பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, February 19, 2010

தகனமேடையிலிருந்து தப்பிய புத்திசாலி இளைஞர்

பிப்ரவரி 19,2010


பொய்வழக்குப்போடும் சதிகாரக் கூட்டத்திலிருந்து தப்பிய இந்த மாவீரருக்கு வாழ்த்துக்கள்! இவரது வாழ்க்கையில் இனி IPC498A, 506, 406, 420, 34, Dowry Prohibition Act sections 3,4,5,6, Domestic Violence Act போன்ற பொய் வழக்குகள் மூலம் ஏற்படும் இன்னல்கள் குறுக்கிடாமல் அவரும் அவரது குடும்பத்தாரும் எந்தவித துன்பமும் இன்றி வளமாக வாழ்வார்கள். இந்த புத்திசாலியான இளைஞரின் வாழ்க்கை வளம்பெற வாழ்த்துக்கள்!!

இந்தியத் திருமணம் என்ற தகனமேடையிலிருந்து தப்பித்த இந்த இளைஞரைப்போல் பல இளைஞர்களும் நன்கு சிந்தித்து தங்களது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளவேண்டும்.

சென்னை : இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்களால் கவரப்பட்ட போலந்து நாட்டு இளம் பெண், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இந்து மத வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், போடியை அடுத்த தேவாரத்தைச் சேர்ந்தவர் மோகன் தாஸ்; ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள், ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் செந்தில் குமார்(30). இவர், இளங்கலை பொறியியல் படிப்பை இந்தியாவிலும், முதுகலை பொறியியல் படிப்பை ஜெர்மனியிலும் முடித்தவர். தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் மென்பொருள் மேம்பாட்டு இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் டாடூஸ் டோப்பியராலா. இவரது கணவர் இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன. டோப்பியராலாவுக்கு மூன்று மகள், ஒரு மகன். இவரது இரண்டாவது மகள் அலெக்சாண்ட்ரா(27). எம்.ஏ., பட்டதாரியான இவர், அந்நாட்டின் நிதித்துறையில், நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

பணியின் போது கிடைக்கும் இடைவெளியில், செந்தில், இன்டர்நெட்டில், சாட் செய்வது வழக்கம். அப்படி செய்யும் போது அலெக்சாண்ட்ராவுக்கும், செந்திலுக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக வளர்ந்தது. செந்திலுடன் பழகியதில், அலெக்சாண்ட்ராவுக்கு இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் தெரியவர அது அவருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. இதைத் தொடர்ந்து திருமணம் செய்தால், இந்து முறைப்படிதான் திருமணம் செய்வது என்று அலெக்சாண்ட்ரா பிடிவாதமாக இருந்துள்ளார். இதை செந்திலும் ஏற்றுக் கொண்டார். இவர்களது விருப்பம், இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. செந்திலின் பெற்றோர் போலந்து சென்று அலெக்சாண்ட்ராவின் வீடு, குடும்பம், சுற்றுப்புறச் சூழல்களை பார்த்துள்ளனர். அவர்களுக்கு பிடித்துப் போகவே, அலெக்சாண்ட்ரா குடும்பத்தினரை தமிழகத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்தனர். அலெக்சாண்ட்ரா குடும்பத்தினருக்கும், தமிழக சூழல் பிடித்து விட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் உறவினர்களுடன் பேசி சென்னையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

செந்திலின் தாய் ஜெகதாம்பாள், மாதா அமிர்தானந்தமயி தேவியின் பக்தையாக இருந்ததால், விருகம்பாக்கம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உள்ள திருமண மண்டபத்திலேயே திருமணம் வைத்துக் கொள்ள விரும்பினார். அதன்படி, நேற்று அந்த மண்டபத்தில், புரோகிதர் மந்திரம் ஓத, மங்கல வாத்தியம் இசைக்க, உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்திருக்க, அக்னி புகை எழும்ப, காலை 8.30 மணிக்கு தேவாங்க செட்டியார் முறைப்படி மணமகள் அலெக்சாண்ட்ரா கழுத்தில், மணமகன் செந்தில் தாலி கட்டினார். மணமக்களை அனைவரும் வாழ்த்தினர். போலந்து நாட்டில் இருந்து வந்திருந்த அலெக்சாண்ட்ராவின் உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டில் பிறந்த பெண், இந்திய கலாசாரத்தால், கவரப்பட்டு இந்திய மருமகளானதை அறிந்த விருகம்பாக்கம் பகுதி மக்கள் அங்கு கூடி ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்.





1 comment:

498ஏ அப்பாவி said...

ஆகா ஒரு ஆள் எஸ்​கேப் ஆகிட்டார்யா... இல்லாட்டி பாவம் டவுரி ​​கேசு... காவல்நி​லையத்தில் கூலகும்பிடு... கட்டப்பஞ்சாய்து அல்லக்​கைகளின் மிரட்டல்கள் ​போன்ற காமடிக​ளை சந்திக்க பாவம் இந்த மாப்பிள்​ளைக்கு ​கொடுத்து​​​வைக்கவில்​லை