பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, March 25, 2011

“நல்ல” காதலனுடன் சேர்ந்து “கெட்ட” கணவனைக் கொன்ற மனைவி

“நல்ல” காதலனுடன் சேர்ந்து “கெட்ட” கணவனைக் கொன்ற மனைவி! என்ன தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

எத்தனை நாட்கள்தான் “கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி” என்று இந்திய சட்டத்திற்கு விரோதமாக செய்திக்குத் தலைப்பு எழுதமுடியும்?

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் நல்லவர். அவருக்கு எந்தவித தண்டனையும் கொடுக்கக்கூடாது என்று 1861லேயே IPC497 என்ற சட்டப்பிரிவில் அழுத்தந்திருத்தமாக எழுதிவைத்திருக்கிறார்கள் இந்தியத் தலைவர்கள். இந்த சட்டப்படி ஆண் மட்டுமே கள்ளக்காதலில் ஈடுபடுவான். பெண்ணுக்கு கள்ளக்காதல் என்றால் என்னவென்றே தெரியாது. இதுதான் இந்திய சட்டத்தின் விளக்கம்.
... ... ...the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime... ... ... (Madras High Court/ W.P.No.45974 of 2006/DATED: 28.02.2011)
இதுபற்றிய மேலும் விபரங்களை இங்கே படித்துக்கொள்ளவும்:சட்டப்பூர்வமான இந்திய கள்ளக்காதல்!



சட்டமேதைகளும், தலைவர்களும் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டால் அது தவறில்லை என்று கருதும்போது அந்த மனைவியின் (கள்ளக்)காதல் புனிதமாகத்தானே கருதப்படவேண்டும்? அதனால் அவர் தனது காதலருடன் சேர்ந்து (கள்ளக்)காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனைக் கொலை செய்தால் அந்தக் கணவரைத்தானே கெட்டவராகக் கருதவேண்டும்? அதுதானே இந்திய சட்டப்படி சரியானதாக இருக்கும்? அதுதான் இப்போது செய்தியாக செய்தித்தாளில் வந்திருக்கிறது.

இனி நீங்களும் செய்தித்தாளில் இதுபோன்ற செய்திகளை வாசிக்கும்போது இந்திய சட்டத்திற்கேற்ப செய்தியை சரியாகப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும்!

25/3/2011 தினகரன்

புதுடெல்லி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவியையும் அவளுடைய காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

டெல்லி சுல்தான்புரியை சேர்ந்தவர் சமர் சிங். தச்சுத்தொழில் செய்து வந்தார். அவரது மனைவி பீனா. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பீனாவின் உறவினர் அஸ்வின் குமார். இவர் லகோரி கேட்டில் வசிக்கிறார்.

உறவினர் என்ற முறையில் பீனாவின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இது நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்துப் உறவாட தொடங்கினர். இவர்களின் கள்ள உறவு பற்றி அறிந்ததும் பீனாவை சமர்சிங் கண்டித்தார். ஆனாலும், அஸ்வின் குமாருடனான தொடர்பை பீனா விடவில்லை. வீட்டில் கணவர் இல்லாதபோது அஸ்வினை வரவழைக்க தொடங்கினார். இதையறிந்த சமர்சிங் 2 நாளுக்கு முன் பீனாவை அடித்து உதைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பீனா, சமர் சிங் உயிருடன் இருந்தால் காதலனுடன் உறவாட முடியாது என்று எண்ணி, உடனே அஸ்வினுக்கு போன் செய்து வீட்டுக்கு வரச் சொன்னார். அவரும் இரவில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி இரவில் சமர் சிங்கின் வீட்டுக்கு வந்த அஸ்வின்குமார், காதலியின் திட்டப்படி அவரை கண்மூடித்தனமாக அடி த்து உதைத்தார். பிறகு கீழே தள்ளி கழுத்தை நெரித்தார். திமிறிய சமர் சிங்கை, அருகில் இருந்த பீனா அமு க்கி பிடித்துக் கொண்டார்.

அஸ்வின் குமாரின் பிடி இறுகியதால் சற்று நேரத்தில் மூச்சுத் திணறி சமர் சிங் இறந்தார். பிறகு உடலை அருகில் இரு க்கும் புதருக்குள் கொண்டு சென்று போட்டு விட்டனர்.

நேற்று முன்தினம் புதரில் கிடந்த உடல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் பிணமாகக் கிடந்தவர் சமர் சிங் என்று தெரிந்ததும் அவரது வீட்டுக்கு சென்று பீனாவிடம் விசாரித்தனர்.

முதலில் எதுவும் தெரியாது என்று மழுப்பினார். போலீசார், வீட்டை சோதனை போட்டனர். அப்போது அஸ்வின் குமாரின் ரத்தக்கறை படிந்த மேல்சட்டை அங்கு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதைப்பற்றி விசாரித்தபோது இனி தப்ப முடியாது என்று உணர்ந்த பீனா, காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் லகோரி கேட்டில் தங்கி இருந்த அஸ்வின் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

=====

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களின் உயிருக்கும், மானத்திற்கும் இந்திய சட்டங்களின் ஆதரவுடன் கண்டிப்பாக ஆபத்து இருக்கிறது!

1. மனைவியின் கள்ளக்காதலுக்கு அல்லது மனைவியின் பொருந்தாத ஆசைகளுக்கு கணவன் ஒத்துழைக்காமல் தடையாக இருந்தால் அது இந்திய தண்டனை சட்டப்படி மனைவிக்கு உடலளவில் அல்லது மனதளவில் கணவனால் இழைக்கப்படும் கொடுமையாகக் கருதப்படும் (Refer: IPC498A) அதனால் மனைவி கொடுக்கும் பொய் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறைக்குச் செல்ல நேரிடும்.

அல்லது...

2. செய்தியில் இருப்பதுபோல “நல்ல” காதலனும், “நல்ல” மனைவியும் சேர்ந்து செய்யும் கொலையில் “கள்ள” கணவனாக உயிரை விடவேண்டும். (Refer: IPC497)

அல்லது... மேலுள்ள இரண்டும் உங்களுக்கு நடக்கக்கூடாது என்றால்...

புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு மனைவியின் மனம் கோணாத இந்தியக் கணவனாக பக்குவமாக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். அது எப்படி என்று பின்வரும் வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.




No comments: