பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, April 10, 2010

இந்திய தகனமேடையிலிருந்து தப்பித்த தமிழக இளைஞர்


இந்தியத் திருமணம் என்ற தகனமேடையிலிருந்து தப்பித்த இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்.

யாரும் யாரோடுவேண்டுமானாலும் கூடி வாழலாம், திருமணம் என்பது அவசியமில்லை என்று சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் சொல்லிய கருத்திற்கு நெத்தியடி கொடுப்பது போல இந்த செர்பிய நாட்டுப் பெண் கூறியுள்ள இந்த அர்த்தமுள்ள கருத்தை பொய் வழக்குப்போடும் மனைவிமார்களும் அவர்களுக்குப் பின்னால் குடைபிடிக்கும் கூட்டங்களும் படித்து புத்தியில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.
''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்

தினமலர் ஏப்ரல் 10, 2010
Tamilnadu special news update

ராமநாதபுரம்: ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும், 'தாலி' கட்டும் முறைக்காக தமிழரை மணப்பதாக, 'செர்பிய' நாட்டு பெண் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், மன்னார்குடி, மேல நத்தத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (24). கேட்டரிங் டெக்னாலஜி முடித்த இவர், கோவா ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் எம்.பி.ஏ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்ற அவருக்கு, வகுப்பு தோழியாக 'செர்பிய' நாட்டை சேர்ந்த மெரியா அர்ஜினா (22) என்பவர் அறிமுகமானார். இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சந்திக்கும் போதெல்லாம், தமிழகத்தின் திருமண முறை பற்றியும், சடங்குகள் குறித்தும், மெரியா அர்ஜினாவுக்கு பிரபாகரன் விளக்கியுள்ளார். இதை கேட்டு வியப்படைந்த அர்ஜினா, தங்கள் திருமணமும் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார்.

இதன்படி, பிரபாகரன் 20 நாட்கள் விடுமுறையில், அவரை அழைத்து கொண்டு தமிழகம் வந்தார். பெற்றோரிடம் தனது திருமணம் குறித்து தெரிவித்தார். மூத்த சகோதரருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்தனர். '20 நாட்களுக்கு மட்டுமே விசா இருப்பதால், மற்றொரு முறை வர வாய்ப்பில்லை' என, பிரபாகரன் மன்றாடினார். வேறு இடம் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு, பெற்றோர் தெரிவித்தனர்.

கோவாவில் பழகிய, ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு விபரங்களை கூறினார். அவரது ஏற்பாட்டில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் நேற்று இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.

மணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.




2 comments:

498ஏ அப்பாவி said...

மணமக்கள் நீடுடி வாழ்க

498ஏ அப்பாவி said...

வாழ்க பல்லாண்டு! நானும் இந்த நண்பரின் ஊருக்கு அருகில் தான்... ஆனால் 498(ஏ) ​பொய்வழக்கில் சிக்கிக்​கொண்​டென்.

இந்த நண்பரும் இவரது குடும்பத்தாரும் 498ஏ ​பொய்​கேசு, அல்லக்​கைகளின் கட்டப்பஞ்சாயத்து, புழல் ​ஜெயில் சுற்றுலா மற்றும் மனித​நேயம் மிக்க காவல் நி​லையங்கள், நீதி​யை நி​லைநாட்டும் நீதிமன்றம் ​போன்ற காணக்கி​டைக்காகத அற்புதங்களில் இருந்து தப்பிவிட்டார் இந்த நண்பர்..

வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு!
இந்திய இ​ளைஞர்க​ளே இது​போல் நாடுகடந்து திருமணம் ​செய்து​கொள்ளுங்கள்.. இங்கு பணத்திமிர், கள்ளக்காதல் கன்றாவிகள், குடி​கெடுக்கும் ​தே----- ​போன்ற கூட்டத்திடம் சிக்கி என்​னைப்​போல் சின்னாபின்னமாகவிடாதீர்கள்.