இந்திய ஆணின் உயிரின் மதிப்பு எவ்வளவு என்று தெரிந்துகொள்ள கீழுள்ள செய்தியைப்படித்த பிறகு அதனைத் தொடர்ந்து வரும் வீடியோவையும் செய்தியையும் பாருங்கள். விடை தெரியும்.
காதலனை கண்டுபிடிக்கக் கோரி உண்ணாவிரத முயற்சி- அதிகாரிகள் சமரசம்
தினமலர் பிப்ரவரி 23,2010
பொள்ளாச்சி : காதலித்து ஏமாற்றிய காதலனை, தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன் இளம்பெண் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பொன்மலையூரை சேர்ந்தவர் அனிதா (22); அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதும், சசிகுமார் தலைமறைவாகியதாக தெரிகிறது. காதலனை கண்டுபிடித்து, திருமணம் செய்து வைக்கும்படி, அனிதா, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார், காதலனை கண்டுபிடிக்காததால், பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களுடன் சப்-கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி அமர்ந்தார். டி.எஸ்.பி., ராஜன், அனிதாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: தலைமறைவாகவுள்ள சசிகுமாரை தேடும் முயற்சி நடந்து வருகிறது. அதற்குள், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, கண்மூடித்தனமாக கூறக்கூடாது. இந்த பிரச்னையால் சசிகுமாரின் தந்தை, பூச்சி மருந்து குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் சீரானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். சசிகுமாரை கண்டுபிடித்ததும், சேர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜன் கூறினார். போராட்டத்தை கைவிட்ட அனிதா, ஆர்.டி.ஓ., அன்பழகனை சந்தித்தார்.
அவரிடம் அனிதா கூறியதாவது: சசிகுமாரும், நானும் நான்காண்டுகளாக காதலித்து வந்தோம். என்னிடம், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினார். திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதும், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அடையாளம் தெரியாத நபர்கள் வீடு தேடி வந்து, "புகாரை வாபஸ் பெற வேண்டும்; இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டுகின்றனர். போலீசார் இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காதலனை மீட்டு, எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனிதா கூறினார். ஆர்.டி.ஓ., உடனடியாக, அனிதாவுடன் இரண்டு போலீசாரை பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தார்.
மேலுள்ள செய்தியைப் படித்தவுடன் இந்த வீடியோவையும் பார்த்து விடுங்கள். ஒரு ஆணை ஒரு பெண் காதலித்து ஏமாற்றினால் நாட்டில் என்ன நடக்கிறது என்று காட்டியிருக்கிறார்கள்.
படம் : தேவதையைக் கண்டேன்
.
இதுபோன்று நீதிகிடைக்காத பல ஆண்கள் இப்போது அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று புள்ளி விபரம் சொல்கிறது. காதல் தோல்வியால் அல்ல, மனைவியர் செய்யும் கொடுமை, மனைவியர் போடும் பொய் வரதட்சணை வழக்குகள் போன்றவைதான் காரணம்.
சட்டத்தால் புறக்கணிக்கப்பட்டு நீதி கிடைக்காமல் உயிரைவிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேலுள்ள வீடியோவில் சொல்லப்பட்டதுபோல் இந்த சமுதாயத்திற்கு ஆணின் உயிர் என்பது ஒரு அற்பத்தனமான பொருளாகத்தான் மாறிவிட்டது. அதனால் திருமணத்தின் மூலம் ஏற்படும் இன்னல்களுக்கு யாரும் உங்களுக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்கள். குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கினால் கடவுளால் கூட உங்களைக் காப்பாற்ற முடியாது.
(படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் பாருங்கள்)
dnaindia.com 2/22/2010
4 comments:
Please add to tamilish, tamilmanam, thiratti,etc.
தமிழிஷ், தமிழ்மணம் இணைப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. நன்றி.
நல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி! சசிகுமார். என்னுடைய புகழ் உயர்வதைவிட அப்பாவி ஆண்களிடையே இந்த கொடுமைகளைப்பற்றிய விழிப்புணர்ச்சி மேன்மேலும் உயரவேண்டும். உங்களின் நண்பர்களுக்கும் இந்த பதிவுகளை அனுப்புங்கள்.
Post a Comment