இந்தியாவில் மட்டும் தான் இந்த உலக அதிசயம் நடக்கும். வெளிநாட்டில் வாழும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற பெண்களும் இந்தியாவில் இருக்கும் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியரை துன்புறுத்தலாம். இந்தியாவில் இருக்கும் பெண்களும் வெளிநாட்டு பிரஜை மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்தலாம்.
இந்த அரிய நிகழ்ச்சி நடைபெற இளம் பெண், போலிஸ், நீதிமன்றம் என்ற இந்த கூட்டணி இருந்தால் போதும். நீதி, தர்மம், உண்மை என்ற விஷயங்கள் தேவையில்லை.
========================================
Monday, 05 April 2010
இப்படியும் நடக்குமா ? மாலிக் சொல்லும் ஆயிஷா கதை.
ஹைதராபாதைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்குடன் நடந்த திருமணம் செல்லாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் தெரிவித்தார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸôவுக்கும், ஷோயப் மாலிக்குக்கும் வரும் 15-ம் தேதி ஹைதராபாதில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்பவர், ஷோயப் தன்னை ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டு விட்டார் என்றும் அதற்கான சான்றிதழையும் அவர் வெளியிட்டார். இதனால் ஷோயப்-சானியா திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஷோயப் தன்னை விவாகரத்து செய்தால் போதும் என்றும் இல்லாவிட்டால் ஷோயப் மீது வழக்குத் தொடருவேன் என்றும் ஆயிஷா கூறி வருகிறார்.
இதனிடையே சனிக்கிழமை ஹைதராபாதுக்கு ஷோயப் மாலிக் வந்தார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சானியா வீட்டில் நிருபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டி அளித்தார். முன்னதாக அவர் 2 பக்க அறிக்கையையும் வெளியிட்டார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
ஆயிஷாவுடன் எனக்குத் நடந்த திருமணம் செல்லுபடியாகாது. ஆயிஷா குடும்பத்தார் என்னை ஏமாற்றுவதற்காக ஆயிஷாவை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினர். ஆயிஷாவை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.
2001-ல் நான் துபையில் இருந்தபோது போனில் ஒரு பெண், தன்னை என்னுடைய ரசிகை என்றும் ஹைதராபாதைச் சேர்ந்தவள் என்றும் செüதி அரேபியாவில் வசித்துவருவதாகவும் கூறிக் கொண்டு அறிமுகமானார். அவரது பெயர் ஆயிஷா. அடிக்கடி நாங்கள் போனில் பேசிக் கொண்டோம். நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறும்போது எனக்கு மெயிலில் புகைப்படங்களை அனுப்புவார். நான் போனில் பேசிய பெண்ணின் புகைப்படம் தான் அது என்று நம்பினேன்.
அவரைச் சந்திப்பதற்காக 2002-ல் நான் ஹைதராபாத் வந்தேன். அப்போது போனில் என்னுடன் பேசிய ஆயிஷா, தான் அவசரமாக செüதி அரேபியா செல்வதாகவும், தன்னுடைய சகோதரிகள் ரீமா, மஹாபா ஆகியோர் ஹைதராபாத் நகரை எனக்கு சுற்றிக் காண்பிப்பார்கள் என்றார்.
அவரைச் சந்திக்க மட்டுமே நான் வந்தேன். 5 நாட்கள் தங்கியிருந்தும் அவரைப் பார்க்க முடியவில்லை. பின்னர் ஆயிஷாவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவள் தற்போது மிகவும் குண்டாகிவிட்டாள். அதனால் தான் உங்களைப் பார்க்க மறுக்கிறாள் என்று தெரிவித்தனர். எனக்கு அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்தபோது அவள் குண்டாக இல்லையே என்று நான் கூறியபோது அந்த புகைப்படங்கள் பழையவை என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து நான் பாகிஸ்தான் சென்றுவிட்டேன். சில மாதம் கழித்து எனக்கு ஆயிஷா போன் செய்தார். ஹைதராபாத் நகரம் முழுவதும் நம்முடைய காதல் பற்றிய பேச்சாக இருக்கிறது. நான் பாதுகாப்பற்றவளாக உணர்கிறேன். இதனால் என்னுடைய பெற்றோர் முன்பு தலைகுனிந்து நிற்கிறேன். திருமணம் தான் இதற்கு ஒரே வழி என்று ஆயிஷா போனில் தெரிவித்தார்.
இதனால் நாம் தொலைபேசி வழியாக திருமணம் செய்துகொள்வோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்தே நான் தொலைபேசி திருமணத்துக்கு ஒப்புக் கொண்டேன். 2002-ல் ஹைதராபாதுக்கு வந்து என்னுடைய நண்பரின் கடையிலிருந்து தொலைபேசியில் ஆயிஷாவை அழைத்தேன். ÷அப்போது இ-மெயிலில் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எண்ணி திருமணச் சான்றிதழில் கையெழுத்திட்டேன்.
இவ்வாறு செய்ய எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. இதுதொடர்பாக எனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. உணர்ச்சிகரமான விஷயத்தால் நான் இதைச் செய்யுமாறு ஆயிஷாவால் வற்புறுத்தப்பட்டேன்.
மொத்தத்தில் ஆயிஷாவால் ஏமாற்றப்பட்டேன். ஆனால் எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்ட புகைப்படத்தில் இருந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போது ஆயிஷா என்று கூறிக் கொள்ளும் பெண்ணை பல முறை சந்தித்துள்ளேன். அவர் அப்போது என்னிடம் நான் ஆயிஷாவின் மூத்த சகோதரி மஹாபா என்று தன்னை அறிமுகம்செய்து கொண்டார்.
ஆனால் தற்செயலாகத்தான் எனக்கு ஆயிஷாவும், மஹாபாவும் ஒரே பெண்தான் என்பது தெரியவந்தது. இவ்வளவு தூரம் ஒரு பெண்ணின் குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையின் மோசமான காலங்கள் அவை. ஒருவர் தான் முட்டாளாக்கப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை.
இத்தனை ஆண்டு காலமாக என்னை முட்டாளாக்கிய மஹாபாவைச் சந்தித்து என்னுடைய கோபத்தைத் தெரிவித்தேன். அதன்பிறகு அவரைச் சந்திக்கவே நான் விரும்பவில்லை. அந்த நேரத்தில் யாரையும் நம்பக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் வந்துள்ள தவறான செய்திகளுக்கு விளக்கமளிக்கவே பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன்.
என்னை ஏமாற்றித் திருமணம் செய்தவர்கள் இப்போது விவாகரத்து கேட்கின்றனர். மோசடி செய்யும் எண்ணத்தில்தான் திருமணத்துக்கு என்னை வற்புறுத்தினர். இஸ்லாம் சட்டப்படி திருமணம் உண்மையானதாக இருந்தால்தான், விவாகரத்து செய்ய முடியும். திருமணமே உண்மையானதாக இல்லாதபோது நான் விவாகரத்து செய்யமாட்டேன்.
என்னுடைய நிலையை நான் விளக்கமாகச் சொல்லிவிட்டேன். விரைவில் சானியாவைத் திருமணம் செய்துகொள்வேன். இந்த உண்மைகள் அனைத்தும் சானியாவுக்குத் தெரியும். அவர் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்.
நான் இங்கு சானியாவைத் திருமணம் செய்யவே வந்துள்ளேன். ஆயிஷா விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை என்னுடைய வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.
எனக்கு இ-மெயில் வந்த பெண்ணின் புகைப்படங்களை வெளியிடலாம் என நினைத்தேன். ஆனால் அதைச் செய்யவில்லை.
இந்த மோசடித் திருமணம் தொடர்பாக 2008-ம் ஆண்டில் ஆயிஷா சித்திக்கின் தந்தைக்கு எனது வழக்கறிஞர் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர் என்மீதான குற்றச்சாட்டுகளை ஆயிஷா நிறுத்தினார். சானியாவுடன் எனக்குத் திருமணம் என்றதும் மீண்டும் பிரச்னையை எழுப்பியிருக்கிறார்.
திருமணத்துக்குப் பின்னர் சானியா விளையாட விரும்பினால் விளையாடட்டும். இதுவரை அவர் இந்தியாவுக்காக விளையாடி வந்தார். இனியும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்றார் அவர்.
இதனிடையே மாலிக்-ஆயிஷா சித்திக் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் வெங்கண்ணா சாமுண்டேஸ்வரநாத் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சானியா வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சாமுண்டேஸ்வரநாத், ஷோயபுடன் பேசிவிட்டுச் சென்றுள்ளார். அவர் ஆயிஷாவின் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசி பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு ஷோயப் செல்லவுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒருவரை திருமணம் செய்யவேண்டுமானால் தூதரகத்திலிருந்து இஜாஜத்நாமா என்ற சான்றிதழைப் பெறவேண்டும்.
இந்த சான்றிதழைப் பெறுவதற்காக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக்கை, ஷோயப் சந்திக்கவுள்ளார்.
மேலுள்ள செய்தி இப்படியிருக்க நம்ம ஊர் போலிஸ் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள். அதுதான் 498A கேசுகளின் சிறப்பம்சம்.
இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை: 498A வழக்குகளைப் பொறுத்தவரை குற்றவாளியோ, ஆதாரங்களோ தேவையில்லை. புகார் கொடுக்க ஒரு இளம் பெண்ணும் அதைப் பதிவு செய்ய ஒரு போலிஸூம், குற்றம் சாட்டப்பட ஒரு அப்பாவியும் போதும். பொய் குற்றச்சாட்டை சுமப்பதற்காகத்தான் இன்றைய இந்திய இளைஞர்கள் திருமணம் என்ற தகனமேடைக்குச் செல்கிறார்கள். இந்த உண்மையை புரிந்துகொண்டால் இந்த சட்ட தீவிரவாதத்திற்கு பலியாகமல் தப்பிக்கலாம்.
========================================
2 comments:
அடங்கொய்யல! ஏமாத்தியதும் இல்லாம பொய்கேசு வேறையா? உலகமெல்லாம் 498ஏ புகழ் பரவட்டும்.
விசாரனை திலகங்கள் இனிமெல் இவரை வைத்து செஞ்சுரி அடிப்பார்கள்!
மச்சான நல்ல வசமா மாட்டிக்கிட்டாறு... இனிமெல் ஹைதாரபாத்தில் உள்ள எல்லா கோர்ட்டு கேசு எல்லாம் அருமையா சுத்திபாக்கலாம்... ground ல ரவுன்டு கட்டி விலையாடியவரை வைத்து இனிமெல் நாங்க விழையாடுவோம்...
498ஏ விரிச்ச வலையில் யாராலும் தப்பமுடியாது மச்சி!
Post a Comment