பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, February 8, 2010

ஆண்களுக்கான சுவையான தகவல்!

இந்தப் படத்திலிருந்து ஒரு சுவையான தகவலும் இருக்கிறது. எப்போதும் பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் ஆண்கள் என்ற ஒரு தவறான மனப்போக்கு இந்த சமுதாயத்தில் ஊறிப்போய் இருக்கிறது. அது போன்ற எண்ணமுயைவர்கள் மனதை தேற்றிக்கொண்டு படத்திற்கு கீழுள்ள தகவலையும் படிக்கவும்.

தினமணி செய்தித்தாளில் வந்துள்ள படமும் அதற்கேற்ப கொடுக்கப்பட்டுள்ள நையாண்டியான விளக்கமும்



இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரப்படி 2007-ம் ஆண்டு பெண்களுக்கெதிரான குற்றங்களில் பெண்களை தவறாக சித்தரித்து குற்றம் புரிந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான மொத்த 1,229 நபர்களில் 911 பேர் பெண்கள். அதாவது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆண்குற்றவாளிகளை விட அதிகமாக 74% பெண்கள் தங்கள் பங்களிப்பை தந்திருக்கிறார்கள். மேலும் இளம்பெண்களை கடத்தும் குற்றத்திலும் பெண்கள் 60.3% பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

The share of female arrestees was highest for cases under 'Indecent Representation
of Women (Prohibition) Act' (74.1%) (911 out of 1,229) followed by ‘Immoral Traffic
(Prevention) Act’ (60.3%) (5,951 out of 9,861) - NCRB Report

THE INDECENT REPRESENTATION OF WOMEN (PROHIBITION) ACT, 1986

(NO. 60 OF 1986)

An Act to prohibit indecent representation of women through advertisements or in publications, writings, paintings, figures or in any other manner and for matters connected therewith or incidental thereto.


அதனால் ஆண்கள் என்றால் எப்போதும் பெண்களை இழிவு செய்பவர்கள், வரதட்சணை கொடுமை செய்பவர்கள் என்ற இழிவான கண்ணோட்டமுடையவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டு பெண்களும் ஆண்களுக்கு இணையாகவோ அல்லது ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு கூட எல்லாவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடுவார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டு சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருப்பதுதான் சரி என்ற மனநிலைக்கு மாறுவதுதான் இந்த சமுதாயத்திற்கு நல்லது.

இந்த தெளிவான மனநிலை இல்லாமல் எப்போதும் பெண்களை அப்பாவிகள் போல சித்தரித்து தவறான சட்டங்களை இயற்றினால் மேலும் பல பெண்கள் குற்றவாளிகளாக மாறும் அபாயம் தான் ஏற்படும். ஏற்கனவே வரதட்சணை சட்டங்கள் பெண்களுக்கு மட்டும் குறிப்பாக மனைவியருக்கு மட்டும் சாதகமாக இயற்றப்பட்டிருப்பதால் பல மனைவியர் கிரிமினல் போலவே மாறி பொய் வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தின் இந்த தவறான அணுகுமுறையால் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்கள் தான். அதனால் இளைஞர்களே, இந்தியாவில் சட்டங்களை நடுநிலையாக மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதன் பின்னணியில் பலவித வியாபார நோக்கங்கள் இருக்கின்றன. ஆனால் உங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவது உங்களால் செய்யக்கூடிய எளிதான செயல். அதனால் யோசித்து முடிவு செய்யுங்கள்!

No comments: