இந்தியத் திருமணம் என்ற தகனமேடையிலிருந்து தப்பித்த இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்.
யாரும் யாரோடுவேண்டுமானாலும் கூடி வாழலாம், திருமணம் என்பது அவசியமில்லை என்று சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் சொல்லிய கருத்திற்கு நெத்தியடி கொடுப்பது போல இந்த செர்பிய நாட்டுப் பெண் கூறியுள்ள இந்த அர்த்தமுள்ள கருத்தை பொய் வழக்குப்போடும் மனைவிமார்களும் அவர்களுக்குப் பின்னால் குடைபிடிக்கும் கூட்டங்களும் படித்து புத்தியில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.
''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.
தினமலர் ஏப்ரல் 10, 2010
ராமநாதபுரம்: ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும், 'தாலி' கட்டும் முறைக்காக தமிழரை மணப்பதாக, 'செர்பிய' நாட்டு பெண் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், மன்னார்குடி, மேல நத்தத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (24). கேட்டரிங் டெக்னாலஜி முடித்த இவர், கோவா ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் எம்.பி.ஏ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்ற அவருக்கு, வகுப்பு தோழியாக 'செர்பிய' நாட்டை சேர்ந்த மெரியா அர்ஜினா (22) என்பவர் அறிமுகமானார். இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சந்திக்கும் போதெல்லாம், தமிழகத்தின் திருமண முறை பற்றியும், சடங்குகள் குறித்தும், மெரியா அர்ஜினாவுக்கு பிரபாகரன் விளக்கியுள்ளார். இதை கேட்டு வியப்படைந்த அர்ஜினா, தங்கள் திருமணமும் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார்.
இதன்படி, பிரபாகரன் 20 நாட்கள் விடுமுறையில், அவரை அழைத்து கொண்டு தமிழகம் வந்தார். பெற்றோரிடம் தனது திருமணம் குறித்து தெரிவித்தார். மூத்த சகோதரருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்தனர். '20 நாட்களுக்கு மட்டுமே விசா இருப்பதால், மற்றொரு முறை வர வாய்ப்பில்லை' என, பிரபாகரன் மன்றாடினார். வேறு இடம் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு, பெற்றோர் தெரிவித்தனர்.
கோவாவில் பழகிய, ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு விபரங்களை கூறினார். அவரது ஏற்பாட்டில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் நேற்று இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
மணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.
2 comments:
மணமக்கள் நீடுடி வாழ்க
வாழ்க பல்லாண்டு! நானும் இந்த நண்பரின் ஊருக்கு அருகில் தான்... ஆனால் 498(ஏ) பொய்வழக்கில் சிக்கிக்கொண்டென்.
இந்த நண்பரும் இவரது குடும்பத்தாரும் 498ஏ பொய்கேசு, அல்லக்கைகளின் கட்டப்பஞ்சாயத்து, புழல் ஜெயில் சுற்றுலா மற்றும் மனிதநேயம் மிக்க காவல் நிலையங்கள், நீதியை நிலைநாட்டும் நீதிமன்றம் போன்ற காணக்கிடைக்காகத அற்புதங்களில் இருந்து தப்பிவிட்டார் இந்த நண்பர்..
வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு!
இந்திய இளைஞர்களே இதுபோல் நாடுகடந்து திருமணம் செய்துகொள்ளுங்கள்.. இங்கு பணத்திமிர், கள்ளக்காதல் கன்றாவிகள், குடிகெடுக்கும் தே----- போன்ற கூட்டத்திடம் சிக்கி என்னைப்போல் சின்னாபின்னமாகவிடாதீர்கள்.
Post a Comment