பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, October 29, 2012

தமிழ் நாட்டிற்குத் தேவைப்படாத இந்து திருமணச் சட்டம்

சமீப காலமாக செய்தித்தாள்களில் வரும் திருமணச் செய்திகளை பார்க்கும்போது தமிழ் நாட்டில் நடக்கும் இந்துத் திருமணங்களை நெறிப்படுத்த இந்து திருமணச் சட்டம் தேவையா? என்று எண்ணத் தோன்றுகிறது.

திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் ஓட்டம்,  திருமணம் முடிந்து முதலிரவில் மணமகள் ஓட்டம் என்ற செய்திகள்தான் இதுவரை வந்துகொண்டிருந்தன.  இப்போது சற்று முன்னேற்றம் அடைந்து மணமேடையில் தாலி கட்டியவுடனே தாலியை கழற்றி வீசி எறிந்துவிட்டு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகும் மணமகள்கள் பற்றிய செய்திகள் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறது.

அதுபோல வந்துள்ள இன்றைய செய்தி.
செய்தி - 1

பெரம்பலூர்:சினிமாவை மிஞ்சும் வகையில், தாலிக்கட்டிய அடுத்த சில விநாடிகளில், தாலியை கழற்றி விட்டு, காதலுடன் செல்வதாக, மணப்பெண் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப், 24. இவர், பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டு ஆண்டாக படித்து வந்தார். இவரும், இதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகள் சகுந்தா, 19, என்பவரும் காதலித்துள்ளனர்.

இந்நிலையில், சகுந்தலாவுக்கும், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் செல்லதுரை, 25, என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, பெரம்பலூர் பெருமாள் கோவிலில், செல்லதுரைக்கும், சகுந்தலாவுக்கும் திருமணம் நடந்தது.செல்லதுரை, சகுந்தலா கழுத்தில் தாலிக்கட்டிய உடன், மணவறையிலிருந்து எழுந்த சகுந்தலா, செல்லதுரை கட்டிய தாலியை கழற்றிவிட்டு, திருமணத்துக்கு வந்திருந்த காதலன் பிரதீப் கையை பிடித்து கொண்டு, பிரதீபுடன்தான் செல்வேன் என, தெரிவித்தார்.

இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள், சகுந்தலாவின் காதலனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், அங்கு சென்று சமாதானம் செய்தனர். தொடர்ந்து, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இச்சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 செய்தி - 2

கணவனை உதறிவிட்டு காதலனுடன் நடையைக் கட்டிய புதுப்பெண் ..சென்னையில் பரபரப்பு! 

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012 One India

சென்னை: சென்னையில் திருமணமான ஒரு மாதத்தில் கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் புதுப்பெண் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ் (25). இவருக்கும், உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் சங்கீதா புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. இது குறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சங்கீதா தேடிவந்தனர். அப்போது சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் மதுரையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

காதலர்கள் போலீசில் சரண்

இதனிடையே சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று சரண் அடைந்தார். அப்போது சங்கீதா, நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று போலீசில் தெரிவித்தார்.

மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் கூறினார். இதனையடுத்து சதீஸ் கட்டிய தாலியையும் கழற்றிக் கொடுத்துவிட்டார்.

எங்கிருந்தாலும் வாழ்க

சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார். மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

=======
இதுபோன்ற தாலியை வீசிவிட்டு ஓட்டம் பிடிக்கும் மணமகள்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தவுடன் அங்கு பரந்த மனப்பான்மையுடன் கட்டப் பஞ்சாயத்து செய்து காலையில் தாலி கட்டிய கணவனிடம் எழுதி வாங்கிகொண்டு மணமகளை வேறு ஒரு ஆணுடன் அனுப்பி வைக்கும் சட்ட விரோத செயல்கள் தாராளமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்து திருமண சட்டப்படி இந்து மத முறைப்படி திருமணம் நடந்தால்தான் அதனை திருமணமாக சட்டம் அங்கீகரிக்கிறது.  அதுபோலவே இந்து மத முறைப்படி நடக்கும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தில் கூறியுள்ள வழிமுறைப்படிதான் ரத்து செய்ய முடியும்.  ஆனால் காவல் நிலையங்களில் இந்த சட்டங்களை கண்டுகொள்ளாமால் தாங்களே நீதிபதிகளாக இருந்து இதுபோன்ற திருமணங்களை ரத்து செய்து வருகிறார்கள்.  இப்படி காவல்நிலையத்திலேயே விவாகரத்து கிடைக்கும் என்றால் இந்து திருமண சட்டம் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு?

இவையெல்லாம் எதற்கு என்றால் சட்டப்படி நடக்கவேண்டும் என்று நினைக்கும் அப்பாவிக் கணவன்கள் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை அணுகினால் சட்ட நடைமுறை என்ற பெயரில் அந்தக் கணவர்களை பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைய வைத்து நடைபிணமாக மாற்றுவதற்கு  மட்டுமே என்று ஒரு முறை குடும்ப நீதிமன்றம் பக்கம் சென்று பார்த்தால் புரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சட்டங்களை மிதிப்பவர்களை சட்டமும், சமுதாயம் மதிக்கும்.  சட்டங்களை மதித்து நடப்பவர்களை  சட்ட நடைமுறை என்ற பெயரில் நடை பிணமாக்கி விடுவார்கள்.


No comments: