கே தங்கியபிறகுதான் அவளது உண்மை சொரூபமே தெரிந்தது. என்னிடமிருந்த நகை, பணத்தை வாங்கிக் கொண்டவள்... 'பெங்களூரு சொத்தில் உன் பங்கை வாங்கி வா. உன் வெளிநாட்டு உறவினர்கள் மூலமாக அந்த நகை வாங்கி வரச் சொல், இந்தப் பொருளை வாங்கி வரச்சொல்' என்றெல்லாம் டிமாண்ட்களை வைத்தாள். ஓரளவு செய்தும் கொடுத்தேன். ஆனாலும் அவள் ஓயவில்லை.

ஒருகட்டத்தில் என்னை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். இரவிலும்கூட என்னை பூட்டி வைத்துவிட்டு, தன்னை அலங்கரித்துக்கொண்டு மோகினிப் பிசாசு மாதிரி வெளியே போவாள். என் மொபைல் போனில், ஒரு வெளி மாநில சிம் போட்டு வாரா வாரம் என் மனைவிடம் 'நன்றாக இருக்கிறேன்' என்று பேசச் சொல்வாள். வீட்டில் எல்லா வேலைகளையும் நான்தான் செய்யவேண்டும்.

அப்படியும் காலப்போக்கில் என்னை அவளுக்குப் பிடிக்காமல் போக... என்னை ஆள் வைத்து அடித்து, காரில் தூக்கிவந்து கும்பகோணத்தில் வீசிவிட்டுப் போய்விட்டாள். இங்கே வந்து, அவளது பழைய தொடர்புகளை விசாரித்தபோதுதான், அவளின் முன்னாள் கணவர்களின் பரிதாபக் கதையெல்லாம் தெரிந்து அதிர்ந்தேன்! எங்களைப்போல அவளிடம் இன்னொரு ஆள் ஏமாந்து அடிபடக்கூடாது என்று முடிவெடுத்துதான் போலீஸில் புகார் கொடுத்தேன்...'' என்று வின்சென்ட் சொல்லி முடித்தபோது, ஏதோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஏடாகூட ஃபாரின் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது நமக்கு.

சாந்தி பற்றி விஷயம் அறிந்தவர்கள், ''சாந்தியின் இல்லற வாழ்க்கை வரலாற்றில் முதன் முறையாக இடம் பிடித்தவர் மலேசியாவைச் சேர்ந்த குணசேகரன். 1984 முதல் 1989-ம் ஆண்டு வரை தமிழகம் வந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். அவரது வகுப்புத் தோழியாக சாந்தி! படிக்கிறோம் என்ற போர்வையில், கட்டில் போர்வைக்குள் வாழ்க்கைப் பாடம் படித்தார்கள். படிப்பு முடிந்து பிரிந்தாலும், காதல் தணியாமல், 1992-ல் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இரண்டு வருடத்தில் இல்லற பந்தம் முடிந்து, 1994-ல் கோர்ட் வம்புவழக்கென்று அலைந்த குணசேகரன், ஊரைவிட்டு மலேசியாவுக்கே போய்விட்டார். அவரின் அடையாளமாக மகன் மனோஜ்சரண் பிறந்தான். அவன் தற்போது திருச்சியில் ஒரு பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கிற அளவு வளர்ந்துவிட்டான்!

குணசேகரனை பிரிந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு டாக்டர் சுபாஷ் சந்திரபோஸை வளைத்தார் சாந்தி. இவரும்கூட சாந்தியோடு கல்லூரியில் படித்தவர்தான். மனைவி இல்லாமல் இருந்த அவர், சாந்தியுடன் முறைப்படி திருச்சி திருமண பதிவாளர் முன்பு 2001-ல் திருமணம் செய்துகொண்டார். 5 வருடம் வரை இந்த உறவை நீடித்த சாந்தி, அதன்பிறகு அவரையும் விரட்டினார்!'' என்றவர்கள், சுபாஷ் சந்திரபோஸை அறிமுகப்படுத்தினார்கள். அவர் நம்மிடம் சோகமாகத் தொடர்ந்தார்...

''பெண் சிலந்தி போலத்தான் சாந்தி! சிலந்தியாவது தனது தேவை முடிந்ததும் ஆண் சிலந்தியைக் கொன்றுவிடும். ஆனால், இவள் சிலந்தி தன் இரையை அலைக்கழிப்பதுபோல் ஓடவிட்டு, துடிக்கவிட்டு ரசித்து நடைபிணமாக்கி விடுவாள். நான் பெரியாரின் தொண்டனாக இருந்ததால் 'கணவனைப் பிரிந்தவளாக இருந்தாலும் பரவாயில்லை' என்று புரட்சிகர சிந்தனையோடு அவளை திருமணம் செய்தேன். அதற்கு நான் கொடுத்த விலை கொஞ்சமில்லை. 'வரதட்சணைக் கொடுமை வழக்கில் உள்ளே தள்ளிடுவேன்...' என்று மிரட்டினாள். அவள் எனக்கு தந்த மற்ற பல கொடுமைகளை அப்பட்டமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவற்றை இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது!'' என்றார் சுபாஷ் சந்திரபோஸ்.

சுபாஷ் சந்திரபோஸின் துணையை 2005-ல் கைவிட்ட சாந்தி, அவரிடமிருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் தனக்கு துணையாக நின்ற, (இம்முறையும்!) தன்னுடன் கூடப் படித்த கும்பகோணம் டாக்டர் பாலமுருகனை வளைத்தாராம். தன் மனைவியைப் பிரிந்து தனித்து வாழ்ந்த பாலமுருகனோடு ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்தார். 2006 முதல் 2008 வரை தொடர்ந்தது இந்த பந்தம்! ஒருகட்டத்தில் இருவருமே ஒருவர்மேல் ஒருவர் மாறி மாறி போலீஸில் புகார் கொடுத்து, பிரிந்தார்கள்.

பாலமுருகனையும் நாம் சந்தித்தோம். ''நிராதரவா இருக்காளேன்னு ஆதரவு கொடுக்கப் போன என்னை, கால ஓட்டத்தில் எவ்வளவோ கேவலப்படுத்தினாள். நான் கஞ்சா அடிப்பதாகவும், செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதகாவும் போலீஸில் புகார் கொடுத்து, என் தொழிலையே நாசமாக்கி, நடுத்தெருவில் நிறுத்தி விட்டாள். இப்போதாவது என்மீது எந்தத் தவறுமில்லை என்று ஊர் புரிந்துகொள்ளட்டும்!'' என்று மூச்சுவிட்டார் பாலமுருகன்.

பாலமுருகன் மேல் சாந்தி புகார் கொடுப்பதற்கு, உள்ளூர் பிரமுகர்கள் சிலர் உதவினார்களாம். அதற்கு கைம்மாறாக, தான் இருந்த மருத்துவமனையிலிருந்து விலகி, அப்படி உதவிய ஒருவரின் மருத்துவமனையில் கண் மருத்துவராக வேலைக்கு சேர்ந்தாராம் சாந்தி. அங்குதான், கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் பார்த்த வின்சென்ட் குளோரிதாஸ் பழக்கம். இந்த பழக்கம் தொடங்கிய அதேசமயம் சாந்தியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார், பெங்களூருவை சேர்ந்த ஆனி என்பவர். அவர் கும்பகோணத்துக்குக்கு வந்தும், சாந்தி பெங்களூரு சென்றும் அடிக்கடி 'பழகி' இருக்கிறார்கள். குறுகிய காலத்திலேயே ஆனி, சாந்தியை முழுதாக அறிந்துகொண்டு, உறவைத் துண்டித்துத் தப்பிவிட்டாராம்.

இப்படியாக சிக்கிப் பிரிந்த இந்த ஐவரைத் தவிர, கும்பகோணத்தில் சாந்தியோடு நெருக்கம் காட்டியதாக மற்றும் சிலரிடமும் (யப்பா!) போலீஸார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் ரூம் போட்டுத்தான் அந்த 'மற்றும் சிலரோடு' உற்சாகமாக இருப்பாராம் இந்தப் பெண் கண் டாக்டர்!

''வேலூரிலும்கூட இந்த லேடிக்கு நட்பு வட்டாரம் விரிவாக உண்டாம். அங்கு பிரபல வி.ஐ.பி. ஒருவரின் மகனிடம் நல்ல பழக்கமாம்!'' என்று போலீஸ்காரர் ஒருத்தர் சொல்ல... சரிந்துவிடாமலிருக்க சுவற்றைப் பிடித்துக் கொண்டோம். கும்பகோணம் டி.எஸ்.பி-யான இளங்கோவனிடம் பேசியபோது, ''வின்சென்ட் குளோரிதாஸ் தந்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில், உண்மை இருப்பது தெரிந்தே சாந்தியைக் கைது செய்திருக்கிறோம்! அவரால் பாதிக்கப்பட்டவர்கள்(?) யாராக இருந்தாலும், எங்களிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.

போகப் போகத் தெரியும்!

2 comments:

498ஏ அப்பாவி said...

//மேலும் பெரியார் வழியில் புரட்சித் திருமணம் செய்ய விரும்பும் ஆண்களின் கதை என்னவாகும் என்பதற்கும் இது ஒரு உதாரணமாக இருக்கும்
அதனால் கலப்புத்திருமணம் செய்கிறேன், வரதட்சணை வாங்காமல் தான் திருமணம் செய்வேன்//

இந்த புரச்சிவாதி​யை ​போல நானும் வரதட்ச​ணை வாங்கமல் கலப்பு திருமணம் ​செய்யத எனக்கு 7 மாத்திற்குள்ளாக​வே வரதட்ச​ணை ​கேட்டு ​கொடு​மை ​செய்தான் என்று "ஆபாச வக்கிர புகார்" இந்த ஆபாசக்க​​தையில் ​கைதாகி சி​றை​சென்றது எனது தாய், தம்பி மற்றும் இந்த எழவு சட்டங்க​ளை பற்றி ஒன்றும் ​தெரியாமல் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரு​டைய தாயாரும் ​கைது ​செய்யப்பட்டார்.


புரட்சி ​செய்கின்​றேன் என்ற என்​(எங்க​ளை)னைப்​போல் லூசுத்தனமாக எதாவது ​செய்யப்​போய் ​பொய்வழக்கில் மாட்டிக்​கொள்ளாதீர்கள்

498ஏ அப்பாவி said...

//இளைஞர்களுக்கு "சாந்தி" கிடைக்குமா? //

இது​போல் சாந்தி கி​​டைத்தால் "சாந்தி" ​போகும் ​​கோர்ட் ​கேஸ் என்று அ​லைய​வேண்டியதுதான்... நாங்கள் அ​லைவது​போல்..