ஒன்இந்தியா வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 6, 2012
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த மக்களிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் 14 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் வீடியோ தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் பிரிவு, ஆவண மோசடி தடுப்பு பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு, நிலமோசடி தடுப்பு பிரிவு உள்பட 15 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள 6 சிறப்பு எஸ்.ஐ. உள்பட 14 காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் ராதிகாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அவர்கள் 14 பேரையும் ரகசியமாக கண்காணிக்க அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு கட்டபஞ்சாயத்து செய்ததும், மாமூல் வாங்கியதும் தெரிய வந்தது. இதனையடுத்து துணை ஆணையர் ராதிகா பரிந்துரைப்படி மக்களிடம் லஞ்சம் வாங்கிய 14 பேரையும் இடமாற்றம் செய்து ஆணையர் திரிபாதி உத்தரவிட்டார்.
இடமாற்றம் செய்யப்பட்ட போலீசாரில் 6 பேர் சிறப்பு எஸ்.ஐ.களாக உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment