காவல் நிலையம்தான் அவர்களுக்கு “எல்லாவற்றிற்குமே” பாதுகாப்பான இடம் என்பதை தொழில்பக்தியோடு நிருபித்துவிட்டார்கள் போலிருக்கிறது!
========================================================
தினமலர் ஏப்ரல் 16,2010
சென்னை:தலைமைக் காவலர்களுடன், 'தொடர்பு' கொள்வதில் ஏற்பட்ட தகராறில் பெண் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் சொர்ண களஞ்சியம்(50); எழும்பூர், அருங்காட்சியக போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இதே போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ரங்கநாதன் (42). மனைவியை இழந்த இவர், அமெரிக்காவில் இருக்கும் தனது மகன் அனுப்பும் பணத்தில், 'செழிப்பாக' வாழ்ந்து வருகிறார்.ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியதால் பெண் எஸ்.ஐ.,க்கும், மனைவியை இழந்த ரங்கநாதனுக்கும் இடையில் நெருக்கம் அதிகமானது. போலீஸ் நிலையத்தில், பகல் நேரத்தில் கதவை பூட்டிக் கொண்டு இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு தலைமைக் காவலரான சிகாமணி(40) என்பவருடனும் இந்த பெண் எஸ்.ஐ., தொடர்பு வைத்துள்ளார்.
இந்த விவகாரம் ரங்கநாதனுக்கு தெரியவந்துள்ளது.ஆத்திரமடைந்த ரங்கநாதன், சொர்ண களஞ்சியத்தை கண்டித்ததுடன், அடித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நுண்ணறிவு பிரிவினர் போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.கமிஷனர் உத்தரவின்படி எஸ்.ஐ., சொர்ண களஞ்சியம், எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப் பட்டார்.போலீஸ் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ.,யும், தலைமைக் காவலரும் சல்லாபித்தது குறித்து எழும்பூர் உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.
======================================================
தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. - திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை: சுப்ரீம் கோர்ட்உச்சநீதிமன்ற நெறிமுறையை இதுபோன்ற விஷயங்களில் தவறாமல் பின்பற்றுகிறார்கள். ஆனால் பொய் வரதட்சணை கேசுகளில் கண்மூடித்தனமாக அப்பாவிகளைக் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பல முறை சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள் இந்த கடமைதவறா க(ன்னி)யவான்கள்.
இளைஞர்களே இதுபோன்ற காவல்நிலையங்கள்தான் உங்கள் மீது பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து உங்களது வாழ்வை சின்னாபின்னமாக்கும் இடங்கள். இவர்களுக்குத் துணைபோவது கோழைத்தனமான கோமாளிகள் இயற்றியுள்ள தவறான சட்டங்கள். தவறான சட்டங்களை திருத்தக்கூட திராணியற்ற கூட்டம் தான் இங்கு வாழ்கிறது. உள்துறை அமைச்சகத்தின் இயலாமையைக் காட்டும் சுற்றறிக்கையைப் படித்துப்பாருங்கள்.
இதுபோன்ற கள்ளக்காதல் காமவெறித் தகராறு போன்ற “உள்துறை கட்டப்பஞ்சாயத்துக்கள்” செய்யவே இவர்களுக்கு நேரம் இருக்காது. இதுபோன்ற இடங்களில் உங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைப்பற்றி கவலைப்பட யாருக்காவது நேரமிருக்குமா? இந்தக்கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் இந்தியாவில் திருமணம் செய்யாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களது எதிர்கால நல்வாழ்விற்கு நன்மையளிக்கும்.
No comments:
Post a Comment